அதற்கென மீண்டும் ஒரு உதாரணமாக இப்பொழு மரபணு ஆய்வுக்களின் மூலமாக மனித இனமும் சிம்பன்சி வகை மனித-குரங்குகளுக்குமிடையே இனக்கலப்பு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இவ் ஆய்வு இரண்டு விதமான சான்றுகளை அதற்கு வழங்கி ஊர்ஜிதப் படுத்தியுள்ளது. ஃபாசில்களில் மனிதனுக்கும் சிம்பன்சிகளுக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்திலிருந்து கிடைத்த பற்கள், மண்டை ஓடுகள் போன்றவை, ஒப்புமை உடையாதாக இருப்பதும்.இரண்டாவதாக, மரபணுக்களில் காணப்படும் வித்தியாசங்கள். இயற்கையாகவே, இயற்கை தேர்ந்தெடுப்பின் (Nutaural Selection) பொருத்து எக்ஸ்-வகை குரோமொசோம்களில் நடைபெறும் கடைசி மாற்றமே மற்றொரு வகை விலங்கினமாக உருவெடுக்க சாத்தியப் படுகிறதாம்.
அதன் பொருட்டு இந்த எக்ஸ் வகை குரோமோசொம்களில் விட்டக் குறை தொட்ட குறையாக மிச்சம் எஞ்சியிருக்கக் கூடிய மரபணு சார்ந்த விசயங்கள் இன்னமும் கொரில்லாக்கள், சிம்பன்சி மற்றும் மனித மரபணுக்களில் காணப்படுகிறதாம்.
சரி இதனை எதனைக் கொண்டு எத்துனை காலங்களுக்கு முன்னால் அவைகள் ஒன்றிலிருந்து மற்றொரு இனமாக பிரிந்து சென்றிருக்கும் என்று அறிகிறார்கள் என்று கேட்டால்... "மூலக்கூறு கடிகாரம் (Molecular Clock)" என்ற கோட்பாட்டின் அடிப்படையில், எவ்வளவு தூரம் அவைகள் மரபணுக் கூறுகளின் வழியே பயணித்து மரபணு வேறுபாடுகள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனை பொருத்து, இவர்கள் எவ்வளவு தொலைவு சொந்தக்காரர்கள் இன்று வாழும் இந்த மனிதக் குரங்கினங்கள் அதாவது நமக்கு தூரத்து சொந்தமா இல்லை நெருங்கிய சொந்தமான்னு தீர்மானிக்கிறார்களாம்.
அப்படிப் பார்த்தோம்னா, நாம சிம்பன்சிகளிலிருந்து ஒரு 6.3 - 4 மில்லியன் வருடங்களுக்கு முன்புதான் பிரிந்து வந்து இருக்கிறோமாம், ஆனா, இந்த பரட்டை தலை குரங்கு இல்ல, அதான் நம்ம "ஆட்டுக்கார அலமேலு" படத்தில எல்லாம் நடிக்குமே அந்த ஆளுக்கும் நமக்கும் 20 மில்லியன் வருஷத்துக்கு முன்னமே தொப்புள் கொடி அறுந்து போச்சாம்.
எப்போவாவது நீங்கள் இந்த மனிதக் குரங்குகளின் சோஷ்டையை நின்று கவனித்துப் பார்த்திருக்கீறிர்களா? பார்த்திருந்தால் தெரியும் மேற் கூறிய ஆராய்ச்சில் லாஜிக்கலாகவே நிறைய தொடர்பு இருப்பதை... உதாரணதுக்கு போனோபோ (Bonobo) என்னும் ஒரு துணை இன சிம்பன்சி, நம்ம மாதிரியே சாப்பிட்டு விட்டு பல் இடுக்குகளில் அகப்பட்டுள்ள பழ நார், மற்றும் இதர ஐட்டங்களை சிறு குச்சி கொண்டோ அல்லது ஆட்காட்டி மற்றும் கட்டைவிரலைக் கொண்டோ நம்மை போலவே பல் இடுக்கிலிருந்து பிரியாணி சாப்பிட்டு விட்டு பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட கறித்துண்டை நாம் எடுக்க முயற்சி செய்வது போலவே இவைகளும் எடுக்க முயற்சிப்பதை, அடியேன் என் இரு கண்களாலும் பார்த்து வைத்திருக்கிறேன்.இன்னொரு ஹைலைட், திருப்தியா சாப்பிட்டுவிட்டு கால்மேல் கால்போட்டு தூங்கும் பொழுது அடப் போங்க என்னாத்த சொல்றது...

இந்தப் பசங்க ராத்திரியில ஊர் சுத்தறவுனுங்க, அதனால செவனேன்னு பகல் முழுக்க ஒரே இடத்தில அடைஞ்சுகிடந்து தூங்கிட்டு இருப்பானுங்க. இப்ப அதோட இறக்கை சம்பந்தமா கொஞ்சம் 
