Thursday, August 24, 2006

இழந்து தவிக்கும் சூரியக் குடும்பம்...!!!

வியாழக் கிழமை பொறந்ததும் பொறந்தது நம்ம சூரியக் குடும்பத்தில இருந்த ஒன்பது கோள்களில் ஒண்ணை (ப்ளூட்டோ) கிரகம் என்ற நிலையிலிருந்து இறக்கி "டுவாஃர்ப் ப்ளானட்" என்ற நிலைமைக்கு அண்மையில் Czech Republic (Prague) நாட்டில் நடந்த International Astronomical Union சந்திப்பில் வானவியல் விஞ்ஞானிகள் இதனை அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

சரிங்க என்னங்க நினைச்ச ஒரு கிரகத்த சேர்த்துக்கிறாங்க பிறகு ஏதாவது ஒரு காரணத்த சொல்லி அந்த நிலையில இருந்து இறக்கிக்கிறாங்க.

Image Hosted by ImageShack.us

எந்த அடிப்படையில இதனை செய்றாங்க, அப்படின்னு தேடினேன் கிடைச்சத உங்ககூட பகிர்ந்து கொள்ளலாமேன்னு தான் இந்த பதிவு. இப்ப என்னன்ன அடிப்படையில ஒரு ப்ளானட்டை ப்ளானட்டாவும் இல்லன்ன, இந்த மாதிரி டுவாஃப் ப்ளானட் அது இதுன்னு பேர் கொடுக்கிறாங்கன்னு பார்ப்போம்.

ஒரு கிரகமின்னு சொல்ல கீழ்கண்ட மூன்று அடிப்படை தகுதிகள் அந்த கிரகத்திற்கு இருக்கணுமாம்.

1) அந்த கிரகம் சூரியனை மையமாக வைச்சு சுத்தணுமாம்.

2) அந்த கிரகத்தின் அடர்வுத் தன்மையின் ஈர்ப்பு விசை அந்த கோளை வட்ட நிலைக்கு எடுத்து சென்றிருக்க வேண்டுமாம்.

3) அதன் அண்டைய வழியில் மத்த பொருட்கள் இதன் இருப்பை பாதிக்காத வண்ணம் வலியதாக இருக்கணுமாம்.

மேலே குறிப்பிட்ட மூன்றில் ஏதாவது இரண்டு ஒரு வானத்தில் சுற்றும் பொருளுக்கு (object) அமைந்தால் அது "டுவாஃர்ப் ப்ளானட்" என்றழைக்கப் படுகிறது.

அதற்காக நமது நிலவு ஏன் "டுவாஃர்ப் ப்ளானட்" நிலைக்கு அறிவிக்கப் படவில்லையென்றால், அது அப்படித்தானாம்.

சரி இந்த ப்ளூட்டோ கிரகத்தில நாம இறங்கின வுடனேயே அப்படியே உறைந்து போயிடுவோமாம், அவ்வளவு குளிர்ந்த நிலையில இருக்கிற ஒரு சுருங்கிப் போன கிரகமாம்.

இந்த ப்ளூட்டோ கிரகத்த வைச்சு நம்ம ஜாதகம்மெல்லாம் கணிப்பாங்களா, எனக்குத் தெரியல. அப்படி இந்த கிரகத்த கிரக நிலையில வைச்சு ஜாதகம் கணிச்சுருந்தா இப்ப அதுக்கெல்லாம் என்னவாகும்?

இப்படி இந்த கிரகத்த டி-பிரமோட் பண்ணதால நம்ம பள்ளிக்கூட நாட்களில் கடம் அடிச்சி வைச்சிருந்த ஒரு கிரகத்த மறக்கணும் இப்ப... நிறைய புத்தகங்கள்ல எழுதி வைச்சிருக்க அம் புட்டு விசயத்தையும் மாத்தணும். எம்புட்டு கவலை பாருங்க, நமக்கு.

47 comments:

மணிமேகலன் said...

//அப்படி இந்த கிரகத்த கிரக நிலையில வைச்சு ஜாதகம் கணிச்சுருந்தா இப்ப அதுக்கெல்லாம் என்னவாகும்?//

நல்லவேளை இன்னமும் பூமி ஒரு கிரகமுன்னு 'கிரகம்' நெலமையில இருக்கேன்னு நினைச்சு சந்தோசப்படுங்க, நேசி. இதுக்காக நீங்க ரொம்ப கவலைப் படுறமாதிரி இருக்கு :))

சுந்தரவடிவேல் said...

//வியாழன் பொறந்ததும் பொறந்தது//
சொல்ல வர்றீங்கன்னு தெரியலயே நேசி! அது ஏற்கெனவே கோளாத்தானே இருக்கு.
இல்ல, வியாழக் கிழமையைச் சொல்றீங்களா?:))
இனிமே 8கோள்கள்னு படிக்கப ்போறோமா?

Orani said...

வாங்க மணிமேகலன்,

//நல்லவேளை இன்னமும் பூமி ஒரு கிரகமுன்னு 'கிரகம்' நெலமையில இருக்கேன்னு நினைச்சு சந்தோசப்படுங்க, நேசி. இதுக்காக நீங்க ரொம்ப கவலைப் படுறமாதிரி இருக்கு :))//

ஏன் அப்படி சொல்லுறீங்க, இன்னமும் அணுகுண்டுகள போட்டுகிட்டு அழிசிக்காம இங்க இருக்கோமின்னா?

கவலையெல்லாம் ஒண்ணுமில்ல நம்ம வீட்டுல இருக்கிற குடும்பத்திலயே இத்தனை தகறாரு இருக்கே பெயர் கொடுக்கிறதில இன்னமும் இம்புட்டு நச்சத்திரம் அப்புறம் அவைகளை சுத்தி இருக்கிற கோள்கள் அவைகளை எல்லாம் எப்ப ஆராய்ந்து பெயர் கொடுக்கிறது... :-))

வடுவூர் குமார் said...

கேட்டதிலிருந்து சாப்பாடே இறங்கவில்லை.
இதன் மீது நான் எழுதிய ஆயிரம் கவிதைகளை என்ன பன்னுவது என்று தெரியவில்லை.:-))

துளசி கோபால் said...

நவரத்தின கம்மல் நெக்லேஸ் இதுக்கெல்லாம் இப்ப அஷ்டரத்ன மாடல் வாங்கணுமேன்னு
என் கவலை.:-))))

நீங்க என்னடான்னா........?

Sivabalan said...

நேசி

இப்படி நைசாக ஒரு கோளைக் களட்டிவிட்டுடீங்கல...

ஜோசியகாரர்கள் என்ன செய்ப்போகிறார்களோ?

உடனே ஜோசிகாரங்க வருவாங்க பாருங்க.. ஜோசியம் இந்த கோளை வைத்து நாங்க சொல்வதில்லை என்று...

ஜயராமன் said...

ஜோசிய நவக்கிரகங்களுக்கும் இந்த நவ கோள்களுக்கும் பலத்த வேறுபாடு.

ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும், ராகுவும், கேதுவும் உண்டு. இவைகள் கோள்கள் அல்ல.

யாரும் பயப்பட வேண்டாம். ஜாதகம் அப்படியே இருக்கும். நெப்டியூனும், ப்ளூட்டோவும் எப்போதுமே ஜாதக கிரகங்கள் லிஸ்டில் கிடையாது.

கிரஹம் என்றால் பிடிப்பது என்று பொருள். நம்மை பீடிப்பதால் கிரகங்கள். தமிழில் கிரகங்கள் என்றால் கோள்கள். இவற்றை போட்டு குழப்பிக்கொண்டு.....

நன்றி

ஜயராமன் said...

ஜோசிய நவக்கிரகங்களுக்கும் இந்த நவ கோள்களுக்கும் பலத்த வேறுபாடு.

ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும், ராகுவும், கேதுவும் உண்டு. இவைகள் கோள்கள் அல்ல.

யாரும் பயப்பட வேண்டாம். ஜாதகம் அப்படியே இருக்கும். நெப்டியூனும், ப்ளூட்டோவும் எப்போதுமே ஜாதக கிரகங்கள் லிஸ்டில் கிடையாது.

கிரஹம் என்றால் பிடிப்பது என்று பொருள். நம்மை பீடிப்பதால் கிரகங்கள். தமிழில் கிரகங்கள் என்றால் கோள்கள். இவற்றை போட்டு குழப்பிக்கொண்டு.....

நன்றி

Orani said...

// ராகுவும், கேதுவும் உண்டு.//

ஐயராமன், இவைகளுக்கு ஆங்கிலத்தில் என்னவென்று பெயர். ஒரு கோளின் இருப்பு கேள்விக்குள்ளாகும் பொழுது மத்த துணை-கோள்களின் இருப்பும், ஒன்றின் மீது மற்றொன்று ஆதிக்கம் சொலுத்தாதா?

இப்பொழுது ப்ளூட்டோவின் கோள் தகுதி கேள்விக்குள்ளாகியிருக்கும் பொழுது சூரியனிலிருந்து நம்ம வீட்டு சந்திரன் வரைக்கும் அதன் பாதிப்பு இருக்குமா இருக்காதா?

Orani said...

//சொல்ல வர்றீங்கன்னு தெரியலயே நேசி! அது ஏற்கெனவே கோளாத்தானே இருக்கு.
இல்ல, வியாழக் கிழமையைச் சொல்றீங்களா?:))
இனிமே 8கோள்கள்னு படிக்கப ்போறோமா? //

சுந்தர், "வியாழக் கிழமையைத்தான் சொல்லியிருந்தேங்க" :-) எல்லாம் கிரகமுங்க... தெரியாத மாதிரி என் மண்டையை போட்டு உருட்டுறீங்களே ;-)))

ஆமா, எவ்வளவு கஷ்டப்பட்டு அரசமரத்தில ஏறி உட்கார்ந்துகிட்டு கடம் போட்டது எனக்குத்தானே தெரியும்... நமது சூரியக் குடும்பத்தின் கோள்கள் எத்துனை, வரிசைப் படுத்தி சொல்லுன்னு? கேக்கிறதுக்கு பதில் கொடுக்க... இப்ப நைச ஒரு கோள கலட்டி விடுறொம் இல்லையா... அதான் அப்பிடிச் சொன்னேன்...

Orani said...

//கேட்டதிலிருந்து சாப்பாடே இறங்கவில்லை.
இதன் மீது நான் எழுதிய ஆயிரம் கவிதைகளை என்ன பன்னுவது என்று தெரியவில்லை.:-)) //

வடுவூராரே, என்ன விட பயங்கர கவலைப் பிடீச்ச ஆளா இருப்'பீரு போலவே...

இங்கப் பார்ர இவர, ப்ளூட்டோவ வைச்சு முதல் முதல கவிதை எழுதினேன் சொல்ற ஆள இப்பத்தான் கேள்விப் படுறேன்...

ஏனுங்க வேற ஏதாவது மத்த கேள்கள வைச்சு கவுஜா எழுதி இருந்த ஒழுங்க இப்பவே பப்ளிஸ் பண்ணீடுங்க சொல்லிட்டேன்... :-)))

Orani said...

//நவரத்தின கம்மல் நெக்லேஸ் இதுக்கெல்லாம் இப்ப அஷ்டரத்ன மாடல் வாங்கணுமேன்னு
என் கவலை.:-)))) //

:-)))

துள்சிம்மா, ஓ! அப்படி ஒண்ணு இருக்கில்ல மறந்தே போச்சு, இந்த கல்லு வச்சு போடறது அப்புறம் அந்த கலரு கல்லு வைச்சுப் போடறது எல்லாமே போச்சே...

உங்க கவலை உங்களுக்கு, ஏன் கவலை எனக்கு...

இலவசக்கொத்தனார் said...

ஏம்பா, இவங்க இல்லைன்னு சொன்னா இல்லாம ஆகிடுமா? அது இருக்கிற இடத்தில்தானே இருக்கு?

சும்மா இருக்கும் என்பார் இருக்காது, இருக்காதென்பார் இருந்துவிடும் அப்படின்னு ஒரு பாட்டைப் போட்டு விட்டு போவீங்களா அதை விட்டுட்டு....

அப்புறம் ஒரு விஷயம். இந்த ஜாதக மேட்டரை விட்டுடுங்க. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. இல்லைன்னா இந்த பதிவு சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டு அதையேதான் பேசப் போறாங்க.

ஜயராமன் said...

இ.நே அவர்களே,

ராகு, கேது கிரகங்களின் பாதையில் உள்ள nodal points ஆகும். அவை எப்பொதும் ஒன்றுக்கொன்று 180 பாகையில் போய்க்கொண்டிருக்கும். ஜோசிய ரீதியாக அவைகளுக்கு சுயமாக ஆட்சி, உச்சம், நீசம் இல்லை. அவை எப்போதும் பிற கிரகங்களை சார்ந்திருக்கும்.

கிரகம் என்ற வடமொழிக்கு பிடிப்பது என்பது பொருள். நம்மை பீடிப்பதால் அவை கிரகங்களாயின. தமிழில் கிரகங்கள் என்றால் கோள்கள். இவை இரண்டையும் குழப்பிக்கொள்ள கூடாது....

நன்றி

கலாநிதி said...

அட கிரகமே அப்ப இனிமே பாடத்தையே மாத்தனுமே!அதுசரி விஞ்ஞானிமார் சொன்னா கேக்கோனும்தான்.

Orani said...

சிவா,

//இப்படி நைசாக ஒரு கோளைக் களட்டிவிட்டுடீங்கல...//

இப்படி நான கலட்டி விட்டேன்... ஒண்ணுக்கும் ஆகாத நச்சு புகை நிரம்பிய ஒரு உருண்டைன்னதும், கலட்டி விட்டுடாங்க போல... இன்னும் வரும் ஏதாவது புச்சா இருங்க...

இருக்குமென்பார் இருக்காது, இருக்காதென்பார் இருந்துவிடும்... @ இலவசம் ;-)))

//ஜோசியகாரர்கள் என்ன செய்ப்போகிறார்களோ?

உடனே ஜோசிகாரங்க வருவாங்க பாருங்க.. ஜோசியம் இந்த கோளை வைத்து நாங்க சொல்வதில்லை என்று...//

;-))) ;-)))

Orani said...

//சும்மா இருக்கும் என்பார் இருக்காது, இருக்காதென்பார் இருந்துவிடும் அப்படின்னு ஒரு பாட்டைப் போட்டு விட்டு போவீங்களா அதை விட்டுட்டு....//

இ.கொ, பாடிட்டேனே பார்த்தீங்கள இல்லையா? இப்ப பூமிங்கிற விசயம் இருக்கா இல்லை வெரும் மாயையா அதுவும் :-))

இல்ல, அதுக்கும் இந்த பாட்டே பாடிகிடவா... :-))

இன்னொரு பாட்டும் ஞாபகத்துக்கு வருது... ~~~வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கே இடமேது.... ~~~

அப்புறம் இன்னொரு கொசுருச் செய்தி... இந்த ப்ளூட்டோவின் இருத்தலை கண்டுபிடிச்சதே ஒரு 23 வயது நிரம்பிய, ஹை ஸ்கூல் பையந்தானாம்... அவரே டெலஸ் கோப்பு தயாரிச்சு அதன் மூலமா பார்த்து... பாருங்கய்யா... :-)

SK said...

என்னங்க இ.நேசியாரே, இப்படிக் கலாய்க்கறீங்க!
கூட இதுக்குன்னு ந்யூஜிலாந்திலிருந்து அந்தம்மா வேற ஒத்து!

ஒரே கூத்தா இருக்கே!

அந்த நவரத்தினக் கல்லு வெச்ச அட்டிகை, பேசரி, தோடு எல்லாம் இன்னும் எவ்வளவு செட் வேணும்னாலும் வாங்கிக்கச் சொல்லுங்க!

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இவங்களோட, சேத்து, ராகு, கேது இவங்கதான் அந்த 9 கல்லுங்களுக்கெல்லாம் ராசாமாரு.

ப்ளூட்டோ போனதால ஒண்ணுமாயிறலை!

ஜாதகம் கணிக்கறது, ஜோசியம் சொல்றதல்லாம் கூட இதை கணக்குல எடுத்துக்காமத்தான்!

போய் நிம்மதியா சாப்பிட்டுட்டு தூங்குங்க!

நம்மளைத் தூக்கிட்டாங்களேன்னு அதுவே அப்படியே உறைஞ்சு போய் நிக்குது; அத்தப் போய் கலாய்ச்சுக்கிட்டு!

:))

செல்வநாயகி said...

படம் நல்லாருக்கு.


///இந்த கிரகத்த டி-பிரமோட் பண்ணதால நம்ம பள்ளிக்கூட நாட்களில் கடம் அடிச்சி வைச்சிருந்த ஒரு கிரகத்த மறக்கணும் இப்ப... நிறைய புத்தகங்கள்ல எழுதி வைச்சிருக்க அம் புட்டு விசயத்தையும் மாத்தணும். எம்புட்டு கவலை பாருங்க, நமக்கு.////


அடடா:((
எனக்கெல்லாம் மறக்கவேண்டிய கவலையே இல்லை. எதுவும் ஞாபகமிருந்தால்தானே மறப்பதற்கு:))

Orani said...

ஐயராமன்,

//ஜோசிய ரீதியாக அவைகளுக்கு சுயமாக ஆட்சி, உச்சம், நீசம் இல்லை. அவை எப்போதும் பிற கிரகங்களை சார்ந்திருக்கும்.//

நமக்கு இது பற்றி எதுவும் தெரியாத காரணத்தால் அப்படி ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன். தாங்களின் விளக்கங்களுக்கு நன்றி.

Orani said...

கலாநிதி,

//அட கிரகமே அப்ப இனிமே பாடத்தையே மாத்தனுமே!அதுசரி விஞ்ஞானிமார் சொன்னா கேக்கோனும்தான். //

:-)), ஆமா, ஆமா விஞ்ஞானிமார் சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்.

இதுமாதிரியே கையிலிருப்பில் இருக்கும் அணுகுண்டுகள் பூராவும் வளர்ந்த, வளரும் நிலையில் இருக்கும் நாடுகளனைத்தும் வைத்திருக்கும் அனைத்தும் இந்த பூமி கிரகத்தை அழிக்கும் வல்லமை கொண்டது, எனவே டி-பிரமோட் பண்ணனுமின்னு என்னைக்கு இவங்க இந்த ப்ளூட்டோ கிரகத்தை டி-பிரமோட் பண்ணமாதிரி இந்த அணுக்குண்டுகளையும் டி-பிரமோட் பண்ணி ஃப்ரீ ஃஆப் மாஸ் அழிவு ஆயுதங்களிலிந்து நமக்கு விடுதலை வாங்கி கொடுக்கப் போறாங்க கலாநிதி...???

எங்கே அடிச்சு எங்கே வந்திட்டேன் பார்த்தீங்கள... :-))) எது எதுக்கோ கவலைப் படும் நாம், ஏன் நாம இதுக்கு கவலைப் பட கூடாது?

Orani said...

எஸ்.கே ஐயா,

துள்சிம்மாகிட்ட சொல்லிடறேன், நான் எங்கே சொல்றது அவங்களே இங்க வந்து படிச்சிட்டு உங்களுக்கு என்ன பதில் கொடுக்கணுமோ கொடுப்பாங்க ;-)

//ஜாதகம் கணிக்கறது, ஜோசியம் சொல்றதல்லாம் கூட இதை கணக்குல எடுத்துக்காமத்தான்!//

நம்மாலுங்க பலே கில்லாடிங்கதான், வெத்து கண்ணாலேயே இந்த வானத்தை அளவீட்டு எந்த கொழப்பமும் வந்திடாம இம்பூட்டு விசயத்தையும் சொல்லி வைச்சுட்டு போயீருக்காங்களே(!!).

இப்ப புச்சு புச்சா என்னின்னமோ கண்டுபிடிச்சு அது வழிய பார்த்து அழிச்சு அழிச்சு எழுதுறாங்கோ...

//போய் நிம்மதியா சாப்பிட்டுட்டு தூங்குங்க!//

நீங்க சொன்னீங்களேன்னுதான், நேத்தோட என்னோட உண்ணாவிரதத்தை முடிச்சுக்கிட்டேன்... :-))

//நம்மளைத் தூக்கிட்டாங்களேன்னு அதுவே அப்படியே உறைஞ்சு போய் நிக்குது; அத்தப் போய் கலாய்ச்சுக்கிட்டு! //

பின்ன இருக்காதய்யா, குடும்பத்தில இருக்கிற ஒரு பிள்ளைய சொல்லம கில்லாம டபக்குன்னு பேருந்து நிலையத்தில விட்டுட்டு வந்திடறமாதிரி, விட்டுட்டு வந்திட்டோமே... :-))) (சிவாஜி சார், ஸ்டையிலில் படிக்கவும்).

Sivabalan said...

//நம்மாலுங்க பலே கில்லாடிங்கதான், வெத்து கண்ணாலேயே இந்த வானத்தை அளவீட்டு எந்த கொழப்பமும் வந்திடாம இம்பூட்டு விசயத்தையும் சொல்லி வைச்சுட்டு போயீருக்காங்களே(!!).//

Excellent!! Excellent!! Excellent!!

Vajra said...

ஆறாம் நூற்றாண்டு ஆரியபட்டாவும் வராஹமிஹிராவும் ப்ளூட்டோ வை கோளாகக் கணிக்கவில்லை.

ஆகயால் ஜோசியம் போன்ற சமாச்சாரங்களில் இதனால் எந்த மாறுதலும் இருக்காது.

ஒன்பது கிரஹங்களில் ராஹு கேது என்பது derivations from diameter of earth என்று சொல்கிறார்கள்.

Orani said...

பி.கு: எஸ்.கே அய்யா நீங்களே பாருங்களேன், நான் போட்டுருக்கிற படத்திலே எவ்ளே பாவம நம்ம ப்ளூட்டோ, தூரத்தில இருக்கிற அம்மா-சூரியன ஏக்கத்தோட தனிமைய உட்கார்ந்துகிட்டு பார்க்கிறமாதிரி இல்ல... :((

Orani said...

//ஆறாம் நூற்றாண்டு ஆரியபட்டாவும் வராஹமிஹிராவும் ப்ளூட்டோ வை கோளாகக் கணிக்கவில்லை.//

வஜ்ரா, நான் டில்லிக்கு போயிருந்த பொழுது அங்கே ஒரு வானவியல் சார்ந்த ஒரு இடம் பார்த்தேன்... வெறும் கட்டட சமாச்சாரங்களைக் கொண்டு நட்சத்திரங்களின் இடம் பெயர்வு, சீசன் மற்றும் இதர விசயங்களை படிப்பதற்கென.

அந்த இடத்தின் பெயர் தெரியுமா? எனக்கு சரியாக ஞாபகத்தில் இல்லை. அது மொகலய காலத்தில் கட்டப்பட்டது என நினைக்கிறேன்.

ஆரியப்பட்டாவை பற்றியும் கொஞ்சம் படித்திருக்கிறேன்... மேற்கண்ட விபரங்களை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நேரமிருப்பின். சுட்டிக்கும் நன்றி!

Vajra said...

ஜந்தர் மந்தர் (jantar mantar) ஐ த்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...

அப்படி என்றால் அது மொகலாயர் கட்டியது அல்ல. மஹாராஜ ஜய்சிங் கட்டியது. அது தில்லியுமல்ல ஜெய்பூர்.

Vajra said...

ஜந்தர் மந்தர் (jantar mantar) ஐ த்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...

அப்படி என்றால் அது மொகலாயர் கட்டியது அல்ல. மஹாராஜ ஜய்சிங் கட்டியது. அது தில்லியுமல்ல ஜெய்பூர்.

பின்னூட்டம் போடப் போய் 404 பக்கம் வந்துவிட்டது...மறுமுறை இடுகின்றேன்...இரண்டு மூன்று பின்னூட்டம் இருந்தால் சிரமம் பார்க்காமல் அழித்துவிடுங்கள்.

Orani said...

வஜ்ரா, நீங்கள் கூறியது சரியே, ஜந்தர் மந்தர்தான். ஒரு இசை போன்ற சொல் என்பது மட்டும் எனக்கு ஞாபகமிருந்தது. இரண்டாவது டில்லிக்கும் ஜெய்ப்பூருக்கும் கொழப்பிக்கொண்ட காரணம். நிறைய முறை நண்பர்களுக்கென வட இந்திய மூன்று வார நாடோடி டூர் செல்வதுண்டு.

அந்த மூன்று வாரங்களுக்குள் ஆறு, ஏழு மாநிலங்கள் பார்க்க வேண்டுமென்ற துடிப்பில் back pack செய்வோம். அதில் இடங்கள் குளருபடியாகிப் போனது, ஞாபகத்தில் இப்பொழுது நிறுத்துவதற்கு என நினைக்கிறேன்.

மீண்டும் அந்த லிங்குக்கு நன்றி! தாங்கள் North Eastern India போனதுண்டா (மிசோரம், மணிப்பூர், அருணாச்சல் etc.,)? நான் அந்த பகுதியும் வட மேற்கு மாநிலங்களுக்கும் சென்றது கிடையாது, இருப்பினும் ராஜஸ்தான் வரைக்கும் சென்றதுண்டு. பஞ்சப், ஹார்யான இல்லை.

Vajra said...

ஹி ஹி...

நான் பிறந்து வளர்ந்து ஆளாகி, silver jubilee (25 years) வரை கொண்டாடினது மதுரை தாங்க...

அதுக்கப்புறம் நேரே ப்ளேனப்புடிச்சு இங்கன வந்துட்டேங்க...!!

அப்பப்ப காலேஜ் டூர் அடிச்சதுண்டு. மனாலி, ரோத்தாங் கணவாய் பாதை (அந்த கணவாய் வழியா எவனும் ஆடு மாடு மேச்சிகிட்டு இந்தியாக்குள்ள வரலப்பா சாமிங்களா...!!)

தில்லி, ஆக்ரா, சண்டிகர், போன்ற இடங்கள் பார்த்ததுண்டு. ஜந்தர் மந்தர் பார்க்கவில்லை.

கர்னாடகா ஹம்பி பார்த்ததுண்டு...! (மனம் வேதனித்தது)

கல்கத்தா பக்கம் போனதே இல்லை...

இந்தியால பார்க்கிறதுக்கே நிறைய உள்ளது.

Orani said...

//நான் பிறந்து வளர்ந்து ஆளாகி, silver jubilee (25 years) வரை கொண்டாடினது மதுரை தாங்க...//

ஓ! அப்படியா...

ஆமாங்க வஜ்ரா, இந்தியாவில எவ்வளவு இடங்கள் இருக்கிறது. உ.பியில் மட்டுமே நான் ஒரு மாதத்திற்கும் மேலாக கங்கை படுகையின் ஓரத்தில் எல்ல புனித இடங்கள் என்றழைக்கப்படும் இடங்களில் சுற்றித்திருந்த அனுபவம் சொல்லிமாளாது.

அதிலும் அந்த இலவச தர்மசாலக்களில் படுத்துறங்கி இரவு நேரங்களில் ஆற்றின் கரையில் அமர்ந்து அதன் சப்தத்தையும், நிசப்தத்தையும் பருகிய காலங்கள், இப்பிறப்புக்கு போதும்.

நீங்களும் அதனை அனுபவிக்க வேண்டுமென எனக்கு சொல்லத் தோணுகிறது, ஏனொ தெரியவில்லை... முயன்று பாருங்கள்.

Orani said...

//நான் பிறந்து வளர்ந்து ஆளாகி, silver jubilee (25 years) வரை கொண்டாடினது மதுரை தாங்க...//

ஓ! அப்படியா...

ஆமாங்க வஜ்ரா, இந்தியாவில எவ்வளவு இடங்கள் இருக்கிறது. உ.பியில் மட்டுமே நான் ஒரு மாதத்திற்கும் மேலாக கங்கை படுகையின் ஓரத்தில் எல்ல புனித இடங்கள் என்றழைக்கப்படும் இடங்களில் சுற்றித்திருந்த அனுபவம் சொல்லிமாளாது.

அதிலும் அந்த இலவச தர்மசாலக்களில் படுத்துறங்கி இரவு நேரங்களில் ஆற்றின் கரையில் அமர்ந்து அதன் சப்தத்தையும், நிசப்தத்தையும் பருகிய காலங்கள், இப்பிறப்புக்கு போதும்.

நீங்களும் அதனை அனுபவிக்க வேண்டுமென எனக்கு சொல்லத் தோணுகிறது, ஏனொ தெரியவில்லை... முயன்று பாருங்கள்.

இலவசக்கொத்தனார் said...

ஜந்தர் மந்தர் (jantar mantar) - மெயின் ஆபீஸ் ஜெய்ப்பூரில் இருந்தாலும் டில்லியில் ஒரு பிராஞ்ச் இருக்குன்னு நினைக்கிறேன். யாராவது டில்லிப் பார்ட்டிங்க வந்து சொல்லுங்கப்பா.

இலவசக்கொத்தனார் said...

இதோ டில்லி பிராஞ்சுக்கான சுட்டி

Orani said...

இ.கொ,

//ஜந்தர் மந்தர் (jantar mantar) - மெயின் ஆபீஸ் ஜெய்ப்பூரில் இருந்தாலும் டில்லியில் ஒரு பிராஞ்ச் இருக்குன்னு நினைக்கிறேன். யாராவது டில்லிப் பார்ட்டிங்க வந்து சொல்லுங்கப்பா.//

இருக்கலாமோ, ஒரு கன்ஃபுயூஸன இருக்கே... இப்ப என்கிட்ட அந்த "லோன்லி ப்ளானட்" புத்தகம் இல்ல இருந்த கண்டுபிடிச்சி சொல்லிடுவேன்.

நான் பிறகு எங்காவது புத்தகக்கடைக்கு போனன்னா பார்த்து வந்து சொல்றவோய்...

இலவசக்கொத்தனார் said...

//இருக்கலாமோ, ஒரு கன்ஃபுயூஸன இருக்கே... //

நம்ம சுட்டிய பார்த்தா மெயின் ஆபிஸ் டில்லி, ஜெய்ப்பூர்தான் பிராஞ்சுன்னு போட்டு இருக்காங்க.

கன்பியூஸனோ கன்பியூஸன்.....

Orani said...

Test P-I

Orani said...

//அடடா:((
எனக்கெல்லாம் மறக்கவேண்டிய கவலையே இல்லை. எதுவும் ஞாபகமிருந்தால்தானே மறப்பதற்கு:)) //

:-) நாயகி, பிரட்சினையே இல்லை போங்க. அப்படித்தான் இருக்கணும். இடத்த காலி பண்ணி, பண்ணி வைச்சாத்தான் புதியன பிறக்கும் பொழுது சுலபம ஏத்துக்க முடியும்.

நல்ல பாலிசீ :-)); கீப் ட் அப்!

மகேந்திரன்.பெ said...

தெகா இந்த கிரகமெல்லாம் இடம் மாறுனா எதுவும் பின்னூட்ட பிரச்சினை வருமா :) கோவிச்சுக்காதீங்க இல்லை நான் கேக்கவந்தது இப்ப இத்தனை நாளா இதை கிரகம்னு சொன்னோம் இப்ப கோள்னு சொல்லனும் அவ்வளோதானே விடுங்க இனிமே அப்டீக்காண்டியே சொல்லுவோம்..... சாரிங்க நெசமாலுமே எனக்கு ஒன்னும் பிரியில அதான் சும்மா ஓ போட்டு கொஞ்சம் விளக்குவீங்களேன்னு ஹிஹி

Orani said...

மகி,

//தெகா இந்த கிரகமெல்லாம் இடம் மாறுனா எதுவும் பின்னூட்ட பிரச்சினை வருமா :) //

எனக்கொன்னும் பிரட்சினையில்லையப்பா :-))

//கோவிச்சுக்காதீங்க இல்லை நான் கேக்கவந்தது இப்ப இத்தனை நாளா இதை கிரகம்னு சொன்னோம் இப்ப கோள்னு சொல்லனும் அவ்வளோதானே விடுங்க இனிமே அப்டீக்காண்டியே சொல்லுவோம்..... //

எல்லாம் ஓண்ணுதான், வேற்றுக் கிரகத்தில் ஜீவராசிகள் உள்ளனவா? இப்படித்தானே கேக்கிறோம். எல்லாம் கிரகமுங்கோ...

பெரியவங்க சொன்ன கேட்டுக்கணும், சும்மா பேச்சுப் படிக்கப்புடாது. அப்புறம் உங்க வீட்டுக்கு பின்னாடி எப்பாவது ஓடுற ஆத்துக்கு அனுப்பி "அந்த ஏகாந்த நிலையில மூழ்கிக் குளிக்க" அனுப்பிடுவோம்...

//சாரிங்க நெசமாலுமே எனக்கு ஒன்னும் பிரியில அதான் சும்மா போட்டு கொஞ்சம் விளக்குவீங்களேன்னு ஹிஹி//

அந்த 'ஓ' ஒண்ணும் உ.குத்து இல்லையே, பச்ச பாலட்டம் எடுத்துக்கிட்டேன் ;-)

Sivabalan said...

இது நல்ல விசயத்திற்காக....1

Sivabalan said...

இது நல்ல விசயத்திற்காக....2

Sivabalan said...

இது நல்ல விசயத்திற்காக....3

delphine said...

Hello!!
I too felt very sad that Pluto has been depromoted. Poor thing...
Anyways I enjoyed your writing.. More than that the comments.. Really enjoyed. It will be a while before we forget Pluto. We have been so much used to mentioning Pluto as the smallest planet isn't it. Thanks.

நாமக்கல் சிபி said...

நேசி அண்ணா? நீங்கள் ஏன் தமிழ்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டியில் பங்கேற்கக் கூடாது?

தலைப்பு : "இன்னும் இருக்கிறது ஆகாயம்"

அடடா! இயற்கை சார்ந்த தலைப்பு!

SK said...
This comment has been removed by a blog administrator.
Orani said...

வாங்க Doc,

நீங்க சொல்றது உண்மைதான். இப்படி நட்டாத்தில மிதக்க வைச்சுப்புட்டு கொஞ்சம் கூட ஈவிறக்கமில்லாம பண்ணிபுட்டாக. இன்னமும் பேசிகிட்டுத்தான் இருக்காங்கலாம், திரும்பவும் ப்ளூட்டோவ ஒரு கோள் நிலையிலயே வைச்சுக்க சொல்லி... பார்க்கலாம்.

ரசிச்துப் படிச்சீங்களா, சந்தோஷம்.

Related Posts with Thumbnails