Tuesday, September 26, 2006

அம்மா லூசியும், பெண் கயல்விழியும் - படக் கதை!!!

போன வாரத்தில் போட்ட இந்த பதிவில் பாலியோ-ஆன்ந்ரோபாலாஜி துறையைபற்றியும் அதன் கடினமான அணுகுமுறையும் பற்றிம் சொல்லியிருந்தேன். இருப்பினும் அவர்கள் அவ்வாறு இந்த இணைக்கும் பாலங்கள் (missing link) என்று அழைக்கப்படும் மனித மூதாதையர்களை கண்டெடுக்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு நம் வழித்தோன்றல் பற்றி அறிந்து கொள்ள எக்கச்சக்கமான வழி வகைகள் பிறப்பதாக கருதுகிறார்கள்.

அன்மையில் லூசியும், அவரின் குழந்தையை ஒத்த கயல்விழியும் ஆஸ்ரோலோபித்தீகஸ் அஃரென்சிஸ் என்ற இன வகை மனித மூதாதைகள் என்பதும் ஒரே ஏரியாவிலிருந்து அவர்களின் எலும்பு மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிந்து கொண்டோம்.

இப்பொழுது எப்படி இந்த லூசியும், கயல்விழியும் மரத்திலிருந்து இறங்கி இருகால்களை மட்டுமே நம்பி சமவெளியில் நடந்திருக்கக் கூடும் என்பதனைப் பற்றி சிறு கண்ணொட்டத்துடன், சில படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்றுதான் இந்தப் பதிவு.

ஒரு 6லிருந்து8 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் காடுகளில் வசித்த விலங்குகள் தடாலென ஒரு பேரழிவை சந்தித்தாம் (mass extinction). அதனையொட்டி மிச்சம் மீதியிருந்த விலங்கினங்களின் தகவமைப்பு திறனும் இருக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு பரிணமித்ததாம்.

அதன்பொருட்டே இந்த லூசியும், கயல்விழியும் மரங்களில் வாழ்ந்தவர்கள் வேறு வழியில்லாமல், சமவெளிகளில் வாழ நேரிட்டு கொஞ்சம், கொஞ்சமாக எழுந்து நடந்தால்தான் எதிர் வரும் எதிராளியை காணமுடியும் அப்படி காணும் பொருட்டு தூரத்திலேயே கண்டுணர்ந்து தப்பிப்பதற்கு ஏதுவாகும் என்பதற்கினங்க கண்களின் நேர் கொண்ட பார்வையும், இடம் பெயர்வுக்கென இரு கால்களில் எழுந்து நின்று நடக்கும் திறனும், மற்றவைகளும் காலத்தினூடையே கைவரப் பெற்றிக்ககூடுமென அறியப்படுகிறது.

இவர்களே பின்னாலில் ஹோமோ சாபியன்ஸ் என்கிற 'நாம்' உப கிளையாக பரிணமிக்க உந்துதலாக அமைந்ததாம்.

சரி இப்பொழுது லூசியும் அவரது கணவரும் எப்படி ஒரு மாலை நேர நடை பயில சென்றிக்கக் கூடும்... நீங்களே பாருங்கள், எப்படி கூலாக எந்த டிஸ்-ஆர்டர்ஸ், டிவர்ஸ் கோர்ட் பற்றிய பிரஞைகளுமில்லாமல், காலில் ஆடிடாஸ் கூட இல்லாமல் பனியில் ஓர் நடை :-)...

Image Hosted by ImageShack.us

லூசியின் பாஸ்போர்ட் சைஸ் படம் அமெரிக்கா வருவதற்கு விசா எடுக்கும் நிமித்தமாக எடுத்தது... :-))...

Image Hosted by ImageShack.us

லூசியின் குழந்தை கயல்விழியின் பாஸ்போர்ட் சைஸ் படம் வெள்ளத்தில் அடித்து செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எடுத்தது ;-((

Image Hosted by ImageShack.us

வயசாகிப் போன லூசி...

Image Hosted by ImageShack.us

6 comments:

இலவசக்கொத்தனார் said...

//லூசியின் பாஸ்போர்ட் சைஸ் படம் அமெரிக்கா வருவதற்கு விசா எடுக்கும் நிமித்தமாக எடுத்தது... :-))...//

வெள்ளை அல்லது வெளிர் நீல பின்னணி இல்லை, முகம் முழுவதும் தெரியவில்லை. No wonder Lucy didnt manage a trip to the US!

Sivabalan said...

நேசி

படக் கதை சூப்பர்.. படங்களும் சூப்பர்.. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

நல்ல பதிவு..

நன்றி

இலவசக்கொத்தனார் said...

சொல்ல மறந்துட்டேனே. முதல் படத்தைப் பார்த்தா இவங்க ஏன் தமிழ்நாட்டுக்கு வரலைன்னு தெரியுது. ஏன்னா வந்தா ஜைன சாமியார் பட்ட பாடு இல்ல படுவாங்க! ;)

இயற்கை நேசி|Oruni said...

இ.கொ,

இரண்டு காதுகளுமே காணவில்லை. சைடுல பெட்டியத் தள்ளிதான் விசா வாங்குவத திட்டம் இருந்தது...

ஆனா, அப்பவெல்லாம் கொலம்பஸ் அமெரிக்காவை உருவாக்கவில்லையே
;-))

இயற்கை நேசி|Oruni said...

நன்றிங்கோ... சிவா! முதல் படம். அடச் ச்சே காலம் தவறி தோன்றிக்கோமோ என்று எண்ண தோன்றி இருக்கச் செய்திருக்குமே :-)

இயற்கை நேசி|Oruni said...

//சொல்ல மறந்துட்டேனே. முதல் படத்தைப் பார்த்தா இவங்க ஏன் தமிழ்நாட்டுக்கு வரலைன்னு தெரியுது. ஏன்னா வந்தா ஜைன சாமியார் பட்ட பாடு இல்ல படுவாங்க! ;) //

என்னவோய், யாருமே வரலை.

Related Posts with Thumbnails