பறக்கும் அணிலப் பத்தி ஒரு கட்டுரை எழுதணுமின்னு ரொம்ப நாட்களாக திட்டமிட்டிருந்தேன். ஆனா, பாருங்க, 125 மில்லியன் வருடங்களுக்கு முன்பே ஒரு பறக்கும் பாலூட்டி இருந்ததாக வந்த ஒரு செய்தியைப் படித்தவுடன் முதலில் ஒரு அறிமுகம் கொடுத்த மாதிரியா இருந்துட்டுப் போகட்டுமின்னு நம்ம அனுபவத்தைப் பத்தி பகிர்ந்துக்கிறதுக்கு முன்னாடி நான் படிச்ச கட்டுரை என்ன சொல்லுதுன்னு படிச்சிடலாம்.
நம்ம தென் இந்தியக் காடுகளில் இரண்டு விதமான பறக்கும் அணில்கள் இருக்கிறது. பெரிய பழுப்பு மற்றும் திருவாங்கூர் பறக்கும் அணில்கள் (Large Brown Flying Squirrel and Travancore Flying Squirrel). இதில இந்த பெரிய பறக்கும் அணிலை கொஞ்சம் சிரமம் பார்க்காம இரவு நேரங்களில் வனத்துனுள் அலைந்தால் எப்படியாவது பார்த்து விடலாம்.
சரி இவைகள் பறக்கின்றனவா என்று கேட்டால், இல்லை. இவைகள் பறப்பது கிடையாது ஒரு பெரிய மரத்திலிருந்து அதனை விட தனிவாக சற்றே உயரம் தாழ்ந்த மரத்திற்கு மிதந்து (gliding) செல்கிறது. பின்னங்காலிருந்து முன்னங்கால்களுடன் இணைக்கும் ஒரு சவ்வு போன்ற முடியுடன் கூடிய அமைப்பை பெற்றிருக்கிறது, அதற்கு patagium என்று பெயர். இதனைக் கொண்டு தனது வாலையும் ஒரு துடுப்பை போல செயலாற்ற வைத்து செல்லும் திசையை மாற்றி அமைக்க பயன் படுத்தி மிதந்து வருகிறது.
சரி அப்படி மிதந்து சென்று வருவதால் என்ன பயன் என்றால், அதிக தூரத்தை தனது எதிரிகளின் கைகளுக்கு அகப்படாமல் சென்று உணவு தேட முடிகிறது, தனது இனப் பெருக்க நேரத்தில் தனது நெருங்கிய சொந்தத்திக்குள்ளேயே இனப் பெருக்கம் (inbreeding) செய்யாமல் (மொத்தத்தில நம்ம மாதிரி இல்லாம), தன்னின மரபணுத்தன்மை விரித்துக் கொள்ள முடிகிறது.
இப்பொழுது செய்திக்குள் போவோம். நானும் நேற்றைய வரைக்கும் நமது பாலூட்டி இனமே தோன்றியது நமது மூஞ்சூரு (Shrew) வகை பூச்சியுண்ணிகளிடமிருந்துதான் என்று நம்பி வந்தேன். ஆனால், இப்பொழுது சைனாவில் விவசாயிகளால் கண்டெடுக்கப் பட்ட இந்த பறக்கும் (மிதக்கும்) பாலூட்டி ஜீவராசியைப் பற்றி அறிந்து கொண்டவுடன், இப்ப பழைய மூஞ்சூரு கோட்பாடு கேள்விக் குறியாக ஆகிப் போச்சு. இருந்தாலும் இப்ப கண்டெடுக்கப்பட்டுருக்கிற பாலூட்டி நவீன பறக்கும் அணிலுடன் கொஞ்சம் கூட ஒப்புமை இல்லையாம்.
இதுகள் டைனோசார்கள் இருந்த மீசோசோயிக் காலத்திலயே கடை பரப்ப ஆரம்பித்திருக்கின்றார்களாம். இதனை கண்டெடுத்த நாளில் இருந்தே, ஆராய்சியாளார்கள் பச்சத் தண்ணி பல்லுள படாம இந்த ஜந்துவை ஒரு தனி வரிசை பாலூட்டிகளின் இனத்தில் சேர்க்காமல் விடமாட்டோமின்னு விரதமிருக்கிறதா கேள்வி ;-)
பாருங்க, பாலூட்டிகளிலேயே நமக்கு தெரிஞ்சு ஒர் 51 மில்லியன் வருஷத்திற்கு முன்பு தான் முதல் பறக்கும் ஜீவராசி இருந்ததா தெரிஞ்சுக்கிட்டு இருந்தோம், இப்ப இவரு அந்த ரிகார்டை உடைச்சுட்டார்.
டைனோசார் இருந்த அதாவது ஊர்வன (Reptiles) காலத்தில மெதுவா வானத்தில எட்டி குதிக்கிற ஆசை வந்து முதல் ஊர்வன-பறப்பன இணைப்பாக இருந்தவர் ஆர்க்கியோப்டெரெக்ஸ் (Archaeopteryx) அப்படிங்கிறவர்தான், 145 மில்லியன் வருஷத்துக்கு முன்னே. இவர்தான் பறவைகளுக்கே பறக்கிறதுக்கு முன்னோடின்னு சொல்லலாம்.
இருந்தாலும் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் இவரும் பறக்கல, மிதந்து செல்லும் வேலையைத்தான் செய்திருக்கிறார். இப்ப இருக்கிற பறவைகளின் இறக்கையைப் போல மேலே கீழேன்னு அடிச்சு பறக்க முடியாது இந்த முன்னோடி தாத்தாவுக்கு.
எனது அடுத்தப் பதிவில நம்மூரு பறக்கும் அணில்களை எப்படி மழைக்காடுகளில் பார்க்க முடியுங்கிறதெ ஒரு தனிப் பதிவா போட்டு நம்ம அனுபவத்தை உங்க கிட்ட பகிர்ந்துக்குவோம். அது வரைக்கும் இதப் படிச்சிட்டு மனசில வைச்சுக்கோங்க, சரியா.
பி.கு: இங்கு இந்த ஆர்க்கியோப்டெரெக்ஸ் பற்றி பேசியதால் கொஞ்சம் குழப்பமாக இருப்பதை போல தோணலாம். அப்படி, ஆர்க்கியைப் பற்றி இங்கு பேசியதற்குக் காரணம், டைனோசார்களின் சம காலத்தில் வாழ்ந்து வந்த பாலூட்டிகளில் எந்த விதமான பறக்கும் பாலூட்டிகள் இது வரையிலும் இருந்ததாக அறியப் படாமல் இருந்து வந்தது. இந்த கண்டெடுப்பின் மூலமாக அது அப்படியல்ல என்று தெரிய வருகிறது.
மேலும் இந்த கண்டெடுக்கப்பட்ட ஜீவராசி பாலூட்டியாக இருந்தாலும், இன்றைய சமகால உயிரினத்துடன் ஒத்துப் போகாமல் இருப்பதால் தனி வரிசைக் கிரமத்தில் ஒரு இனமாக்க முயற்சி நடந்து வருகிறது. எனவே பெயரும் இடப்படவில்லை.
Thursday, December 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
P.S: ஆர்க்கியோப்டெரெக்ஸ் படம் யார்கிட்டாயாவது இருந்தா கொஞ்சம் கொடுத்து உதவுங்க, கூகிளித்தேன் கிடைக்கல ;-)
அடப்பாவி மக்கா தெ.கா இயற்கையை நேசிக்கிற டிக்கெட்டும் நீங்க தானா சொல்லவே இல்ல. ஆனா வவ்வால் படத்தை போட்டு அணிலு சொல்றது நல்லா இல்ல அமாம் சொல்லி புட்டேன். :)) இது சும்மா தமாசுக்கு நல்ல பயனுள்ள கட்டுரை தலைவா.
பயனுள்ள கட்டுரை, சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது.
தொடருங்கள்.
ஊர்வன எல்லாம் முட்டை இட்டு குஞ்சு பொரித்தவைதானே? அதே போன்றுதானே பறவைகளும் டைனோசர்களும். அப்படி இருக்கையிலே இந்த ஆர்க்கியோப்டெரெக்ஸ் மட்டும் எப்படி பாலூட்டியா இருந்தது? அல்லது பாலூட்டி டினோசர்களும் இருந்தனவா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கப்பூ....
விக்கிபசங்களின் மொட்டைத் தலை பாஸ் :-P,
//அப்படி இருக்கையிலே இந்த ஆர்க்கியோப்டெரெக்ஸ் மட்டும் எப்படி பாலூட்டியா இருந்தது? //
ஏப்பூ நான் எங்கன அப்படி சொல்லியிருக்கிறேன், ஓய்! நான் இப்படித்தானே சொல்லியிருக்கிறேன்... க்ரிஸ்டல் க்ளீயரா,
டைனோசார் இருந்த அதாவது ஊர்வன (Reptiles) காலத்தில மெதுவா வானத்தில எட்டி குதிக்கிற ஆசை வந்து முதல் ஊர்வன-பறப்பன இணைப்பாக இருந்தவர் ஆர்க்கியோப்டெரெக்ஸ் (Archaeopterex) அப்படிங்கிறவர்தான், 145 மில்லியன் வருஷத்துக்கு முன்னே. இவர்தான் பறவைகளுக்கே பறக்கிறதுக்கு முன்னோடின்னு சொல்லலாம்.
இந்த ரெக்ஸ்களுக்கு பற்கள் இருந்தது ஓய், இதனனை missing link என்று கூட கூறுவார்கள். அதாவது, ஊர்வன வற்றுகும் பறப்பனவுக்கும் இணைப்பு இனம்...
சுவையான தகவல்கள்!
யோகன் பாரிஸ்
//ஆனா, பாருங்க, 128 மில்லியன் வருடங்களுக்கு முன்பே ஒரு பறக்கும் பாலூட்டி இருந்ததாக வந்த ஒரு செய்தியைப் படித்தவுடன்//
நீங்க archaeopteryx பத்தியா சொல்லறீங்க? நான் பார்த்த வரை இவைகள் பாலூட்டிகளாகத் தெரியவில்லையே. ஊர்வன மற்றும் பறப்பன பொதுவாக முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனம்தானே. இது ஊர்வன - பறப்பன இணைப்புதானே. இது மட்டும் எப்படி பாலூட்டியாச்சு? நாந்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டு உளறறேனா? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்.
நீங்க எழுதி இருக்கும் ஸ்பெல்லிங் கொஞ்சம் மாறிப் போச்சு. கூகிளாண்டவர் கிட்ட archaeopteryx image அப்படின்னு கேளுங்க, படங்கள் வருது பாருங்க.
பறக்கும் டைனோசர் ...ஹ்ம்ம்... நினச்சு பார்க்கவே பிரமபிப்பா இருக்கு.. நேர்ல பார்த்தா எப்படி இருக்கும்...ம்ம்ம்
என்க்கு என்னமொ பறக்கும் அழகு விட gliding தான் அழகுன்னு தோனுது.ம்ம்ம்ம்
சுவாராஸ்யமான தகவல்கள்...இ நே நன்றி
சுடச் சுட, இப்போ வந்த சேதிய கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள்
புதிதாக கண்டுபிடிக்கப் பட்ட இனத்தைப் பற்றிய செய்திகளுக்கு சுட்டி கொடுங்களேன்.
கொத்ஸ்,
நீங்க கேட்டுக் கொண்டதே போலவே, இதோ செய்திச் சுட்டி;
http://www.nytimes.com/2006/12/13/science/14mammalcnd.html?_r=1&hp&ex=1166072400&en=1fb6f9ae2313f04f&ei=5094&partner
=homepage&oref=slogin
சந்தோஷ்,
//அடப்பாவி மக்கா தெ.கா இயற்கையை நேசிக்கிற டிக்கெட்டும் நீங்க தானா சொல்லவே இல்ல.//
இதெல்லாம் கொஞ்சம் ஓவராப் படலயா வுமக்கு, எம்புட்டு நாளா நான் இங்கன நேசிங்கிற பெயரில படம் காட்டிக்கிட்டு இருக்கேன், இப்ப வந்து இப்படிச் சொல்றீரு, சரி, சரி இனிமேலாவது தவறாம வந்து கரெக்டா அட்டெண்டென்ஸ் கொடுத்திடணும், சொல்லிப்புட்டேன்.
// ஆனா வவ்வால் படத்தை போட்டு அணிலு சொல்றது நல்லா இல்ல அமாம் சொல்லி புட்டேன். :))//
அது, சரியாத்தான் செல்லி இருக்கிறீர். இது வுமக்கு மட்டுமில்ல இப்ப எல்லோருக்குமே சந்தேகம்தான், இதனை எதில சேர்க்கிறதுன்னு...:-)
அருமையான கட்டுரை!
balloonmama[ at] gmail காமிற்கு ஒரு மயில் அனுப்ப முடியுமா?
நன்றி!
நல்ல கட்டுரை.
இங்கே 285 மில்லியன் வருடங்களுக்கு முன்பே பாலூட்டிகள் அதாவது டினோசர்களுக்கு முன்பே உருவாகி விட்டதாக கூறியிருக்கிறார்களே.
http://www.earthlife.net/mammals/evolution.html
இன்னும் சிலர் கடல் வாழ் உயிரினங்களாக இருந்த பொழுதே பாலூட்டிகள் உருவாகி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
படம் அனுப்பி இருக்கென் இ நே...
மங்கை,
இப்பத்தான் மெயில் பார்த்தேன். படங்கள் அசத்தால இருக்குங்க. ஆனா, இந்த பதிவில முன்னமே ஒண்ணு கிடைச்சுப் போட்டுட்டேங்க.
நீங்க அனுப்பிச்சப் படம் ஒண்ணு ஆக்சன்ல அசத்தல இருக்கு, ஆசையாவும் இருக்கு இங்கன போடணுமின்னு, ஆனா, அப்புறம் இந்த கட்டுரை ஆர்க்கிப் பையலப் பத்தின மாதிரியாடும். அதனால நாம பின்னாலே, ஆர்க்கியப் பத்தி எழுதி அந்தப் படங்கள போட்டுடுவோமா...
உங்கள் உழைப்பிற்கு நன்றிங்க, மங்கை.
//பயனுள்ள கட்டுரை, சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது.
தொடருங்கள்//
வசந்தன்,
எப்படி இருக்கீங்க. நானும் குமரனும் உங்களை மினியோபாலிஸுல் சந்திக்கணுமின்னு ப்ரியப்பட்டோம், பிறகு காணவே இல்லை.
அடிக்கடி வருக, ஊக்கிகள் தருக :-)!!
//சுவையான தகவல்கள்!
யோகன் பாரிஸ்//
இப்படி நீங்களெல்லாம் சொல்வது சற்றே ஊக்கபடுத்துவதாக உள்ளது. நன்றி, யோகன் அவர்களே!!
//பறக்கும் டைனோசர் ...ஹ்ம்ம்... நினச்சு பார்க்கவே பிரமபிப்பா இருக்கு.. நேர்ல பார்த்தா எப்படி இருக்கும்...ம்ம்ம்//
மங்கை, இங்க கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு டி.வி.டி ஒண்ணு வாங்கி அன்பளித்தேன் அது டைனோசார்களின் காலத்தைப் பற்றியது. ரொம்ப அருமையான அனிமேஷன் பண்ணி சொல்லியிருப்பாங்க. அதில பறக்கும் ஒரு இனமான Velociraptors என்ற டைனோசாரின் பிரமாண்டத்தை பார்க்கும் பொழுது கண்டிப்பாக நீங்கள் சொல்லும் அந்த பிரமிப்பு ஒட்டிக்கொள்ளும்.
//எனக்கு என்னமொ பறக்கும் அழகு விட gliding தான் அழகுன்னு தோனுது.ம்ம்ம்ம்//
அதுவும் சரிதான்... ரொம்ப க்ளாசிக்காக இருக்கும் சரிக்கிகிட்டு வருவது மாதிரி, ரம்மியமாக இருக்குமின்னு சொல்ல வாரீங்க இல்லையா. அதே... நானும் நினைக்கிறேன்.
நன்றிங்க மங்கை... திரும்ப வாரப்ப சந்திக்கிறேன்.
//சுடச் சுட, இப்போ வந்த சேதிய கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள்//
You are welcome, Dharumi!!
அருமையான கட்டுரை!
balloonmama[ at] gmail காமிற்கு ஒரு மயில் அனுப்ப முடியுமா?
நன்றி! //
ஹை, பலூன் மாமா!
தங்களின் தொடர்ந்த வாழ்த்துகளுக்கு நன்றிகள்!
வாங்க அடிக்கடி, எழுதுங்கள் ஏதாவது :D...
குமரன் எண்ணம் :-)
ஏனுங்க பெயர மாத்திப்புட்டீங்க, அது நல்லா இருந்துச்சே ;)
முதலில் நன்றி, இந்த விசயங்களை இங்கு எடுத்திட்டு வந்ததுக்கு.
//இங்கே 285 மில்லியன் வருடங்களுக்கு முன்பே பாலூட்டிகள் அதாவது டினோசர்களுக்கு முன்பே உருவாகி விட்டதாக கூறியிருக்கிறார்களே.//
ஆமாம், ஆமாம். டைனோசார்களின் நாட்கள் எண்ணப் பட்டுக்கொண்டிருக்கும் பொழுதே, நம்மாளுங்க அளவில் சின்னதாக குடும்பம் நடத்திக்கிட்டு இருந்திருக்காங்கத்தான். ஆனா, முழு வீச்சில் வீரியம் கொண்டு எழ ஆரம்பித்தது, இந்த டைனோசார் அண்ணாச்சிகள் பூமியை விட்டே பை, பை சொன்னத்திற்கு பிறகுதான்.
அப்படி ஆதிகால பாலூட்டிகள்னு சொல்லிட்டு வந்தவங்களில் சில குறை நிறைகள் இருந்தன, சரியான படி பாலூட்டிகள் தானான்னு வகைப் படுத்திருத்திரதுக்கு.
இருந்தாலும் அந்த காலங்களில் இருந்தவைகள் பூராவும் ஊர்வன-மாதிரி இருக்கக் கூடிய பாலூட்டிகளாம். ரொம்ப துள்ளியமா, சொல்லப் போன 145 மில்லியன் வருஷங்களுக்கு பின்னே தான், நல்லா சொல்லிக்கிற மாதிரி பாலூட்டிகளின் பண்புகளுடன் கிளைவிரித்து பாலூட்டிகள் பல்கிப் பெருக ஆரம்பித்திருந்தன.
இதோ இங்கயும் சொல்லியிருக்காங்க பாருங்களேன்...
...There is a problem in recognizing a mammal from only fossil bones. Fossil synapsid reptiles from the Periman period 250 million years ago, show many skeletal features of mammals, but not all. Thrinaxodon at the base of the Triassic period 245 million years ago, has a secondary palate and teeth that can be divided into incisors, canines and molar-like teeth. Thrinaxodon was a meat eater and had long canines to slice into its prey. But what makes it a reptile is that it had the articular and quadrate bones as part of the jaw joint. Most books refer to these fossil synapsid reptiles as mammal-like reptiles, mostly because paleontologists debate where to draw the line between reptile and mammal. For more information on this and other transitions in the fossil record. Visit fossil transitions. The oldest completely known true fossil mammal is Morganucodon from the early Jurassic, 200 million years ago. Morganucodon is different from the mammal-like reptiles in having only one lower jaw bone, a secondary palate, and the unique anatomy of mammal teeth, being replaced only once in life. Morganucodon was very small, only about 13 centimeters long and is known from China and the United Kingdom....
புதுமையான தகவல்.. its just amazing to know all these existed about millions of years back.
//Though these animals fly they are different from birds. As you have said they GLIDE> they are very swift. unlike the birds that have good vision, thse nocturnal animals, have a very poor vision and they navigate using the sound waves what we call as ultrasound.
To me these bats are very ugly looking structures, and i dare not see them at night. very nice post indeed...
Food for my long forgotten Zoology.//
நீங்க கூறியபடியே தங்களின் விலங்கியல் சார்ந்த ஞாபங்களை மீண்டும் ஒரு முறை பரிசோதித்துக் கொண்டது போலத்தான் தெரிகிறது ;-)
இந்த வவ்வால்களைப் பற்றி நாம் இங்கு கொஞ்சம் கூட தொட்டுச் செல்லாததற்கு காரணம் அவைகள் பரிணாம ஏணியில் மிகவும் பின்னால் வந்ததும், நன்கு பற்பதற்கென தகவமைப்பை பெற்றிருப்பதுவும் ஒரு காரணமே.
இந்த பறக்கும் அணில்களும், வவ்வால்களும் இரவில் தனது வாழ்கையை வாழ்ந்தாலும், பறக்கும் அணில்கள் Ultrasonic soundயைக் கொண்டு சென்று வருவதாக எனக்குப் படவில்லை.
இருப்பினும் இந்த Nocturnal Foragersகளுக்கு சிறப்பு பார்வைக்கான தகவமைப்பு இருக்கிறது, தேவாங்குகளுக்கு போலவே.
நியூயார்க் டைம்ஸ் இணைப்புக்கு நன்றி
அப்படியே இந்த இணைப்பையும் பாருங்கள்
http://www.nytimes.com/2006/12/17/weekinreview/17basics.html?ref=science
http://www.baiji.org/index.php?id=2
பய்ஜி நன்னீர் டால்பின் அழிந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள்.
//புதுமையான தகவல்.. its just amazing to know all these existed about millions of years back.//
ஆராதனா,
வருகைக்கு நன்றி! இந்த ஆச்சர்யங்கள் இருக்கும் வரைக்கும் வாழ்வு சுவைப்படும் தானே... எனவே தெரிந்து தெரிந்து ஆச்சர்யப் பட்டுக் கொண்டே இருப்போம் :-)
வாங்க அடிக்கடி, இந்தப் பக்கமா...
வாங்க எழில்,
வருகைக்கு நன்றி! அப்படியே அந்த சுட்டிக்கும் நன்றிகள். அடிக்கடி வந்து போங்க ;-)
குரங்குமுடி பதிவை வைத்திருக்கும் இயற்கை நேசி. அடுத்த இடுகை எங்கே? புதுசா எழுதுனா படிக்கலாம்ன்னு காத்திருந்தா ஒன்றும் எழுத மாட்டேன் என்கிறீர்களே. ஊருக்குப் போயாச்சோ?
Post a Comment