Wednesday, July 25, 2007

ஏன் நமது மூதாதையர்கள் எழுந்து நின்றார்கள்!!

யாராவது இங்க இயற்கை நேசி'ன்னு ஒருத்தர் எழுதிட்டு இருந்தாரே எங்கே அவர்ன்னு தப்பித் தவறி தேடியிருந்தீர்கள்னா அவங்களுக்காக, மரத்திலிருந்து சீக்கிரமா இறங்கி வந்து இந்தப் பதிவப் போட்டுட்டு, நான் இன்னமும் சுவாசிச்சுட்டுத்தான் இருக்கேன்னு தெரிவிச்சுட்டு திரும்பவும் மரத்துக்கே போயிடுறேன்.

நேற்று அவசர அவசரமா மூச்சிறைக்க நம்ம சிவபாலன் இருக்கார் இல்லையா அவரு வந்து மரத்துக்கு கீழே நின்று, நேசி, நேசி இந்த மாதிரி 'தி ஹிந்து" பத்திரிகைல ஒரு செய்தி வந்துருக்கு பாத்தீங்களான்னு சுட்டியைக் கொடுத்தார். போயி பார்த்தேன். அதில நம்ம சிம்பன்சி அண்ணன் ஒருதருக்கு சுவாச சம்பந்தமா அளவீடு பண்ற கருவிகளை எல்லாம் மாட்டி விட்டு ட்ரெட் மில்லில் நடக்கிற மாதிரி ஒரு படத்தையும் போட்டு கொஞ்சமா எழுதியிருந்தார்கள்.

அதாவது ஏன் மனித மூதாதையர்கள் நான்கு கால்களில்(quadrupedal) நடந்து திரிந்ததை விட்டுவிட்டு எச் சூழல் அவர்களை இரண்டு கால்களைக் (bipedal) கொண்டு நடக்க உந்துவித்ததுன்னு ஓர் அராய்ச்சிக்கான படம் அந்த பத்திரிக்கைல இருந்துச்சு.

இதில பாருங்க ஆப்ஃரிக்கா சம வெளிகளில் நம் மூதாதையர்கள் தோன்றிய பொழுது சக வாலில்லா குரங்குகளிலிருந்து கொஞ்ச கொஞ்சமாகத்தான் மாற்றங்கள் புற அமைப்பில் நடைபெற்றிருக்கிறது. இதில் ஒன்றுதான் இந்த இரு கால்களில் எழுந்து நின்ற தகவமைப்பும்.

இது போன்று குமிந்து knucklewalk பண்ணும் பொழுது ஆரம்ப கால ஆராய்சிகளின் போது பொதுவாக நம்பப் பட்ட கருத்து எழுந்து நின்று நடப்பதின் மூலமாக உணவு தேடுவதற்கு நீண்ட தொலைவு போக முடியும் என்பதற்காகவும், நெருங்கி வரும் அபாயங்களிலிருந்து (பிற விலங்குகளின் மூலமாக) தப்பித்துக் கொள்வதற்கு ஏதுவாகவும் இந்த தகவமைப்பு உதவுவதின் பொருட்டாக இருக்கக் கூடும் என்று இருந்தது. இடுப்பு மற்றும், முழங்கால் எழும்புகளின் அமைப்பைக் கொண்டு மற்ற அவ்வாறு நடக்காத சமகால வாலில்லா குரங்களுடன் ஓப்பிடப்பட்டு தீர்மானிக்கப் பட்டது.

ஆனால், வாஷிங்டன் மட்டும் கலிஃபோர்னிய பல்கலை கழங்களில் நடத்தப் பட்ட ஓர் அன்மைய ஆராய்ச்சின் பேரில் புதிதாக ஒன்றும் தெரியவந்திருக்கிறது. அதாவது, இரண்டு கால்களில் எழுந்து நடந்ததின் மூலமாக "நிறைய கலோரிகள் சேமிப்பதற்கெனவும்" என்பதே அவ் ஆராய்ச்சின் கண்டுபிடிப்பு.

இதனை நான்கு கால்களில் நடக்கும் ஜீவராசிகளுக்கும், இரண்டு கால்களில் நடக்க வைக்கக் கூடிய சிம்பன்சிகளுக்கும் உள்ள சக்தி இழப்பை நம்மோடு தொடர்புப் படுத்தி பார்க்கும் பொழுது நாம் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அதிக சக்தி சேமிப்பு பண்ணுகிறோமாம், இந்த இரு கால்களை கொண்டு நடப்பதின் மூலமாக.

உடம்பின் இடுப்புப் பகுதிக்கு மேலே பருமனாக இருப்பதை விட இந்த கால்கள் குச்சியாக இருப்பதும் இதன் பொருட்டுத்தானோ (சக்தி சேமிப்பதற்கெனவும், நடையை துரிதப் படுத்தவும்தானா, அப்ப) ???

16 comments:

இயற்கை நேசி|Oruni said...

சரி நானே செக் பண்ணிப் பார்த்துக்கிறேன். இந்த தளம் இன்னும் உயிரோடுதான் இருக்குதான்னு.

சிவபாலன் said...

நேசியாய் மீன்டும் வந்ததற்கு நன்றி!

சுவாரசியாமான தகவலுடன் தான் வந்துள்ளீர்கள்.

உண்மையில் எழுந்து நடப்பதற்கு உரிய காரணங்களை யோசிக்கும் போதே சுவாரசியம் அதிகம் ஆகிவிடுகிறது.

ஆனால் ஒரு சந்தேகம், நாண்கு கால்களில் எளிதாக மரங்களில் ஏறி கனிகளைப் பறிக்க முடியும். ஆனால், இரு கால்களில் எப்படி சுலபமாகும்? அப்படி இருக்க இரு கால்களில் நடக்கும் பழக்க்ம் ஆச்சரியத்தையும் தருகிறது

நாமக்கல் சிபி said...

Welcome Back Natural Lover!

இயற்கை நேசி|Oruni said...

சிவா,

நேசியாய் மீன்டும் வந்ததற்கு நன்றி! //

அப்படின்னா மரத்திலிருந்து இறங்கி வந்தற்கு :-P

ஆனால் ஒரு சந்தேகம், நாண்கு கால்களில் எளிதாக மரங்களில் ஏறி கனிகளைப் பறிக்க முடியும். ஆனால், இரு கால்களில் எப்படி சுலபமாகும்? அப்படி இருக்க இரு கால்களில் நடக்கும் பழக்க்ம் ஆச்சரியத்தையும் தருகிறது //

ஹும், எனக்கு தெரிஞ்ச மட்டும் என்ன காரணங்களாக இருந்திருக்கக் கூடுமின்னு சொல்றேன்.

அதே சம காலதில் நிறைய மற்றைய speciesகள் மரங்களிலேயே அதிகப் படியான நேரத்தை சிலவு செய்திருக்க வேண்டும். இரையை தேடுவதற்கெனவும், பாதுகாப்புக்கு எனவும்.

அப்படி உணவு தேடும் பொழுது, அவைகள் சாப்பிடும் பழக்க வழக்கம், தேர்ந்துதெடுக்கும் சாப்பாடு வகை, நேரம் எல்லாம் மற்ற வகை இனங்களுடன் நேரடியாக சந்திக்கும் பொழுது அங்கு போட்டி வந்து விடுகிறது. எனவே, அதனை தவிர்க்க வேண்டுமானால், வேறு மாதிரியான உணவு பழக்க வழக்கங்களிலிருந்து, தேடும் முறை எல்லாவற்றையும் மாற்றி அமைத்துக் கொண்டாலே தப்பிப் பிழைக்க முடியுமென்றால் மாறித்தானே ஆகணும்.

இயற்கை நேசி|Oruni said...

Welcome Back Natural Lover! //

Guruvey!

Are you still around?

சிவபாலன் said...

ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில்!

நன்றி

நாமக்கல் சிபி said...

//Are you still around?//

அது போலி குரு!

:)

Unknown said...

ஹிஹி இயற்கை நேசி வாங்க வாங்க
நான் நாம எந்திரிச்சு நின்னோம்னா?.....

(தொடரும்)

Unknown said...

அனங்குகொல் ஆய் மயி கொல்லோ கனங்குழை மாதர்தம் மாளுமென் நெஞ்சுன்னு கவுஜ எழுதாக்கொள்ள

(தொடரும்)

இயற்கை நேசி|Oruni said...

அது போலி குரு! //

என்ன போலி, எனக்குச் surul poli ரொம்பப் பிடிக்கும்... ஒரு, ஒரு கிலோ அனுப்பி வையுங்களேன் ;-)

Anonymous said...

நீங்க கும்மியையும் நேசிப்பீர்களா?

Anonymous said...

போலி ஸ்டாக் இல்லை!

போண்டா இருக்கு! கொடுக்கட்டுமா?

Unknown said...

சிபிய இங்க பாத்தா கூகுள் டாக்குக்கு வரச்சொல்லுங்கப்பா போரடிக்குது மொக்க போட ஆளு இல்ல

Anonymous said...

போலி ஸ்டாக் இல்லை!

போண்டா இருக்கு! கொடுக்கட்டுமா? //

பஞ்சமும், பட்டினியுமாக இங்கு இருப்பதால் சேர்த்தே ஒரு போண்டா அனுப்பவும்... வேறு எந்த விழாவிற்கு போண்டா இல்லையென்றாலும் பரவாயில்லை... :-)))

நாமக்கல் சிபி said...

//சிபிய இங்க பாத்தா கூகுள் டாக்குக்கு வரச்சொல்லுங்கப்பா போரடிக்குது மொக்க போட ஆளு இல்ல //

அவர் வர மாட்டார்! வர மாட்டார்!

ஏன்! ஏன் வரணும்? எதுக்கு வரணும்!

இயற்கை நேசி|Oruni said...

கிழுமத்தூர், ஏதாவது புரியற மொழியில எழுதுங்கப்பா. இரண்டாவது, கொஞ்சம் கட்டுரைக்கு தொடர்பாகவும் :-D

Related Posts with Thumbnails