
ஸ்ரைக்(shrike) வகை பறவைகள் சற்றே நமது சிட்டு குருவிகளின் உடல் அளவை விட பெரியதாக இருக்கும். இவைகள் பெரும்பாலும் உணவாக தன்னைவிட உருவத்தில் சிறிய உயிரினங்களை உண்ணுகிறது. அதன் வேட்டையாடும் ஸ்டைல் பறந்து வந்து கவ்விச் செல்வது போல்தான்.
இயற்கையில் எல்லாவற்றிர்க்கும் ஒரு செக் மேட் போல, ஒவ்வொரு இனத்தையும் இனத்தொகையீட்டு (கட்டுப்படுத்தி) வைத்துக் கொள்ள அதனை பிடித்து உண்ணும் உயிரினம் ஒன்று இருக்கும் நிச்சயமாக. ஆனால் தென் அமெரிக்காவில் வாழும் ஒரு வகை வெட்டுக்கிளியை வேறு எந்த உயிரினமும் தன்னை பிடித்து உண்ணா வண்ணம் தகவமைப்பாக பெற்றிருப்பது 'விஷம்' அதன் தொண்டை பகுதியையொட்டி. உண்மை அதுவாக இருக்க, அப்படி யாரும் அதற்கு செக் மேட் ஆக இல்லாமல் போனால் இயற்கையின் விதிப்படி அந்த குறிப்பிட்ட உயிரினம் பல்கிப் பெருகி மற்றவைகளுக்கு இடமலிக்காமல் தானும் எந்த ஒரு பிரயோசனமும் மற்றவர்களுக்கில்லாமல் உணவுச் சங்கிலியை உடைக்கும் நிலைக்கிட்டுச் செல்லலாம்.
இச் சூழலில் அந்த வெட்டுக்கிளிக்கு எமனாக அமைந்தது இந்த ஒரு குறிப்பிட்ட ஸ்ரைக் இனம். ஒரு நாள் ஒரு பறவை ஆராய்ச்சியாளர் களப்பணி செய்து கொண்டுள்ள போது, தற்செயலாக தனது பைனாகுலர் மூலமாக இந்த பறவையை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அந்த ஸ்ரைக் பையன் சமர்த்தாக அந்த ஒரு விஷ வெட்டிக்கிளியை பிடித்துக் கொண்டு போய் ஒரு முள் வேலியில் அமர்ந்து பொறுமையாக தனது அலகால் தலைப்பாகத்தை மட்டும் தட்டி விட்டுட்டு (அங்குதானே விஷ சுரப்பி இருக்கிறது) லபக்கென்று கபளீகரம் செய்ததை பார்த்தவுடன், ஆராய்ச்சியாளனுக்கு அன்னைக்கு பம்பர் பரிசு விழுந்த ஆனந்தம் தான்!
காட்டிலிருந்து தனக்கு ஞானம் கிட்டிய தொனியில் வந்து தனக்குக் கிட்டிய தரிசனத்தை ஒரு பல்நாட்டு பறவைகள் மாத ஏட்டில் பகிர்ந்து கொள்ளும் வரை தனியவில்லையாம்.
அது நாள் வரையிலும் எல்லோரும் அந்த வெட்டுக்கிளியின் செக் மேட் யார் என்பது தெரியாமல் இருந்ததும், இந்த சமத்து ஸ்ரைக் எப்படி நாம் தூசி பட்ட அல்வா பகுதியை கொஞ்சம் கிள்ளி அந்த பக்கம் போட்டுவிட்டு சாப்பிடுவதை போல சாப்பிடுவதை கண்டதும், இயற்கையின் விந்தையோ விந்தையென்று அதிசயத்துப் போனாராம். நானும் தான்! இப்பொழுது நீங்களும்தான்!!
இந்த செய்தியை நான் ஒரு 6 வருடங்களுக்கு முன்பு படித்தேன், அப்படியே மனதில் நின்று போனது. இப்பொழுது இங்கு சொல்வதின் மூலம் உங்கள் மனதையும் நிரப்புகிறேன். குழந்தைகளிடத்தே சொல்லிப் பாருங்களேன்....அப்புறம் நீங்கதான் ஹீரோ...!
சொல்லிட்டு போங்க இது பிடிச்சிருந்ததான்னு....
5 comments:
//சொல்லிட்டு போங்க இது பிடிச்சிறுந்ததான்னு....//
Yes Mr. Nesi, Really I like this most.
Life Cycle is a wonderful concept even in Project Management also.
சிவா, இது உண்மையா ஆச்சரியப் படுற மாதிரி இல்ல! இதெ மாதிரி, தப்பி பிழைக்கிறதுக்காக நாமும் என்னென்ண வேஷம்மெல்லாம் போடுறெம் நாம வாழ்க்கையில் கூட அதெப் பத்தி படிக்க...இங்க போங்க நேரம் கிடைச்சா...
http://orani-sittingby.blogspot.com/
/சொல்லிட்டு போங்க இது பிடிச்சிறுந்ததான்னு....//
ரொம்ப பிடிச்சிருக்கு
பிடிச்சிருக்கு! புதிய தகவல்!
இந்த வெட்டுக்கிளி படம் கிடைக்கவில்லையா??
வெட்டுக்கிளியை சாப்பிடுவாங்க தெரியுமா????
ரொம்ப பிடிச்சிருக்கு//
தருமி,
தூங்கிட்டுருந்த பதிவ தட்டி எழுப்பிட்டீங்க... நன்றி!
அப்படியே 'று'விலிருந்து 'ரு'க்கு மாத்திட்டேன் :-).
Post a Comment