Friday, April 28, 2006

முதல் பதிவில் ஒரு அறிமுகம்...!

கடவுளே (=சக்தி - Energy) இப் ப்ரபஞ்ச இயற்கைய முடுக்கி பரிணாமம் எனும் துடுப்பைக் கொண்டு அவையனைத்தையும் நகர்த்தி, "அன்பு, அரவணைப்பு(=கடவுள்) எல்லா உயிரிடத்தும்" எனும் உயர்ந்த நிலையை நாம் எட்ட உதவி மீண்டும்...மூலத்தை நோக்கி நமது பரிணாமம் நகர்கிறது...

இப் பதிவில் நான் பார்த்த, ரசித்த, படித்த, கேட்டுத் தெரிந்து கொண்ட இயற்கை சார்ந்த பரிணாம வினோதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இங்கு பதிந்து வைக்கலம்மென்று எண்ணியுள்ளேன்.

இப் பதிவில் சமீபத்திய வன உயிரின ஆராய்ச்சிகளின் போது இயற்கை ஆர்வளர்கள் கண்டு அதிசியத்துப் போன தாவர மற்றும் விலங்களின் பழக்க வழக்கங்கள், அவைகள் தனக்கே உரிய இடத்தை(Niche) இயற்கையில் தக்க வைத்துக்கொள்ள பெற்றுள்ள தகவமைப்புகள், அதற்கென பெற்றுள்ள புற உறுப்புகள் அவைகளை கையாளும் முறை இப்படி எத்தனை எத்னையோ விசயங்களை அறிவியல் ஏடுகளில் வரும் கட்டுரைகளை படித்தோ அல்லது என்னுடைய சொந்த கன்காணிப்பின் மூலம் அறிந்த விசயங்களை அவ்வெப்பொழுது இங்கே கொணர எண்ணியுள்ளேன்.

அதற்கு எப்படி ஆதரவு இருக்கும் என்பதையும் போகப் போக தெரிந்து கொள்கிறேன்.

என்னுடை பின்புலம், நான் ஒரு இயற்கையாளன் (Naturalist) பல வருடங்கள் மேற்கு மலைத் தொடர்களில் அலைந்து திரிந்த அனுபவமுண்டு என்னுடைய ஆராய்ச்சிக்கென. என்னை இப் பொழுது இங்கு எழுத தூண்டிய விசயம் என்ன வென்றால், நாம் இருக்கும் அரிபரியில், அரசியல், சமூதாய சீர்கேடு, மதம் சார்ந்த பிரட்சினைகள் பற்றியே அதிகமாக சிந்திக்கும் வேலையில், நாம் மிகவும் சார்ந்திருக்கக் கூடிய இந்த இயற்கையை புறக்கணித்து "இயற்கை கற்பழிப்பு" செய்து வருகிறோம் என்பதே நிசர்சனமான உண்மை.

அதனால் இயற்கை விழிப்புணர்வேற்றும் வண்ணம் முடிந்த அளவிற்கு விந்தையிலும் விந்தையான விசயங்களை இங்கே வழங்க முயற்சிக்கின்றேன். நீங்களும் மற்ற சுமைகளை இறக்கி வைத்துவிட்டு சுகமான காற்று வாங்க விரும்பினால், அது இங்கே கிடைக்குமென நம்பி வாருங்கள்...

அன்புடன்,

இயற்கை நேசி.

25 comments:

Sam said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். இயற்கை பாதுகாப்பிற்கு அன்றாட வாழ்வில் மனிதர்கள் என்ன செய்யலாம் என்றும் எழுதுங்கள்.

அன்புடன்
சாம்

Sivabalan said...

சுகமான காற்று வாங்க ... Thanks for invitation.

Please go ahead.

இயற்கை நேசி|Oruni said...

Saம் ஏனப்பா எனக்கு அந்த வம்பு, எப்படி அழைப்பது என்பதில் ;-) அதான் தமிங்கிலிசு! நல்ல முயற்ச்சியைத்தான் எடுத்திருக்கிறென் என்று நினைகிறேன் நீங்கள் கூறியதைக் கண்டு.

இருப்பினும் எனக்கு அவ்வப்பொழுது உதவி தேவைப்படலாம்.

நன்றி....Saம் (ஹி..ஹி).

அன்பு,

நேசி.

rv said...

வாங்க இயற்கைநேசி. நீங்களும் niche வான தலைப்பில் தான் பதிவு தொடங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

எங்கெங்கோ உள்ள உயிர்களைப் பற்றி அனிமல் ப்ளானட்டில் காண்பிக்கிறார்கள். உங்கள் பதிவிலிருந்து நம்நாட்டில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்ற ஆவலில்.

அன்புடன்,

தருமி said...

இதுவரை வந்த வரவேற்பைப் பார்க்கும்போது உங்கள் பதிவுகளுக்குக் கிடைக்கப்போகும் positive reaction பற்றி தெரிகிறது.

வாழ்த்துக்கள்.

இயற்கை நேசி|Oruni said...

சிவா...எங்கெல்லாம் சுத்த காற்று கிடைகிறதோ அங்கெல்லாம் தாங்கள் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரிகிறது.

நன்றி இந்த பக்கம் வந்துட்டு போனதுக்கு...

அன்புடன்,

நேசி.

இயற்கை நேசி|Oruni said...

இராமநாதன், என்ன எடுத்த போக்கில இப்படி சொல்லிபூட்டிங்க...எல்லாம் கலந்துதான் இந்த வினோதங்களை எழுதலமென திட்டம். நம்மூரு விசயங்களும் உண்டு அதில். இருந்தாலும் பரிணாமம், சமீபத்திய ஆராய்ச்சி விசயங்கள் நன்கு ஆர்வமூட்டும் வண்ணமிருந்தால் படிக்க சுவராசியமாக இருக்கும். பார்க்கலாம்.

பின்னூட்டமிட்டத்திற்க்கு நன்றி!

அன்புடன்,

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல முயற்சி. வாழ்த்துகள்!

இயற்கை நேசி|Oruni said...

தருமி சார், உங்களின் மேலான நல்வரவை நாடும், இயற்கை(க்-நன்றி) நேசி.

அன்புடன் அவன்.

நந்தன் | Nandhan said...

நான் பொறாமை படும் தொழில்களில் உங்களுடையதும் ஒன்று.

பரிணாம வளர்ச்சியயை நம்பும் என்னைப் போன்றோரின் நம்பிக்கையை இப்பதிவு மேலும் வளர்க்கும் என விழைகிறேன்,

அடிக்கடி சந்திப்போம்!

இயற்கை நேசி|Oruni said...

அன்பு மதி, தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

அன்புடன்,

ஞானவெட்டியான் said...

அன்பு நேசி,
பரிணாமங்களின் பரிமாணங்களை விள்ளப்போந்திருக்கும் தங்களின் இடுகைக்கு ஆவலுடன் காத்துள்ளேன்.

பரஞ்சோதி said...

வாழ்த்துகள் நண்பரே!

மிகவும் நல்ல விசயங்களை பற்றி பேச வருகிறீங்க, தடை இல்லாமல் பதிவுகள் கொடுங்கள்.

இயற்கை நேசி|Oruni said...

அன்பு நந்தன், நீங்கள் கூறுவது மிகவும் உண்மையே. வனத்தில் அலைந்து திரிந்த காலங்களில் வாழ்வியல் சார்ந்த உண்மைகளையும் மனத்திற்கு இதமான சூழலும் அங்கு கிடைத்தது போல எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் வேறு எங்கும் கிடைக்காதுதான்.

//பரிணாம வளர்ச்சியயை நம்பும் என்னைப் போன்றோரின் நம்பிக்கையை இப்பதிவு மேலும் வளர்க்கும் என விழைகிறேன்,//

என்னால் முடிந்த அளவிற்கு உங்களின் ஆவாவை பூர்த்திக்க முயற்சிக்கிறேன். கூறியது போலவெ அடிக்கடி வந்து போங்கள்.

அன்புடன்,
நேசி.

துளசி கோபால் said...

வாங்க வாங்க.

வாழ்த்து(க்)கள்.

காட்டு மிருகங்களைப் பற்றியும் கட்டாயம் எழுதவேணும்.

இயற்கை நேசி|Oruni said...

ஐயா ஞானவெட்டியான் அவர்களுக்கு, நேசி வணக்கங்களுடன் எழுதிக் கொள்வது, தாங்களின் ஆசிர்வாதங்களுக்கு மிக்க நன்றி!

அன்புடன்,

ramachandranusha(உஷா) said...

புதுமையான முயற்சி ஆரம்பியுங்கள். ஆனால் அனுபவங்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்றன
என்றால் மிகையில்லை. :-)))

இயற்கை நேசி|Oruni said...

பரஞ்சோதி, தாங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள்! குழந்தைகளுடன் சேர்ந்து அமர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்...

நேசி.

இயற்கை நேசி|Oruni said...

துள்சி வுடுங்க பாத்துகிடுவோம்! காட்டெருமை, கரடி, யானை, பல வகை குரங்குகள், ஹார்ன்பில்ஸ் பறவைகள் எல்லாம் எப்போ பார்த்தேன் எப்படி பார்த்தேன் அப்படின்னு வரிசையா நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்ஙன கொட்டி வைச்சுடுறென்...நீங்க தொடர்ந்து இங்க வாங்க...

ஆமா, நீங்க ஆஸ்ட்ரேலியாவில இருக்கீங்கா அப்படி இருந்தால் நம்ம பிரெண்ட்ஸ் பசங்க காங்காருகளா கேட்டதா சொல்லுங்க அந்த பக்கம் ஏதும் போனா... :-)

நேசி.
நேசி.

இயற்கை நேசி|Oruni said...

ஹெல்லோ உஷா, தாங்கள் வருகைக்கு நன்றி, நாங்க 'girls' எல்லாம் இந்த ஆட்டத்தில சேர்த்துகிடறதில்லை. :-)

அட கோபிச்சுகாதீங்க சும்மகாட்டி சொன்னேன் நிறைய பெண்கள் இப்ப இந்த ஃபீல்டுல கலக்கிட்டு இருக்காங்க, நம்மூருலதான்.

நேசி.

Anonymous said...

ungal muyarchikku vaazhthukkal...

இயற்கை நேசி|Oruni said...

அனானி, உங்கள் பெயரை கீழாவது எழுதி வைக்கலாம்.

எப்படியோ, நன்றி வாழ்த்துக்களுக்கு! பிரயோசனமாக இருந்தால் சரி!

நேசி.

சிவக்குமார் (Sivakumar) said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன்,

இயற்கை நேசி|Oruni said...

பெருவிஜயன், ரொம்ப நன்றி உங்களின் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும். மீண்டும் வாருங்கள்.

நேசி.

Anonymous said...

Abulla Orani,

Thangalin valai pathivai ithani mathangal kazhithu than nan parka mudinthathu enru ninaithu nan migavum varutham kolgiren.

Ennenral nan oru naragarathil (it must be "naragathil") vasikum iyarkai kadalan. Nan iyandhira thurail pani purinthalum ennudaia ennamellam eppodum iyarkai matturm prabancha ragasiangalai patriye irukum. Ennduaia ennamellam Western ghatts malaigalaiye chuttri chtrri varum. Nan ithu vari 3 murai valparai mattrum adanai chuttri ulla vara paguthigaluku senru vanthullen anal ennal oru siru kuzhandahiyaga iyarikai annayin azhagai rasika mudinthathe tavira andha vanangaluku migavum ulle senru onra mudiavillai. Enakkul andha ekkam eppodum undu. Anal inru ungal valai padivinai parhta podhu nane vanangaluku ulle senru iyarkai annai madil sattru neram kan ayarndadu pol ullathu ... Neengal migavum koduthu vaithavargal..

Vahzga ungalin pani...

karthikeyan.

(ennan en karuthai thamizhil thatta chhu seiya iyalamaikku varunthugiren)

Related Posts with Thumbnails