Tuesday, June 13, 2006

*குளோபல் சூடேற்றம்* - காட்டிக்கொடுக்கும் தவளைகள்...

பூமிப் பந்தின் சூடேற்றம் குறித்து ஏற்கனவே நான் இரண்டு பதிவுகள் *குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா? வெளிகண்ட நாதரின் உஷ்ணமாகும் உலகம் - எப்படி குளிர்விக்கலாம்? என்பதிலும் விளக்கியுள்ளோம். அதனைப் பற்றி படித்தறிந்தால் இப்பொழுது அதனை உறுதிப் படுத்தும் வண்ணம் எவ்வாறு தவளைகளும், தேரைகளும் தன் உயிரை மாய்த்து நடப்பதை நமக்கு உண்மையே என்று உறுதி செய்து வருகிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

அண்மையில் நடந்த ஆராய்ச்சியின் பொருத்து 'இயற்கை' எனும் ஜார்னலில் இது பற்றிய உண்மை வெளியாகி உள்ளது.

கடந்த 25 வருடங்களில் 168-க்கும் மேற்பட்ட தவளை இனங்கள் உலகம் தழுவிய முறையில் அடியோடு கபளீகரமானதாக (சுத்தமாக பூமியை விட்டே) அறியப் பட்டுள்ளது.

இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்மென்று உற்று பார்க்கும் பொழுது சீதோஷண நிலையில் ஏற்படும் மாற்றம் அதனை தொடர்ந்து ஏற்படும் தொடர் வறட்சி அல்லது வெள்ளம் இவைகள்தான் முக்கிய பங்கு வகிப்பதாக அறியப்பட்டுள்ளது. இது இப்படியாக இருக்கையில் ஆராய்சியாளர்கள் வெப்ப ஏற்றதிற்கும் அத் தவளைகளின் மறைவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை புள்ளியீட்டு கணக்கின் படி உறுதி செய்துள்ளனர்.

அத் தொடர்பு பற்றிய ஆய்வு மத்திய மற்றும் தென் அமெரிக்கா காடுகளில் நடத்தி கண்டறியப்பட்டுள்ளது. அவ் ஆய்வின் படி கிட்டதட்ட 65 இனத் தவளைகள் நிரந்தரமாக காணவில்லை அவ் வனங்களிலிருந்து என சுட்டுகிறது.

சரி இப்பொழுது ஏன் தவளைகளை மட்டும் இந்த வெப்பச் சூடேற்றம் உடனடியாக பாதிக்கிறது அப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம். நம்ம எல்லோருக்குமே தெரியும் நில நீர் வாழ்வனவான (amphibians) அத் தவளைகளின் தோல் மிகவும் மென்மையானது. அதனால் எதும் மிக எளிதாக (Permeable) ஊடுருவும் வாய்ப்புகள் அதிகம். உ.த: நாம் வயலில் அடிக்கும் சில வகை பூச்சி கொல்லிகள் அல்லது உரங்கள் கூட அவைகளின் தோல்களின் வழியே சென்று அவைகளை கொன்று விட முடியுமுன்னா பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வெப்ப சூடேற்றம் அவைகளை நேரடியா பாதிக்கிறதுமில்லாம, காஸ்டா ரிகா எனும் மத்திய அமெரிக்கா நாட்டு காடுகளில் ஒரு வித பூஞ்சைகாளான்கள் (Chytrid) அதீதமாக பல்கி பெருக வழி வாகை செய்து விடுகிறதாம். இந்த பூஞ்சைகள் என்ன பண்ணுதுன்னா, தவளைகளின் மீது தொத்தி அவைகளின் தோல் துவாரங்களை அடைத்துவிடுவதால, தண்ணீர் சமநிலை சீர்கெட்டு தவளைகள் மாண்டு விடுகின்றனவாம்.

இது வரைக்கும் இத்த தொத்து வியாதிக்கு நான்கு மாதத்திலேயே சுமார் நான்கு இனத் தவளைகள் மாண்டு இவ்வுலகை விட்டே சுத்தமாக (extinct) அழிந்து போனதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது இப்படியாக இருக்க நம்மூரு காடுகளில் இன்னும் எத்தனை இனத் தவளைகள் இருக்கிறது என்பதனை கண்டுபிடிக்காத பட்சத்தில், எங்கங்கோ நாம் உலக வெப்ப சூடேற்றதிற்கு அவைகளை நொடிக்கு ஒன்றாக இழந்து வருகிறோம் என்று தெரிந்து கொள்ளும் கணம்தோரும் - நிறைய பசங்கள நாம நம்மூர்ல கண்ணாலே பார்க்காமலேயே காவு கொடுக்கிறோமோ என்று நினைக்கும் பொழுதும்... இதற்கெல்லாம் என்னதான் தீர்வு அப்படின்னு கேட்கத் தோணுது.

12 comments:

மகேஸ் said...

//இதற்கெல்லாம் என்னதான் தீர்வு அப்படின்னு கேட்கத் தோணுது//
தீர்வு கொஞ்சம் கஷ்டமானது தான். நம் மக்களின் சொகுசு வாழ்க்கை பாதிக்கப்படும். ஆமாம் சுமார் 200 அண்டுகளுக்கு தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த வாழ்க்கை முறைகளுக்குப் போனால் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது. யோசித்துப்பாருங்கள், விமானப்பயணம் இல்லை, கப்பல்கள் இல்லை,ரயில், பேருந்துகள் இல்லை. விவசாயமே முக்கியத் தொழில். தொலைத்தொடர்புகள் இல்லை வாழமுடியுமா நம்மால்?

Sivabalan said...

நேசி,

அருமையான பதிவு!

தவளைகள் தவிர வேறு உயிரினஙக்களும் இதனால் பாதிக்க பட்டிருக்கவேண்டும்.

நல்ல எளிமையாக சொல்லியிருக்கீர்கள்.

மிக்க நன்றி.

இயற்கை நேசி|Oruni said...

சிவா,

//தவளைகள் தவிர வேறு உயிரினஙக்களும் இதனால் பாதிக்க பட்டிருக்கவேண்டும்.//

கண்டிப்பாக. சீதோஷன நிலைமையையொட்டித்தானே... விலங்குகள், பறவைகளின் வலசை போதல் (migration) போன்றவைகள் நடைபெறுகின்றன, பல காரணங்களுக்காக. அது சற்றே தடுமாறும் பொழுது அனைத்திலும் மாற்றம் நடப்பது தவிர்க்க முடியாதாகிவிடும்.

நன்றி, சிவா.

பொன்ஸ்~~Poorna said...

தெ கா, எங்கயோ போய்ட்டீங்க.. தவளைக்கெல்லாம் இத்தனை பீலிங்க்ஸா?!!!

சரி இந்த பத்திரிக்கை எந்த மொழியில வருது?

வெளிகண்ட நாதர் said...

பொன்ஸ், இது ஆங்கில பத்திரிக்கை, 'Nature'ன்னு! இதோ சுட்டி!

இலவசக்கொத்தனார் said...

சரி இவ்வளவு விஷ்யம் நடக்குதே. இது வெறும் காலத்தின் சுழற்சியாக் கூட இருக்கலாமில்ல? நாம வேணா அதை கொஞ்சம் துரிதப் படுத்தறோமின்னு சொல்லலாம்.
ஆனா இந்த மாதிரி அழிதலும் மீண்டு வருதலும் முன்னாடி நடந்ததுதானே?

வெளிகண்ட நாதர் said...

ஹலோ கொத்ஸ், கொஞ்சம் என்னோட பதிவுக்கு 'உஷ்ணமாகும் உலகம் - எப்படி குளிர்விக்கலாம்?'
வாங்க! அதிலே நான் சொன்ன படத்தை முடிஞ்சா போய் பாருங்க உண்மை புரியும்!

இயற்கை நேசி|Oruni said...

பொன்ஸு,

அதென்னங்க அப்படி தவளைக்கெல்லாமின்னு சொல்லிட்டீங்க... நான் சொல்ல வந்த விசயமே "frogs are like a health indicator for our global well being" அப்படிங்கிற ஆங்கில்லெதான் இதன் நான் முன் வைத்திருக்கிறென். அவனுங்க நாமக்கு வரப் போற விளைவுகளை முன் கூட்டியே முழிச்சுங்க முழிச்சுங்கன்னு சொல்லி செத்துக்கிட்டு இருக்கிதுங்க.

அதான் எனக்கு அவைகள் மேல அப்படி ஒரு மரியாதை. இந்த பதிவு போட நான் கொஞ்சம் நீவ் யார்க டைம்ஸ், நேஷனல் ஜியோகிராஃபி மற்றும் நேச்சர் ஜார்னல் போன்றவைகளை பயன் படுத்தினேன்.

அதோ வெ. நாதர் சுட்டி கொடுத்திருக்கார் பயணிச்சு பாருங்க...

இயற்கை நேசி|Oruni said...

மகேஸ்,

வாங்க! வாங்க!!

//ஆமாம் சுமார் 200 அண்டுகளுக்கு தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த வாழ்க்கை முறைகளுக்குப் போனால் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது.//

அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை நண்பரே, கொஞ்சம் பொருப்பாக நாம் இப்பொழுது இயக்கும் இந்த நவீன வாழ்கையில் இருந்தாலே போதும். எனக்கென்ன இன்று இருப்பதை விட்டு விட்டு. வளர்ந்த நாடுகளில் அந்த அலட்சியம், வாங்கும் டிஸ்போசபல் விசயங்களை கவனித்தாலே அயர்சியாக இருக்கிறது.

யாராக இருப்பினும் முதன் முதலாக இங்கு வரும் பொழுது மலைத்து போவதிற்கு காரணம், மக்களின் விழிப்பற்ற தன்மையை காணும் பொழுதுதான் என்று எனக்கு தோணுகிறது. பிறகு சில காலம் இங்கு வாழும் பொருட்டு அத்தோடு நாமும் இணைந்து அந்த உணர்வை இழந்து விடுகிறோம்.

இப்பொழுது உலகெங்கும் இந்த மனோநிலையில் இருக்கவே நாம் நாடிச் செல்வதாக எனக்குப் படுகிறது. இந்த பூமியின் சமநிலை ஒரு மெல்லிய நூலிழை போன்றதுதான், இதில் ஏதேனும் ஒரு சிறு விசயத்தில் சிக்கல் ஏற்படின், சங்கிலித் தொடர் போலல்லாவா, மாற்றங்கள் நிகழும். நாம் நம்மின் பொருப்புணர்வோமா? உலகெங்கும்.

நேசி.

இயற்கை நேசி|Oruni said...

வெ. நாதரே,

அந்த சுட்டி கொடுத்து என்ன பண்றது. அப்படின்னு ஒரு வீக்லி இருக்குன்னு வேண தெரிஞ்சுக்கலாம். ஒரு ஆர்டிகில் அங்கெ சமயத்திலே 25$ கூட போவுது. இதெல்லாம் அனியாயமில்லெ... நல்ல விசயசங்கள் எல்லாம் கைக்கு எட்டாத கனியாகவே அல்லவோ இருக்கிறது.

இருந்தாலும், டக்குன்னு ஓடி வந்து அந்த சுட்டி கொடுத்து உதவியதற்கு நன்றிகள்...

இயற்கை நேசி|Oruni said...

மென்மையானவரே,

தாங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!

சீனு said...

//கப்பல்கள் இல்லை,ரயில், பேருந்துகள் இல்லை. விவசாயமே முக்கியத் தொழில். தொலைத்தொடர்புகள் இல்லை வாழமுடியுமா நம்மால்?//

ஏன் முடியாது? பல ஆயிரம் ஆண்டுகள் இவையாவும் இல்லாமலேயே தானே வாழ்ந்திருக்கிறோம். அறிவியலைப் பற்றி என்னுடைய பதிவு.

Related Posts with Thumbnails