அதிகமாக மழை பெறும் மலைப் பிரதேசங்களில் உள்ள மரங்கள் நல்ல நெடுக வளர்ந்தானாக நெடு நெடுன்னு நல்ல உயரமாக ஒரு 50 அல்லது 60 அடி உயரத்திற்கே கூட வளர்ந்துவிடலாம்.
இதுக்கென்ன காரணமாக இருக்கலாம், அப்படின்னு கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சுப் பார்த்தா ஒரு விசயம் டக்கின்னு உதயமானுச்சு... இது எங்க வச்சுன்னா, ஒரு முறை நாங்க கலக்காடு-முன்டந்துரையில விலங்குகள் கணக்கீட்டுக்காக போயிருந்தப்ப எங்களுக்கு உதயமானது.
எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் வந்து செங்கல்தேரிங்கிற இடங்க. சூப்பரான லொகேஷங்க...! ஒரு நாள் சுத்தமா எடுத்துகிச்சு ஸ்ரீவில்லிப்புத்தூர்ல இருந்து செங்கல்தேரி போயி அங்கிருந்து ட்ரெக்கிங் ட்ரெக்கிங்தான், மழைக்காடுகளிடத்தே புகுந்து. போற வழியெங்கும் புலியோட பாதச் சுவடுகள் தெளிவா கிடைக்கிற எடத்தில பிளாஸ்டோ பாரிஸ் கரைச்சு ஊத்தி அப்படியே அலக்கா பேர்த்து வைச்சுக்கணும், பின்னால கணக்குப் போட்டு எத்தனை புலிகள் அந்த காட்டுக்குள்ள இருக்கலாம் அப்படின்னு தோராயம கணக்கு போட ஏதுவா இருக்குமின்னு.
அப்படிப் போகும் போதுதான், அந்த மலைகளின் கம்பீரமும், அழகும் பிடிபட ஆரம்பித்தது. மப்பும் மந்தாரமும் 2000 அடிக்கும் மேல உயரத்தில நின்னுகிட்டு கீழே விரித்துப் போட்ட ஜமுக்காளம் போல ஏற்ற இறக்கமாக உருண்டு கிடக்கும் மலைகளின் அழக ஆயிரம் கண்கள் கொண்டு பார்த்தாலும் முழுமையாக பருகிவிட முடியாதுங்க. அவ்ளோ அழகு!
அங்குதான் நான் சொன்ன மாதிரி அந்த மரங்களின் உயரத்திற்கு லாஜிக்கலா விடை கிடைத்தது. அப்படி சரிவா பள்ளத்தாக்குகளில் இருக்க கூடிய மரங்களுக்கு விடிந்து ரொம்ப நேரம் ஆகியும் சூரிய ஒளி கிடைக்கிறதில்ல ஏன் அப்படின்னா, மேட்டுப் பகுதியில இருந்து சூரியன் மீண்டு உயர வரதுக்குள்ள பள்ளத்துல இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப பொறுமையா இருக்கணும், இல்லையா?
அப்படி இருந்தாலும் அவைகளுக்கும் சூரிய ஒளி ரொம்ப அவசியமில்லையா, அதினால அவைகளும முட்டி மோதி முதல் சூரிய ஒளியை பெறுவதற்கு எவ்வி வளர வேண்டியிருக்கு. அதுவும் ஒரு காரணம் ஏன் அந்த மாதிரி, மழைக் காடுகளில் இருக்கிற மரங்கள் ரொம்ப உயரமா இருக்கு அப்படிங்கிறத்துக்கு.
அப்படி உயரமா வளர்ந்த அந்த நெடுக வளர்ந்தவனை யாரு தரையில தாங்கி இருப்பான்னு பிடிச்சுக்கிறது, வேருகள்தானே? ஏற்கெனவே, மழைக்காடுகள் உள்ளே போயி பார்த்தோம்னா ரொம்ப அடர்த்தியா இருக்கும்; நிறைய சின்னதும் பெரிசுமா செடிகளும், மரங்களும், கொடிகளுமா...
அப்படியிருக்கையில் மழைவேற சும்மா தொண தொணன்னு பேஞ்சுகிட்டே இருக்குமா, எனவே இருக்கிற இடத்துக்குள்ள நம்ம நெடுக வளர்ந்தவனுங்க ஸ்ட்ராங்க தரைய பிடிச்சிகிட்டு, நல்ல சத்தும் சப்ளை பண்ணிக்கிட்டு இருக்கணும். இந்த சூழ்நிலையில்தான், இந்த நெடுக வளர்ந்ததுங்க பரிணாமத்த துணைக்கு கூப்புட்டுகிதுங்க எப்படின்னும் பார்ப்போம் இப்ப.
தரையில நல்லா ஊன்றி நிக்கறதுக்காக அதோட அடிப்பகுதியை ஒரு ராக்கெட்டெ செங்குத்தா நிக்கவைச்சா எப்படி இருக்கும், ராக்கெட் இறக்கைகள் தரையோட நல்ல அகலமா இருக்குமில்லே, அது போலவே இந்த நெடும் பசங்கள ஊன்றிப் பிடிச்சிக்கிறத்துக்காக அதே மாதிரியே நல்ல அகலமா மரத் தோட அடிப்பகுதியாகிடுது. இது மாதிரி எல்லா மரங்களும் இருப்பதில்லை, ஒரு சில ஆட்கள் மட்டுமே இந்த ட்ரிக்க பயன்படுத்துறாங்க.
இப்படி இருக்கிறதாலே நிறைய நல்ல விசயங்கள் அந்த நெடும் பசங்களுக்கு கிடைக்கிது. ஒண்ணு, நிறைய மழை பெய்யும் பொழுது மண் அரிப்புனால சாஞ்சுட மாட்டானுங்க. இரண்டு, காஞ்ச சருகு இதெல்லாம் பிடிச்சு வைசுக்கலாம், அப்படி வச்சுக்கும் போது அந்த சருகெல்லாம் மச்சு திரும்ப தனக்கே உரமா வந்திடுமில்லையா, அதான்.
என்ன ட்ரிக் பாருங்க. இந்த பசங்களுக்கு. நாமெல்லாம் நினைக்கிறோம் என்ன மரம் தானேன்னு, ஆனா, இவனுகூட யோசிச்சு தனக்கு வேணுங்கிறதை கேட்டு காலப் போக்கில வாங்கிக்கிறாங்க நம்மை போலவே. ஆனா, என்ன கொஞ்சம் சத்தமில்லாம இங்கே வேலை நடக்குது, அவ்ளோதான் வித்தியாசம்.
ஒரு மரத்த நாங்க டேப் வச்சு சுத்தி பிடிச்சோம் பாருங்க 10 மீட்டரை சாதாரணமா சுத்திக்கிச்சு தன்னைச் சுத்தி. அப்படின்னா எவ்ளோ பெரிய மரம் பாருங்க!
சரிங்க, மரத்தப் பத்தி பேசிகிட்டு இருக்கோம் இன்ன ஒண்ணும் சொல்லிப்புடறேன். ஒரு நாள் அவ்ளோ பெரிசா இருக்கேன்னு, தரையில படுத்துகிட்டு பார்த்தா எப்படி இருக்குன்னு மல்லாக்க படுத்திட்டு பார்தேங்க, ரொம்ப ஆச்சிரியமா இருந்துச்சு ஒரு மரப்பைய இன்னொரு பக்கத்தில நிக்கிற பையனோட கிளைகளோட முட்டிக்காம உரசிக்காம அழக வரைஞ்சு வச்ச மாதிரி ஒரு இரண்டு அடி இடம் விட்டு கிளை பரப்பி நிக்கிதுங்க (நான் சொல்றது மர நுனியைப் பத்தி - Canopy).
அவ்ளோ அண்டர்ஸ்டண்டிங் ஒருத்தருக்கொருத்தர். ஆச்சர்யம் தானே!? ஏனுங்க அதுகளுகெல்லாம் மதப் பிரட்சினை மாதிரி ஏதாவது இருக்குதாங்க?
Thursday, May 11, 2006
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
WoW!!! கலக்குறீங்க
வித்தியாசமான பதிவுகள்!
நல்ல கட்டுரை.
பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் பயணித்த போது இதே அனுபவம் எனக்கும் நேர்ந்தது உண்டு.
நேசி,
படிக்கும்போதே மணம் இலயித்துவிட்டது.
மிக அருமை.
// இந்த நெடுக வளர்ந்ததுங்க பரிணாமத்த துணைக்கு கூப்புட்டுகிதுங்க //
நல்லா சொன்னீங்க!!
நன்றி!
At Wednesday, 24 May, 2006, Baranee said...
யாரு உங்களுடைய ட்ரெக்கர் ஆறுமுகமா?
பரணீ,
தாங்களுக்கும் அந்த அனுபமுண்டா? ரொம்ப அனுபவித்து படித்தீரிப்பீற்கள் என்று கருதுகிறேன்.
ஆறுமுகம் செங்கல்தேரியில் இல்லையே, ஆனால் நான் டாப் சிலிப்பில் இருந்த பொழுது மற்றுமொரு ஆறுமுகம் எனக்கு உதவுவார்.
நீங்கள் இந்த துறையில் உள்ளவரா? உங்களின் இமெயில் ஐ.டி கொஞ்சம் கொடுக்க முடியுமா?
நிறைய ஊர் சுத்துவீர்கள் போலத் தெரிகிறது, இப்பொழுதான் உங்களுடைய சில ஃபோட்டோ பதிவுகளை பார்த்தேன்... அழகோ அழகு!
தெகா.
எனக்கும் நிறைய காடுகளில் சுற்றி இது போல அனுபவம் உண்டு, ஆனால் இந்த துறையினைச் சார்ந்தவன் அல்ல, இந்த துறையில் உள்ள சில அதிகாரிகள் நண்பர்களுக்கு பழக்கம் அதனால் விடுமுறையில் நாடு திரும்பும் போது காட்டுக்குள் பயணிப்பது உண்டு. குறிப்பாக டாப் சிலிப் ரொம்ப பிடித்த இடம். எனது மின்னஞ்சல் முகவரி அடுத்த பின்னூட்டத்தில் இடுகிறேன்.
ஆறுமுகம் ஒரு நல்ல உற்சாகமான மனிதர், இளவயதில் காடுகளைப்பற்றி நல்ல அறிவினை கொண்டவர்.
கல்வெட்டு,
நன்றிகள்... கொஞ்சம் நாட்கள் உங்களெ மணம் பக்கம் காண முடிவதில்லையே...
அடிக்கடி வந்து போங்கள்!
நேசி
சிவா,
இந்த பதிவு நல்ல வந்திருக்கு நிறைய பேரு படிப்பாங்க அப்படின்னு சின்னதா ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
அதான் சரின்னு விட்டுட்டென். நன்றி சிவபாலன், உங்களின் ஊக்குவித்தலுக்கு!
நேசி.
சுத்தளவு 10 மீட்டரா? ஹப்பா..... பிரமாண்டம்னா இதுதான்.
இங்கே நேத்துதான் 150 வருசத்துக்கு முந்திய மரங்கள் ரெண்டு மீட்டர் சுத்தளவுலே 25 மீட்டர் உயரமாக் கிடந்துச்சுன்னு எழுதுனேன்.
சூப்பர் பதிவு.
//ஏனுங்க அதுகளுகெல்லாம் மதப் பிரட்சினை மாதிரி ஏதாவது இருக்குதாங்க?//
ஆனா ஏதோ மரப் பிரச்சனை இருக்கிறதுனால தானே ஒண்ணை விட்டு ஒண்ணு முந்திவந்து சூரியனைத் தொட முயற்சிக்குது..
மனுஷன் நாமும் அதே தான் செய்யறோம்.. என்ன, மரம் அடுத்த மரத்தை அடிச்சி முன்னேறுவது இல்லை.. நமக்கு அந்த வழி வேற தெரியுமே!! :(
பதிவு நல்லா இருகு தெகா. மத்ததும் படிக்கிறேன்..
பொன்ஸு,
அதே தாங்க, இப்பத்தான் அந்த "the survival of fittest theory" இங்கெ வருது, இல்லையா? அதான் நாம மனுசங்களும் நமக்கு நாமே உருவாக்கி கிட்ட விசயங்களெ ஓண்ணுக்கு ஓண்ணு முன்னே தள்ளி இல்லெ பின்னே தள்ளி யாரோடது "தப்பிப் பிழைக்குதுன்னு," நம்மை அறியாமலே மோதல்லெ விட விட்டுடுறோமோன்னு நினைக்கத் தோனுது...
கொஞ்சம் அந்த ஆங்கில்லெ இருந்து யோசிக்கலாம்...
எப்படியோ உங்ககிட்டே இருந்து "நல்லயிருக்கு" அப்படின்னு ஒரு சான்றிதழ் வாங்கியாச்சு இனிமே அடுத்தப் பதிவு பத்தி யோசிக்க வேண்டியதுதான் :-)) ஓண்ணும் எழுத்துப் பிழைகள் இல்லையே... இருக்கலாம்...
நேசி.
நல்ல பதிவு. அங்குள்ள மரங்கள் உயரமாக வளர்வதற்கான காரணமும் சரியானதாகவே தோன்றுகிறது.
அதெல்லாம் சரி. அந்த பாதச்சுவடுகளைப் பதிக்கும்போது நிஜப்புலி வந்துவிட்டால்....... பயமா இருக்காதா சார்!!
நன்றிங்க சுல்தான் முதல் முறையா இந்த பக்கமா வந்து உங்க பாதச் சுவடுகளை பதித்தற்கு ;-))
//அந்த பாதச்சுவடுகளைப் பதிக்கும்போது நிஜப்புலி வந்துவிட்டால்....... பயமா இருக்காதா சார்!!//
என்னுடையா கணிப்பு என்னவென்றால் நம்மை விட ஒரு கொடிய மிருகம் வேறு எதுவுமில்லை என்பதுதான் அது. புலிக்கு கூட நம்மை கண்டால் அச்சம், முடிந்தளவிற்கு நம் பார்வையில் படாமல் இருப்பதையே எல்லா ஜீவராசிகளும் விரும்புகின்றன.
நான் இருந்த அந்த பத்து வருட காட்டு வாழ்கை அனுபவத்தில் ஒரு முறை கூட ஒரு புலியை பார்த்தது கிடையாது, என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
நேசி.
துள்சிங்க,
//சுத்தளவு 10 மீட்டரா? ஹப்பா..... பிரமாண்டம்னா இதுதான்.//
ரொம்ப லோட்-அ வந்து உங்களுக்கு பதில் சொல்றமாதிரி ஆகிடுச்சு. பத்து மீட்டர் என்னங்க, இந்த மாதிரி Buttressed மரங்கள் இன்னும் சுற்றளவில் பெரிசா கூட இருக்கலாம். அதோ போல உயரமும்...
ஹெல்லோ Delphine,
எப்படியோ தத்திமுத்தி தமிழ் படிக்கவும் வந்துட்டீங்களே? எனக்கு ரொம்ப ஆச்சரியம போச்சு உங்களோட வருகையை இங்கே பார்க்கும் பொழுது.
படிச்சும்புட்டு பின்னூட்டமும் இட்டுச் சென்றதற்கு ரொம்ப நன்றி, Doc.
நேசி.
நல்லா இருந்தது தெகா!
மரங்களைக் கூட நீங்க பசங்கன்னு சொல்லுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
இயற்கையை நேசி - பெயர் பொருத்தமாத்தான் இருக்கு!
மரங்கள் ரொம்ப உயரமாகவும், அகலாமவும் இருக்குறது ஏன்னு நீங்க நல்லா தெளிவா சொல்லி இருக்கீங்க!
அதுசரி நேசி அவர்களே!
எவ்வளவு நேரம்தான் இப்படியே நிப்பீங்க?
ஒரு சேர் போட்டு உக்காறது!
எப்படியோ இந்த பக்கம் கொண்டந்துட்டேன் பார்தீங்களா சிபி. எதெல்லாம் சுவாசிக்குதோ அதுக்கெல்லாம் மாரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும் அப்படிங்கிறது, நேசியா இருக்கிற வரைக்கும் இருக்கணும் அப்படிங்கிறது பாலிசி.
ஆமாம், இன்னும் தூங்கமா என்னையா பண்ணிக் கொண்டு இருக்கீரு... வாட்ச் அவுட் யாரோ பின்னாடி பூரிக் கட்டையோட ஸ்லோ மொஷன்-லெ ஓடியார மாதிரி இருக்கு :-))
//இருக்கிற வரைக்கும் இருக்கணும் அப்படிங்கிறது பாலிசி.//
நல்ல பாலிஸிதான், எவ்வளவு பிரீமியம் கட்டுறீங்க?
//அவுட் யாரோ பின்னாடி பூரிக் கட்டையோட ஸ்லோ மொஷன்-லெ ஓடியார மாதிரி இருக்கு//
ஊரிலிருந்து இந்நேரத்துக்கெல்லாம் ஓடிவர மாட்டாங்க! நாளைக்குத்தான் புறப்படுறாங்க!
//எவ்வளவு பிரீமியம் கட்டுறீங்க//
என் மூச்சே பிரீமியம், ஏனுங்க நான் கட்டுற ப்ரீமியமில்லாம் பார்த்ததுன்னு இப்ப இதுக்கு வேற கட்டச் சொல்லி ரெகமண்ட்டு வேற...
//ஊரிலிருந்து இந்நேரத்துக்கெல்லாம் ஓடிவர மாட்டாங்க! நாளைக்குத்தான் புறப்படுறாங்க!//
சாமீ, நீங்க நம்மூருல தானே இருக்கீக (கோவை)?
வனதுறையில் இருப்பவர நீங்கள் இயற்கை விரும்பியாக இருக்கிறீர்கள்,வனத்துறை அதிகாரினா காசு பார்ப்பதில் தானே ஆர்வம் காட்டுவாங்க! வனங்கள் அழிய அவர்களும் ஒரு காரணம்!
நான் கூட கல்லூரிகாலத்தில் antilope cervicapra எனப்படும் black buck கணக்கெடுப்பிற்கு போய் இருக்கேன் ,புலி எல்லாம் போய் எடுத்து இருக்கிங்களா.man eaters of kumauon (gim gorbet) புத்தகத்தில் புலி பத்தி படிச்சே எனக்கு ஒரே கிலி ஆகிடிச்சு :-))
வவ்வா,
அதெப்படிங்க எல்லா துறையிலும் அடிச்சு ஆடுறீங்க. இங்கெயும் வந்து கலாசுறீங்க.
//வனத்துறை அதிகாரினா காசு பார்ப்பதில் தானே ஆர்வம் காட்டுவாங்க! வனங்கள் அழிய அவர்களும் ஒரு காரணம்!//
:-))) ஆமா, ஆமா ஒண்ணும் சொல்றமாதிரி இல்லப்பூ.
//நான் கூட கல்லூரிகாலத்தில் antilope cervicapra எனப்படும் black buck கணக்கெடுப்பிற்கு போய் இருக்கேன்//
அடெ, எங்கெங்கே போயி சென்சஸ் எடுத்தீங்க... கிண்டியிலவா இல்லெ கோடியக் கரையிலெவா? மறக்க முடியாத அனுபவமா இருந்திருக்குமே... நானும் கோடியக் கரையிலெ ஈச்சம் பழம் பிச்சுத் திண்ணுகிட்டே black buck census பண்ணியிருக்கேன்.
ஹும்...ஹும் நானும் அந்த புத்தகம் படிச்சிருக்கேன். பார்த்துங்க கண்ணு கழண்டு வெளியே வந்து விழப் போகுது... ;-))) அடிக்கடி என் காட்டு பக்கமும் வந்து போங்கப்பூ...
வவ்வா என்ன பழந்திண்ணி வவ்வாவா?
கோடியக்கரைக்கு(point calimer) தாங்க போனோம் ,நல்ல அனுபவம் அது ,கூப்பிட்டு போய்ட்டு அம்போனு அத்துவான காட்டில விட்டு போய்டாங்க (அரசு அதிகாரினா சும்மாவ நாம தானே சேவை செய்ய போரோம்னு பொறுத்துகிட்டோம்)
கோடியக்கரை ல இருக்க வனத்துறை அலுவலகத்திற்கு அழகா பூநாரை இல்லம்னு பேருலாம் வச்சு இருந்தாங்க ,அங்கே பிளமிங்கோஸ் அதிகம் வருமாம். அது சரி நல்லா கவனிப்பாங்கனு பார்த்தா பொழுது சாய ஒரு ஜீப்ப்ல ஏத்திக்கிட்டு தங்குற இடம் போலாம்னு கூப்பிட்டு போனாங்க .
முள் காட்டில கலங்கரை விளக்கம் பக்கமா ஒரு பாழடைந்த ஒட்டு வீடு இருக்கு அங்கே போய் இறக்கிவிட்டு இங்க தான் தங்கனும் கழிப்பிடம்லாம் இல்லை காடுதானே ஃப்ரியா எங்கே வேணா போங்கனு சொல்லிட்டு பின்குறிப்பா தனியா வெளில வராதிங்க நரிகள் நடமாட்டம் இருக்கு ஒண்ணும் செய்யாது ஆனா ஒரு நேரம் போல இருக்காது கடிச்சாலும் கடிச்சுடும்னு பீதிய கிளப்பி விட்டு எங்க குருப்ப தனியா கழட்டி விட்டு போய்ட்டாரு.மாப்பு வச்சுடான்யா ஆப்பு கதையா போச்சு! வெளியில ஒரு லைட் கூட இல்லை உள்ளே மட்டும் குண்டு பல்ப் மங்கலா எரிஞ்சது.
அதுக்கப்புறம் வெளியில வருமோம்னு சொல்றிங்க? எப்படியோ 2 நாள் இருந்து வேலைய முடிச்சிட்டு தான் வந்தோம்! எல்லாம் ஒரு அனுபவத்திற்காக தான்!
//வவ்வா என்ன பழந்திண்ணி வவ்வாவா?//
பழம் திண்ணு கொட்டை மட்டும் போடும் வவ்வால் :-))
வவ்வா,
//கூப்பிட்டு போய்ட்டு அம்போனு அத்துவான காட்டில விட்டு போய்டாங்க//
ஹய்யோ, ஹய்யொ (அண்ணன் கவுண்டமணி ஸ்டைல்லெ) நாங்கெல்லாம் யாரு... அரசாங்கமடியொவ் ;-)))
//தங்கனும் கழிப்பிடம்லாம் இல்லை காடுதானே ஃப்ரியா எங்கே வேணா போங்கனு சொல்லிட்டு பின்குறிப்பா தனியா வெளில வராதிங்க நரிகள் நடமாட்டம் //
பாவமா இருக்கு உங்க கதையைக் கேக்க... அப்பன்னா இதுவே முழுத் தொழிளாக பண்ணுயிருக்கிற என்னைப் போன்ற மக்கள் எவ்வளவு பார்திருக்கணும்... உங்க இரண்டு நாட்களுக்கே வாழ்கை முழுதும் வார மாதிரி ஒரு அனுபவம்... த்ரிலிங் தானே... மொத்தமவே சேர்த்து...
//பழம் திண்ணு கொட்டை மட்டும் போடும் வவ்வால் :-))//
:-) என்ன மாதிரி பழங்கள் (பதிவுகள்--சரி, சரி) இந்த வவ்வா திங்கும்...?? ஏன்னா நீங்க மரங்கள் சொழித்தோங்க வழி வகை செய்றீங்க இல்லையா...அதெ..ன்
பி.கு: வவ்வா நீங்க எழுதுனதா தனியவே ஒரு பதிவா போட்டுருக்கலாம் போல இருக்கு... ரொம்ப நல்லா இருக்கு :-))
Post a Comment