"வெர்மின் (Vermin)" என்பது எந்த ஒரு விலங்கினமும் அதன் எண்ணிக்கையில் பல்கிப் பெருகி, சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் யாவும் வெர்மின் என்ற கட்டமைப்பில் சேர்த்துவிடப் படுகிறது. இது போன்ற வெர்மின் வகைகளில் சில நமக்கு பரிச்சயமான பறவைகள் மற்றும் பாலூட்டிகளை வைத்து அவைகளுக்கு என்னதான் ஆகிறது இந்த காலக் கட்டத்தில் என்று பார்ப்போம்.

பறவைகள் இனத்தில் சிட்டுக் குருவி, காகம், மணிப் புறா மற்றும் பாலூட்டிகளில் வீட்டு எலி, பரட்டைத் தலை குரங்கு, முயல் இத்தியாதிகள் உடனடியாக நமது ஞாபகத்தில் வந்து போகும் விலங்கினங்களில் சில.
அவைகளும் இந் நாளில் நமது குளம் குட்டைகள் வற்றுவது போலவே, அவைகளின் நடமாட்டமும் குறைந்து வருகிறது. அதனை நமது
நாகை சிவா கூட கவனித்து கேள்வியாக எழுப்பினார். சரி இப்பொழுது விசயத்திற்கு போவோம். இது போன்ற விலங்கினங்கள் முதலில் வெர்மினாக ஆவதற்கே எக்கச் சக்கமான வகையில் தனது இயற்கையான பழக்க வழக்கங்கலிருந்து மாறுபட்டு மாத்தியமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
உதாரணத்திற்கு சிட்டுக் குருவியும், மணிப்புறாவும் நமது வீட்டுக் கூரையிலே கூட கூடு கட்டி குடும்பம் நடத்தலாம். அப்படியெனில் நமது அண்மையிலான நடவடிக்கைகளையும் சகித்துக் கொண்டுதானே என்று பொருள். இன்று அது போன்ற வாய்புகள் கூட அவைகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் இன்றைய பிரட்சினை.
மனிதனின் மாறி வரும் வாழ்க்கை முறை, அன்று நடுத்தர இரண்டாம் தர சிற்றுராகவும், பேரூராகவும் இருந்ததெல்லாம் இன்று நகரமாகி வரும் இச் சூழலில் கட்டட அமைப்பு, அதனையொட்டிய போக்கு வரத்து வாகனக் கூட்டம், மக்கள், சத்தம், கான்கீரிட் தரைகள், இப்படி எத்தனை எத்தனையோ தடைச் சுவர்கள்.
அவைகளையும் தாண்டி வசிக்கும் இவைகளுக்கு உணவு அல்லது தண்ணீர்த் தேவை என வரும் பொழுது அவைகள் ஒரு பெரும் நகரத்தில் வசிக்கும் பொருட்டு எப்படிப் பெறமுடியும்? தினமும் சாலையையே கூட்டிப் பெருக்கி பளிச்சென்று சுத்தமாக வைத்துக் கொள்ளும் நாம், வீட்டுத் தோட்டத்தில் உள்ள புல் தரைகளையும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நுனி வெட்டி அழகு பார்க்கும் நாம், அதில் உள்ள நெல் மணிகளையும் (அவைகளின் உணவு) சேர்த்தல்லவா வெட்டி விடுகிறோம்.
அந்த புற்களையும் நல்ல பச்சையாக வளர்க்க எத்தனித்து எத்தனை விதமான உரங்கள், அந்த உரங்கள் எத்தனை விதமான புழுக்களையும், பூச்சிகளையும் அழித்து இது போன்ற பறவைகளின் உணவு பற்றாக் குறையை ஏற்படுத்தி விடுகிறது.
மேலும் இப்பொழுது ஜரூராக இது போன்ற பறவைகள் கட்டடங்களின் மீது கூடு கட்டாமலிருக்க புது வகையான யுக்திகள் பொறிகளை (traps, scare tatctics, spikes etc) கொண்டு தடுக்கப் படுகிறது.
இதற்கெல்லாம் மேலாக, மற்றொரு முறையில் பல்கிப் பெருகிப் போன இந்த செல் பேசிகள் அவைகளுக்கான செல் டவர்கள் அவைகள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள்(electro magnetic radiation), எது போன்ற விளைவுகளை இவைகளில் ஏற்படுத்துகின்றன என்பதனை இன்னமும் அரிதியிட்டு கூறாத நிலையில், அவ்வலைகள் மனிதனில் மூளை புற்று நோயை உருவாக்கவல்லது எனவும் பேச்சு அடிப்பட்டுக் கொண்டுள்ளதை அறிந்துள்ளோம்.

இதனைவிட நேரடியாக நமது பசியின் கோரம் எவ்வளவுதான் தனிக்க உணவு வகைகள் இருந்தும் இவ் பறவைகளயும் உணவாக பெருமளவில் சில இடங்களில் உட்கொள்ளப் படுவதும், மற்றொரு காரணியோ இவைகளின் நடமாட்டம் குறைந்து காணப்படுவதற்கு.
பறவைகளும், ஏனைய பிராணிகளும் நம்மை விட இயற்கை அழிவு சார்ந்த சகிப்புத்தன்மையில் கொஞ்சம் தோல் மென்மையாக இருப்பதாகப் படவில்லை?
P.S: என் வீட்டுக் கூரையில் இப்பொழுது இரண்டு சிட்டுக் குருவி குடும்பங்கள் சந்தோஷமாக எனக்குத் தெரிந்து ஒரு நான்கு வருடங்களாக வசித்து வருகிறது, அதனைப் பற்றி நான் யோசிப்பதுண்டு, இப்பொழுது இவைகளுக்கு தாகம்மென்றால் பக்கத்தில் உள்ள தண்ணீர் நிலை எங்குள்ளது எப்படி அவைகள் இந்த பிரட்சினையை எதிர் கொள்கிறது என.