Wednesday, July 12, 2006

"வெர்மின்" விலங்குகளே இன்று அரிதாகும் காரணம்...

"வெர்மின் (Vermin)" என்பது எந்த ஒரு விலங்கினமும் அதன் எண்ணிக்கையில் பல்கிப் பெருகி, சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் யாவும் வெர்மின் என்ற கட்டமைப்பில் சேர்த்துவிடப் படுகிறது. இது போன்ற வெர்மின் வகைகளில் சில நமக்கு பரிச்சயமான பறவைகள் மற்றும் பாலூட்டிகளை வைத்து அவைகளுக்கு என்னதான் ஆகிறது இந்த காலக் கட்டத்தில் என்று பார்ப்போம்.

பறவைகள் இனத்தில் சிட்டுக் குருவி, காகம், மணிப் புறா மற்றும் பாலூட்டிகளில் வீட்டு எலி, பரட்டைத் தலை குரங்கு, முயல் இத்தியாதிகள் உடனடியாக நமது ஞாபகத்தில் வந்து போகும் விலங்கினங்களில் சில.

அவைகளும் இந் நாளில் நமது குளம் குட்டைகள் வற்றுவது போலவே, அவைகளின் நடமாட்டமும் குறைந்து வருகிறது. அதனை நமது நாகை சிவா கூட கவனித்து கேள்வியாக எழுப்பினார். சரி இப்பொழுது விசயத்திற்கு போவோம். இது போன்ற விலங்கினங்கள் முதலில் வெர்மினாக ஆவதற்கே எக்கச் சக்கமான வகையில் தனது இயற்கையான பழக்க வழக்கங்கலிருந்து மாறுபட்டு மாத்தியமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

உதாரணத்திற்கு சிட்டுக் குருவியும், மணிப்புறாவும் நமது வீட்டுக் கூரையிலே கூட கூடு கட்டி குடும்பம் நடத்தலாம். அப்படியெனில் நமது அண்மையிலான நடவடிக்கைகளையும் சகித்துக் கொண்டுதானே என்று பொருள். இன்று அது போன்ற வாய்புகள் கூட அவைகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் இன்றைய பிரட்சினை.

மனிதனின் மாறி வரும் வாழ்க்கை முறை, அன்று நடுத்தர இரண்டாம் தர சிற்றுராகவும், பேரூராகவும் இருந்ததெல்லாம் இன்று நகரமாகி வரும் இச் சூழலில் கட்டட அமைப்பு, அதனையொட்டிய போக்கு வரத்து வாகனக் கூட்டம், மக்கள், சத்தம், கான்கீரிட் தரைகள், இப்படி எத்தனை எத்தனையோ தடைச் சுவர்கள்.

அவைகளையும் தாண்டி வசிக்கும் இவைகளுக்கு உணவு அல்லது தண்ணீர்த் தேவை என வரும் பொழுது அவைகள் ஒரு பெரும் நகரத்தில் வசிக்கும் பொருட்டு எப்படிப் பெறமுடியும்? தினமும் சாலையையே கூட்டிப் பெருக்கி பளிச்சென்று சுத்தமாக வைத்துக் கொள்ளும் நாம், வீட்டுத் தோட்டத்தில் உள்ள புல் தரைகளையும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நுனி வெட்டி அழகு பார்க்கும் நாம், அதில் உள்ள நெல் மணிகளையும் (அவைகளின் உணவு) சேர்த்தல்லவா வெட்டி விடுகிறோம்.

அந்த புற்களையும் நல்ல பச்சையாக வளர்க்க எத்தனித்து எத்தனை விதமான உரங்கள், அந்த உரங்கள் எத்தனை விதமான புழுக்களையும், பூச்சிகளையும் அழித்து இது போன்ற பறவைகளின் உணவு பற்றாக் குறையை ஏற்படுத்தி விடுகிறது.

மேலும் இப்பொழுது ஜரூராக இது போன்ற பறவைகள் கட்டடங்களின் மீது கூடு கட்டாமலிருக்க புது வகையான யுக்திகள் பொறிகளை (traps, scare tatctics, spikes etc) கொண்டு தடுக்கப் படுகிறது.

இதற்கெல்லாம் மேலாக, மற்றொரு முறையில் பல்கிப் பெருகிப் போன இந்த செல் பேசிகள் அவைகளுக்கான செல் டவர்கள் அவைகள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள்(electro magnetic radiation), எது போன்ற விளைவுகளை இவைகளில் ஏற்படுத்துகின்றன என்பதனை இன்னமும் அரிதியிட்டு கூறாத நிலையில், அவ்வலைகள் மனிதனில் மூளை புற்று நோயை உருவாக்கவல்லது எனவும் பேச்சு அடிப்பட்டுக் கொண்டுள்ளதை அறிந்துள்ளோம்.

இதனைவிட நேரடியாக நமது பசியின் கோரம் எவ்வளவுதான் தனிக்க உணவு வகைகள் இருந்தும் இவ் பறவைகளயும் உணவாக பெருமளவில் சில இடங்களில் உட்கொள்ளப் படுவதும், மற்றொரு காரணியோ இவைகளின் நடமாட்டம் குறைந்து காணப்படுவதற்கு.

பறவைகளும், ஏனைய பிராணிகளும் நம்மை விட இயற்கை அழிவு சார்ந்த சகிப்புத்தன்மையில் கொஞ்சம் தோல் மென்மையாக இருப்பதாகப் படவில்லை?


P.S: என் வீட்டுக் கூரையில் இப்பொழுது இரண்டு சிட்டுக் குருவி குடும்பங்கள் சந்தோஷமாக எனக்குத் தெரிந்து ஒரு நான்கு வருடங்களாக வசித்து வருகிறது, அதனைப் பற்றி நான் யோசிப்பதுண்டு, இப்பொழுது இவைகளுக்கு தாகம்மென்றால் பக்கத்தில் உள்ள தண்ணீர் நிலை எங்குள்ளது எப்படி அவைகள் இந்த பிரட்சினையை எதிர் கொள்கிறது என.

13 comments:

Sivabalan said...

நேசி

மிக அருமையான பதிவு.

என்னுள் பல கேள்விகள் சந்தேகங்கள் வருகின்றன.

அவைகளோடு மீன்டும் வருகிறேன்.

நன்றி.

வஜ்ரா said...

இயற்கை நேசி சார்,

படத்தோட லிங்க் எடுக்கும் போது...Thumbnail link எடுத்து ஒட்டி ப்ளாக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்...Direct link எடுத்து ஒட்டவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்...

மற்றபடி, ஒரு எக்ஸ்ட்ரா தகவல், vermin ஆகும் போக்கு, அந்த உயிரினத்தின் adaptibility யைக் காட்டுகிறது..

இலவசக்கொத்தனார் said...

//பறவைகளும், ஏனையெ பிராணிகளும் நம்மை விட இயற்கை அழிவு சார்ந்த சகிப்புத்தன்மையில் கொஞ்சம் தோல் தென்மையாக இருப்பதாகப் படவில்லை//

என்ன சொல்ல வறீங்க புரியலையே?

// இவைகளுக்கு தாகம்மென்றால் பக்கத்தில் உள்ள தண்ணீர் நிலை எங்குள்ளது எப்படி அவைகள் இந்த பிரட்சினையை எதிர் கொள்கிறது என. //

நீங்களே அவர்களுக்கு ஒரு ஃவுண்டனும், விதையளிப்பானும் வைக்க வேண்டியதுதானே...

இயற்கை நேசி|Oruni said...

வஜ்ரா,

//படத்தோட லிங்க் எடுக்கும் போது...Thumbnail link எடுத்து ஒட்டி ப்ளாக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்...Direct link எடுத்து ஒட்டவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்...//

Hotlink for website, Direct link to image and forums வரைக்கும் முயற்சித்து விட்டேன், ஃபோட்டொ ஷாப்பில் ஏதும் கொஞ்சம் படத்தை ரீ-சைஸ் பண்ண வேண்டுமோ, அப்படி செய்து பார்க்கிறேன்.

//மற்றபடி, ஒரு எக்ஸ்ட்ரா தகவல், vermin ஆகும் போக்கு, அந்த உயிரினத்தின் adaptibility யைக் காட்டுகிறது...//

உண்மைதான் அந்த தகவமைப்பிற்கே மீண்டும் மீண்டும் சங்கு ஊது கிறேமே, முந்தையெ மாற்றத்திலிருந்து அவைகள் சமாளித்து மீண்டு வருவதற்குள்... அது தான் பிரட்சினை...

தாங்களின் டிப்ஸ்க்கு நன்றிகள்...

இயற்கை நேசி|Oruni said...

சிவா,

//என்னுள் பல கேள்விகள் சந்தேகங்கள் வருகின்றன.

அவைகளோடு மீன்டும் வருகிறேன்.//

வாங்க உங்க சந்தேகங்களோட, நாமும் தெரிஞ்சுக்குவோம்... ஆனா ஒண்ணு எங்கே மணிப்புறா கறி கிடைக்குமின்னு மட்டியும் என்கிட்ட கேட்டுறாதீங்க... :-)))

பொன்ஸ்~~Poorna said...

இ.நே,
வெர்மின் என்றால் என்னன்னு சொல்லலையே... எனக்குப் புரியலை..

எங்க அடுக்குமாடிக் குடியிருப்பில் புறாக்கள் உண்டு.. முந்தி Hyd-ல தங்கி இருந்த அடுக்கு மாடி வீட்லயும் புறாக்கள் உண்டு.. அதுங்க நான் தினசரி துணி துவைச்சி பால்கனில பிழியும் தண்ணியத் தான் குடிக்கும்.. முதல்ல எல்லாம் எனக்கு ஒரே பெருமையா இருக்கும்.. 'அட, நம்ம தண்ணியையும் வீணாக்காம, புறாவுக்கும் சாப்பாடு போடறோம் பாரு'ன்னு. ஒரு நாள் என் தங்கை வீட்டுக்கு வந்தப்போ இப்படிப் பெருமைப்பட்டதைப் பார்த்து சொன்னா, 'எப்படியும் சோப்பு கலந்த அழுக்குத் தண்ணியத் தானே புறாவுக்கு வைக்கிற'ன்னு. அன்னிலேர்ந்து கொஞ்சம் நல்ல தண்ணியும் கொடுக்க ஆரம்பிச்சேன்..
இப்போ எங்க சென்னை வீட்ல இருக்கிற புறாக்களுக்கு யார் தண்ணி வைக்கிறாங்கன்னு தெரியலை.. இந்தப் பதிவைப் பார்த்ததுக்கு அப்புறம் கண்டு பிடிக்கணும்னு தோணுது...

இயற்கை நேசி|Oruni said...

//வெர்மின் என்றால் என்னன்னு சொல்லலையே... எனக்குப் புரியலை..//

"வெர்மின் (Vermin)" என்பது எந்த ஒரு விலங்கினமும் அதன் எண்ணிக்கையில் பல்கிப் பெருகி, சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் யாவும் அந்த வித கட்டமைப்பில் சேர்த்துவிடப் படுகிறது.

Endangered = The species which are close to Extinction when the numbers are alarmingly reduced.

Threatened = Due to habitat destruction and other man-made, so called the infra-structure expansion into a species habitat, will put the species to walk towards the condition of endagered, is considered as threatened.

Extinct = said, bye bye to this planet already.


மற்றுமொரு கசப்பான உண்மை...

DDT அப்படிங்கிற பூச்சி மருந்து நமது வயல் காடுகளில் பயன் படுத்தியதையொட்டி, அவ வயற் காடுகளிலிருந்து பிடித்த தவளைகளையும், எலிகளையும் சாப்பிட்டு வந்த பருந்து (Kites and Eagles) வகை பறவைகளின் முட்டை ரப்பரை போன்ற (leathergic) ஓட்டமைப்புடன் இட நேர்ந்ததால் அதன் இனமே அழியும் நாளை நோக்கி ஓடியாதாக கண்டறியப்பட்டது.

தாங்களின் பகிர்தலுக்கு நன்றி!

இயற்கை நேசி|Oruni said...

//என்ன சொல்ல வறீங்க புரியலையே? //

Ada THEnmayana apdingratha, MENmayana-nnu mathi padichuroonga...

//நீங்களே அவர்களுக்கு ஒரு ஃவுண்டனும், விதையளிப்பானும் வைக்க வேண்டியதுதானே... //

Oru naal Coke koduthu parthen, oru Kuruvi OUT akipochu, amputtu poison pola ;-)))

செல்வநாயகி said...

தெக்கிக்காட்டான்,
நீங்கள்தான் இயற்கைநேசியுமா:)) இந்தப்பக்கம் தொடங்கப்பட்ட அன்றோ பிறகோ பார்த்துப் பின்னர் வந்து கட்டாயம் படிக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டு போனதோடு சரி. தேடும் முகவரிகளில் இயற்கை நேசியின் பின்னூட்டம் கண்டபோது "இவர் பக்கத்தைப் படிக்க நினைத்தோமே இன்னும் போகவில்லையே" என்று எண்ணிக்கொண்டேன். இன்றுவந்துபார்த்தால் நீங்கள்தான் இயற்கைநேசி:)) மகிழ்ச்சி. சாவகாசமாகப் படிக்க வேண்டும் இந்தப் பக்கத்தின் பதிவுகளை. தொடருங்கள்.

இயற்கை நேசி|Oruni said...

நாயகி,

//இன்றுவந்துபார்த்தால் நீங்கள்தான் இயற்கைநேசி:)) மகிழ்ச்சி. சாவகாசமாகப் படிக்க வேண்டும் இந்தப் பக்கத்தின் பதிவுகளை.//

இப்பொழுதுதாவது அந்த இயற்கை நேசி இந்த தெ.காட்டான்னு தெரிஞ்சுகிட்டீங்களே, சந்தோஷம்.

படிச்சிட்டு சொல்லுங்க இன்னும் என்னவெல்லாம் பண்ணலாமின்னு இந்த பக்கத்தில். பிறகு இன்னவொரு விசயம் பின்னூட்டம் எழுதும் பொழுது முட்டை, உருளை கிழங்கு இதுக்கெல்லாம் தண்ணீர் போதுமான அளவுக்கு இருக்கான்னு பார்த்துட்டு வந்து எழுதுங்க :-))) ஒண்ணும் அவசரமில்லை....

VSK said...

நாசம் விளைவிக்கக்கூடிய, நோய்களைப் பரப்பக்கூடிய பூச்சி, பறவைகளைத்தானே 'வெர்மின்' என்று சொல்லுவார்கள்!?

இவைகள் நம் கூரைகளில் தங்காதது நல்லதுதானே, தெ.கா. அவர்களே!

கப்பி | Kappi said...

அருமையான பதிவு நேசி...

குருவி, புறாவெல்லாம் vermin கீழ் வராது என நினைத்திருந்தேனே?

இயற்கை நேசி|Oruni said...

எஸ்.கே,

//நாசம் விளைவிக்கக்கூடிய, நோய்களைப் பரப்பக்கூடிய பூச்சி, பறவைகளைத்தானே 'வெர்மின்' என்று சொல்லுவார்கள்!?//

நீங்கள் கூறக்கூடிய அந்த நோய்களை பரப்பும் வெர்மின் வகை பூச்சிகளாக 'கரப்பான் பூச்சி' போன்றவைகளும், வீட்டில் கூடவே வாழும் எலி, மூஞ்சுரு (shrew) போன்றவைகளும் அது போன்ற நோய் பரப்பும் ஏஜென்ட்களாக இருப்பது யாவரும் அறிந்ததே.

ஆனால், பறவைகள் பண்டைய காலம் தொட்டே நம்முடனே சில குறிப்பிட்ட வகைகள் வாழ்ந்து வருவதும் யாவரும் அறிந்ததே (உ.த: காகம், சிட்டுக் குருவி, மணிப்புறா, கிளி வகைகள்...). இப்பொழுதுதான் இந்த Bird Flue என்ற வகை நோய் பறவைகளின் வலசை போதலினால் ஒரு நாட்டிலிறிந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் சொல்லப் படுகிறது என்று கண்டறிந்தோம்.

ஆனால் பண்டைய காலங்களில் இந்த வகை Avian Influenza A (h5N1) virus இருந்திருக்குமா, இல்லையா? அப்பொழுது நாம் பறவைகளுடன் நமக்கு இன்றிருக்கும் தொடர்புகளை காட்டிலும் அன்று அதிகமாக இருந்தாக எனக்குப் படுகிறது.

அப்படியெனில் இந்த வகை வைரஸ்கள் பரிணமிக்கிறது என்று பொருளா? அதற்காக எல்லா வகை வெர்மின் பறவைகளையும் நாம் துடைத்தெரிந்து விட முடியுமா?

//இவைகள் நம் கூரைகளில் தங்காதது நல்லதுதானே, தெ.கா. அவர்களே! //

எனவே என்ன தீர்வு இதற்கு. காகங்களும், மைனாக்களும், சிட்டுக் குருவிகளும், மணிப்புறாக்களும் நமக்கு இந்த பூமியில் வாழ என்ன உரிமை இருக்கிறதோ அதோ உரிமை அவைகளுக்கும் உண்டுதானே? இவைகள் சற்றே மனிதர்களுடன் நெருங்கிய முறையில் தன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டது என்பதால் எனக்கு complete termination ஒரு அணுகு முறை அல்ல என்று படுகிறது.

வேண்டுமானல் அந்த வகை இன்ஃபுளுயன்ஸ வைரஸ்களை கட்டுப் படுத்த வழி கண்டுபிடிக்கலாம்.

Related Posts with Thumbnails