Monday, August 28, 2006

பூச்சிகளின் கண்களினுடே இவ்வுலகம்...!!!

இவ்வுலகில் தழைத்து ஓங்கும் எல்லா ஜீவராசிகளுக்கும், பரிணாமம், ஒவ்வொரு வகையிலும் தன்னிடமுள்ள அற்புதங்களை அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறது என்பதனை நமது கவனத்திலிருந்து தூரத்தில் இருக்கும் இந்த பூச்சிகளின் கண்களினுடே சொன்று நாம் பகிர்ந்து கொள்ளும் இந்த உலகம் எவ்வாறு அவைகளுக்குக் காணக் கிடைக்கிறது என்று பார்ப்போமா?

பூச்சிகளுக்கு மண்டை எங்க இருக்கு, உடம்பு எங்கேயிருந்து தொடங்குதுன்னு கண்டுபிடிக்கிறதே பெரிய விசயம், இதில அதுகளுக்கு மூளை இருக்குன்ன நம்புவோமா? அதிலும் இந்த ஜீவராசிகளின் உலகத்திலேயே, பூச்சிகளுக்குத்தான் சிறப்பு கண்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்றால், சொல்லவே வேண்டாம். நமக்கெல்லாம் ஆச்சர்யம் பீரிட்டு கிளம்ப.

Image Hosted by ImageShack.usஇப்ப ஒரு தட்டாம் பூச்சிய (Dragon Fly) எடுத்துக்குவோம், அவ்வளவு வேகமாக பறந்துகிட்டு பல அடி தூரத்தில பறந்து போயிகிட்டு இருக்கிற அதை விட சிறுசா இருக்கிற இன்னொருப் பூச்சிய எப்படிங்க லபக்கடீர்னு பிடிச்சு சாப்பிடுது. யோசிச்சா ஆச்சர்யமா இல்ல?

ஆனா, இந்த பூச்சிகளின் உலகமில்லாமல் இன்னொருத்தரும் இந்த சிறப்பு அமைப்பை பகிர்ந்துக்கிறார், அவருதான் கடல்ல வசிக்கிற ஆக்டோபஸ் (Octopus). இவங்க ரெண்டு பேருக்கும் தான் யாரு பெரிய ஆளு இந்த தகவமைப்பிலன்னு தகராறு வருமாம், நம்ம அறிவியல் உலகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்களிடத்தே. நாம பின்னாடி ஒரு "நாட்டாமை ஸ்டைல்ல தீர்ப்ப கொடுத்திடுவோம்."

இந்த பூச்சி பார்ட்டிங்களுக்கு நம்ம கண்பார்வை மாதிரி இல்லாமல் "கூட்டுப் பார்வை"ன்னு (Compound Eyes) ஒரு தகவமைப்புங்க, அது எப்படின்ன எப்பாவது நீங்க ஒரு தட்டாம் பூச்சியவோ அல்லது வண்ணத்துப் பூச்சியவோ பிடிச்சு நல்ல கூர்ந்து கவனிச்சுப் பார்த்து இருந்திங்கன்னா தெரியும், கட்டம் கட்டமா (Facets) நிறைய அதன் கண்களிலிருப்பதை கவனிச்சுருக்கலாம்.

Image Hosted by ImageShack.us Image Hosted by ImageShack.us

இந்த ஒவ்வொரு கட்டமும் தனித்தனியா வரும் பிம்பங்கள பிடிச்சு பிறகு அதுகளை மூளைக்கு அனுப்பி எல்லாத்தையும் ஒண்ணா போட்டு பார்க்குதாம். அதிலும் பாருங்க இதுகளுக்கு பெரும்பாலும் கிட்டப் பார்வை. அப்படிங்கும் பொழுது, இதுகள் பார்க்கும் விசயங்கள நாம மைக்ரோஸ்கோப்பில் வைச்சு பார்த்தாத்தான் அதுக பார்க்கிற டீடைல் நமக்கு கிடைக்குமாம்.

இப்பப் புரியுதா எப்படி அத்துனுண்டு பூவுக்குள்ள இருக்கிற (மகரந்த) சூலுக்குள்ள ச்சூசை கண்டுபிடிச்சு மூக்க நுழைச்சு எடுக்கிதுன்னு.

நிறைய பூச்சி வகைகள் நல்ல வண்ன நிறங்களையோ, பளிச்சின்னு அடிக்கிற வெளிச்சத்த பார்க்கிறமாதிரியோ, இல்லென்னா நிறக்குருடாகவும் இருக்குதுகளாம். ஏன் அப்படின்ன, உதாரணத்துக்கு வண்ணத்துப் பூச்சிகள், அதீதமான நிறங்களைத்தான் நம்பி இருக்குதாம். சாப்பாட்டுக்கு, பூக்களைத் தேர்ந்துதெடுப்பதற்கும் கலவி நண்பர்களை அடையாளம் காண்பதற்கும்.

அதோட கண்களின் நிற நிறமிகள் நம்ம கண்களுக்குள் இருப்பதை விட ரொம்ப அதி சக்தி வாய்ந்ததாம். அப்படின்னா, நம்மலைவிட அதிகமான நிறங்கள அவங்க உலகத்தில் பார்க்கிறாங்கன்னுதானே பொருள்?

தேனீக்களின் உலகத்தில எப்படிப்பான்னு கேளுங்க, அவங்களுக்கு வெறும் கண்களுக்கு புலப்படும் நிறங்களுக்குகெல்லாம் அப்பாற்பட்டு, புற ஊதாக்கதிர்களைக் (UV) கூட பார்க்கமுடியுதாம். இன்னொன்னையும் கேளுங்க இதுகளோட இடப்பெயர்ச்சிக்கு சூரியனிடமிருந்து வரும் போலாரைசிடு வெளிச்சத்தை (Polarized light) கொண்டு வார போற வழி தெரிஞ்சுக்கிட்டு பொயித்து வருதுங்களாம். எனக்கு மண்டை சுத்துதுங்க உங்களுக்கு எப்படியோ.

இப்ப கடைசிய நான் முன்ன சொன்ன ஆக்டோபஸ் கண்களப் பத்தியும் பாத்துவிட்டு நேர தீர்ப்புக்கு போயிடுவோம். இந்த ஆக்டோபஸ்ங்களோட கண்கள், நாம் கண்களிலிருந்து எவ்வாறு வித்தியாசப் படுகிறது என்பதனை கொண்டு இவரோட பரிணாமப் பரிசு எவ்வளவு அற்புதமின்னு தெரிஞ்சுக்கலாம்.

Image Hosted by ImageShack.us

இப்ப நாம ஒரு ஃபிகர (object) பார்க்கிறோமின்ன நம்மளோட கண் தசைகள் சுருங்கி விரிஞ்சு இருக்கிற தூரம், கிடைக்கிற ஒளி இவைகளைக் கொண்டு அட்சஸ்ட் செஞ்சிகிட்டு பார்க்குது. ஆனா இவுக எப்படித் தெரியுமாவ, கேமர லென்ஸ் எப்படி முன்ன பின்ன போயி ஃபோகஸ் பண்ணுது அது மாதிரியே உள்ளே வெளியேன்னு பொயிட்டு பார்க்கிற விசயத்த பார்க்குதுகளாம்.

அப்படிப் பார்க்கப் போன நமக்கு பரிணாம மூலமா உடம்பில இருந்த முடி எல்லாம் உதிர்ந்ததைத் தவிர எதுவுமே நல்ல விசயம கொடுக்காம, இந்த நச்சு மண்டையை மட்டும் கொடுத்து எப்படி அடுத்த ஆளை கவுக்கிறதுன்னு ஐடிய பண்ணறது மாதிரி ஒரு மண்டையப் பரிசா கொடுத்து வைச்சிருக்கோ அப்படின்னு தோணுது.

இப்ப தீர்ப்பு நேரம்: அதுக ரெண்டும் சண்டை போட்டுகிதுகளா? எங்கள்ல யாருப்ப பெரிய ஆளுன்னு கேட்டுக்கிட்டு, அது அதுக உலகத்தில கிடைக்கிற, தேவைப்படுற விசயங்களுக்கு ஏர்த்தாப்ல உருப்புகள வாங்கிட்டு, தான் உண்டு தான் வேலை உண்டுன்னு இருக்குதுக, அதுகளுக்கிடையே விட்டா நாம ஒரு போரை மூட்டிவிட்டு ஆயுதங்களையும் வித்துப்புடுவோம் போல.

18 comments:

Sivabalan said...

நேசி

நல்ல பதிவு..

மீன்டும் வருகிறேன்..

இலவசக்கொத்தனார் said...

என்னமோ சொல்லி இருக்க, இன்னம் ஒரு தபா படிச்சிப் பார்த்துக்குனு வரேன். நம்ம ஜொள்ளுபாண்டிக்கு எம்மாம் பெரிய கூட்டமா இருந்தாலும் அதுல புதுசா ஒரு பிகர் இருந்தா அது மட்டும் கரீட்டா தெரியுதே, இதுங்கூடி உங்க பரிணாம வளர்ச்சிதானா?

துளசி கோபால் said...

இயற்கைன்றது ஒவ்வொண்ணையும் எப்படிப் பார்த்துப் பார்த்துப் படைச்சிருக்குன்னு நினைச்சா..........

அம்மாடியோவ்.

இதுக்கு முன்னாலே மனுஷன் எவ்வளவு அற்பப் பிறவின்னு பாருங்க.

இயற்கை நேசி|Oruni said...

சிவா, மண்டையடி பதிவுன்னு தெரியும் இருந்தாலும் எவ்வளவுக்கு எவ்வளவு எளிமை படுத்தி போர் அடிச்சிடமா கொடுக்க முடியுமோ கொடுக்க முயற்சிக்கிறேன்...

நன்றி சிவா...

தருமி said...

மனுச பயலுவளுக்கும், இந்த பூச்சிகளுக்கும் நடக்கிற துவந்த யுத்தத்தில பூச்சிகதான் இதுவரைக்கும் கெலிச்சுக்கிட்டு இருக்கிறதா சொல்றாங்களே, அப்டியா...?

இயற்கை நேசி|Oruni said...

இ.கொ,

//என்னமோ சொல்லி இருக்க, இன்னம் ஒரு தபா படிச்சிப் பார்த்துக்குனு வரேன்.//

வருவீகளா... என்னிது பிரியலயா ;-))

//நம்ம ஜொள்ளுபாண்டிக்கு எம்மாம் பெரிய கூட்டமா இருந்தாலும் அதுல புதுசா ஒரு பிகர் இருந்தா அது மட்டும் கரீட்டா தெரியுதே, இதுங்கூடி உங்க பரிணாம வளர்ச்சிதானா?//

அதே, இதுவும் ஒரு பரிணாம பரிசுதான் எனக்கு, ஜொல்லுப் பாண்டி போன்ற மக்களுக்கு. பருந்து(Eagle) உயரே பறந்தாலும், பறந்த்தாலும் (Echo effect-ல் படிக்கவும்) அதன் கண்கள் கீழே ஓடும் கோழிக் குஞ்சின் மீதுதானே இருக்கும் அதே போலத்தான் நாங்களும். மறக்க மாட்டோம் :-))) ;-)))

கப்பி | Kappi said...

படிக்கற காலத்துல சிம்ரன் பேட்டியைப் பாத்துக்கிட்டே வரைஞ்ச கரப்பான் பூச்சி தான் ஞாபகம் இருக்கு :))

நேசி..கடைசி பத்தி நச்!!!

கப்பி | Kappi said...

படிக்கற காலத்துல சிம்ரன் பேட்டியைப் பாத்துக்கிட்டே வரைஞ்ச கரப்பான் பூச்சி தான் ஞாபகம் இருக்கு :))

நேசி..கடைசி பத்தி நச்!!!

இயற்கை நேசி|Oruni said...

தருமி,

//மனுச பயலுவளுக்கும், இந்த பூச்சிகளுக்கும் நடக்கிற துவந்த யுத்தத்தில பூச்சிகதான் இதுவரைக்கும் கெலிச்சுக்கிட்டு இருக்கிறதா சொல்றாங்களே, அப்டியா...?//

இதில என்ன சந்தோகமிங்கோ. கல் தோன்றி மண் தோன்ற காலத்தே ;-)) மூத்த குடியாக 'நம்ம வீட்டு கரப்பான் பூச்சிகள்' எல்லா பேரழிவுகளையும் சந்திச்சிட்டு இன்னிக்கும் நமக்கும் 'டிமிக்கு' கொடுத்துட்டு ராஜ்யம் நடத்திக்கிட்டுத்தானே இருக்குதுக.

அப்புறம் நாம பயன் படுத்திற அத்துனை பூச்சிகொல்லிகளுக்கும் எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக்கிட்டு மீண்டும் மீண்டும் பொதுப் பொழிவுடன் முன்னே இருந்ததைக் காட்டிலும் இன்னும் பவர்ஃபுல்ல வந்து அட்டாக் பண்ணுதேகளே இதுக.

அப்படிப் பார்த்தால், நம்ம கதை திவால் ஆனதிற்குப் பிறகு இவங்க இந்த பூமியை தன் வசம் வச்சிக்கிட்டாலும் ஆச்சர்யப் படுவதுற்கு ஒண்ணுமில்லைன்னு நான் நினைக்கிறேன்.

இயற்கை நேசி|Oruni said...

//இதுக்கு முன்னாலே மனுஷன் எவ்வளவு அற்பப் பிறவின்னு பாருங்க.//

அற்பப் பதருகள் :-))))

இத மாதிரி சொல்லணுமின்னுதான் இங்கன நான் இதப் பதிந்சு வச்சேன்...

சொல்லிட்டீங்க, இந்தப் பதிவோட நோக்கம் முடிஞ்சது இப்பொழுதுக்கு... நாம என்னன்ன வேலை பண்ண வேண்டி இருக்கு நான் பெரியவன இல்ல நீ பெரியவனன்னு அடிச்சிக்கிட்டு... ச்சே, ச்சே, ச்சே ;-))

Anonymous said...

உங்க நாட்டாமை தீர்ப்பு அசத்தல் சாமீ, உலக அரசியல கொண்டுவந்து ஆக்டோபஸ் - பூச்சி உலகத்தில இணைக்கிற முதல் ஆளூ நீங்கதான் (((-:

இயற்கை நேசி|Oruni said...

வாங்க Dr. Delphine,

//This is the best part. Praba , how much we fight?// excellent writing.//

அடடா உங்களுக்கு இருக்கிற அவசரத்திலும் படிச்சிப்புட்டு, சிரிச்சிட்டும் போயிருக்கீங்களே.

ஆமா, சும்மா எல்லா இடத்திலும் சண்டையா இருக்குது அதான் அப்படிச் சொல்லியிருந்தேன்.

இயற்கை நேசி|Oruni said...

கப்பி,

//படிக்கற காலத்துல சிம்ரன் பேட்டியைப் பாத்துக்கிட்டே வரைஞ்ச கரப்பான் பூச்சி தான் ஞாபகம் இருக்கு :)) //

அந்த வரைஞ்ச கரப்பான் பூச்சியின் முகம் சிம்ரனின் முகத்தை ஒத்திருந்ததா இல்ல பூச்சியோட மண்டையாவே இருந்ததா? :-))
எனக்கு என்னமோ சிம்ரனின் முகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் பூச்சிகளின் மண்டைதான் ஞாபகத்திற்கு வரும், சின்னதாக இருப்பதாலன்னு நினைக்கிறேன். ;-))

//நேசி..கடைசி பத்தி நச்!!! //

எது நாட்டாமை தீர்ப்பா இல்ல அதுக்கு மேல இருக்கிற பத்தியா???

Sivabalan said...

//சிவா ஸ்டைல் //

:)):))

Sivabalan said...

// கேமர லென்ஸ் எப்படி முன்ன பின்ன போயி ஃபோகஸ் பண்ணுது அது மாதிரியே உள்ளே வெளியேன்னு பொயிட்டு பார்க்கிற விசயத்த பார்க்குதுகளாம். //

சூப்பர் வரிகள்...

அட கலக்கல்... ம்ம்ம்ம்ம்ம்

என்னங்க நம்ம பரிமானத்தில் Waste மாதிரி இருக்குதே..

கப்பி | Kappi said...

//அந்த வரைஞ்ச கரப்பான் பூச்சியின் முகம் சிம்ரனின் முகத்தை ஒத்திருந்ததா இல்ல பூச்சியோட மண்டையாவே இருந்ததா? :-))
//

நான் வரைஞ்ச கரப்பானும் தலைவி மாதிரி ஒல்லியா ஆயிடுச்சு :D

//எது நாட்டாமை தீர்ப்பா இல்ல அதுக்கு மேல இருக்கிற பத்தியா??? //

மறுவாசிப்பில் இரண்டுமே :)

Sivabalan said...

நேசி

இது சம்ந்தமா ஏதாவது வீடியோ லிங்க் இருந்தால் சொல்லுங்களேன்..

கோமதி அரசு said...

//பூச்சிகளுக்குத் தான் சிறப்பு கண்கள்
வழங்கப் பட்டிருக்கிறது//

அதனால் தான் மனிதன் கண் நல்லா தெரியும் என்று ஈசல், எறும்பை எல்லாம் சாப்பிடுகிறான் போலும்.

//தேவைப் படுற விசயங்களுக்கு ஏர்த்தாப்ல உருப்புகளை வாங்கிட்டு தான் உண்டு தன் வேலையுண்டு இருக்குதுகஅதுகளுக்கிடையே விட்டா நாம் ஒரு போரை மூட்டி விட்டு ஆயுதங்களையும் வித்துப்புடுவோம் போல//

அழத்தம்,சுவை,மணம் என்ற மூன்று
உணர்வுகளைப் பெற்றிருக்கின்ற மூன்று
அறிவுடைய பூச்சிகளிடம் (பரிணாமத்தின் உச்சம் மனிதன்) ஆறாவது அறிவுப் ப்டைத்த மனிதன்
புகுந்தால் இப்படித்தான் ஆகும் தெகா.

பூச்சிகளின் கண்களினுடே இவ்வுலகம்
அற்புதம்.

கோவை இமானுவல் ஆலயத்தில்
பறவைகள் பூச்சிகள் பற்றி டாக்குமெண்ரி படம் காட்டுவார்கள்
ஞாயிற்று கிழமையில் பார்த்து இருக்கிறேன்.

Related Posts with Thumbnails