Thursday, November 02, 2006

மூளை மாற்றுச் சிகிச்சை முடிந்தால் என்னவாகும்...

இன்று எனக்கு ஒரு கேள்வி தோன்றியது. உடலின் எல்லா பாகங்களிலும் உள்ள உடலுறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக, மற்றொரு பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் மாற்றி வைக்கக் கூடிய சாத்தியம் மருத்துவத் துறையில் வளர்ந்து வருகிறது.

இந்த பின்புலத்தில், கையே வைக்க முடியாத (அட கத்தியைத்தாங்க அப்படிச் சொன்னேன்) ஒரு உடல் பாகமுன்னா அது மூளையாகத்தான் இருக்க முடியும். எசகுபிசகா எங்காவது தொட்டுவைச்சா பிறகு அதில கோளாறு இதில கோளாறுன்னு மனிதனின் மற்ற பாகங்களில் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிச்சுடும், இல்லையா.

இப்ப சும்மானாச்சுக்கும் யோசிப்போம். கொஞ்ச காலங்களுக்கு பிறகு அப்படியே அலேக்கா, மூளையையும் பெயர்த்து (donor) இன்னொரு ஆளுக்கு (மூளையில கட்டி வந்த ஒருவருக்கு) மாற்று அறுவை சிகிச்சை (transplantation) மூலமா வைச்சு தைக்க முடிந்தால் என்னவாகும் அந்த புது மூளையை பெற்றவருக்கு (receipient), அப்படிங்கிறதுதான் என்னோட கேள்வி.
Image Hosted by ImageShack.us
அப்படி கேட்டவுடன் அட என்னங்க நேசி, ஒரு சிறுநீரக மாற்றுச் சிகிச்சையில என்ன நடக்குமோ அதுதான் நடக்கப் போகுது இங்கேயும் அப்படிங்கிறவங்களுக்கு, கொஞ்சம் பொருங்க.

சிறுநீரகம் பெற்றவுடன், சிறுநீரகம் செய்ய வேண்டியதான இரத்தத்தை சுத்திகரித்து அதிலுள்ள அதீத வேதியப் பொருட்களை கழிவுகளாக நீக்கப்பெற்று சமச்சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது இல்லையா? சிறுநீரகம் யோசிப்பது கிடையாது, மற்ற உடல் உறுப்புகளை இயக்குவது கிடையாது, மூளையைப் போல, இல்லையா?

அப்படியானால், மூளையை இந்த பெறுநர் பெற்றவுடன் அவருடைய பழைய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே போயே போய், எவரிடமிருந்து அந்த மூளை பெறப்பெற்றதோ அவருடைய குண நலன்கள் பாதுகாக்கப் பட்ட பழைய நினைவுகள் ஏனைய பிறவும் அத்துடனே வரச் செய்யும் இல்லையா?

அப்படிப் பார்க்கும் பொழுது, எண்ணங்களைக் கொண்டு அதனை செயல் முறை படுத்தும் பொழுதுதான் அதற்கு பிரதி பலன்களாக நன்மை தீமைகளை நாம் அடையப் பெறுகிறோம். மதங்ககளுக்கும் இந்த மூளைக்கும் நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. இந்த கர்மா (Karma) வினைகள் அகற்றப் பெறுகின்றனவா? ஆத்மா என்ற விசயம் இன்னும் அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப் படாத பட்சத்தில், மூளைதான் எல்லாமே என்று அறிவியல் அரிதியிட்டு கூறியிருக்கும் பட்சத்தில், கீழே கேட்கப் பட்ட சில சிந்தனைகளுக்கு உங்களின் கண்ணோட்டத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

உதாரணமாக, ஒரு கொலைகாரரின் மூளையை அகற்றி விட்டு, ஒரு புனிதரின் (அல்லது நமது பரிமாணத்தில் நிரம்ப நல்லவனாக வாழ்ந்த;) மூளையை மாற்றுச் செய்தால், அங்கு கொலைகாரரின் பாவங்கள் எல்லாமே பதிவேட்டிலுருந்து நீக்கப் பெற்று, இப்பொழுது கொலைகாரர் புனிதரானார் என்று கொள்ள முடியுமா?



பி.கு: இது ஒரு Frankenstein தனமான கேள்வி தெரியும். ரொம்ப நாளாச்சு நேசியில பதிவு போட்டு அப்படியே அமெரிக்காவில ஹாலோவின் விழா வேற, கொஞ்சம் பயம்மா கேள்வி கேட்போமின்னு... ஹி..ஹி..ஹி.

17 comments:

Sivabalan said...

நேசி,

ஒரு பெரிய அரசியல் பதிவைப் போட்டுவிட்டு சத்தமில்லாமல் வகைப்படுத்தாதது என்று சொல்லியிருப்பதை மென்மையாக கண்டிக்கிறேன். Hi Hi Hi..

ஆமா Halloween Effect பயங்கரமாக் இருக்குதே???!!!

நேசி, இங்கே நான் என்ன கம்ன்ட் போட்டாலும் அது அரசியல் ஆகிவிடும்.. அதானல ஆளைவிடுங்க.. Ha Ha Ha...

இயற்கை நேசி|Oruni said...

Karpakaraj, a valid question.

In fact, I am trained to be both.

Currently நான் ஒரு முட்டாளுங்கோ ;-))

இந்த கேள்விய கேட்டவுடனேயே உங்களுக்கு என்னப் பத்தி தெரிஞ்சுக்கணுமின்னு தோணுச்சுப் பாருங்க... அதான் நான் ஒரு "நான் ஒரு முட்டாளுங்கோ."

இயற்கை நேசி|Oruni said...

சிவா,

அடப் பாவத்தே நல்ல ஒரு கேள்வியா கேட்டு வைச்சுருந்தேனே, நீங்க அரசியல் அது இதுன்னு புள்ளைகளையெல்லாம் இப்படி பயந்து ஒதுங்கிப் போக வைச்சுப்புட்டீகளே. இது உங்களுக்கே அடுக்குமா ;-))

Anonymous said...

மூலை என்பதும் சதையும். நரம்பும், சேர்ந்த கலவை தான்,

சிறுநீரகம், இதயம் போன்று இதுவும் ஒரு உறுப்புத்தான்.

அதற்கு கொடுக்கப் படும் சக்தியைக்கொண்டு தான்

அதனுடைய செயற்பாடும்(நினைவாற்றல், திறமை) அமையும்.

அப்போ ஆத்மா வேறு எங்கோதான் இருக்கும்.

துளசி கோபால் said...

நல்ல மூளை கிடைக்குதான்னு பாருங்க. கிடைச்சால் எனக்கு(ம்) ஒண்ணு:-)))

Unknown said...

ஸ்டெம் செல் மூலமாக இங்கிலாந்தில் புதிதாக புத்தம் புது Liver செய்து இருக்கிறார்கள்.

//Scientists in the UK say they have grown tiny sections of human liver.
The sections of liver were created using stem cells from umbilical cords by a team at Newcastle University.

It is hoped the "mini-livers" will be used to test drugs, avoiding incidents like the Northwick Park trial in which six patients became seriously ill.

But other experts warned, because the work was unpublished, it was not possible to assess its worth and that cells made in this way were unreliable.

Researchers Dr Nico Forraz and Professor Colin McGuckin have started a company called ConoStem in an effort to market their stem cell work.

They believe it will be decades before a grown liver can be used in a human transplant operation. //

http://news.bbc.co.uk/1/low/health/6101420.stm

துளசி, ஒரு நூறு வருடங்கள் கழித்து தேவையான அளவுக்கு மூளை செய்து வாங்கிக்கொள்ளலாம். :-)))

பொன்ஸ்~~Poorna said...

இதே சப்ஜெக்டை வைத்து ஒரு படமோ நாடகமோ பார்த்த நினைவு.

இரண்டு பேர் ஒரு விபத்தில் அடிபட்டுக் கொள்வார்கள். ஒருத்தி சின்னப்பெண், ஆனால், விபத்தில் அவள் இறந்து போய் விடுவாள். விபத்துக்குள்ளான இன்னுமொருத்தி ரொம்ப வயதானவள் அவளுக்கு இரண்டு பிள்ளைகள், அவள் மூளையில் கட்டி இருந்ததால், அது என்றைக்கு வேண்டுமானாலும் செயலிழக்கலாம் என்று சொல்லி இருப்பார்கள். அந்த விபத்தின் அதிர்ச்சியில் மூளை வெடித்துவிடும்.

இப்போது, அந்த இறந்து போன பெண்ணின் இன்னும் உயிரோடிருக்கும் மூளையை எடுத்து (இதயம் தான் நின்னு போச்சு, மூளை இருக்குன்னோ என்னவோ வசனம் வரும்..) இந்த மூளைக்காய்ச்சல் பெண்ணுக்குப் பொருத்திவிடுவார்கள்.

இப்போது இவளுக்குள் இளம்பெண்ணின் மனம் இருக்கும். அவளால் கணவன் என்று கூறப்பட்டவனை ஏற்றுக் கொள்ளவே முடியாது, குழந்தைகளையும். ஏன், அவளால் அந்த உருவத்தையே ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆபரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டைட் என்பது போன்ற ஒரு நிலையாகிவிடும்.

அப்புறம் எப்படி முடித்தார்கள் என்று நினைவில்லை.. இப்படி ஒரு கதை நான் எழுதினால், இறுதியில் அந்த இரண்டாவது மூளையும் இந்தக் குழப்பத்தால் வெடித்துவிட்டது என்று முடிப்பேன்..

நன்மனம் said...

என்னவோ புதுசா ஒரு உருப்பு பெயரா இருக்கேனு உள்ள எட்டி பாத்தேன்..... அவ்வளவு தானுங்கோ!!!!

:-)

பொன்ஸ்....

கொஞ்சம் மூளைய கசக்கி பேர சொல்லுங்க....

தருமி said...

ரொம்ப வருஷத்துக்கு முந்தி வாசிச்ச ஒரு கதை. அந்த கதாசிரியர் ஒரு 'மாதிரி' கதைகள் எழுதுறவரு.ஆனா செம ஜாலியா இருக்கும். ஒருவனுக்கு இதே போல் மூளை மாற்று நடந்திருக்கும். அவனுக்கே அது தெரியாது. முழிச்சி, நேரே பாத்ரூமுக்குப் போய்ட்டு, ஓன்னு கத்திக்கிட்டு வெளியே வருவான். அவனுக்கு என்ன ப்ராப்ளம்னா, கரெக்டா ஒண்ணுக்கடிக்க முடியாது. கதை அப்படியே போகும்...

அப்படியே இன்னொரு விஷயம்:karpakaraj கேட்டாரு -
Are u scientist.Or a teacher?நீங்க In fact, I am trained to be both.
அப்டின்னு சொல்லிட்டு அதுக்குப் பிறகு
சொன்ன பதிலில் இருந்து நான் என்ன புரிஞ்சிக்கிறது?? :)

இயற்கை நேசி|Oruni said...

வைசா,

ஸுஸான் கிரீன்ஃபீல்ட் என்ற ஒரு மூளை நிபுணர் (ஆக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில்) கூறுகிறார்:
நான் என்பது உண்மையில் மூளைதான். மூளை ஒரு முடிவை எடுத்துவிட்டுப் பின்னர் அது மூளையின் உணர்வுப்பகுதிக்கு சமிக்ஞையை அனுப்புகிறது. உடனே நாம் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டோம் என்று உணர்கிறோம். ஆகவே நான் என்பது மூளைதான்.//

அறிவியல் ஆராய்ச்சிப் பூர்வமாக அவரு சொல்றத நான் ஏத்துக்கிறேன். ஆனா,

//இவற்றை வைத்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.//

நீங்க என்ன முடிவுக்கு வந்திருக்கீங்க, இல்ல வந்துகிட்டு இருக்கீங்க :-))

நானும் ஒரு முடிவுக்கு வந்துருவேன், என் கடைசி நாட்களுக்கு முன்பு :-)

இயற்கை நேசி|Oruni said...

தருமி,

அவனுக்கு என்ன ப்ராப்ளம்னா, கரெக்டா ஒண்ணுக்கடிக்க முடியாது. கதை அப்படியே போகும்...//

Old habits die hardன்னு சொல்லுவாங்களே அத நிறுபிக்கிற மாதிரியும், இன்னும் நிறைய விசயங்கள் சொல்லவார மாதிரி தெரியுது, அப்பிடியா...??

செம காமெடி கதையா இருக்கும் போல ;-))

//அப்படியே இன்னொரு விஷயம்:karpakaraj கேட்டாரு -
Are u scientist.Or a teacher?நீங்க In fact, I am trained to be both.

அப்டின்னு சொல்லிட்டு அதுக்குப் பிறகு
சொன்ன பதிலில் இருந்து நான் என்ன புரிஞ்சிக்கிறது?? :)//

:-) ஒண்ணுமில்ல நான் அம்புட்டு தூரம் போயிட்டு, டக்குன்னு ஒரு நாள் இந்த புத்தகம் படிக்க ஆரம்பிச்சுட்டேன் What Should I Do With My Life? by Po Bronson ஏன்னா, எதுவுமே என் மரமண்டைக்கு திருப்தி தரலைங்கிறது புரிஞ்சுச்சு. ஒரு புள்ளியில.

அப்படி இருந்தா நான் ஒரு முட்டாளுதானே, பிழைக்கத் தெரியாதவன், இருந்துட்டுப் போகட்டும் ஆள முழுசா விட்டாச் சரி, நாம இன்னும் நிறைய explore பண்ண வேண்டியதிற்குன்னு அடக்கம ஏத்துகிட்டாச்சு, கீழே விழுந்தாலும் அடிபடாது பாருங்க ;-)))

என்ன நாஞ்சொல்றது ... என்ன, இப்பவும் புரியலாயா, அதன் அதன் அதேதான் நான் சொல்ல வருவதும்

வெட்டிப்பயல் said...

அதி தீவிரமான விஷயத்தை கேட்டு விட்டு நகைச்சுவையில் வகைப் படுத்தி இருக்கிறீர். இருக்கட்டும்.

//ஒரு கொலைகாரரின் மூளையை அகற்றி விட்டு, ஒரு புனிதரின் (அல்லது நமது பரிமாணத்தில் நிரம்ப நல்லவனாக வாழ்ந்த;) மூளையை மாற்றுச் செய்தால், அங்கு கொலைகாரரின் பாவங்கள் எல்லாமே பதிவேட்டிலுருந்து நீக்கப் பெற்று, இப்பொழுது கொலைகாரர் புனிதரானார் என்று கொள்ள முடியுமா?
//

கொலை காரரின் மூளையை அகற்றும்போது அந்த கொலைகாரரின் ஆன்மா செயலிழந்து விட்டதாக பொருள். அதாவது அவரது விதி முடிந்து அவர் இறந்துவிட்டதாகவே கருதப்படுவார். செயலிழக்காமல் இருப்பது அவரது ஸ்தூல உடல் மட்டுமே.

புனிதரின் மூளை பொருத்தப்படும்போது இத்தனை நாள் செயலிழந்திருந்த (மூளை எடுக்கப்பட்ட நபரின்) ஆத்மா மீண்டும் உயிர் பெறுகிறது. அதாவது கூடு விட்டு கூடு பாய்தல் போல.

விர்ட்சுவலாக அங்கே ஒரு மரணமும், ஜனனமும் நிகழ்கிறது.

இயற்கை நேசி|Oruni said...

அப்புறம் தருமி சொல்ல மறந்திட்டேன். நம்ம புது நண்பர் Karpagarai profile போயிட்டு வந்தீங்களா? போனீங்கன்னா தெரியும், நான் எந்த தாக்கத்தில் அப்படி சொன்னேன்னு, அட போயித்தான் பாருங்களேன்... அவரும் என் கோஷ்டித்தான் ;-))

வஜ்ரா said...

நேசி,

இது வருங்காலத்திலும் சாத்தியமற்ற கேள்வியாகத்தான் தோன்றுகின்றது.

ஒன்று செய்யலாம்.

மூளை என்பது ஒரு உறுப்பு. அதை மாற்றிவைத்து வைத்தியம் செய்வது சாத்தியம் கிடையாது. உறுப்பு ஒவ்வாமையினால் மூளை சிதிலமடைந்து மாண்டுபோவான்.

ஆனால் இன்னொன்று செய்யலாம். அதாவது நம் எண்ண அலைகள் synapse என்கிற connection ல் தான் ஓடும்.

ஒரு கொலைகாரனின் synapse களை ஒரு பிரதி எடுத்து கணினி hard disk ல் பாதுகாத்துவிட்டு. அதனை ஒரு பல்ஸ் மூலம் அழித்துவிடவேண்டும். அதே போல் ஒரு யோகியையும் செய்து. பின் ஹார்ட் டிஸ்க் டாடாவை transfer செய்துவிடவேண்டும். இது வேண்டும் என்றால் சாத்தியமான விஷயமாகப் படுகிறது.

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம்,

அவன் கர்ம பலனை அவன் தான் அனுபவிப்பான். உடல் ஆத்மா அணியும் ஒரு உடை. கொலைகாரன் யோகியின் உடலில் சென்றாலும் கொலைகாரன் கொலைகாரனே. இறந்தபின் அவன் ஆத்மா அவன் கர்ம பலனைத்தான் அடையும்.

அதே போல் கொலைகாரன் உடலில் இருந்தாலும் யோகி யோகியே. இது அந்தத் தருணத்திற்குச் செல்லுபடியாகும் விதி.

பின்னாளில் அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது பொருத்து கணக்கு வேறுபடும்.

இயற்கை நேசி|Oruni said...

துள்சிங்க,

நல்ல மூளை கிடைக்குதான்னு பாருங்க. கிடைச்சால் எனக்கு(ம்) ஒண்ணு:-)))//

கல்வெட்டு மேலே ஒரு பின்னூட்டத்தில சொல்லியிருக்கிறாரு பாருங்க இன்னொரு 100 வருஷத்தில எவ்ளோ மூளை வேணுமோ அவ்ளோ ஆர்டர் கொடுத்து வாங்கி தலைக்குள்ள வைச்சுக்கலாமின்னு.

அது நடக்கும் போலத்தான் தெரிகிறது. எதுக்கும் உங்க முகவரியை மறக்கமா எனக்கு தெரியப் படுத்துங்க ஒரு 75 வருஷம் கழிச்சு :-)) நல்லா இருப்பீங்க. என் செலவுல உங்களுக்கு ஒண்ணு வாங்கி கொடுத்திடுறேன் =))

இலவசக்கொத்தனார் said...

யப்பா ராசா, என்ன கேள்வி இது? ஒரே கன்பிசனா இருக்கே....

இயற்கை நேசி|Oruni said...

கல்வெட்டு, தாங்கள் பகிர்தலுக்கு நன்றி. அப்படியாகத்தான் அன்மைய கால மருத்துவ அறிவியல் சொன்று கொண்டிருக்கிறது. விரைவிலேயே அது சாத்தியப் படும் என்றுதான் தோணுகிறது. இருந்தாலும், மரபணு தேர்வின் மூலம் எது போன்ற குழந்தை நமக்கு வேண்டும் என்று தேர்ந்தெடுப்பு நடத்துவதில் எனக்கு உடன்பாடே கிடையாது.

துளசி அவர்களுக்கு ஒரு பதில் கொடுத்துள்ளேன் உங்களின் தொடர்பாகவே...

Related Posts with Thumbnails