Friday, November 24, 2006
பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef
இந்த பவளப் பாறைகளை (Coral Reefs) நம்மில் நிறைய பேர் அதன் இயற்கையான வாழ்வுப் பகுதிக்கு சென்று பார்த்திருக்க வாய்ப்பில்லை என்னையும் சேர்த்துத்தான். ஏனெனில், இவைகள் கடலுனுள் வாழ்கின்றன. பெரும்பாழும் இவைகள் வசிக்கும் பகுதி பூமத்திய ரோகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளில். அதிகமாக சொல்லப் போனால் பசிபிக் மகா சமுத்திரத்தில் என்று கூறலாம். நம்மூரில், அந்தமான் தீவுகளிலும், லக்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் காணலாம்.
அய்யோ! இவன் சொந்தரவு தாங்கலையே. போட்டுக் கொல்லப் போறனேன்னு, அழுக ஆரம்பிச்சுட்டீங்களா, மக்களே! இவனுங்கள பத்தி நாம எல்லோரும் கண்டிப்பாக தெரிஞ்சுக்கணும். நான் இங்க, தேவையில்லாத விசயத்தை எடுத்திட்டு வாரது இல்லைன்னு ஒரு மிகப் பெரிய சபதமே எடுத்துருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது, இந்த பவளப் பாறைகளை பத்தி தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியமா படுது எனக்கு.
பவளப் பாறைகளை நாம் அக்குவாரியங்களில் (Aquariuam) பார்த்திருக்கலாம். இவைகளுக்கெனவே, அங்கு தனி காட்சித் தொட்டிகள் அமைத்திருப்பார்கள். ஒரு முறைப் பார்த்தால் நம் கண்களை விட்டு அகலாமல் இருக்கக் கூடிய பல வண்ன நிறங்களில் பாறையை ஒத்த அமைப்புடன் பல வடிவங்களில் காணலாம் இவைகளை.
அத்தோட, இந்தப் பவளப் பாறைகள் உண்மையிலேயே ஒரு பிராணியா, இல்லை தாவரமா இல்லை அதுவுமில்லை இதுவுமில்லை பல தாதுப் பொருட்களாலான மட்டியா என்று கூட எண்ணத் தோண்டும். அப்படி நம் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு கொள்ளை அழகுடனும், செயற்கைத்தனமாக செய்து வைக்கப் பட்டதைப் போன்ற பிரமையையும் ஏற்படுத்தி விடும்.
சரி இவைகள் தான் என்ன? இவைகள் ஒரு பிராணியே! கடலினுள் ஒரு மழைக்காடுகள் என்று அழைக்கப் படுவதற்குக் காரணம் - "மழைக்காடுகள்" இயற்கையாகவே உயிர்-பன்முகத்தன்மைக்கு பெயர் போனது. உலகத்தின் அதிகப் படியான தாவர வகைகளும், விலங்குகளும், மற்ற சிறு ஜீவராசிகளும் அக் காடுகளில்தான் அதிகம் வசிக்கிறது.
அது போலவே, இந்த பவளப் பாறைகளை சுத்தி நிறைய வகை மீன் இனங்களும், மற்ற சிறு கடல் வாழ் ஜீவராசிகளும் தனது பாதுகாப்பிற்கெனவும், உணவுத் தேடலுக்கெனவும் இந்த சூழ் நிலையை சார்ந்து வாழ பழகிக் கொண்டது பரிணாமத்னுடையே.
அது மட்டுமல்லாமல் இந்த பவளப் பாறைகள் சுற்றுச் சூழலுக்கு மற்றொரு வகையிலும் பெரும் பங்கு ஆற்றுகிறது. அது, ஒரு தீவின் அமைப்பும், அதன் சீதோஷ்ன நிலையையும் கூட இந்த பவளப் பாறைகளின் கட்டமைப்பும், எண்ணிக்கையையும் (கூட்டமைப்பும்) பொறுத்தே கூட அமைகிறதாம். அப்படியெனில், இந்த ஜீவராசிகளின் முக்கியத்துவம் சொல்லித் தெரிவதற்கில்லை, இல்லையா?
இந்த பவளப் பாறைகள் நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச ஜெல்லி மீன் இருக்கில்ல அந்த வகையை சார்ந்த பேரினமான Cnidaria இனத்தை சேந்ததுகள் தானாம். என்னய்யா, இப்படிச் சொல்லிப் புட்ட ஜெல்லி மீன்களின் வகைதான் இந்தப் பவளப் பாறைகள்னு நின்னைக்கிறீங்களா. அப்படி நினைச்சீங்கன்னா இந்தாங்க இதனையும் பிடிங்க...
இதுகளும் இனப் பெருக்க காலத்தில் உயிரணுவையும், சினை முட்டையையும் தண்ணீரில் விட்டு விடுகின்றன. இந்த ரெண்டும் சந்திச்சுக்கிட்டப்ப டச்சிங் டச்சிங் ஆகி கருவாகி, பிறகு லார்வாவாகிறாய்ங்களாம் இதுக்கு பிளானுலான்னு (Planula) பேராம்.
பிறந்து விழுந்தவுடன் பார்த்தாக்க எல்லா பேபிகளும் பார்க்கிறதுக்கு பூமாதிரி பல விரல்களுடன் ஜெல்லி மீன் போன்ற தோற்றத்துடன் ஆடி, அசைஞ்சு, மிதந்து திரியுதுங்களாம், பிறகு நாட்பட நாட்பட ஒரே இடத்தில அசையாம இருக்கிற மாதிரி ஒரு இடத்த தேர்வு செஞ்சுகிட்டு செட்டில் ஆகிடுதுகளாம். அந்த மாதிரி இடம் ஏற்கெனவே கூட்டமா தன் இனத்தை சேர்ந்த ஆட்கள் இருக்கிற இடமாகக் கூட இருக்கலாமாம்.
அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கொஞ்சம் கொஞ்சமா தன்னைச் சுத்தி ஒரு ஓடு கட்டிக்கிடுதுகள். அது எப்படிய்யா நேசி, சாத்தியம் அப்படின்னா, இருங்க அந்த டெக்னிக்கல் பகுதியையும் சொல்லிப் புடுறேன். தண்ணீரில் கரைந்துள்ள கரியமிலா வாயுவையும் (C02)) கால்சியத்தையும் (Ca) கிரகித்து அதனை கால்சியம் கார்பனேட் (CaCo3) ஆக மாற்றி கெட்டியான ஒரு சுண்ணாம்பு மட்டி மாதிரி ஆக்கி புடுதுகள் இந்த சமர்த்துகள் தனது வீடாக.
இது பார்க்கிறதுக்கு ஒரு சின்ன பூஞ் ஜாடி மாதிரியோ, மான் கொம்பு மாதிரியோ (ஓன்றின் மேல் மற்றொன்று அடுக்கடுக்காக கட்டுவதால்) அல்லது பல் வேறு வண்ண மற்றும் அமைப்புகளில் காணப் பெறலாம். அந்த மாதிரி அவ அவன் வீட்டுக்குள்ள அவன் அவனும் இருப்பாய்ங்க தான் சாவுற வரைக்கும்.
இப்படித் தனித்தனியா வூடு கட்டி இருந்தாலும், ஒரே இடத்தில கூட்டமா கட்ட ஆரம்பிச்சு அதுவே மிகப் பிரமாண்டமா அமையப் போய் பார்க்கிறதுக்கு, மலை முகடுகள் மாதிரியும், குகைகளோடவும் இருக்கிறதினால மற்ற கடல் ஜீவராசிகளுக்கு இதுவும் ஒரு புகலிடமா அமைஞ்சுடறது போல. அதினாலேதான் பவளப்'பாறைகள் அப்படின்னு பெயர்க் காரணம் போல.
இதோட பிரமாண்ட கட்டமைப்பைப் பற்றி தெரிஞ்சுக்கிடணுமின்னா, இப்ப எல்லோருக்கும் தெரிஞ்ச நம்ம டைடானிக் கப்பல் இருக்கில்ல அது மேல கூடி இவனுங்க குடும்பம் நடத்த ஆரம்பிச்சானுங்கன்னு வைச்சுக்கோங்க, அதோட சைஸ்க்கு சந்து பொந்தெல்லாம் வலைச்சு வலைச்சு பல நிறங்களில், பல அமைப்புகளில்னு கட்டினா எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க...
இவிங்களும் இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் கோஷ்டிதான். இரவில் தன் வீட்டு வாயிலின் அருகே அமர்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டு வரப் போற பிளாங்டான்களை சாப்பிட்டுகிடுவாய்ங்களாம். இதிலென்ன நமக்கும் அதுகளுக்கும் ஒரு வித்தியாசமின்னா, நம்மூரில் இன்னும் சில பேர் பகல் நேரத்திலேயே இப்படி உட்கார்ந்து கொண்டே ஊர அடிச்சி உலையில் போட்டு உயிர் வாழுங்க அதுதான்.
ஏற்கெனவே சொன்னேன் இல்லையா, நீரில் கலந்துள்ள கரியமிலா வாயுவைக் கொண்டு ஓடுகள் தயார் பண்ணுகின்றனன்னு; அப்படிங்கும் பொழுது, இந்த கடல் வாழ் ஜீவராசிகளனைத்தும் தண்ணீரில் கரைந்துள்ள பிராணவாயுவை உட் கொண்டு, கரியமிலா வாயுவாக வெளித் தள்ளும் பட்சத்தில், அதில் ஒருத்தர் இந்த கரியமிலா வாயுவை பயன் படுத்தி நீரில் சமநிலைப் படுத்துவது எவ்ளோ அவசியம் பார்த்தீங்களா. அடிச்சேன் சிக்ஸர் இப்போ... :-) இன்னொரு சிக்சரும் அடிசுடறேன் கையோட, கடல் பொங்கி வரும் பட்சத்தில் பெரும் அலைகள் கிளம்பினால் அது பேரலைகளாக கரைக்கு வந்து சேரமல் அடக்கி வாசிக்க வைக்கும் ஒரு சுவர் போலவும் வேலை செய்தாங்கோ...
ஆனா, பாருங்க மக்கா இந்த பவளப் பாறைகளின் மேல் நம்மால் கொண்ட அதீதக் காதல் இதன் நிறத்திர்கெனவும், அமைப்பிற்குகெனவும் அங்கு சென்று திருடியும், மீன்களை வெடி போட்டு பிடிக்கிறேன் என்று இவைகளுக்கும் வெடி வைத்து கட்டமைப்பையே உடைப்பதாலும், மற்றும் சுற்றுப் புறச் சீர்கேடுகளை உற்பத்தித்தும், இந்த கடல் மழைக்காடுகளை மிக வேகமாக அழித்து வருகிறோம்.
அதன் பொருட்டு ஒரு விழிப்புணர்வேற்று படலமாகவே இந்த நேசிப்'புலம்பல்ஸ் இங்கே.
ஆமா, நாம எங்குதான் விட்டுவைச்சோம் திருடாம, உருப்படாததுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
சில இடங்களில் ரொம்ப ஆழமா இல்லாம கொஞ்ச தூரத்துலேயே இந்த பவளப்பாறைகளைப்
பார்க்கலாம். ஃபிஜியில் கண்ணாடித்தரை இருக்கும் படகுலெ( கிளாஸ் பாட்டம் போட்)
போய்ப் பார்த்திருக்கேன். கலர்க்கலராய் ரொம்பவே அழகுதான்.
Dear friend
You can update your knowledge and share with others and make it permanent by posting in wikipedia also
http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit
இப்பொழுதுதான் An Inconvenient Truth பார்த்த பாதிப்பில் இருந்தபோது, சமயத்துக்கேற்ற பதிவு. நன்றி.
//மக்கா இந்த பவளப் பாறைகளின் மேல் நம்மால் கொண்ட அதீதக் காதல் இதன் நிறத்திர்கெனவும், அமைப்பிற்குகெனவும் அங்கு சென்று திருடியும்//
hmmm தெகா..எனக்கு தெரிஞ்சதெல்லாம்
எனக்கு பிடிச்ச பவளத்தில செய்த நகைகள் தான்..சின்ன வயசுல இந்த பவளத்த வச்சு விளையாடி இருக்கேன்.. பாட்டி பவள வியாபாரம் பண்ணினதுனால வீட்ல எங்க பார்த்தாலும் தரம் வாரியா பவளம் குவிஞ்சு கிடக்கும்..
பெரிய பெரிய அழிவில் இருந்து இந்த உலகத்தை காக்கும் சில விஷயங்களை மனிதன் விளிப்புணர்வு இல்லாமையே அழிச்சுட்டு வரான்..ஹ்ம்ம்ம்
நல்லா இருக்கு தெகா..
{என்ன மாதிரி மர மண்டைகளை மனசுல வச்சு எழுதி இருக்கீங்க, புறியற மாதிரி)
:-)))))))
நேசி
எவ்வளவு அருமையா எளிமையா சொல்லியிருக்கீங்க..
கலக்கல் பதிவு.
இது போல் தொடர்ந்து கொடுங்க.. படிச்சுட்டே இருக்கோம்..
மிக்க நன்றி
மிக நல்ல பதிவு!
நான் இவற்றைத் தொலைக்காட்டியில் பார்த்துள்ளேன். பிரான்சில் கானில் உள்ள கடலுயிர் காட்சியகத்தில்; செயற்கையாக நீர் நிலைகள் அமைத்து வளர்க்கிறார்கள். பிரான்சின் மாசேல் கடலில் செம்பவழத்தை ஒடித்து ஒட்டி வளர்ப்பது பற்றியும் ஓர் விவரணம் பார்த்தேன்.
அதன் பெறுமதியால் அது அழிகிறது. மனிதனுக்கும் எதிர்காலம் பற்றிய சிந்தனையே இல்லை.
பொன் முட்டை வாத்தை வெட்டிய மடையர் நாம்.
யோகன் பாரிஸ்
உங்களின் எழுத்து பலரின் அறிவு சிந்தனையை தூண்டி உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்.
தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்!!!
அன்புடன்,
மணிமேகலன்,
மீன் பிடிப்பவர்.
தெகா இந்த மாதிரி விஷ்யங்கள் தேடிப் போய் எல்லாம் நாங்க படிக்க மாட்டோம்... இங்க கொடுத்ததற்கு நன்றி
துள்சிங்க,
அட ஆமால்லை! நான் உங்க மாதிரி ஆட்களை இந்த மாதிரி தீவுகளில் இருக்கீங்க பார்த்திருக்க வாய்ப்புண்டு அப்படின்னு டக்குன்னு ஞாபகத்தில இல்லாமப் போயி அப்படி சொல்லி வைச்சுப்புட்டேங்க...
எனக்கும் நேரடியாக அந்த மாதிரி கிரிஸ்டல் க்ளியர் தண்ணீரில் இந்தப் பவளப் பாறைகளை பார்க்கணுமின்னு ரொம்ப நாளா ஆசை பார்க்கலாம் எப்ப அது நிறைவேறுகிறதுன்னு.
Hi Supersubra,
Thanks for your invitation to tamil wikepedia. Matter of factly, I have already registered under Nesi there, yet, I have to sit and read as to how to contribute in there.
If anyone is there to help me out, i will gladly learn and start contributing in there too. Tnanks again Subra!!
Regards,
Nesi.
பாலா,
கண்டிப்பாக அந்த படத்தை பார்த்து விட வேண்டும். பிறகு "State of Fear by Michael Crichton" வாங்கி வைத்திருக்கிறேன், அடுத்த மாதம் இந்தியவிற்கு செல்லும் பொழுது படிப்பதற்கென.
இந்த படம் அதற்கு முன்பே பார்த்து விட வேண்டியதுதான். புத்தகத்திற்கும் (state of fear), அந்த படத்திற்கும் குறைந்த பட்சம் எத்தனை வித்தியாசங்கள் என்பதனை அளவீட நன்றாக இருக்கும். அடிக்கடி வாருங்கள், ஆதரவு தாருங்கள் :-).
தங்களின் சுட்டிக்கும் நன்றி!
மங்கை,
//நல்லா இருக்கு தெகா..
{என்ன மாதிரி மர மண்டைகளை மனசுல வச்சு எழுதி இருக்கீங்க, புறியற மாதிரி)//
ஆஹா, உங்கட பிடிச்சு நல்ல திட்டிப் புட்டேனே, இந்தப் பதிவின் முடிவுப் பகுதியில் :-)) ச்சும்மானாச்சுக்கும் சொன்னேன், அப்படியெல்லாம் உங்கட சொல்லுவேனா...
//பெரிய பெரிய அழிவில் இருந்து இந்த உலகத்தை காக்கும் சில விஷயங்களை மனிதன் விளிப்புணர்வு இல்லாமையே அழிச்சுட்டு வரான்..ஹ்ம்ம்ம்..//
ஆமாங்க மங்கை. பார்த்தீங்களா, இந்த உலகத்தில காரணமில்லாமல் எந்த அசையும், அசையா விசயங்களும் நம்முடன் இல்லை எனபதற்கு இதுவே ஒரு சிறந்த சான்று. சிறு துரும்பும் பல் குத்த உதவும் - ஆனா, நமக்கு தெரியாம இன்னும் என்னன்னமோ எந்தந்த வழியிலோ தன் பங்களிப்பை வழங்கிக் கொண்டு தன் இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள போராடிக்கொண்டிருக்கிறதோ.
அது நமக்கு தெரியாமல் இருந்தாலும், நமக்கு எதிலும் அளவோடு பயன் படுத்தும் மனோ பாவம் வந்து விட்டாலே, எங்கும் சுபிட்சமாக இருக்கும்.
Breath Easy... :-)!!!
சூப்பர் சுப்ரா,
இப்பொழுதுதான் நீங்கள் கொடுத்த சுட்டியை உடைத்து ஒட்டி சென்று பார்த்தேன். புரிந்தது. என்னுடைய கட்டுரையை அப்படியே அங்கே இணைத்துள்ளேன். யாரவது அதனை இன்னும் தட்டி பொலிவூட்டக்கூடும் அங்கு.
தாங்களின் அறிவுருத்தலுக்கு நன்றி. இதுபோல ஏதேனும் பக்கங்கள் இருந்தால் எனக்கு அவ்வப்பொழுது தெரியப் படுத்துங்கள். நன்றி, மீண்டும்.
இந்த பவழப் (இதுதானே சரியான ஸ்பெல்லிங்?) பாறைகள் இருக்கே, இது உங்க அமேஸான் தவளை மாதிரி நேசி. சுற்றுசூழலினால் அதிகம் பாதிக்கப்படுபவை.
நான் கேமன் தீவுகள் (Cayman Islands) சென்றிருந்த பொழுது ஒரு நீர் மூழ்கி கப்பலில் சென்று இந்த பவழப்பாறைகள் நிறைந்த பகுதியில் சென்று பார்த்து இருக்கிறேன். மிக அழகாக வண்ண மயமாக இருக்கும்.
அப்படியே மாசு பட்ட இடம் ஒன்றினையும் காட்டினார்கள். சாம்பல் பூத்தது போல் வெளிறிப் போய் இருந்தது. அவைகள் இறந்துவிட்டனவாம். ரொம்பவே மனம் வருந்தச் செய்த சம்பவம் அது.
ஆழ் பகுதியில் டைவிங் செய்பவர்கள் இப்பாறைகளை
தொடக்கூடாது. தொட்டால் மிக அதிகமாக அபராதம். ஏனென்றால் அந்த தொடுகை கூட அவற்றை இறந்து போகச் செய்யுமாம்.
நான் பார்த்தது நமக்கு பின் வரும் தலைமுறை பார்க்க முடியுமா? தெரியவில்லை! :-(
சிவா,
//இது போல் தொடர்ந்து கொடுங்க.. படிச்சுட்டே இருக்கோம்...//
அப்போ, எடுத்து வைச்சிருக்க ஃபோட்டோக்களையெல்லாம் ஒவ்வொன்றாக போட்டு ஒரு பதிவுக் கதையா சொல்லச் சொல்லிறீங்க... சரி வுடுங்க இவ்வளவு ஆசையா கேக்றீங்க விடுவேனா :-))... ரெடியா இருங்க...
நன்றிப்பா ரொம்ப...
யோகன் - பாரிஸ்,
இங்கும் அட்லாண்டாவிலும் உள்ள புதிய கடலுயிர் காட்சியகத்தில் (நல்ல அருமையான மொழிபெயர்ப்பு - நினைவூட்டலுக்கு நன்றி) மிக பிரமாண்டமான முறையில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள் .
பிறகு, பவழமா அல்லது பவளமா என்பதில் இலவசகொத்தனாருக்கும் எனக்கும் ஒரு சிறு சந்தேகம் வந்தது. பிறகு சங்க காலத்திலிருந்தே இந்த சந்தேகம் வந்திருப்பதாக அறிந்து கொண்டேன் :-). இதனை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் நீங்கள் பவழம் என்று எழுதி இருந்தீர்கள் அதனாலேயே.
//பொன் முட்டை வாத்தை வெட்டிய மடையர் நாம்.//
ஆமாம் ஒத்துக் கொள்கிறேன்.
மணி, மேற்குமலைத் தொடர்களில் நீங்கள் கண்டுபிடித்த புது வகை மீன்களின் புகைப் படங்களுடன் வந்து இங்கு கட்டுரைகள் வழங்கி சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். சீக்கிரமாக வருக! தமிழ் கூறு நல்லுலகிற்கு உங்களின் படைப்புகளை தருக! தருக!!
அன்புடன்,
நேசி... தி எலி பிடிச்சவர் ;-)
இ.கொ,
//நான் கேமன் தீவுகள் (Cayman Islands) சென்றிருந்த பொழுது ஒரு நீர் மூழ்கி கப்பலில் சென்று இந்த பவழப்பாறைகள் நிறைந்த பகுதியில் சென்று பார்த்து இருக்கிறேன். மிக அழகாக வண்ண மயமாக இருக்கும்.//
கொடுத்து வச்சவருய்யா நீர். உலகம் சுற்றும் வலிபன் மாதிரி சுத்திக் கிட்டே திரியிரீர். :-)
//அப்படியே மாசு பட்ட இடம் ஒன்றினையும் காட்டினார்கள். சாம்பல் பூத்தது போல் வெளிறிப் போய் இருந்தது. அவைகள் இறந்துவிட்டனவாம். ரொம்பவே மனம் வருந்தச் செய்த சம்பவம் அது.//
அந்த வெளிறிப் போனவைகள் - ப்ளீச்சிடு பகுதி என்றழைக்கிறார்கள். இது மாசுபடுத்தலால் நிகழ்கிறது போல. டூரிஸ்ங்கள கூட்டிட்டு போயி காட்டுறதுனால நிறைய வருவாய் கிடைக்குதாம் அந்த அந்த நாட்டு அரசாங்கங்களுக்கு இருப்பினும், எதுவும் அளவை மிஞ்சும் பொழுது முடிவு இது போன்ற ப்ளீச்சிங்தான்... :-(
//நான் பார்த்தது நமக்கு பின் வரும் தலைமுறை பார்க்க முடியுமா? தெரியவில்லை! :-( //
இது போல எல்லோரும் தனது குழந்தைகளுக்காவது தான் பார்த்ததை அவர்கள் பார்க்க விட்டு வைக்க வேண்டுமென்று கருதினாலே, over-exploitation would be minimized consciouly இப்பொழுது.
இன்னொரு விசயம், ஸ்பெல்லிங் பத்தி - நம்ம ஒரு தீர்மானத்திற்கு வந்துட்டோம் தானே ழ_வும், ள_வும் இவைகளில் எது பயன்படுத்தினாலும் தவறு கிடையாது என்பதனைப் பொருட்டு...
இன்னுமொரு அருமையான பதிவு.
ஒரு கேள்வி.
பவளப் பாறைகள் பேரலைகளிலிருந்து காப்பதாகக் கூறினீர்கள். மேலும் தரப்பட்டுள்ள வரைபடத்தில் வங்காள விரிகுடாவின் பெரும்பாலான பகுதிகளில் பவளப் பாறைகள் இருப்பதாகக் காட்டுகின்றன.
அப்படியிருப்பின் சமீபத்த்திய சுனாமியின்போது பவளப்பாறைகள் பேரலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லையே ஏன்?
பெத்த ராயுடு,
நல்ல ஒரு கேள்வியை முன் வைத்திருக்கிறீர்கள், அதற்கோர் நன்றி!
எனக்கு உங்களின் கேள்வியை படித்தவுடன் தோன்றிய முதல் பதில் - the damage has already been done and now we are only facing the consequences அப்படிங்கறதுதான். ஏனெனில், இந்தோனேசியா, சுமட்ரா, ஃபிலிப்பின்ஸ் தீவுக் கரையோரங்களில் உள்ள பவளப் பாறைகள் எல்லாம் முன்னமே சூரையாடப் பட்டுவிட்டன... நீங்கள் அந்த உலக வரைபடத்தில் பார்த்ததும் அதுவே, எங்கெல்லாம் விரைந்து அழிகின்றன என்பதனை பொருத்தே அந்த வரைபடம் நமக்கு உணர்த்துகிறது...
இதோ, மற்ற ஒருவர் எழுதியதும் கொஞ்சம் :
Resilient Ecosystems Save Lives, Sustain Livelihoods
The dramatic environmental impacts of the tsunami and the role resilient ecosystems played in saving lives has raised the profile of environmental issues. There is now a unique opportunity to bring strategic environmental thinking into the recovery work for future disaster prevention. Furthermore, there is a responsibility among researchers to present a concerted knowledge front where the landscape’s ecological functions and ecosystem services constitute the foundation for building resilience to future surprises.
The destructive forces of the waves near the earthquake’s epicenter in Northern Sumatra and Aceh were so great that little could have physically protected coastal communities there. However, evidence from other affected areas (further from the epicenter) indicates that the depletion of natural resources, such as the clearance of mangroves and other coastal vegetation, as well as the destruction of reefs and dunes may have contributed to the harmful effects of the tsunami. There are other ecological and physical factors that influence vulnerability. Many coastal communities are extremely vulnerable to natural hazards, particularly those living in low-lying areas such as deltas and estuaries. These areas are highly exposed to climate-related hazards such as storm surges and cyclones. Human vulnerability to natural hazards is rising as the number of people living in high-risk areas increases due to urbanization and migration, as well as due to land use changes, deforestation and development.
Tourism development has entailed increased vulnerability, especially in high risk coastal areas. Tourism may attract new migrants and create new economic opportunities for local communities, yet too often it can also create new risks and environmental impacts, resulting in highly inequitable patterns of development. Tourism development has in many cases led to the destruction of valuable ecosystems important to local livelihoods, food security and coastal protection. In many cases, the sole reliance of local communities on the tourism industry for their livelihoods has made them vulnerable to shifts in consumer preferences, increases in oil prices, security concerns, and natural hazards. The tsunami has highlighted how diversified livelihoods and complex ecosystems are more resilient to shocks.
//Tourism development has in many cases led to the destruction of valuable ecosystems important to local livelihoods, food security and coastal protection//
வருத்தமா இருக்கு...
அருமையான கேள்வியும் பதிலும்..
மங்கை,
மீண்டும், மீண்டும் வந்து சிறப்பித்தமைக்கு ஒரு சிறப்பு நன்றி. நேற்றுதான் அமெரிக்கா முன்னால் துணையதிபர் Al Gore வழங்கிய An Inconvenient Truthயை DVDயில் படமாக பார்த்து மலைத்தேன்.
நிறைய கசப்பான உண்மைகளால் அந்த டி.வி.டி நிரப்பப் பட்டுள்ளது. எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு கட்டாய Documentary அது. முடிந்தால், இந்தியாவில் வெளி ஆகிவிட்டாதா தெரியாது, வந்திருந்தால் பாருங்கள் அனைவரும், மக்களே!!
நன்றி
http://valpaiyan.blogspot.com/2010/06/blog-post_22.html
Post a Comment