வண்ணத்துப் பூச்சிகள் அவைகளின் வளர்சிதை மாற்றத்தினைக் (Metamorphosis) கொண்டும் இவைகள் பெண்களின் வளர்நிலையுடன் தொடர்பு படுத்தப் படுவதால் பெண்களுக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் தொடர்பு படுத்தி இருப்பாங்களோ? மேலும் வண்ண வண்ணமா அத்தனை வகையான இனங்களாக அறியப்படுவதாலும் இவைகள் நம் உலகில் பெண்களுடன் தொடர்பு படுத்தப்பட்டு பெண்களும்-வண்ணத்துப் பூச்சிகளும் இரண்டர கலந்து விட்டதோ!
இப்போ இதப்பத்தி என்னாத்துக்கு இங்கே பேசுறேன்னு கேக்கப் போறீங்களா? இருங்க, நான் இன்னும் இயற்கை நேசி தளத்தை மறந்துடல. இங்கே நிறைய எழுதப்பட வேண்டியிருக்கு. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு பதிவில இப்படி ஒரு பின்னூட்டம் பார்த்தேன் ...
...//ஊர்ந்திடும் புழுவிலிருந்து நேர்முறையில் மாறிப் பறந்திடும் பட்டாம்பூச்சி அடுத்த பிறவியாக உருவாகிறது. ஆனால் பட்டாம்பூச்சி தன்னினம் பெருக்க முட்டை இடுவதுமில்லை //...
படிச்சவுடன் ஏற்கெனவே இந்த பூச்சிகளின் உலகம் ஒரு புரியா அதிசிய உலகம் அதிலும் குறிப்பாக இந்த வளர்சிதை மாற்றத்துனூடாக வரும் வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை முறை ரொம்ப ஆச்சர்யமூட்டக் கூடியது.
இதனில் பின்னூட்டமிட்டவர் போலவே உயிரியல் ஆழமாக படித்திருக்க வாய்ப்புகிட்டாத எவருக்கும் கொஞ்சம் கஷ்டம்தான் இவைகளின் வாழ்க்கை முறை அறிந்து கொள்வதின் பொருட்டு. சரி, படிச்சவுடன் இதனைப் பற்றி ஒரு பதிவு போட்டு விடலாமே என்று தோணியதால் இந்தப் பதிவு.
இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 1163 வகையான வண்ணத்துப் பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனில் நமது மேற்கு மலைத்தொடரில் மட்டுமே கிட்டத்தட்ட 334 வகையானவை காணப்பெறலாம்.
நான் பார்த்து அதிசயித்ததிலேயே பறவை இறகு (Bird wing) என்றொரு வகையான வண்ணத்துப் பூச்சிதான் மிக்க பெரிதாக அரையடி நீளத்திற்கு (இறகின் ஒரு முனையிலிருந்து மற்றொரு இறகின் முனை) பெரிதாக நீல கண்ணைப் போன்ற புள்ளியுடன் கறுப்பு நிறத்தைக் கொண்ட பூச்சி. அழகோ! அழகு!!
பூச்சி வகைகளே உலகத்தில் அதிகப்படியான இன வகைகளாக அமையப் பெற்றதால் புதிது புதிதாக முன்னமே அறியப்படாத புது வகையான இனங்கள் நாளொருமேனியும் பொழுதொரு பூச்சியும் இருப்பதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட எல்லா விதமான பூச்சி இனங்களும் முட்டையிட்டு அதன் பிறகு பல்வேறு வளர்ச்சி நிலைகளில் (developmental stages) படிப்படியாக முதிர்ச்சி அடைகிறது. இந்த வளர்ச்சி நிலைகளை வளர்சிதை மாற்றம் என அறியலாம். நாம் அறிந்த பூச்சி இனங்கள்லே இரண்டு விதமான வளர்சிதை மாற்ற முறை நடைபெறுகிறதாம்.
வெட்டுக்கிளி, புள்ளப்பூச்சி, கரப்பான் பூச்சி மற்றும் தட்டாம் பூச்சி இவைகள்லே என்ன நடக்குதாம் முழுமையற்ற வளர்சிதை மாற்றம்; எப்படின்னா, முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் இறக்கை மட்டுமில்லாம அதோட அம்மாப்பாவை ஒத்தே இருக்குதாம். இந்த பருவத்துக்கு பேரு நிம்ஃப்(Nymph) ஆம்.
இரண்டாவது வகையான வளர்சிதை மாற்றத்தைத்தான் முழுமையான வளர்சிதை மாற்றமா பார்க்கிறோம். இது பெரும்பாலும் எது மாதிரியான பூச்சிகள் உலகத்திலன்னா, வண்ணத்துப் பூச்சி, அந்துப் பூச்சி, வண்டுகள், ஈக்கள் மற்றும் குழவிகளில். இங்கே டிபிக்கலா நம்ம பெண்களுக்குத் தேவைப்படும் முறையான வளர்ச்சி மாதிரியே இதன் வளர்நிலையில எந்தவொரு தொந்தரவும்(interruption) நடைபெறாமே மலர்ந்து வரணும் போல.
நான்கு நிலைகளை (முட்டை, லார்வா, ப்யூப்பா மற்றும் அடல்ட்) இவைகள் தாண்டி வர வேண்டியதா இருக்கு, அதற்கு பல புறக்காரணிகளும் சாதகமா இருக்கிற பட்சத்தில தடையின்றி அடுத்த தலைமுறைக்கான குடும்ப பொறுப்பை ஏத்துக்க ரெடியாகிடுதுகளாம்.
இப்போ ஒவ்வொரு படியா(stage) தாண்டி நாமும் போவோம், ரொம்ப உள்ளர போயிடாம. அசராம வாங்க! படிக்க ஆர்வமா இருக்குங்கிறதுக்காக இப்போ நாம வண்ணத்துப் பூச்சிய மட்டும் சுட்டிப் பேசுவோம்.
எங்கெல்லாம் நான் பூச்சின்னு சொல்றேனோ அங்கே நீங்க வண்ணத்துப் பூச்சியா எடுத்துக்கோங்கப்பா.
முட்டை (Egg): நாம எல்லாம் சாதாரணமா பார்த்திருப்போம் ரெண்டு வண்ணத்துப் பூச்சிகள் இணைந்து பறந்துகிட்டு திரியுறதை. அதப் பிடிச்சி பார்த்தோம்னா அதில ஒரு ஆண், ஒரு பெண் இருப்பாய்ங்க. அதுக ரெண்டும் சேர்ந்து முட்டை தயார் செய்ற வேலையில இருக்குதுகன்னு மட்டும் எடுத்துக்குவோம், சரியா!
அதுக்குப் பிறகு பெண் பூச்சி என்ன பண்ணுது முட்டைகளை இலைகளின் அடிப்பாகத்திலோ இல்லன்னா இலைகளின் அடிக் காம்புகளில் நூற்றுக்கணக்கா இட்டு வைச்சிருதுகளாம். இந்த முட்டைகள் சில நேரத்தில ரொம்பச் சின்னதாவும் வெறுங் கண்ணாலே பார்க்க முடியாத அளவிற்கு கூட இருக்கும் போல. அது ஏன் காம்பிலேன்னு கேட்டீங்கன்னா, இலையே பட்டு கீழே விழுந்துட்டாவோ, இல்ல மற்ற ஜீவராசிகள் அந்த இலையை திண்ணுப்புட்டாக் கூட அதன் காம்பு மரத்துடன் இணைந்து இருக்குமிடத்தில் இருந்து போனா மிச்சம் மீதி முட்டைகள் பொரித்து அடுத்த படிக்கு முன்னேறுமில்லே, அதான்.
சரி, இந்த முட்டையிடுற காலம் தாவரங்களில் உணவு கிடைக்கும் பருவ காலத்தை முன்னிட்டு இருக்குமாம். அப்பத்தானே அந்த கம்பளிப் புழு(cattepillar) நிலையில சாப்பிட நிறைய கிடைக்கும் அதுனாலே. இப்போ, இதிலருந்து அடுத்த படி என்னான்னா...
கம்பளிப் புழு நிலை (Catterpillar Stage): நாம இந்தப் பருவத்தை பார்த்திருக்கலாம் வண்ணத்துப் பூச்சி மற்றும் அந்துப் பூச்சி இனங்கள்லே. அதான் புழு மாதிரி வண்ண வண்ண நிறங்களில் அதன் உடம்பு முழுக்க முடி மாதிரியான சுனைகளுடன் ஊர்ந்து இலைகளை மென்னு மேய்ஞ்சிக்கிட்டே இருக்கிறதை.
இதன் முழு வேலையே சாப்பிடுறதுதான் பொழுதன்னிக்கும். ஏன்னா, இப்போ சாப்பிட்டு வைச்சிக்கிறதுதான் பின்னாளில் ரொம்ப உதவப் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு. நான்கைந்து முறை இந்தப் பருவத்திலயே இதன் தோலுறித்தல் நடைபெற்றும் விடுவதால் நிறைய சக்தி தேவைப்படுது. இதன் பிறப்பு பருவத்திற்கும் இந்தப் படி நிலையின் வளர்ச்சி நிலைக்கும் வைச்சிப் பார்த்தா கிட்டத்தட்ட நூறு மடங்கு வித்தியாசத்தில உடம்பு போட்டுருக்குமாம். இப்படியே ஊர்ந்து, நகந்து அடுத்ததிற்கு போயி...
ப்யூப்பா நிலை(Pupa Stage): இந்த நிலையில சுத்தமா சாப்பிடுறதை நிப்பாட்டிட்டு மெதுவா நகர்ந்து இலையோட இலையாவோ, இல்ல மண்ணுக்குள்ளரயோ ஒரு மெழுகுக் கூட்டை கட்டிக்கிட்டு சுருண்டுக்கிறாய்ங்களாம் உள்ளரயே. இந்த சமயத்திலதான் முக்கியமான சிதைவுகள், மறு கட்டமைவுகள்னு உள்ளர பட்டைய கிளப்பிட்டு இருக்குதுகளாம். எங்கங்கோ மறைந்திருந்த செல்களிலுள்ள செய்திக் கோர்வைகளை கொண்டு எங்கே எந்த உடற் பாகங்கள் இருக்கணுமோ அவைகளை அங்கங்கே வைச்சு வளர்ரதெல்லாம் இந்த நிலையிலதான். இந்த வளர்ச்சி இரண்டு மாசத்திலும் நடை பெறலாம், இரண்டு வருஷமும் எடுத்துக்குமாம் அது கொடுக்கப்பட்ட இன பூச்சி வகையைக் கொண்டு அப்படி நடக்குதாம்.
என்னடா இது முட்டை வடிவத்தில கூட்டைக் கட்டிக்கிட்டு வெளியில வர ரொம்ப கஷ்டப்படும் போலவேன்னு நாம உடைச்சு கொஞ்சம் ஈசி பண்ணிடுவோம்னு நினைச்சு ஏதாவது பண்ணி வைச்சோம். அம்பூட்டுத்தான் அதோட மிச்ச மீதி வாழ்க்கை அப்படியும் இப்படியும்தான் (இப்போ ஒப்பீடு பண்ணிக்கோங்க பெண்/ஆண் குழந்தைக வளர்ச்சி நிலையில எங்காவது ஒரு சறுக்கல் நடந்தா என்னாகுதோ அதே தான் இங்கும்...).
ஒரு கொசுறுச் செய்தி, இந்த மெழுகுக்கூட்டை கட்டிக்கிது பார்த்தீங்களா அதத் தான் நாம இதே இனங்களிலே ஒண்ணா வார பட்டுப் புழுக்களை அந்த நிலையில் இருக்கும் பொழுது அவைகளை சிதைச்சிட்டு அந்த மெழுகுக் கூட்டை நாம லபக்கி "இந்தப் பட்டுப் புடைவை என்ன வெல தெரியுமா... 35 ஆயிரம ரூவான்னு" பீலா விட்டுக்கிட்டு இருக்கோம்ங்க. அதுவும் காந்தி பொறந்த, ஆன்மீகத்தில நெம்பர் ஒன் இந்தியாவில இந்த அநியாய்ம்ங்க.
அடல்ட் அல்லது இனப்பெருக்க நிலை: இங்கன வைச்சித்தான் நம்மில் பல பேருக்கு வண்ணத்துப் பூச்சின்னா என்னான்னே தெரியும். அதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் பார்த்தீங்கன்னா நான் முன்னே கொடுத்திருந்த பின்னூட்டத்தில நினைச்சிட்டு இருந்தவங்க நிலைதான். எல்லாம் கடவுள் அந்தரத்தில இருந்து தொபுக்கடீர்னு வண்ண வண்ணமா பறக்க விட்டுடுறார்ங்கிற அளவில.
இந்த நேரத்தில வைச்சிப் பார்த்தா எத்தனை விதமான இயற்கை நடத்தும் விந்தைகள்னு நினைச்சு ஆச்சர்யப்படுவோமில்லையா. ஏன்னா, புழுவா இருக்கும் பொழுது சில நேரத்தில குட்டைக் கால்களும், பல கண்கள் மாதிரியுமா இருந்திருக்கும். அடல்டா பார்க்கும் பொழுது நீண்ட கால்கள், கூட்டுப் பார்வை கிட்டக் கூடிய கண்கள், அழகான நிறத்தில் உள்ள இறக்கைகள் அப்படின்னு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விசயங்கள் கூட்டுக்குள்ளர நிகழ்ந்துருச்சே. நம்ம மனுசப் பசங்களும் இப்படித்தானே!
இதில பார்த்தீங்கன்னா இவ்வளவு ரசிச்சுப் பார்க்கிறோம்ல இவைகளை, ஆனா, இதுகளில் ஒரு சிலது தான் சாப்பிடுதாம். அதுவும் பூக்களில் உள்ள நெக்டார்களை உணவாக. பெரும்பான்மையானது சாப்பிடுறதே இல்லையாம். வந்ததே தன்னோட பார்ட்னரை கண்டுபிடிச்சு இனப்பெருக்கம் பண்ணத்தாங்கிற அளவில பறந்து திரிஞ்சு ஆளையும் கண்டுபிடிச்சு வேலையை ஆரம்பிச்சிடுதுகளாம். கடமையே கண்ணாயிரமா!
இந்த நிலையில இந்த நெக்டார்களை (தேன்) எடுக்குதில்லையா அப்போ அப் பூக்களிலுள்ள மகரந்தத் தூளை போட்டு பொரட்டிக்கிட்டு அடுத்த பூவிற்கு விஜயம் பண்ணும் பொழுது அங்கே கொண்டு போயி அதுகளை விட்டுடுதா அதுனாலே மரங்கள் இனப்பெருக்கம் பண்ண உதவிப் போடுதுகள். எப்படி இயற்கையின் பரிணாம செட் அப்பு. ஒன்றை நம்பி மற்றொன்று.
இந்த நிலையில ஒரு சில பூச்சிகள் கால சுழற்சியை(குளிர் காலத்து) ஈடுகட்ட பல மாதங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தில்(Hibernation) போயிடுரதுமுண்டாம். ஆனா, பல வகை பூச்சிகளில் இதனோட வாழ்க்கை கால அளவோ இரண்டிலிருந்து மூன்று வாரத்திற்குள்ளே முடிஞ்சிடுதாம். என்னே ஒரு வாழ்க்கை சுழற்சி வண்ண வண்ணமா!
Sunday, April 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
பல தகவல்களை உள்ளடக்கி நகைச்சுவையுடன் வண்ணத்து பூச்சியை வலைப்பூவில் பறக்க விட்டிருக்கிறீர்கள்.
பலவற்றை அறிந்து கொண்டேன்
//வண்ணத்துப் பூச்சிகள் அவைகளின் வளர்சிதை மாற்றத்தினைக் (Metamorphosis) கொண்டும் இவைகள் பெண்களின் வளர்நிலையுடன் தொடர்பு படுத்தப் படுவதால் பெண்களுக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் தொடர்பு படுத்தி இருப்பாங்களோ?//
அப்டியா நினைக்கிறீங்க .. இருக்காதுன்னு நினைக்கிறேன். வண்ணங்கள், அழகு, மென்மை இப்படி சில ஒற்றுமைகளை வைத்து வேண்டுமானால் தொடர்பு படுத்தியிருக்கலாம்னு நினைக்கிறேன்.
முருங்கை மரத்தடியில் கம்பளிப்பூச்சிககளைப் பார்த்திருக்கிறேன். அது மேலே பட்டால் எரிச்சல்
தாங்க முடியாது. அதிலிருந்து பட்டாம்பூச்சிகள் உருவாகாது. அது எந்த வகையைச் சேரும். தவறாக கம்பளிப் பூச்சிகள் என்று சொல்கிறேனா? கோடை காலத்தில் மானர்க் வண்ணத்துப் பூச்சிகள்
வட அமெரிக்காவிலிருந்து 2000 மைல் பறந்து மெக்சிகோ செல்லும். இதை இவர்களுக்கு யார் சொல்லிக்
கொடுத்தது?வீட்டுத் தோட்டத்தில் பூச்சிக்கொல்லிகள் உபயோகப் படுத்தாமல் இருந்திருந்தால்
மானர்க் வண்ணத்துப் பூச்சிகள் வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போகும். இவர்களை வரவேற்பதற்கு சில செடிகளை வைக்கச் சொல்வார்கள். அதில் ஒன்று மில்க் வீட் செடி. தொடர்ந்து இயற்கை பதிவுகள் எழுதுங்கள்! நேஷனல் ஜியோகிராபிக் வலைத்தளத்தில் வண்ணத்துப் பூச்சிகள் பற்றி ஒரு வலைக்காட்சி இருக்கிறது!
http://video.nationalgeographic.com/video
/player/kids/
//அப்டியா நினைக்கிறீங்க .. இருக்காதுன்னு நினைக்கிறேன். வண்ணங்கள், அழகு, மென்மை இப்படி சில ஒற்றுமைகளை வைத்து வேண்டுமானால் தொடர்பு படுத்தியிருக்கலாம்னு நினைக்கிறேன்.//
அப்படியேத்தான் நானும் நினைக்கிறேன். இருந்தாலும், ஆண்களை காட்டியும் அந்த ப்யூபர்டி ஸ்டேஷ் - பெண்களுக்கு கொஞ்சம் ப்யூபா ஸ்டேஷ்ல இருக்கிற வண்ணத்துப் பூச்சிகளுக்கு இருக்கிற pronounced stage மாதிரியில்ல ... இங்கே டிபிக்கலா நம்ம பெண்களுக்குத் தேவைப்படும் முறையான வளர்ச்சி மாதிரியே இதன் வளர்நிலையில எந்தவொரு தொந்தரவும்(interruption) நடைபெறாமே மலர்ந்து வரணும் போல...
அப்படியோன்னு கொஞ்சம் உல்டா அடிச்சு நானே சொந்தமா சொல்லிக்கிறேன் ;-). இதுக்கு அறிவியல் பூர்வமா ஆதாரமெல்லாம் இல்லை. :-))
கோவியாரே,
அனுபவிச்சீங்களா? அதான் வேண்டும். பரவலாக சென்றடைந்தால் நல்லா இருக்கும்.
நன்றி!
வண்ணத்துப்பூ மனுஷனால உருவாக்க முடியாத ஒன்னுன்னு இயற்கை நம்மளை பார்த்த கேக்குற மாதிரி இருக்கும் ஒவ்வொரு முறையும் இவைகளை பார்க்கும் போது..
//பெரும்பான்மையானது சாப்பிடுறதே இல்லையாம்//
வாவ்..இது எல்லாம் தெரியாத ஒன்னு
இன்னைக்கு தான் துறைசார்ந்த பதிவுகள் பத்தி போட்டேன்... வீட்ல குழந்தைகளுக்கு சொல்ல அறுமையான பதிவு தெகா
இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 1163 வகையான வண்ணத்துப் பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளது.//
நிஜமாவா??? :)) ஆச்சரியமாக இருக்கு...
மங்கைஜி சொன்னதை வழிமொழிகிறேன்.. குழந்தைகளுக்கு சூப்பர் பதிவு... :)))
முல்ஸ் கவனிக்க.. அம்மாக்கள் வலைப்பூக்களில் சேர்க்க முடியுமா பாருங்கள் :))
தெகாஜி நல்ல பதிவு ! கலக்குங்க..!! :))
மாதினி குட்டிப்பிள்ளையா இருந்தப்ப ஒரு புக் வாங்கினோம் அட்டையில் சின்ன சதுரமா இருக்கும்.. அதுல கேட்டர்பில்லர் அது ப்ரண்ட்ஸ் எல்லாரும் இருப்பாங்க,, அது பட்டர்ப்ளையா மாறுரதை 4 பக்கத்துல சின்னதா காமிச்சிருப்பாங்க அதுல..
நல்ல பதிவு .. பலவிசயங்கள் தெரிஞ்சுகிட்டோம்..
பெண்களை கருவிலேயே அழிப்பது போல வண்ணத்துப்பூச்சியும் பட்டுபுடவைக்காக புழுவா இருக்கும்போதே கொல்லப்படுது.. :(
அனானி, நல்ல நல்ல கேள்வியா கேட்டுட்டு உங்க பேரைக் கூட போடலையே :-(...
//முருங்கை மரத்தடியில் கம்பளிப்பூச்சிககளைப் பார்த்திருக்கிறேன். அது மேலே பட்டால் எரிச்சல்
தாங்க முடியாது. அதிலிருந்து பட்டாம்பூச்சிகள் உருவாகாது. அது எந்த வகையைச் சேரும். //
எல்லாம் வண்ணத்துப் பூச்சி இனங்களிலும்தானே இந்தக் கம்பளிப் புழு பருவம் வருது, அதான் இப்படிச் சொல்லியிருக்கேன் பாருங்க...
...இரண்டாவது வகையான வளர்சிதை மாற்றத்தைத்தான் முழுமையான வளர்சிதை மாற்றமா பார்க்கிறோம். இது பெரும்பாலும் எது மாதிரியான பூச்சிகள் உலகத்திலன்னா, வண்ணத்துப் பூச்சி, அந்துப் பூச்சி அல்லது மாவுப் பூச்சி(moth), வண்டுகள், ஈக்கள் மற்றும் குழவிகளில்...
இந்த எரிச்சல் தார விஷயம், அந்த கம்பளிப் பூச்சி பருவத்தில் தனக்கு வரும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உள்ள தகவமைவாக அந்த "எரிச்சல்" சுனை முடிகளை தரித்திருக்கின்றனவோ :-). பறவைகள் போன்ற மற்ற ஆபத்திலிருந்து தப்பித்தால்தானே அடுத்தக் கட்டத்திற்கே நகர்வு.
//கோடை காலத்தில் மானர்க் வண்ணத்துப் பூச்சிகள் வட அமெரிக்காவிலிருந்து 2000 மைல் பறந்து மெக்சிகோ செல்லும். இதை இவர்களுக்கு யார் சொல்லிக்
கொடுத்தது.//
எல்லாம் இயற்கையும், பரிணாமும்தான்! இது பறவைகளில் நடக்கும் வலசை போதலைப்(migration) போன்றதே தான், சிலவை உணவு குறித்த குளிர்கால பயணமாகவும், சிலவை இனப் பெருக்கத்திற்கெனவும் அமையலாம். இது innate behaviorல் ஒன்றாக கருதப் படுகிறது.
//வீட்டுத் தோட்டத்தில் பூச்சிக்கொல்லிகள் உபயோகப் படுத்தாமல் இருந்திருந்தால்
மானர்க் வண்ணத்துப் பூச்சிகள் வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போகும்.//
ஆமா, நீங்க எங்கே வசிக்கிறீங்க? மானர்க் வகை வண்ணத்துப் பூச்சிகள் தோட்டத்திற்கு வந்து எட்டிப் பார்க்குமின்னு சொல்லியிருக்கீங்களேன்னு கேக்குறேன். உரங்களே பாகுபாடுன்றி எல்லா பூச்சி இனங்களுக்கும் ஒரே விதமான முடிவைத்தானே தருகிறது.
நன்றி அனானி! சுட்டிக்கும் சேர்த்தே.
//தெகா... சின்ன வயசுல பயாலஜி க்ளாஸ்ல படிச்சது....ரிவிஷன் பண்ண வச்சுட்டீங்க்க.. அருமையா எழுதிரிக்கீங்க... அதென்ன பெண்கள் பற்றி... அதுசரியா காதுல விழலப்பா..//
வாங்க டாக்டர்,
ஆமா, சின்ன வயசில படிச்சது மறந்து போச்சுன்னுதான் எல்லாருக்கும் ரிவிஷன் பண்ணி ஞாபகப் படுத்தி வைச்சுக்கலாமேன்னு ;-).
அதில பாருங்க, இந்தப் பெண்களை வண்ணத்துப் பூச்சியோட தொடர்பு படுத்திக்கிட்டே வந்தது "இயல்பான" வளர்நிலை ரொம்ப அவசியமா(பெண்களுக்கு) இருக்குமோன்னு நானா கருதிங்க. ஹ்ம்... ஏதோ மிஸ் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன்.
அமெரிக்காவின் மத்திய மேற்குப்பகுதியில் மிச்சிகன் ஏரிக்கரையருகே.
முருங்கை மரத்தடி கம்பளிப்பூச்சிகள் பட்டாம்பூச்சி ஆவதைப் பார்த்ததில்லை.
ஆனால் செம்பருத்திச் செடியில் pupaவிலிருந்து வரும் பட்டாம்பூச்சிகளைப் பார்த்திருக்கிறேன். அந்த pupaக்கள் முலாம் பூசப்பட்ட தகட்டைப் போல மின்னும்!
http://www.learner.org/jnorth/
monarch/
//வண்ணத்துப்பூ மனுஷனால உருவாக்க முடியாத ஒன்னுன்னு இயற்கை நம்மளை பார்த்த கேக்குற மாதிரி இருக்கும் ஒவ்வொரு முறையும் இவைகளை பார்க்கும் போது..//
இயற்கையின் படைப்புகளின் ரகசியத்தை அறிஞ்சு அது மாதிரி நம்மால மிமிக் வேணா செய்ய முடியும், மங்கை. அதுவும் ஒரு சில விசயங்களில் மட்டும். மற்றைவகள் அனைத்தும் விந்தையோ விந்தைதானே!
//இன்னைக்கு தான் துறைசார்ந்த பதிவுகள் பத்தி போட்டேன்... வீட்ல குழந்தைகளுக்கு சொல்ல அறுமையான பதிவு தெகா//
பார்தோம்ல. நல்ல ஊக்குவிக்கும் முறையில இருந்துச்சு. அதுக்கு உங்களுக்கு ஒரு நன்றி!
இருந்தாலும் இதெல்லாம் ஆர்வமுள்ளவங்க மட்டுமே விரும்பி வந்து படிச்சாத்தான் உண்டு. வேற எப்படி துறை சார்ந்தவைகளை விக்க முடியும் சந்தக்கடையில. தன்னார்வத்தில எழுதிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்.
//நிஜமாவா??? :)) ஆச்சரியமாக இருக்கு...//
அந்த எண்ணிக்கை ஜஸ்ட் வண்ணத்துப் பூச்சிகளுக்கு மட்டும்தேன். பூச்சிகள்னு எடுத்துட்டா அது போதும் மண்டை சுத்துற அளவுக்கு.
//மங்கைஜி சொன்னதை வழிமொழிகிறேன்.. குழந்தைகளுக்கு சூப்பர் பதிவு... :)))
முல்ஸ் கவனிக்க.. அம்மாக்கள் வலைப்பூக்களில் சேர்க்க முடியுமா பாருங்கள் //
எங்கிட்டோ படிச்சு இப்படி தண்டாம ஒரு ஆள் எழுதிட்டு இருக்காருன்னு பரப்பி இன்னும் நிறைய பேர்கிட்ட கொண்டு போய் சேர்த்தா சரித்தான்.
ரொம்ப நாளா கலக்கிட்டுத்தான் இருக்கோம், கவிதா :-)
written by sakkarai
நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
http://sureshstories.blogspot.com
மாதினி குட்டிப்பிள்ளையா இருந்தப்ப ஒரு புக் வாங்கினோம் அட்டையில் சின்ன சதுரமா இருக்கும்.. அதுல கேட்டர்பில்லர் அது ப்ரண்ட்ஸ் எல்லாரும் இருப்பாங்க,, அது பட்டர்ப்ளையா மாறுரதை 4 பக்கத்துல சின்னதா காமிச்சிருப்பாங்க அதுல..//
அப்படியா? ரொம்ப நல்ல விசயமா இருக்கே. இவ்வளவு பரவலாக தெரிஞ்சிருக்கே! பின்னே எப்படி ஓரளவிற்கு படிச்சவங்ககிட்டே போய் சேராமே இருக்க முடியும்... ம்ம்
//பெண்களை கருவிலேயே அழிப்பது போல வண்ணத்துப்பூச்சியும் பட்டுபுடவைக்காக புழுவா இருக்கும்போதே கொல்லப்படுது.. :(//
முத்து, உங்க சேட் மூஞ்சி சந்தோஷத்தை கொடுக்குது இந்த விசயத்தில... :))
//அமெரிக்காவின் மத்திய மேற்குப்பகுதியில் மிச்சிகன் ஏரிக்கரையருகே.//
அனானி, அப்படியாக இருக்க வேண்டுமென நினைத்துத்தான் நானும் கேட்டு வைத்தேன்... :)
//முருங்கை மரத்தடி கம்பளிப்பூச்சிகள் பட்டாம்பூச்சி ஆவதைப் பார்த்ததில்லை.//
பூவரசம் மரம், மா போன்ற மரங்களிலும் காணலாம்தான். இவைகள் ஓரளவிற்கு ஊர்ந்து இன்னும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர முடிந்தால் அவைகளுக்கு பாதுகாப்புதானே. அவைகள் பட்டாம் பூச்சியாகவில்லை என்றாலும், விட்டில் பூச்சிகளாக ஆகியிருக்கக் கூடும் அவைகளுக்கும் இந்த கம்பளிப் பூச்சிப் பருவம் அல்லது கூட்டுப் புழுப் பருவம் உண்டுதானே.
அனானி, உங்களின் பின்னூட்டங்கள் மேலும் விட்டுப் போன தகவல்களை சேர்ப்பதற்கு பயனாக அமைந்தது. அதற்கும் ஒரு சிறப்பு நன்றி.
சக்கரை,
இது போன்ற பதிவுகளும் படிக்கப் பெறுகின்றன என்பதில் மிக்க மகிழ்ச்சி!
உங்க தளத்திற்கும் வந்தேன், படித்து ரசித்தேன். :-).
Wow what a wonderful blog i have discovered... ur blog post is amazing nerya kashtapattu thagavalgalai segarithu koduthu irukinga very good keep posting ...
unga template is also nice...
i ll become ur follower now
வாங்க சுரேஷ்,
கண்டுபிடிச்சிடீங்களா? சந்தோஷம். :-). பழய பதிவுகள் நிறைய இருக்கும் இங்கே படிக்கிறதுக்கு. எஞ்சாய்!
எங்கள் நீண்ட நாள் கோரிக்கைக்கு செவி சாய்த்த தெகா அண்ணனுக்கு ஒரு வண்ணத்துப்பூச்சியை பரிசாகக் குடுக்குறேன்.
சூப்பரா சொன்னீங்க!
இவ்வளவு சுழற்சியையும் வாழ்ந்துட்டு ஏதோ ஒரு செய்தியை நமக்கு விட்டுச்செல்வது போல்தான் உள்ளது, வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை!
ரொம்ப நாளா எனக்கு அதன் பெயர் பாப்பாத்தின்னுதான் தெரியும்..! :)
அதில் சில வகைகள் சாப்பிடாதுங்கிறது பெரிய ஆச்சர்யம்!
ஊருக்கு இதுமாதிரி நல்லவிசயங்கள் சொல்ல அடிக்கடி எழுதுங்கப்பு!
இப்படி இழுத்துட்டு வந்து கதை சொல்ல வைக்கிறீங்க... சரி சொல்லுறேன். 4-7 வகுப்பு படிக்கும் வரை, நானும் என்னோட தம்பியும் சேர்ந்து செய்த கலாட்டா ஏராளம். அதில் ஒன்று வண்ணத்துப் பூச்சி வளர்ப்பது. இதில் என்ன கலாட்டான்னு கேக்குறீங்களா? அதை எழுதினா, தனி பதிவா ஆயிரும். அதனால பட்டாம்பூச்சி கதை மட்டும் இங்கே. பள்ளியின் கோடியில் மாட்டு கொட்டகை இருக்கும். அதன் பின் காட்டு செடி நெறையா. அங்கே தேடி அலைந்து catterpillar பிடித்து வந்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் அடைத்து, அதற்கு உணவாக 4 இலைகளையும் வைத்து, பாட்டிலின் மூடியில் காற்று புக சிறு துவாரமும் போட்டு வைத்து, தினம் தினம் அதன் வளர்ச்சியை இரசிப்போம். மிகவும் அருமையான நாட்கள்; பட்டாம் பூச்சியாய் பறந்து செல்வதை காண்பதில் தான் என்ன இன்பம்! ம்ம்ம்ம்ம்...
இந்த பதிவின் கண் திருஷ்டியோ இந்த தலைப்பும், கீழ் உள்ள வரிகளும் //வண்ணத்துப் பூச்சிகள் அவைகளின் வளர்சிதை மாற்றத்தினைக் (Metamorphosis) கொண்டும் இவைகள் பெண்களின் வளர்நிலையுடன் தொடர்பு படுத்தப் படுவதால் பெண்களுக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் தொடர்பு படுத்தி இருப்பாங்களோ?//
என்ன கிண்டலா?
பின் வந்த கருத்துக்களும், கதைகளும் (about butterfly), இச்சிறு நெருடலை மறைத்து விட்டன. அருமை!
எங்கள் நீண்ட நாள் கோரிக்கைக்கு செவி சாய்த்த தெகா அண்ணனுக்கு ஒரு வண்ணத்துப்பூச்சியை பரிசாகக் குடுக்குறேன்.//
சுரேகா! எனக்கும் எழுதணுமின்னு ஆசைதான். சரி இனிமே தொடர்ந்து கொடுக்கப் பார்ப்போம்.
கொடுத்த வண்ணத்துப் பூச்சியை அதே இடத்திலயே விட்டுடுவோம், டீல் ;-)
//ரொம்ப நாளா எனக்கு அதன் பெயர் பாப்பாத்தின்னுதான் தெரியும்..! :)//
எனக்கும்தான் நம்மூர்ல மட்டும்தான் அப்படி பயன்படுத்துவோமோ? தெரியலயே.
//இப்படி இழுத்துட்டு வந்து கதை சொல்ல வைக்கிறீங்க...//
வாங்க வாங்க ஹவாய்க்காரங்களே வாங்க!
பின்னே ஓவ்வொருத்தருக்குள்ளும் எது மாதிரியான விஞ்ஞானி இருந்திருக்கிறான்னு பார்க்கிறதா இல்லையா?
//பட்டாம் பூச்சியாய் பறந்து செல்வதை காண்பதில் தான் என்ன இன்பம்! ம்ம்ம்ம்ம்...//
அப்போ எவ்வளவு நாட்கள் அது கூட்டுக்குள்ளர இருந்துச்சுன்னு பார்க்க ஒரு வாய்ப்புகிட்டியிருக்குமே.
நிறைய பேருக்கு அந்த கம்பளிப்பூச்சிதான் பின்னாலே வண்ணத்துப் பூச்சியாவோ, இல்ல விட்டில் பூச்சியாவோ ஆகுதுன்னோ தெரியாத இருக்கும் பொழுது, உங்களுக்கு அந்த வயசிலயே தெரிஞ்சுப் போச்சே!
நாங்க பொன்வண்டு பிடிச்சு இந்த bottle வேலையத்தான் செய்வோம். :-)
ஓ...
அதுனாலதான் பெண்கள வண்னத்துப் பூச்சி என்று சொல்கிறார்களா....
தெ.கா! இந்த பதிவைதான் சொன்னீர்களா? சுய புராணம்- நான் பட்டு கட்டுவதில்லை. ஆத்துக்காரர்
எனக்கு பட்டு புடைவையே வாங்கி தந்ததில்லை, எங்க பொண்ணுக்கும் வாங்கியதில்லை. இது என் கொள்கைதான், பணம் மிச்சம்ன்னு அவருக்கும் மிக சந்தோஷம். உறவுகளுக்கும் பட்டு
வாங்கி தருவதில்லை.
//புதிது புதிதாக முன்னமே \\அறியப்படாத புது வகையான இனங்கள் நாளொருமேனியும் பொழுதொரு பூச்சியும் இருப்பதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது\\
அப்படியா? தகவலை விட எழுத்துநடை புதுமையாக இருக்குதே.. எப்பிடி இப்படில்லாம்?
\\நாம இதே இனங்களிலே ஒண்ணா வார பட்டுப் புழுக்களை அந்த நிலையில் இருக்கும் பொழுது அவைகளை சிதைச்சிட்டு அந்த மெழுகுக் கூட்டை நாம லபக்கி "இந்தப் பட்டுப் புடைவை என்ன வெல தெரியுமா... 35 ஆயிரம ரூவான்னு" பீலா விட்டுக்கிட்டு இருக்கோம்ங்க\\
பட்டுப்புடவையின் பின்னாலிருக்கும் பட்டுக் கொலைக்கும் எமது திருமண சடங்கையும் தொடர்புபடுத்தினால் பலியிடல் இல்லாமல் சடங்கே இல்லை என்கிற உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
\\பெண்களுக்குத் தேவைப்படும் முறையான வளர்ச்சி மாதிரியே இதன் வளர்நிலையில எந்தவொரு தொந்தரவும்(interruption) நடைபெறாமே மலர்ந்து வரணும் போல\\
புரியல்ல தயவு செய்து விளக்கவும் :)
Post a Comment