Friday, April 28, 2006

பூச்சியுண்ணும் நெப்பாந்தஸ் தாவரம்...!


மலேசியாவில் உள்ள நெப்பாந்தஸ் (Nepenthes) என்னும் ஒரு வகை செடி பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்கிறது. எப்படியெனில், அதன் அகண்ட ஜாடி போன்ற அமைப்பு தண்ணீருடன் கூடிய திரவத்தை அதன் அடிப்பகுதியில் கொண்டுள்ளது, அதனுள் செல்லும் எவையும் மரணக் குகைக்குள் நுழைந்தாகத்தான் பொருள். அப்படி உள்ளே சொன்றோ அல்லது தவறி விழுந்த பூச்சிகள் அத்திரவத்தினுள் மூழ்கி தன் உடம்பிலுள்ள கனிமங்களை இழந்து பிறகு அத்தாவரத்தினால் கிரகித்துக்கொள்ளப் படுகிறது.

இருப்பினும் அதற்கு யாரவது ஒரு ஆள் நமது இயற்கையில் அல்வா கொடுக்க இருக்க வேண்டுமல்லவா? அக் குடுவைக்குள் ஒரு வகை எறும்பு குடித்தனம் நடத்துகிறதாம், அது அத் தாவரத் தடாகத்தினுள் சென்று நீந்தி அங்கு சிக்கியிருக்கும் பூச்சிகளை இவர் கபளீகரம் செய்து விடுகிறாம்.

இது எப்படி இருக்குகுகுகு....(சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல்ல ஒரு முறை படிச்சுட்டு சிரித்சுடுங்க...ஹ்ஹா...ஹா.ஹா..)

12 comments:

Sam said...

போன கோடை காலத்தில் பூச்சி உண்ணும் தாவரம் ஒன்றை
'வால் மார்டில்' விற்றார்கள்.
கொசுவுக்கு எதிரியாக எதுவும் தாவரம் உண்டா?

அன்புடன்
சாம்

இயற்கை நேசி|Oruni said...

பாரதி, இவ் வகை தாவரம் இந்தியா, மலேசியா மற்றும் ஆஸ்ட்ரேலியா போன்ற இடங்களில் காணப்படுகிறதாம். நம் இந்தியாவில் ஒரே இனம் Nepenthes khasiana என்ற ஒரு வகைதான் காணப்படுவதாக படுகிறது.

//இது போன்ற செடிகள் நம்மூரிலும் உண்டு. நான் நார்த்தாமலைக் காடுகளில் பார்த்ததுண்டு (புதுக்கோட்டை மாவட்டம்).//

நானும் புதுகை மாவட்டம்தான். ஆனால் அந்த பக்கம் வந்தது கிடையாது. நீங்கள் கொடுக்கும் செய்தி என்னை ஆர்வம்கொள்ள செய்கிறது. நீங்களும், பக்கத்து தாவரவியல் ஆசிரியர் யாரேனும் இருந்தால் நெப்பந்தஸ் தானா என்று பார்த்து சொல்லுங்கள். ஏனென்றால் நெப்பந்தஸ் ஒரு ஆர்க்கிட் வகை தாவரம், அதுவும் இது ஒரு (endemic) பகுதியில் மட்டும் காணப்படும் தாவரம், மழைக்காடுகளை போன்று.

நேசி.

இயற்கை நேசி|Oruni said...

//கொசுவுக்கு எதிரியாக எதுவும் தாவரம் உண்டா?//

சாம், we wish! ஆனால் நிறைய ரெப்பலண்ட்ஸ் தாவரங்களிலிருந்து தருவிக்கப்ப்டுகிறது.

என் சிறு வயதில் எங்களுடைய கண்டுபிடிப்பாக, தும்பை செடியை கொத்தாக பிடிங்கி கொஞ்சம் அடிச்சு வாசம் கெளப்புற அளவுக்கு செஞ்சு, தலைமாட்டுக்கு மேல போட்டுட்டு தூங்குவோம். அந்த நாத்தத்தில கொசுமார்கள் பக்கத்தில வரமாட்டங்க அப்படிங்கிற நம்பிக்கையில...

ஆனால் என் கிட்ட டேட்டா இல்ல...;-) ஆனால் கொசு நம் பக்கத்தில வருவதெ நம் உடம்பு வெப்பத்தை வைச்சுதான்னு சொல்றாங்க. மாயூரம் ஏ.வி.சி கல்லூரியில ஒரு பேரசிரியார், கொசுக்கள மலட்டுப் (sterile) பண்ணி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியுமான்னு முயற்ச்சி பண்றதா கேள்விப்பட்டேன்.

ஹும்...வால் மார்ட் நெப்பந்தஸ், ஆர்க்கிட், கொஞ்சம் scary கலவைதான்...அவைகள் தென் அமெரிக்கா மழைக்காடுகளிலிருந்து வராமல் இங்கு நர்சரி மாதிரி வைச்சு வளர்த்து வித்தால். ஒகே. இல்லென்னா, பக்கத்தில கூட போகதீங்க, dont encourage it.

நேசி.

Sivabalan said...

Good Start is half done!!

It is really Good Start!!

Please go ahead with full energy
& enthusiasm.

And one more thing, I am just come here to know more about this subject. I will ask more questions as & when required to understand this subject. I hope you will encourage it.

Thanks Mr.இயற்கை நேசி!!

Anonymous said...

This plant can be seen in Yeracaud Botanical Garden also. But is found in North Eastern India

இயற்கை நேசி|Oruni said...

சிவா, முடிந்த அளவிற்கு கொடுக்க முயற்சிப்போம். இதுவும் என் நீண்ட நாள் ஆவா! அறிவியல் எல்லோருக்கும் சென்றடைய வேண்டுமென்பதே என் கருத்து. அது வெர்க்ஷாப், அறிவியல் கருத்தரங்கங்களோடு நிற்பதில் எனக்கு சிறிதேனும் உடன்பாடு கிடையாது.

கேள்விகள் கேளுங்கள், 'விகடன் மதன்' மாதிரி எல்லாத்துக்கும் பதில் சொல்ல முயற்சிப்போம்.

நன்றி...உங்களின் ஊக்கத்திற்கு.

நேசி.

வெற்றி said...

அன்பின் இயற்கைநேசி,
நல்ல பதிவு.நல்ல முயற்சி. தொடருங்கள்
தாவரவியல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. சும்மா எப்போதாவது
Discovery Channel லில் பார்ப்பதுண்டு.
தங்களின் இத் தளத்தின் மூலம் இயற்கை பற்றிய பல தகவல்களை அறிய ஆவலாக உள்ளேன். நன்றி.

பி.கு. :- நண்பர் சாம் கேட்டது போல்
நுளம்பை உண்ணக்கூடிய மரம் செடி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். :)

Muthu said...

நேசி,
கிட்டத்தட்ட இரண்டு-மூன்று வருடங்களுக்கு முன்னால் எனது வலைப்பதில் இதைப் பற்றி எழுதிய கட்டுரை இங்கே.

இயற்கை நேசி|Oruni said...

முத்து, உங்கள் சுட்டியில் பயணித்து சென்று படித்துவந்தேன், ரொம்ப விரிவாகவும் விளக்கமாகவும் எழுதுயுள்ளீர்கள், பாரட்டுகள்.

பெரும்பாலும் நெப்பந்தஸ் பற்றி பத்தம் வகுப்பு வரையில் சென்றிலுந்தாலே, அவ் வகை கார்னிவோர் தவரத்தை பற்றி யாவரும் அறிந்திருக்க கூடும். நாம் இங்கு பேசிக் கொண்டிருப்பது பரிணாம உயிரியல், எப்படி எரும்பு அந்த நெப்பந்தஸ்க்கெ அல்வா கொடுக்கிறது என்பதனை பொருத்து.

இது மிக அண்மையா கண்டுபிடிப்பு தலிவா.

உங்கள் வருகைக்கும், சுட்டிக்கும் நன்றிகள்!

நேசி.

Anonymous said...

Merku thodarchi malaigalai patri eluthivingala

பூச்சியுண்ணும் நெப்பாந்தஸ் தாவரம்
neeraiya padithu irrukiren but

merku thodarchi malai patri therinthu kolla ava...

இயற்கை நேசி|Oruni said...

அன்பின் வெற்றி, தாங்களின் ஊக்கத்திற்கு நன்றி! விடுங்க எனக்கு தெரிஞ்சு கிரகிச்சுகிட்ட வரைக்கும் உங்களோட பகிர்ந்துகிறேன். சொந்த அனுபவத்தையும் சேர்த்து. அடிக்கடி இப்படி வந்து போங்க.

நேசி.

இயற்கை நேசி|Oruni said...

தொப்ஸ், பெரிய பெரிய விசயமெல்லம் கேக்றீங்க...ஏதொ எனக்கு தெரிஞ்சத பகிர்ந்துகிறென். நான் ஒரு விற்பண்னன் அல்லவே! இங்ஙன நான் எழுதற விசயமெல்லாம் என் மகனோட பேசும் பொழுது அவன் கிட்ட சொல்லி அசத்திய விசயம், மத்த அப்பா, அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்கும், சுளுவா இருக்கிற மாதிரி இப்பால இறக்கி வைக்கிறென்.

முத்து மேலே எனக்கு கொடுத்த சுட்டியில் நிறைய விசயங்கள் நீங்கள் கேட்ட விசயத்துக்கும் சேர்த்து எழுதியிருக்கிறார்.

சுட்டியை சுடுக்கி அங்கே ஒரு விசிட் அடிச்சுருங்க.

இங்க என்ன மில்லியன் டாலர் எழுத்து போட்டிய வச்சுருக்கு, கிரகமப்பா யெல்லாம்...

நன்றி தொப்ஸ்,

நேசி.

Related Posts with Thumbnails