எல்லா ஊர்வன பிராணிகளும் இது நாள் வரையிலும் "குளிர் ரத்தப் பிராணிகளே" என்று நம்பி வந்த அறிவியல் சமூகம் இப்பொழுது தனது புது ஆராய்ச்சிகளின் மூலம் "டைனோசார்" போன்றவைகள் ஊர்வன இனத்தில் வந்தாலும், இவைகள் வெப்ப ரத்தப் பிராணிகளாக வாழ்ந்திருக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளது.
ஊர்வன வகைப் பிராணிகள் தனது உடம்புச் சூட்டை கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்ள புற வெப்பத்தை நாடுகிறது, நாம் கூட கவனித்திருக்கலாம், முதலைகள் போன்றவைகள் சூரிய ஒளியில் படுத்து வெப்பத்தை கிரகித்துக் கூட்டியோ குறைத்துக் கொள்வதனை, இல்லையா? ஏனைய விலங்கினங்களான பாலூட்டிகள் மட்டும் பறவைகள் உடல் மெட்டபோலிக் நடவடிக்கைகளை கொண்டே உடம்புச் சூட்டை தக்கவைத்துக் கொள்கிறது.
இந் நிலையில் இப்பொழுது டைனோசார்களில் உடம்பின் எடையை வைத்து அவைகள் குளிர் அல்லது வெப்பத் ரத்தப் பிராணிகளாக வாழ்ந்திருக்கக் கூடும்மென்று இந்த புது வித ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.
டைனோசார்களில் சிறியவை குளிர் ரத்தப் பிராணியாகவும் (20 டிகிரி செல்.), அவைகளின் உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்லும் பட்சத்தில் (48 டிகிரி செல்.) வெப்ப ரத்தப் பிராணியாகவும் வாழ்ந்திருப்பதாக அறியப்படுகிறது.
இதற்கென அண்மைய காலத்து 11 வகையான ஊர்வன இனங்கள் தேர்ந்துதெடுக்கப் பட்டு மீண்டும அவைகளின் உடல் எடையை கணக்கில் கொண்டு உடம்பின் வெப்பச் சூடு ஒப்பீட்டு நடத்தி ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளது.
Tuesday, July 11, 2006
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
எங்க...ஒரு துடுப்பு, படம் என்று போட்டு எழுதுனீங்கன்னா நல்லா இருக்கும்...
நல்ல தகவல்..
படம் போட முயற்சிக்கிறென், படம் upload பண்ண மாட்டேன்னு அடம் பிடிக்குது வஷ்ரா என்ன பண்றது. நல்ல படமா ஒண்ணு சுட்டு வச்சுருந்தேன்... ஆனா முடியலெ என்னன்னு தெரியலேயே... தெரிஞ்சவங்க சொல்லலாம், இல்லைலென்னா ஃபிக்ஸ் பண்ணிக் கூட தரலாம். நன்றி வஷ்ரா.
imageshack, tinypic, bagthepic போன்ற வலைத்தளங்களைப் பயன் படுத்துங்கள்...blogger மட்டுமே அல்ல..
அப்படி பயன் படுத்தி, படத்தின் URL ஐ URL இடுக என்று blogger படம் ஏற்றியிலுள்ள இடத்தில் நிரப்பி விட்டீர்கள் என்றால் போச்சு.
படத்தின் அளவு மிக அதிகமாக வைக்காமல் சிறிதாக - 100 kb க்கும் கீழ் வைத்திருப்பது நல்லது. Ifranview என்று ஒரு மென்பொருள் விண்டோஸில் படச் சுறுக்கம் செய்ய உதவும்.
கூகிளில் தேடினீர்கள் என்றால் இவை அனைத்தும் கிட்டும்.
வஷ்ரா,
நன்றியோ நன்றி! உலகம்... உலகம் அன்பு நண்பர்களின் சுரங்கம், இட் வொர்க்டு ;-))
சுவாரசியமான விஷயம்தான். எப்படித்தான் எப்பவோ மாண்டு போன இந்த டைனோசார் பத்தி இவ்வளவு கண்டுபிடிக்கறாங்களோ.
நேசி
எளிமையாக அருமையாக சொல்லியிர்க்கீங்க...
நல்ல ஆராய்ச்சி.
ஆமா, இதேபோல் இப்ப இருக்கிற ஊர்வனவற்றில் மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறதா?
மிக்க நன்றி!!
எடைக்கும், குளிர்/வெப்ப ரத்த பிராணியாக் இருப்பதற்கும் என்ன தொடர்பு?
தருமி, இதோ இன்னும் சில விசயங்கள் அன்பர்களின் பார்வைக்கு, நல்ல கேள்வி கேட்டு வைத்தீர்கள்...
//எடைக்கும், குளிர்/வெப்ப ரத்த பிராணியாக் இருப்பதற்கும் என்ன தொடர்பு? //
உயிரிய-வேதிப் பொருட்களின் மாற்றங்கள் எல்லா வித விலங்குகளுக்கு இந்த வெப்ப மாறுபாட்டால்தான் விளைகிறது எனவும், அதன் பொருட்டு, இத் தொடர்பு உடம்புச் சூடு, வளர்ச்சி விகிதம் (Metabolic or Growth Rate), மற்றும் உடம்பு அடர்வுத் தன்மை இவைகளைக் கொண்டு கணக்கீடப் பட்டதாம். மேலும் இந்த ஓப்பீட்டுத் தொடர்பு ப்ளாங்டான்கள் முதல் திமிங்கிலங்கள் வரையிலும் ஒத்து போவதாக அறியப்பட்டுள்ளதாம்.
டைனோர்களின் வளர்ச்சி விகிதம் அதன் எலும்புகளில் காணப்படும் வருட வளர்ச்சி வட்டங்களை கொண்டு (annual rings) அவைகளின் வயது அதற்குறியெ உடல் அடர்வு கண்டுபிடிக்கப்பட்டது.
If that is the case, do elephants and Rats vary in their body temperature, depending on its body mass and metabolic rate?
இ.கொ,
//சுவாரசியமான விஷயம்தான். எப்படித்தான் எப்பவோ மாண்டு போன இந்த டைனோசார் பத்தி இவ்வளவு கண்டுபிடிக்கறாங்களோ.//
உங்களுடையெ wondersக்கு தருமி கேள்வியில் பதில் இருக்கிறது, பார்த்தீர்களா, இலவசம்?
ஏங்க என் பேர நீங்களும் பஞ்சர் ஆக்குறீங்க...
என் பேரு, வ"ஷ்"ரா இல்லிங்க...வ"ஜ்"ரா...ஒருங்குறியில் vajraa என்று எழுதினீர்கள் என்றால் வரும்...
கஷ்டமா இருந்தா ஷங்கர் ன்னு சொல்லிட்டுப் போங்க...
ஓ! அப்பிடிங்கள வ***ஷ்***ரா ;-)) சாரிங்க, இனிமே நீங்க வஜ்ரா, சரியா?
நல்ல தகவல்.
வஜ்ராவுக்கும் நன்றி, படங்காட்டுறதைப் பத்திச் சொன்னதுக்கு.
துள்சிங்க,
அடெடா நீங்களும் எப்படி படம் காட்டுறதுன்னு தெரிஞ்சு கிட்டீங்களா...
சரி சரி, நெறையெ படங்கள் சுட்டு எங்க எல்லோருக்கும் காட்டுங்க சீக்கிரமா...
Post a Comment