விட்டில் பூச்சிய (moth) நாம எல்லோருக்கும் தெரியும், அதாங்க சும்மா செவனேன்னு ராத்திரி நேரத்தில நாம வீட்டு லைட்க்கு கீழே இறக்கையை பப்ரபான்னு விரிச்சுட்டு பளுப்பு அல்லது சாம்பல் நிறத்தில எப்படா அங்ஙன இருக்கிற சுவத்துப் பல்லி பதுங்கிப் பதுங்கி நகர்ந்து வந்து நம்மள காலி பண்ணுமின்னு (அதுக்கும் ஒரு தியரி இருக்கு prey-predator தொடர்ப பத்தி எழுத, அதையும் பின்னாடி சொல்றேன்) உட்காந்திருக்குமில்ல அந்த நபர் இனம்தான் பேசப் போற விசயம்.
இந்த விட்டில் பூச்சிக்கும், நமக்கு நிரம்ப பிடிச்ச (குறிப்பா... பொண்ணுங்களுக்கு) வண்ணத்துப் பூச்சிக்கும் (Butter Fly) ரொம்பத் தொடர்பு இருக்குது. அத எப்படி பிரிச்சுப் பார்க்கிறது அப்படிங்கிறத, குமுதத்தின் குறைந்த பட்சம் ஆறு வித்தியசங்கள் மாதிரி ஒரு ஆறு வித்தியாசங்களுடன் இன்னொரு பதிவில காண்போம். இப்ப நம்ம பய விட்டிலோட பரிணாம தேடலைப் பார்ப்போம்.
இந்தப் பசங்க ராத்திரியில ஊர் சுத்தறவுனுங்க, அதனால செவனேன்னு பகல் முழுக்க ஒரே இடத்தில அடைஞ்சுகிடந்து தூங்கிட்டு இருப்பானுங்க. இப்ப அதோட இறக்கை சம்பந்தமா கொஞ்சம் சொல்லிப்புடணும் முன்னலே நான் படம் ஒட்ரதிக்குள்லே... இதுகளுக்கு முன் இறக்கை (Fore Wing), பின் இறக்கைன்னு (Hind Wing) ரண்டும் மேலமேல இருக்கும்.
ஆனா சில வகை விட்டில்களுக்கு பின் ரக்கையில பெரிசா கண் மாதிரியே பெரும் புள்ளி ஒன்னு வலது பக்கமும் இடது பக்கமும், அத மறைச்சுகிட்டு இந்த முன் இறக்கை அச்சு அசாலா அவர் எது மேல உட்காந்து தூங்கிறாரோ அந்த இடம் மாதிரியே ரக்கை நிறத்தோட....கொர்... கொர்... இந்த செட் அப்-எ வச்சுகிட்டுத்தான் நம்ம ஆளு பொழப்ப தள்ளிகிட்டு இருக்கிறார்.
எப்படியா? அப்படி பகல் பொழுதில் தூங்கிட்டு இருக்கிறாரா, இருக்கும் போது எவனாவது எழுப்பி விட்டவோ, அல்லது அவரே அப்படி நினைச்சுகிட்டவோ அப்பப்போ டக்குன்னு மேல் இறக்கையை மேல தூக்கி, கீழ் இறக்கையை காமிப்பாரு அந்த முட்டை பொய்க் கண்ணோட.... இப்ப எங்கயாவது இருந்து பாத்துகிட்டு இருக்கிற பறவையோ இல்ல வேற எமனோ, சரி முழிச்சுகிட்டு இருக்கிறான் பக்கத்தில போன பறந்துபுடுவான், எதுக்கு தேவையில்லாமல் சக்தியை செலவு பண்ணிகிட்டு அப்படின்னு கொல பண்ண வாரவன் அப்படியே போயிடுவான்னு, இவரு இப்படி இயற்கையை கெஞ்சி கூத்தாடி பரிணாமத்தின் தயவால தலைவரு வாழ்கை ஓடுது...
நல்லா இருந்துச்சா இல்ல மண்டை காஞ்சி போச்சான்னு சொல்லுங்க...
Monday, July 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
அறிவியல் விசயங்களை ஜனரஞ்சகமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறேர்கள். அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
தொடர்ந்து எழுதவும்.
வாழ்த்துக்கள்,
அசுரன்
தெகா, சயின்ஸ் க்ளாஸ் மாதிரி இருக்கு.. ஒரு படம் கிடம் போட்டுக் காட்டக் கூடாதா?
//நம்ம பய அந்துவோட பரிணாம தேடலைப் பார்ப்போம்//
யாரு! வாரமலர்ல எழுதராறே! அந்துமணி அவரா?
தெகா
நல்ல எளிமையாக சொல்லியிருக்கிரீர்கள்.
இந்த பூச்சியோட படம் இருந்தால் போடுங்க..
நன்றி.
精采! 我爱您认为的方式。 - Margiemix http://www.doyouhaveissues.blogspot.com
மக்களே...
படம் போட்டேனுங்கோவ்... ரொம்ப நாள இந்த பதிவை "ஹைபர்னேட்" பண்ண வைச்சுட்டேன், சரி தூசு தட்டி எடுத்துப் போடுவோம் அப்படின்னு கட் அண்ட் பேஸ்ட் பண்ணி திரும்பப் போட்டேங்க படத்தெ காமிக்க மாட்டேன்ற.. :-)( இருங்க, இன்னொரு முறை நான்....
தெகா,
இப்போ தெளிவா புரியுது.. சூப்பர்..
இதே மாதிரி எனக்கு ஒரு கண்ணு வரைஞ்சி வச்சிருந்தா, தூங்கிகிட்டே மீட்டிங் எல்லாம் அட்டென்ட் பண்ணலாம்... ம்ம்ம்ம், இப்போ கேட்டு என்ன பண்ண!!!
பொன்ஸூ,
//தெகா, சயின்ஸ் க்ளாஸ் மாதிரி இருக்கு.. ஒரு படம் கிடம் போட்டுக் காட்டக் கூடாதா?//
என்னெ தூக்கம் வருதா "படம்" போட்டு பாகங்கள் விளக்கமெ?
ஆமா, யாருங்க அந்த "தெகா" "போக." எனக்கு 'ஸ்ப்லிட் பர்சனலிடி' இருக்கு அந்த அந்த வீட்டுலெ இருக்கும் போது அந்த அந்த பேரை வைச்சு கூப்பிட்டாத்தான் எனக்குத் தெரியும்.
இப்பெ எப்படி"டா" கேட்டுச்சு மாங்க ;-) அப்படிங்கிறீங்க... அது ஒண்ணுமில்லெ கொஞ்ச நேரம் space out-ஆகி நீங்க கூப்பிட்ட பேரு ஞாபககம் வந்துடுத்து அதென்.
சரி இனிமெ... நேசி.... இயற்கை நேசி (என்னது லூசா - சிரிக்காதீங்க எப்பப் பார்த்தாலும் கிண்டல்தான்) அப்படின்னுதான் கூப்பிடணும் ஆமாம்... ஹிக்கே பிக்கே ரசிகன் :-))))
ஆமாம்.. நேசி, தெகா, ஹி.பி.ரசிகன், பி... எத்தனை பர்சனாலிடி.. போங்கப்பா.. :)
அசு,
//அறிவியல் விசயங்களை ஜனரஞ்சகமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறேர்கள். அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறீர்கள். //
வாங்க, வாங்க!! ரொம்ப நன்றிங்க. கொஞ்சம் கொஞ்சமாத்தான் வளரணும் அப்பத்தான் நிலையா நிக்க முடியும் இல்லென்னா, "ம்யுடேஷன்" மாதிரி ஏதாவதா ஏடாகூடமா ஆயிடுவோம். நிதானம். அழகு. புரிஞ்சுருக்குமின்னு நினைக்கிறேன்.
வாங்க அடிக்கடி, அசு, கேளுங்க ஏதாவது கேக்கணுமின்னா...
நன்றி ஊக்க மாத்திரைகளுக்கு!
நேசி.
பொன்ஸ் said...
ஆமாம்.. நேசி, தெகா, ஹி.பி.ரசிகன், பி... எத்தனை பர்சனாலிடி.. போங்கப்பா.. :)
Wednesday, 05 July, 2006
ஆஹா.. இதுவும் தெகா தானா.. ! மறுமொழிகளிலிருந்துதான் தெரிந்தது..
நல்ல பதிவு.. மீட்டிங்ல தூக்கம் சொக்கும் போது கண்டிப்பா இந்த ஜீவன்களை நெனச்சு பொறாமைப்படுவேன்...
கடவுள் .. நம்ம இமைமேலயும் இது மாதிரி வரஞ்சுவிட்டுருக்கலாம் ..சே
பொன்னுத்தாயீ,
ரெண்டாவது தபாவும் எம்மை போட்டுக்கொடுத்து காட்டிக்கொடுத்துப்பிட்டீங்களே, நான் எங்கே போயி hide and seek விளையாடுவேன் இனிமே...
முயன்று பொருவது ஒரு பண்புதானாம், பரிணாமத்திலே... அப்படித்தான் ஒட்டகச் சிவிங்கி கூடத் தனது கழுத்தெ நீட்டிக்கிச்சாம், அதனலெ, நாமும் முயன்றால் எல்லோருமா சேர்ந்து... குறு குறுன்னு முழிச்சிகிட்டே தூங்கிற மாதிரி ஒரு இமை வாங்கிக்கலாம்...
ச்சே, ச்சே ஒரே போரிங் ஜாப் எல்லாம் பாக்கிறது அப்படின்னு மட்டும் தெரியுது... :-)))
சிவா,
நன்றிகள்! உங்களுக்கு இது போல எதுவும் பரிணாம மாற்றங்கள் தேவையா? உங்களுக்கு தேவைப்படாது என்றே கருதுகிறேன், எல்லோரையும் ஓடி, ஓடி மேய்ப்பதால், வேலையில் தூங்குவதற்கு அவசிய மேற்படாது, இருந்தால் இங்கு ஆர்டர் கொடுக்கவும், சுடச் சுட Evolutionarily Mutated Traits பெற்றுத்தரப்படும்...
ஆர்டர் கொடுப்பதற்கு அணுக வேண்டிய முகவரி... பொன்ஸு பக்கங்களில் இணைக்கப் பட்டுள்ளது... கவுன்சலிங்கும் அங்கே ;-)))
கலாயத்தல் நாயகனே,
//யாரு! வாரமலர்ல எழுதராறே! அந்துமணி அவரா?//
தெரியும் இப்படி ஏதாவது சொல்லிகிட்டு வருவீகன்னு :-))
எதுக்கும் லிமிடொடெ சிரிச்சி வைக்கிறேன்...
முழிச்சிகிட்டும் தூங்கிக்கலாம்...
அட தூங்கிகிட்டும் முழிச்சிக்கலாம்....
காத்தடிக்குது..காத்தைக்குது..
(தெகா)காட்டுப் பக்கம் காத்த்டிக்குது...
கூத்தடிக்குது கூத்தடிக்குது..
படிக்கும் சனம் கூத்தடிக்குது....
முழிச்சிகிட்டும் தூங்கிக்கலாம்...
அட தூங்கிகிட்டும் முழிச்சிக்கலாம்....
பொன்ஸு,
//ஆமாம்.. நேசி, தெகா, ஹி.பி.ரசிகன், பி... எத்தனை பர்சனாலிடி.. போங்கப்பா.. :) //
இரண்டுக்கு மேலே போனால் அது ஸ்ப்லிட் பர்சானலிட்டியில் வரா¾¡õ, அதையும் தாண்டி dissociate identity disorder-¬õ, «ô¦À¡ ¿£í¸§Ç ÓÊ× Àñ½¢ì¸í¸ ¿¡Á ´ù¦Å¡Õó¾ÕìÌõ ±ò¾¨É À÷ºÉÄ¢ðÊ þÕìÌÁ¢ýÛ ;-)) àíÌõ ¦À¡ØÐ ´ñÏ, ¬À¢Š §À¡É «í§¸ ´ñÏ, ¿ñÀ÷¸û¸¢ð¼ ´ñÏ.... þôÀ¢Ê §À¡Â¢ ¸¢ð§¼ þÕì̾¡õ.... «ô¦À ¿¡ÁøÄ¡õ ¡Õ....
ÒâïÍ :-)))
†¢.À¢ì§¸ ú¢¸ý.
பொன்ஸு,
//ஆமாம்.. நேசி, தெகா, ஹி.பி.ரசிகன், பி... எத்தனை பர்சனாலிடி.. போங்கப்பா.. :) //
இரண்டு பர்சானலிட்டிகளுக்கு மேலே போனால் அது ஸ்ப்லிட் பர்சானலிட்டியில் வராதாம், அதையும் தாண்டி dissociate identity disorder-ஆம். சொல்றாங்க நாம தூங்கும் பொழுது ஒண்ணாம், ஆபிஸ்லெ ஒண்ணாம், நண்பர்களெடத்தே அப்படின்னு லிஸ்ட் போட்டுகிட்டே போறாங்க... அப்படின்னா நாமல்லாம் யாருங்க.... :-)))
ஹி.பிக்கே ரசிகன்.
சுகா,
//ஆஹா.. இதுவும் தெகா தானா.. ! மறுமொழிகளிலிருந்துதான் தெரிந்தது.. //
நீங்களும் கண்டுபிடிசிட்டீங்களா, ஒரு த்ரிலிங்கா இருக்கட்டுமேன்னு ஐடிண்டிஃபை பண்ணிக்கமெ எழுதினேன்... போட்டு கொடுத்துப்புட்டாங்க ;-))) சரி இப்ப என்ன வாங்க உங்க தெ....வேதான்.
//நல்ல பதிவு.. மீட்டிங்ல தூக்கம் சொக்கும் போது கண்டிப்பா இந்த ஜீவன்களை நெனச்சு பொறாமைப்படுவேன்... //
நீங்க சொன்ன அந்த பொறாமை, நான் அஞ்சாப்பு படிக்கும் பொழுது மிதந்து செல்லும் மேகங்களை பார்க்கும் பொழுது அவைகளை பார்த்து பொறாமை பட்டதுண்டு :-)
//கடவுள் .. நம்ம இமைமேலயும் இது மாதிரி வரஞ்சுவிட்டுருக்கலாம் ..சே//
கேட்டுட்டோமில்லெ... கிடைச்சுடும், காதோட சேர்ந்து இயற்கையாகவே இருக்கிற மாதிரி ஒரு செல்போன் வைக்க ஒரு "பை," ஹீம், அப்புறம் சாப்பிடமலேயே வேலை பார்ப்பதற்கு ஏற்ற உடம்பு... அல்லது வயித்துக்கு பக்கத்திலேயே அடுத்த வேளை சாப்பாட்டை சேமித்து வைத்துகொள்கிற "பை" :-))) ஹி...ஹி...ஹி... இப்படி எல்லாமே...
Nesi,
Thanks for the photo.
//கேட்டுட்டோமில்லெ... கிடைச்சுடும், காதோட சேர்ந்து இயற்கையாகவே இருக்கிற மாதிரி ஒரு செல்போன் வைக்க ஒரு "பை," ஹீம், அப்புறம் சாப்பிடமலேயே வேலை பார்ப்பதற்கு ஏற்ற உடம்பு... அல்லது வயித்துக்கு பக்கத்திலேயே அடுத்த வேளை சாப்பாட்டை சேமித்து வைத்துகொள்கிற "பை" :-))) ஹி...ஹி...ஹி... இப்படி எல்லாமே... //
ஆஹா இந்த ஐடியா நல்லா இருக்கே. இதை டெவலப் பண்ணலாமே. நீர் பண்ணறீரா இல்லை நான் பண்ணட்டுமா?
இ.கொ,
//ஆஹா இந்த ஐடியா நல்லா இருக்கே. இதை டெவலப் பண்ணலாமே. நீர் பண்ணறீரா இல்லை நான் பண்ணட்டுமா? //
நம்ம ரெண்டு பேருக்குள்ளேயே இருக்கட்டும், இந்த பரிணாம சங்கதியெ எப்படிய்யா செயற்கையா உருவாக்கிக்க முடியும்? தெரிஞ்சா அதெ ஏன் ஓய் நான் இங்கன சொல்லி வைக்கிறேன், எமக்கு மட்டும் மில்லியன் டாலர் அடிக்க ஆசை இல்லையா, சரி எப்படின்னு அந்த ரகசியத்த என் கிட்ட மட்டும் சொல்லுமய்ய... :-)
Post a Comment