Tuesday, August 08, 2006

பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்...

உலக மக்கள் தொகை ராக்கெட்டை விட அதி வேகமான முறையில் பயணித்து ஏழு பில்லியன்களையும் தாண்டி போய்க் கொண்டிருக்கும் பட்சத்தில் எப்படி இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போடுவது என்று யோசிக்கும் கட்டாயத்தில் சில மனிதக் கடவுள்கள் கண்டுபிடித்த குறுக்கு வழிதான் இந்த "உயிரிய-தொழிற்புரட்சி (Bio-technology)" அணுகுமுறை.

இந்த வகை தொழிற்புரட்சி இயற்கை அன்னையின் அடிமடியில் கைவைப்பது என்றால் அது மிகையாகது. எப்படியெனில், உயிர்களின் அடிப்படை செல்களில் மாற்றங்களை திருடியோ அல்லது வைத்தோ அதன் பரிணாம சுழற்சியை கற்பிழக்க வைப்பதால்தான் இதற்கு "இயற்கையின் அடிமடி சுரண்டல்" இப்படி ஒரு பெயர் பொருந்தும் என்று கருதுகிறேன்.

இது போன்ற தொழிற் நுட்பத்திற்கு எந்த எல்லையும் கிடையாது, இது எப்படி காலப் போக்கில் பரிணமிக்கும் என்றும் அரிதியிட்டும் விளக்கிவிட முடியாது...

இதற்கு எனது இந்தப் பதிவில் நகைச்சுவையாக அளித்த சில பின்னூட்டங்கள் உண்மையாக நடக்கவும் வாய்ப்பு அதிகமே!

Thekkikattan said...

கேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))

அறிவியல் பூர்வமாக பரிணாம வளர்ச்சி என்பது இயற்கையாகவே இருக்கும் சுற்றுப்புற தேவைகளுக்கென இயற்கையே தனது பயணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு பாங்கு, அதில் அழகும், ஆச்சர்யமும் கலந்த கலவையே மிஞ்சி, அன்று வாழும் உயிர்களுக்கு வழங்குகின்ற ஒரு அற்புதச் செயல்.

இது போன்ற பரிணாம மாற்றங்கள் எதனால் நடந்தேறியது என்பதனை நாம் அரிதி கணக்கீட்டு சொல்ல முடிவதில்லை. அது இயற்கை சார்ந்த புரியா புதிர்களில் ஒன்று.

ஆனால் இன்றோ நாம் இந்த பரிணாம விந்தையை நம் கையில் எடுத்துக் கொண்டு இயற்கை கடவுளாக உயிர்களில் மாற்றங்களை கொண்டு சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கிறோம். அம் மாற்றங்களின் பக்க விளைவுகளை முற்றிலுமே அறியாமலே, பிரஞையற்று, தன்னிச்சையாக.

நம் உணவில் கலந்து வரும் இந்த திருட்டு யுக்தி:

இது மூன்று வகையான தொழிற் நுட்பத்தின் மூலமாக சத்தமில்லாமல் பரிணாம மாசு படுத்தல் நடந்தேறுகிறது.

a) GE or GM (Genetically Engineered Food)

b) GMO (Genetically Modified Organism) and

c) TT (Terminator Technology)

a) Bovine Growth Hormone (BGH) என்ற வகை வளர்ச்சி ஹார்மோன்கள் Monsanto என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சதாரணமாக ஒரு மாட்டில் சுரக்கும் பாலின் அளவீட்டை விட 15 சதவீதம் அதிகமாக பெற உட் செலுத்தப் படுகிறது. இது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது ஆனால் ஐரோப்பா போன்ற கண்டங்களில் நடைமுறையில் இல்லை. இதன் பக்க விளைவுகளை கருத்தில் கொண்டு.

b) GMO இந்த வகை தொழில் நுட்பத்தில் மரபணுக்களில் மாற்றங்களை சொருகி, திருடி எடுத்துவிட்டு நடைமுறை படுத்தப் படுவதால் மனிதனுக்கும் பல வகையான வியாதிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருப்பதோடு, பரிணாம மாசுபாடும் பிற்காலத்தில் பெரிய அளவில் நடந்தேறுகிறது... மீன்களில் எவ்வாறு இது போன்று நடைபெறுகிறது என்பதனை இங்கு பேசியிருக்கிறேன் முன்பே...

c) TT இதுவும் ஒரு Monsanto நிறுவன தயாரிப்பே இம்முறையில் தாவரங்களில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி அதிக மகசூலை பெருக்குவோம் என்ற போர்வையில், உலக விதைச் சந்தையை கையகப் படுத்தும் ஒரு குறுகிய கண்ணோட்டமே.

இந்த வகை அணுகுமுறையில் அவ்வாறு மாற்றமுரச் செய்யப்பட்ட பயிர்களிடமிருந்து கிடைத்த தானியங்களோ விதைகளோ, மறு பயிரிட்டுக்கு உதவுவதில்லை. வருடா வருடம் விவசாயிகள் விதைகளை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது போன்ற மரபணு மாற்றங்களை கொண்ட பயிர்கள் இயற்கைக்கு புறம்பான ஒர் உயிரினமே...

இது நமக்கும் தீங்கை விளைவித்து இயற்கைக்கும் புறம்பாக அமைகிறது. இன்று புதிதாக பரிணாமத்திருக்கும் புது வகை வியாதிகள் பரிணமித்த வைரஸ்களின் புது வகைகளால அல்லது இத் போன்ற குறுக்கு வழி வியாபார சுரண்டல்களால?

23 comments:

Sivabalan said...

நேசி

நீங்கள் இயற்கை காதலால் இதை சொல்கிறீர்கள்.

ஆனால் உணவு தட்டுப்பாடு என்னும் மிகப் பெரிய மலையின் முன் உங்கள் காதல் கடுகாகிப் போனது வேதனையான விசயமே...

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

நன்றி.

சுரேகா.. said...

நன்றாக சொன்னீர்கள்...
இப்படி எத்தனை காலம்தான் நம்மையும் இயற்கையையும்
இளிச்சவாயாக்குவார்களோ?

இந்த அளவுகூட கேள்வி கேட்காத ஒரு சமுதாயத்தை உருவக்கற முயற்சிதானோ? ( சிந்திக்கிற செல்லை பிடுங்கிட்டு மனிதனையும் உருவாக்கிருவாய்ங்க கெரகம் பிடிச்சவய்ங்க )

நல்ல சிந்தனைங்க...

இயற்கை நேசி|Oruni said...

சிவா,

//ஆனால் உணவு தட்டுப்பாடு என்னும் மிகப் பெரிய மலையின் முன் உங்கள் காதல் கடுகாகிப் போனது வேதனையான விசயமே...
//

அடிக்கப்படுவது அபாய மணி மட்டுமே சிவா, சற்றே விசயங்களை எல்லோரும் அறிந்துகொள்ளும் பொருட்டு. உங்களுக்கு தெரியுமா இருக்கும் இந்த 7 பில்லியன்களில் 1.5 பில்லியன் மக்கள் உலகம் தழுவிய முறையில் பஞ்சம் பட்டினியில் வாழ்ந்து மாண்டு போறார்களாம்.

இருப்பினும் நம்மிடையே போதுமான அளவிற்கு உணவு உற்பத்தி இருந்தும் எங்கிருந்து இந்த பட்டினிச் சாவுகள் நடந்தேறுகின்றன. கடலில் கொட்டப்படும் எஞ்சிய உணவு பொருட்களை அது போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்தாலே இது போன்று நிகழாலம் இருக்கும் அல்லவா?

அப்படியெனில் இதில் உலக அரசியல் இருப்பதாக படவில்லை?

தருமி said...

'உயிரிய-தொழிற்புரட்சி' என்பதை நீங்கள் சொல்வது போல் முழுமையாக ஒரு எதிர்மறை பொருளில் கொள்ள வேண்டுமா என்ன? உதாரணமாக, ஜீன்களில் மாற்றங்கள் கொண்டு வந்து உணவு உற்பத்தியைப் பெருக்குவது தவறா? stem cell ஆராய்ச்சியால் மனித குல நன்மை பெருகாதா?

Issac Asimov கதை ஒன்றில் வெளியுலகம் முழுமையும் ஒரே ஒரு species தாவரம் மட்டுமே இருக்கும் - GMO. எல்லா நம் உணவுத் தேவைகளுக்கும் அந்த தாவரம் மட்டுமே போதும்.மனிதர்கள் எல்லோருக்கும் sub-terranean life தான். - நீங்கள் சொல்லும் -...இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைகள்... - அதுபோன்ற் ஓர் அதீத கற்பனை(க் கதை)தானே?!

இயற்கை நேசி|Oruni said...

//உதாரணமாக, ஜீன்களில் மாற்றங்கள் கொண்டு வந்து உணவு உற்பத்தியைப் பெருக்குவது தவறா? stem cell ஆராய்ச்சியால் மனித குல நன்மை பெருகாதா? //

மரபணுக்களில் மாற்றங்களை கொண்டு வந்து உணவு உற்பத்தியை பெருக்கலாம், ஆனால், அது நடந்தேறுவது எதன் விலையில் என்பதே இங்கு கேள்வி.

விலங்கு-தாவர வகைகளின் பன்மகத் தன்மை (Diversity) இயற்கையில் இருப்பதே ஒரு காரணத்திற்காகத்தானே. அவைகளை முடுக்கியோ அல்லது சொடுக்கி விட்டொறிந்தோ நமக்கு இது இப்பொழுது (human spp) தேவை என்பதால் நாளைய விளைவுகளை பற்றி எண்ணாமல் இந்த பரிணாம விளையாட்டுத் தேவையா?

இயற்கையில் ஒரு உயிரினம் பல்கிப் பெருகும் பொழுது இயற்கையாகவே இயற்கை அதற்கு ஒரு கட்டுப்பாட்டு காரணியாக செயல் பட்டு அதனை தன் வசப்படுத்தி முறைப்படுத்தி வைத்துக்கொள்கிறது, எதன் மூலம் எனில் அந்த குறிப்பிட்ட உயிரினம் விரும்பி உண்ணும் உணவின் உற்பத்தி திறனை குறைத்தோ கூட்டியோ இயற்கையின் தேவைப்பாட்டிற்கு இனங்க (அது போலவே Prey-Preadtor balanceம்).

அதனைவிடுத்து இயற்கை நமது மூளையை சற்றே அதீதமாக கூர்மை படுத்திவிட்டது என்பதால் அதன் அடிமடியிலே கைவைக்கும் நிலைதான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

உதராணத்திற்கு நீங்கள் கூறிய அந்த Stem cell பயனீட்டை எடுத்துக் கொள்வோம் மருத்துவத்தில் அது உதவும் என்றாலும் அவ் வளர்ச்சி இயற்கையின் தேர்ந்தெடுப்பிற்கு புறம்பாக அமையக் கூடாது என்பதுதான் கவனத்தில் நிறுத்தற் கூறியது.

இந்த உயிரிய தொழிற்நுட்பத்தில், எங்கே இருக்கிறது எல்லை இது வரையில் தான் சொல்ல வேண்டும்மென்ற கட்டுப்பாடு. பணம் படைத்தவன் எதையும் செய்யலாம்மென்ற நிலை இருக்கும் பட்சத்தில் எனக்குப் பிறக்கும் குழந்தைக்கு நீலக் கண்களும், சுருட்டை முடியும், புஷ்யை போன்ற வீரமும் இருக்கக் கோணி மரபணு மாற்றத்தை நாடலாமல்லாவா? அப்படி ஒரு வாய்ப்பு கிட்டும் போது. முடியாததா என்ன?

பன்மகத் தன்மையில் தானே, தருமி தருமியாக இருக்கிறார், காட்டான் காட்டானாக இருக்கிறேன்.

Whatever it is, the whole concept of GMO is a horrible concept in tomorrow world.

Anonymous said...

http://www.truefoodnow.org/shoppersguide/guide_printable.html

இயற்கை நேசி|Oruni said...

//அதுபோன்ற ஓர் அதீத கற்பனை(க் கதை)தானே?! //

இன்று இருக்கும் பணம் சார்ந்த பைத்தியத்தனத்தில் எதுவும் சாத்தியமே, தருமி. ஏன் மக்கள் இப்பொழுதே (பிளாஸ்டிக்) சர்ஜரி முறையில் முகத்தை இழுத்து வைத்து 20 வயது குறைத்துக் கொள்வது இல்லையா? தொந்தியைக் குறைக்க வயிற்றின் கொள்ளவை குறைத்தால் தீர்ந்தது சிரமம் என்று நறுக்கி எடுத்து விடுவது இல்லையா? ஹூம்... மார்பகம் பெரிதாக வேண்டுமென்று... சரி வேண்டாம் விடுங்கள் பெரிய எடத்து விவாகாரம் ;-))

அதினால இது ஒண்ணும் கற்பனைக் கதையல்ல, நிஜம் இன்று நடக்காமல் இருக்கலாம், ஆனால் நாளை சில பொழுது போகத 'பொம்முக்கள்" முயன்று பார்த்து நடைமுறைக்கு கொணரலாம்... நீங்க தப்பிச்சீங்க... :-)

Sivabalan said...

தெகா

சரி.. உணவுக் தட்டுப்பாடுக்கு இயற்கை சார்ந்த விசயங்கள் எதேனும் இருக்கிறதா? அவை அனைத்து மக்களுக்கும் பயனளிக்குமா?

இன்னொரு விசயம், தென்னை மரங்களில் எய்ட்ஸ் பூச்சி தாக்கி விட்டால் அவ்வளவு தான். அநத மரங்கள் பட்டுப் போய்விடுகின்றன். இதை தடுத்து மகசுலைப் பெருக்க செயற்கையான விசயங்களே உதவுகின்றன். இது ஒரு உ.ம்.

இயற்கை நேசி|Oruni said...

வாங்க "மைக்ரோமேஜியன்" சும்மா டக்குன்னு வந்து நச்சுன்னு சொல்லிட்டு போயீட்டீங்க.

//இந்த அளவுகூட கேள்வி கேட்காத ஒரு சமுதாயத்தை உருவக்கற முயற்சிதானோ? //

இதோட பயணம் அங்குதான் முடிவடையும் என்பது எனது நிலைப்பாடு, எப்படியெனில் பணம் படைத்தவன் பலசாலியாக வேணும் என்கிற மரபணுக்களை கேட்டு வாங்கி மனிதக் குழந்தைகளை பெற்றுக் கொள்வதால், அது போல வசதியற்றவர்கள் குய்யோ முறையோ என்று கத்தி திரிய வேண்டியதுதான். இரண்டாம் தர குடிமக்களாக.

மேலை நாடுகளில் உள்ளவர்களுக்கு பற்கள் பளிச்சென்றும் வரிசையாக எடுத்து அடிக்கி வைத்தது போலவும் ஃபோட்டோக்களுக்கென்றே இருப்பது போலவும் இருக்க என்ன காரணம்?

நற்கீரன் said...

தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிக்க முன்வாருங்கள்:
www.ta.wikipedia.org

Sivabalan said...

தெகா,

TT (Terminator Technology)
இதற்கு ஏதாவது ஒரு எடுத்துக்காட்டு ஒன்று கூறுங்களேன். தெரிந்துகொள்கிறேன்.

இயற்கை நேசி|Oruni said...

சிவா,

//TT (Terminator Technology)
இதற்கு ஏதாவது ஒரு எடுத்துக்காட்டு ஒன்று கூறுங்களேன். தெரிந்துகொள்கிறேன். //

உதாரணமாக "பொன்னி" என்ற ஒரு வகை நெல் மணியை எடுத்துக் கொள்வோம், இது இயற்கையாக 120 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன தனது மகசூலை காட்டுவதற்கு என்று வைத்துக் கொண்டல்; இதன் ஹைபிரிட் வகை அதில் பாதி நாட்களை கொண்டு பொன்னி2 என்ற வகையில் சந்தைக்கு வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 'பொன்னி' முதல் வகையில் உங்களால் விதை நெல் எடுத்துப் போட முடியாலாம் ஆனால், இந்த இரண்டாம் வகை ஹைபிரிட் பொன்னி2, அப்படி முடியாது. எனவே மெதுவாக முதல் வகை நம் கையிருப்பில் இருந்து அகற்றப் படுகிறது... replacing the Ponni1 by placing Ponni2 slowly but strategically... இப்பொழுது மீண்டும் இந்த பத்தியை படித்துப் பாருங்கள்...

//c) TT இதுவும் ஒரு Monsanto நிறுவன தயாரிப்பே இம்முறையில் தாவரங்களில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி அதிக மகசூலை பெருக்குவோம் என்ற போர்வையில், உலக விதைச் சந்தையை கையகப் படுத்தும் ஒரு குறுகிய கண்ணோட்டமே.

இந்த வகை அணுகுமுறையில் அவ்வாறு மாற்றமுரச் செய்யப்பட்ட பயிர்களிடமிருந்து கிடைத்த தானியங்களோ விதைகளோ, மறு பயிரிட்டுக்கு உதவுவதில்லை. வருடா வருடம் விவசாயிகள் விதைகளை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது போன்ற மரபணு மாற்றங்களை கொண்ட பயிர்கள் இயற்கைக்கு புறம்பான ஒர் உயிரினமே...//

இயற்கை நேசி|Oruni said...

நற்கீரன்,

//தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிக்க முன்வாருங்கள்:
www.ta.wikipedia.org //

அங்கு சென்று புதிய பதிவர் வட்டத்தில் எனது முகவரியை பதிந்து விட்டேன். ஆனால் நிறைய படித்து தெரிந்து கொள்ள வேண்டியது உள்ளது, எப்படி அங்கு பங்களிப்பது என்பதனை பொருத்து.

நீங்கள் எனக்கு கொஞ்சம் உதவலாம் அது சம்பந்தமாக, மீண்டும் இந்த பக்கம் வந்தால் ஒரு பின்னூட்டம் மூலமாக தாங்களின் மயில் ஐ.டி கொடுத்து உதவவும்.

நன்றி, நற்கீரன்.

Sivabalan said...

நேசி,

நல்ல ஒரு உதாரனத்தை எடுத்து விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி.

//இது போன்ற மரபணு மாற்றங்களை கொண்ட பயிர்கள் இயற்கைக்கு புறம்பான ஒர் உயிரினமே//

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்னவாக இருக்க முடியும்.

இயற்கை நேசி|Oruni said...

//ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்னவாக இருக்க முடியும்.//

சுலபமான தீர்வு, உலகம் தழுவிய முறையில் ஒரு ஐந்து வருடங்களுக்கு எல்லோரையும் sterilize செய்து குழந்தையே பெற்றுக் கொள்ளாதா வகையில் செய்து விட்டால். தீர்ந்தது கதை. :-))

சிவா, மக்கட் பெருக்கமும் அதன் விளைவுகளை பற்றியுமான விழிப்புணர்வு ஏற்றப் படுவதே இதற்கு எல்லாவற்றுக்கும் தீர்வு. நிறந்தரமானதும் கூட.

இயற்கை நேசி|Oruni said...

//சரி.. உணவுக் தட்டுப்பாடுக்கு இயற்கை சார்ந்த விசயங்கள் எதேனும் இருக்கிறதா? அவை அனைத்து மக்களுக்கும் பயனளிக்குமா? //

இயற்கையாகவேதான் எது வரைக்கும் Carrying Capacity என்ற ஒரு விசயத்தைக் கொண்டு உயிரினங்களின் பெருக்கத்தை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. முழுதுமாக இயற்கையே நம்பி நாம் அதனை பலாத்காரம் செய்யாது பொருட்டு, நாமும் அப்பவே இருக்கும் நுண்ணுயிர்களில் உள்ள மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்த ஒரு காரணியாக அமைந்து இன்று புது விதமான நுண்ணியிரினமான ஒரு வைரஸ் ஆகாவோ அல்லது பாக்டீரியாகவோ கொண்டுவரத்தேவையில்லை, இல்லையா?

ஆனால், இப்பொழுது பெருகி வரும் மக்கட் தொகையை கருத்தில் கொண்டு நாம் பயிர்களிலுயும், உயிர் இனங்களிலும் மாற்றங்களை செயற்கையாக முடிக்கி விடும் பொழது ஏனைய விசயங்களும் (தீங்கு விளைவிக்கும் நுண்ணியிர்களும்) மாற்ற மடைவது இன்றியமையாததாக ஆகிவிடுகிறது. சொல்ல வரும் விசயம் புரிகிறதா, சிவா?

Unknown said...

தெகா இங்கே ஒரு கையெழுத்து வேட்டை நடக்குது நீங்களும் ஒன்னு போடுங்க
http://inthavaaram.blogspot.com/2006/08/blog-post_115547393398297845.html

Anonymous said...

Eagerly waited for someone with love on nature and knowledge. your bridged the gap! all the best. will add you in my friends blogger list

Unknown said...

நல்ல பதிவு!

GM உணவுகளால் பணம் பன்னுவது மொன்சான்டொ போன்ற கம்பெனிகளும், ஹெல்த் இன்சுரன்சு மற்றும் மருந்து கம்பெனிகளும்தான்.. இயற்கையை மாற்ற நினைத்தால் அழிவுதான் சீக்கிரம் வரும்..

Anonymous said...

These are already available in the markets. They
don't have to disclose it :(

Anonymous said...

எம் எஸ் சுவாமினாதன், என்ன மாதிரி ஆராய்ச்சி பண்ணுகிறார். எனக்கு இந்த துறையப் பத்தி தெரியாது! இந்தியாவுக்கு
இதில எதாவது பங்கிருக்கா?

Anonymous said...

|||எம் எஸ் சுவாமினாதன், என்ன மாதிரி ஆராய்ச்சி பண்ணுகிறார். எனக்கு இந்த துறையப் பத்தி தெரியாது! இந்தியாவுக்கு
இதில எதாவது பங்கிருக்கா? |||

M.S. Swaminathan is money laundering nowadays joining hands with USA. And also playing a crucial role in getting rid of so many paddy species from India in the name of integrating into a new fast paced new species.

கிரி said...

//அம் மாற்றங்களின் பக்க விளைவுகளை முற்றிலுமே அறியாமலே, பிரஞையற்று, தன்னிச்சையாக//

உண்மை தான்

//இது போன்ற மரபணு மாற்றங்களை கொண்ட பயிர்கள் இயற்கைக்கு புறம்பான ஒர் உயிரினமே...//

இது பற்றிய உங்க அறிவு அல்லது ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது.

இன்னும் விவரமாக திரும்ப எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails