Sunday, November 26, 2006
நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - I
இது ஒரு மீள் பதிவு, இதனை ஏற்கெனவே எனது *நட்சத்திர* வாரத்தில் பலரும் படித்திருக்கக் கூடும். என்னுடைய அடுத்த வலைப் பூ பக்கத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கென இந்த வழியாக மீண்டும் தென்படுகிறது...
நாம் "இயற்கை உணர்வுசார்ந்த நிலையிலிருந்து (Nature Consciousness)" தினமும் வெகு தொலைவில் நம்மை நிறுத்தல் கூறி அயாராது உழைத்துக் கொண்டு வருகிறோம். அதற்கான சான்றுகளாக, நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமாக பல்கிப் பெருகி வரும், கேலிக்கை சாதனங்கள்.
ரேடியோ, ட்டி.வி, கணினி, வால்க் மேன், சிடிமேன், ஐபாட் அப்புறம் ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தால் வெளியில் வெயில் அடிக்கிறதா அல்லது மழை பெய்கிறதா இல்லை எவனும் குண்டு போட்டு விட்டானா என்று கூட தெரியாத அளவிற்கு நம்மை மதி ம(ழு)யக்க வைக்கும், இயந்தரத்தனமான விளையாட்டுக்கள் வேடிக்கைகள்.
இவைகள் எல்லாம் நம்மை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் என்ற (அவ)நம்பிக்கையிலேயே புதிது புதிதாக ஏதாவதொன்று சந்தைக்கு வர வைத்து கொண்டே இருக்கிறோம்.
இவைகளைனைத்தும், நம்மை இயற்கையிடமிருந்து வெகு தொலைவில் தொடர்பற்று இருக்க வழிகோணுவதால் நாமும் இயற்கை சார்ந்த உணர்வற்று மேலும் மேலும் தேவையற்ற தீங்குகளை இயற்கைக்கு கோப மூட்டுமளவிற்கு வழங்கிவிடுகிறோம்.
இது இப்படியாக இருக்க, நாம் சற்றே அடித்தளத்தில் நின்று உற்று நோக்கினால் உண்மை இப்படியாக எனக்குப் புலப்படுகிறது. நாம் இயற்கையை வெற்றி கொள்ளவே இது போன்ற செயல்களில் நம்மை ஆட்படுத்தி இயற்கையுடன் போரிட்டு வருகிறோம் என்பது தெரியவருகிறது.
இப் போரின் வெளிப்பாடுதான், அண்மைய காலத்து இயற்கை சீற்றங்களனைத்தும் சற்றே நின்று நிதானித்து பார்க்குமளவிற்கு. வருடந்தோறும் நம் துணைக்கண்டத்தில் பெறும் பருவ மழை, பங்ளாதேஷ் போன்ற நாடுகளை துவம்ஷம் செய்யுமளவிற்கு மழை கொட்டித் தீர்க்கிறது, அல்லது மழையே இல்லாமல் பொய்த்துப் போகிறது. அங்கு மட்டும்தான அப்படியாயெனில், இல்லை. சற்றே நமது பார்வையை உலகமனைத்திற்கும் திருப்புவோம்.
இப்பொழுது நடந்தேறிய சுனாமிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில், துருக்கி, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்த மாபொரும் நில நடுக்கங்கள் அதனையொட்டிய உயிர் மற்றும் பொருட் சேதங்கள். வட அமெரிக்கா நாடுகளில் அதிகரித்து வரும் சூறாவளி, புயல்கள்.
இதில் காட்ரீனா என்றழைக்கப்படும் அண்மைய சூறாவளி அமெரிக்கா நாட்டையே இயற்கை சார்ந்த உணர்வுநிலைக்கு திருப்பி கொணர்ந்தது என்றால் அது மிகையாகது.
அந்த உணர்வு நிலை, முன்பெலாம் ஏதோ மூன்றாம் தர உலக நாடுகளுக்கு மட்டுமே சொந்தமென நினைந்து வந்த அப் மாபொரும் நாடு அந்த ஒரு புயலின் மூலமாக விழித்துக் கொண்டது. இயற்கை சீற்றம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதனை பொருத்து.
நீங்கள் எல்லாம் முனகுவது எனக்குத் கேக்கிறது, சரி, நேசி, அப்ப இது போன்ற இயற்கை சீரழிவுகள் முன்பு நடந்தேறியதே கிடையாது என்றா சொல்லவருகிறீர்கள என்று. சற்றே பொறுமையாக இதனையும் கருத்தில் கொள்ளுங்கள்.
அக் காலத்திலும் நடந்ததுதான். ஒரு முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இது போன்ற கடுமையான வறட்சியோ அல்லது தண்ணீர் தட்டுப்பாடோ நிலவியாதா? எனக்கு தெரிந்து இவ்வளவு மும்முரமாக பேசிக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்றே கருதுகிறேன்.
அப்படியெனில் என்னதான் நடந்து போனது, அன்மைய காலத்தில் என்று சற்று பார்ப்போம்.
சதுப்பு நிலக் காடுகளும் இயற்கை சீற்றமும்:
சுனாமியின் தாக்கம் நாகை ஏரியாவில் மட்டும் சற்றே அதீதப் படியான உயிர் மற்றும் பொருட் சேதங்களுடன் நடந்தேறியதை நாம் அறிவோம் அல்லவா? அதனை கண்டிப்பாக அங்கே இயற்கையிலேயே அமைந்திருந்த சதுப்பு நிலக்காடுகளை அழிக்காமல் வைதிருந்தால், அது ஒரு அரணைப் போல செயல் பட்டு சுனாமி அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி கரைக்கு வந்து சேரும் பொழுது, அதன் தாக்கம் இன்று நாம் பார்த்த அளவிற்கு இருந்துதிருக்காது.
அதுபோலவே, வளர்ந்த நாடு என்று தாவிக் குதிக்கும் அமெரிக்காவில் மட்டும் இந்த இயற்கை வளங்கள் சூரையாடப் படாமலா இருக்கிறது என்றால் அங்கும் இதே கதைதான். அங்கும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதனை வெளிச்சம் போட்டு காட்டியது, காட்ரீனா என்ற சூறாவளி.
அங்கும் இது போன்ற சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்பட்டதினால் அந்த சூறாவளியின் முழுவீச்சத்தையும் கரைபரப்பில் காண நேர்ந்தது. இன்னமும் ஒரு சுட்டரிக்கையின் மூலமாக தெரிந்த கொண்ட உண்மை ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் ஒரு ஏக்கர் அளவில் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படுவதாக அது சொல்லவருகிறது.
சற்று சிந்தித்து பாருங்கள், இயற்கையே நமக்கு வழங்கியிருக்கும் அரண்களை விட்டொழிந்து விட்டு, கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கடற்கரையோரம் மதிற்சுவர் கட்டுவது என்ன முட்டாள்தனமான அணுகுமுறை.
மக்கட் பெருக்கமும், அழிந்து வரும் பயிர் பன்முகத் தன்மையும், வனங்களும்:
1950-60களில் விவசாயத் துறையில் வந்த பசுமை புரட்சி என்கிற திட்டம் பின்னாலில் மெதுவாக தொழிற்புரட்சியாக மாறிப்போனது விவசாயத்துறையிலும், இயற்கை சார்ந்த உற்பத்தி திறனை பின்தள்ளி. இந்த புரட்சியின் காரணமாக 1950 லிருந்து 80களில், உணவு உற்பத்தி 250 சதவீதமாக உயர்ந்ததாம். சரி இப்படி நடந்து போனதில் என்ன நன்மை, தீமை என்று பார்ப்போம்.
பல்கிப் பெருகிக் கொண்டுவரும் இந்த மக்கட் தொகைக்கு பசியாற்றுகிறேன் என்ற பெயரில் இயற்கையிடமிருந்த அத்துனை செல்வங்களையும் பறித்துக் கொண்டு அவளது கருப்பையில் உள்ள சில முட்டைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றுனுள் நமது உடனடித்தேவைக்கென என்ன தேவையோ அதனை மட்டுமே கருத்தில் கொண்டு அவளின் கருப்பையை சூரையாடி, பணப் பயிர்களாக வெளிக்கொணர்ந்து, ரசாயனங்களை மட்டுமே நம்பியே அவைகளையும் பயிரிட்டு அந்த ரசாயனங்களையும் சேர்த்து உணவுப் பொருளாக மாற்றி நாமும் உண்டு, மற்ற உயினங்களுக்கும் ஊட்டி பார்க்காத வியாதிகள் எல்லாம் பார்த்து வருகிறோம் இன்னாலில்.
இந்த பணப் பயிர்கள் தானியங்களாக குறிப்பிட்ட வகை கோதுமை, அரிசி, சோளம் etc., போன்றவைகளாகவே பயிரடப்பட்டு ஏனையெ வகை அந்த ஊரின் சீதோஷ்ன நிலைக்கே உருவான தானியங்கள் துடைத்தெடுக்கப்பட்டு அத்துடன் சேர்த்து அதனை நம்பியிருந்த பூச்சி பட்டுக்களையும் அழித்து, இயற்கை உரங்களையும் பயன் படுத்த முடியாவண்ணம் எல்லாவற்றையும் இழந்து, மீண்டும் அழிவுப் பாதையில் இயற்கையை நடக்க வழிகோணுகிறோம், அத்துடன் இணைந்து வாழும் நம்மையும் அழித்துக் கொண்டுதான்.
மேற்கு மலைதொடர்கள், ஒரு காலத்தில் உள்ளே புக முடியா வண்ணமிருந்த அடர்ந்த காடுகள் இன்று ஒரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்துகள் மூலைமுடுக்கெல்லாம் சென்று வர. அங்கிருந்த மழைக்காடுகள் நிறைய அழிக்கப்பட்டு, தேயிலை, காபி, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் என்ற ஒன்றை கொண்டுவந்ததின் விளைவு இன்று மழையத்துப் போய், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்றிருந்த சுற்று வட்டார ஊர்களும், மாநிலங்களும் ஏன் உலகம்தழுவிய என்று கூட கூறமுடியும் அதன் விளைவை சந்தித்து வருகிறது.
ஃபாசில் எரிபொருள் திருட்டும், இயற்கையின் பெருமூச்சும்:
இந்த ஃபாசில் எரிபொருட்கள் எங்கிருந்து வருகிறது? பல்லாயிரகணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த தாவர மற்றும் விலங்குகள் மாண்டழியும் பொழுது அவைகள் புதையுண்டு பலவேறுபட்ட நிலைகளில் பல வேதி மாற்றங்களினுடே பயணித்து இன்று நமக்கு பயன்படும், எரிவாயுவாகவும், நிலக்கரியாகவும், பெட்ரோலியமாகவும் கிடைக்கிறது.
எனவே மீண்டும் ஞாபகத்தில் நிறுத்த வேண்டிய விசயம், இவைகள் தண்ணீரைப் போல் தோண்டத் தோண்ட ஊறி வருவது கிடையாது, ஏற்கெனவே அவ்வாறு இருப்பதை வெளியே கொண்டுவருகிறோம் அவ்வளவே.
ஒரு லிட்டர் பெட்ரோலியம் கிடைக்க ஒரு காலத்தில் பல ஆயிரம் நிலப்பரப்பில் இருந்த வனம் அழிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாம். ஏன் அவ்வளவு, ஒரு அடி நிலக்கரி கிடைக்க பத்து அடி தாவர பொருள் அவசியமாம், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள், எவ்வளவு இயற்கைவளம் அழிந்துருந்தால் நாம் இன்று அழித்து தீர்க்கும் இந்த வளங்கள் கிடைத்திருக்கும். நாளை இது போல் நம் சந்ததிக்கு கிடைக்க வாய்புண்டா? விட்டுவைத்திருக்கிறோமா ஏதாவது ஒன்றை?
இதனை வெளிக்கொணர்ந்து முறையற்று பயன்படுத்துவதின் மூலம், (ஒரு அமெரிக்கனுக்கு உணவளிக்க அவருக்குகென ஆகும் எரிபொருளின் செலவு 1600 லிட்டர் பெட்ரோலியமாம் ஒரு வருடத்திற்கு) நமது தலைக்குமேல் இருக்கும் குடையாம் ஒஷொன் திரையையும் கிழித்து மற்ற விளைவுகளையும் விலை கொடுத்தல்லவா வாங்குகிறோம்.
கடல் மாசுபாடு:
எங்குதான் நாம் விட்டுவைத்தோம், கடலுக்குள்ளும் சென்று அணுக் கழிவுகளையும், கொண்டு வந்த பொட்ரோலியம் நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து அல்லது அவைகள் வேண்டுமென்றே கடலில் கலக்க வைத்து அங்குள்ள மழைக்காடுகளை போன்று என்றழைக்கப்படும் "பவளப் பாறைகளின்" அழிவிற்கும் ஏனைய கடல் விலங்குகளுக்கும் அழிவினையும், ஒரு சமச்சீரற்ற நிலையில் அந்த வளம் விழ அடிகோலிடுகிறேம்.
இயற்கையின் பதிலடி நமது சுரண்டல் போருக்கு:
இப்படி பல நிலைகளில் நமது போரை இயற்கைக்கு எதிராக நடத்தி வருகிறொம். எதனை மறந்து என்றால் நாம் இயற்கையின் அங்கம் தான், நமக்காக அல்ல இயற்கை என்பதனை முழுவதுமாக மறந்து போரடுவதின் விளைவு; இயற்கை பிரிதொரு நிலையில் தன்னை தற்காத்துக் கொள்ள, carrying capacity என்ற சமன்பாட்டை பயன்படுத்த நேரிடுகிறது, உயிரனங்களுக்கு எதிராக.
எப்படி, ஒர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட எறும்பின் பெருக்கம் அதிகமுறும் பொழுது அதனை அதற்கெதிரான ஒரு விலங்கினத்திற்கான வளரும் வாய்ப்பை இயற்கையே உற்பத்தித்து அவ் எறும்பினை கட்டுபாட்டுக்குள் கொணர எத்தனிக்கும் அதுவும் முடியாத பட்சத்தில் அதற்கு நிறந்தர அழிவே, தீர்ப்பு.
இது போன்று நமக்கும் அன்மை காலங்களில் இயற்கை இந்த யுக்தியை பயன்படுத்த முற்படுகிறதோ என்று எனக்கு தோன்றச் செய்கிறது. எப்படியெனில்;
அதீதத்து வரும் கணக்கற்ற மக்களின் பெருக்கமும் அதனையொத்த கண்மூடித்தனமான இயற்கை சீரழிப்பும் ஒரு வகையில் இயற்கையே முன் வந்து நம்மை கண்டிப்பதாக உள்ளதுதானோ இந்த சூறாவளி பெருமூச்சுகளும், சுனாமிகளும், பூகம்பங்களும், உடல் வியாதிகளும், வெப்ப சூடேற்றமும் இன்ன பிறவும். யோசிக்கத்தான் வைக்கிறது.
இயற்கையுடனான உணர்வு சார்ந்த நிலை (Nature Consciousness) அற்றுப் போனதே இதற்கெலாம் தலையா காரணமோ?
எனது அடுத்த பதிவில் நம்ம மதக் கடவுளர்களும் இதற்கு எப்படி பொறுப்பாளி ஆகுகிறார்கள் என்பதனைப் பார்ப்போம்.
இதோ எனது அடுத்தப் பதுவிற்கான சுட்டி: நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - II
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
49 Comments:
துளசி கோபால் said...
கலக்கல் பதிவு.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியே
ஆகணும். இல்லாட்டா இந்த அழிவுகள்
இன்னும் வேகமா வரும்(-:
Friday, November 10, 2006
மங்கை said...
"இது தான் நட்சத்திர பதிவு"
இயற்கை சீற்றங்கள், புதிது புதிதாக தோன்றும் நோய், வருமை, தேய்ந்து வரும் மனிதனின் கட்டுபாட்டு உணர்வு ஆகியவைகளை பார்க்கும் போது, எனக்கு தோன்றுவது
MALTHUSIAN THEORY OF POPULATION தான்.
Malthus சொன்னது இன்று சரியாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அருமையா சொல்லியிருகீங்க தெகா
வாழ்த்துக்கள்
Friday, November 10, 2006
Thekkikattan said...
துள்சிங்க,
//மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியே
ஆகணும். இல்லாட்டா இந்த அழிவுகள்
இன்னும் வேகமா வரும்(-://
இன்றைய பெரிய பிரட்சினையே பெருகிவரும் மக்கள் தொகைதான். அதனைத் தொடர்ந்துதான் நீங்கள் சுட்டிக்காட்டிய படி அழிவுகள் இன்னும் வேகமா நம்மை வந்தடையும்.
எனக்குப் பட்டதை இங்கு எல்லோருக்கு முன்னாலும் வைத்திருக்கிறேன். பார்க்கலாம், நம்ம மக்கள்ஸ் என்ன நினைக்கிறார்கள் என்று.
எதிர்பதமான கருத்துக்கள் இருப்பினும் வரவேற்க்கப் படுகிறது.
நன்றி, துள்சியம்மா...
தெகா.
Friday, November 10, 2006
இலவசக்கொத்தனார் said...
யப்பா, ரொம்ப பெருசா இருக்கே. நிதானமா படிச்சிட்டு வரேன். இது அதுவரை ஒரு உள்ளேன் ஐயா பின்னூட்டம்.
Friday, November 10, 2006
Sivabalan said...
தெகா,
இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்..
அருமை!! அருமை!!
மீன்டும வருவேன்..
கலக்கிடீங்க..
Friday, November 10, 2006
வடுவூர் குமார் said...
எப்போதோ படித்தது- சோ- சொன்னது.அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுச்செல்ல போகிறேன் என்று நினைத்தால் "பயமாக இருக்கிறது" என்று.
எனக்கும் அப்படித்தான்.
போற போக்கப்பார்த்தா "உணவுப்பொருட்களுக்காகவே சண்டை வரக்கூடுக் போல் உள்ளது."குடி தண்ணீருக்காக கிட்டத்தட்ட வந்துவிட்டது.
கவலையாக இருக்கிறது.
ஒரு சாதாரண மனிதன் நான் வேண்டும் என்றால், மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.வேறு என்ன என்ன செய்யமுடியும்?
Friday, November 10, 2006
மங்கை said...
ஒரு clarification
முதல் படம் சிவ சமுத்திரம்???
Friday, November 10, 2006
பொன்ஸ் said...
"இது தான் நட்சத்திர பதிவு"
-- வழிமொழிகிறேன் நேசி, அடுத்த பகுதிக்காக ஆவலுடன்..
Friday, November 10, 2006
Thekkikattan said...
மங்கை,
//ஒரு clarification
முதல் படம் சிவ சமுத்திரம்???//
இன்னும் அதனைப் பற்றிய குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மங்கை, பின்பு உங்களுடன் எந்த அளவிற்கு நீங்கள் அண்மையில் வந்திருக்கிறீர்கள் என்று கூறுகிறேன்.
ஏனெனில் என் நண்பர் ஒருவர், கடந்த மாதம் எடுத்த படம் அது... நமது மேற்கு மலைத்தொடரில் தான்... ;-)
Friday, November 10, 2006
மங்கை said...
நம்ம கோவைல இருந்து மைசூர் போர வழியில இருக்கு..மைசூர்க்கு பக்கதில தான்னு நினைக்குறேன் எப்போதோ போனது..
அருமையான இடம்
Friday, November 10, 2006
Sivabalan said...
தெகா
கோவையில் நடந்த விவசாயிகளின் ஆர்பாட்டம் குறித்து ஒரு பதிவிட்டு இந்த பதிவின் முகவரியையும் இனைத்துள்ளேன்..
இது உங்கள் தகவலுக்காக..
http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_116321702010117431.html
Saturday, November 11, 2006
Thekkikattan said...
மங்கை,
//"இது தான் நட்சத்திர பதிவு"//
எப்படி முன்னாடியே முடிவு கட்டீட்டீங்க, இன்னும் ரெண்டு பதிவு பார்க்காமயே :-))
//இயற்கை சீற்றங்கள், புதிது புதிதாக தோன்றும் நோய், வருமை, தேய்ந்து வரும் மனிதனின் கட்டுபாட்டு உணர்வு ஆகியவைகளை பார்க்கும் போது, எனக்கு தோன்றுவது
MALTHUSIAN THEORY OF POPULATION தான். //
That is very real, isn't so?
"MALTHUSIAN THEORY OF POPULATION" என்னங்க சொல்லுது அது. அப்படி ஒரு தியரி நான் கேள்விப் பட்டதே இல்லையே. கொஞ்சம் அதனைப் பற்றியும் சொல்லுங்களேன். தெரிஞ்சுக் கிறோம்.
Mangai, you are doing a good job too... :-) Thanks.
Saturday, November 11, 2006
வசந்த் said...
//கலக்கல் பதிவு //
// இது தான் நட்சத்திர பதிவு //
//இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்..
அருமை!! அருமை!! //
வழிமொழிகிறேன்.
ஹிஹி... நம்ம வேலையை நிறைய பேர் சுலபமாக்குகிறார்கள்
Saturday, November 11, 2006
Thekkikattan said...
இ.கொ,
//யப்பா, ரொம்ப பெருசா இருக்கே. நிதானமா படிச்சிட்டு வரேன். இது அதுவரை ஒரு உள்ளேன் ஐயா பின்னூட்டம்.//
சொன்னமாதிரியே, நிதானமா படிச்சுப் போட்டு ;-) திரும்ப வரணும். வந்து பெரிசா ஏதாவது சொல்லணும், ஏன்னா விக்கி பசங்களின் பாஸ், நீங்கதானே... :-)
Saturday, November 11, 2006
மங்கை said...
வேலைய சுலபமாக்கல.. நீங்க பாட்டுக்கு relax பண்ண போயிடாதீங்க
அடுத்த பதிவு இதை விட கலக்கல் பதிவா இருக்கனும்..
mind it..
:-)))
Saturday, November 11, 2006
மணியன் said...
மிகவும் சிறந்த, பயனுள்ளப் பதிவு. நமக்காக இயற்கையுமில்லை, இயற்கைக்காக நாமும் இல்லை, இயற்கையாக இயற்கையோடு நாம் இருந்தால் பிரச்சினை வரும் என்று தோன்றவில்லை.
Saturday, November 11, 2006
Hariharan # 26491540 said...
இருபதாண்டுகளுக்கு முன்பு குடிக்கிற தண்ணிய காசுகுடுத்து வாங்கும் காலம் வரும் என்று இவ்வளவுக்கு பரந்த்துபட்ட உண்மையாகும்னு சென்னைக்காரன் நினச்சிருக்கமாட்டான்.
ப்ளாஸ்டிக் எவ்வளவு பெரிய எதிரின்னு கேரிபேக் எடுத்துச்செல்லும் நாம் கேர் பண்றதில்லை.
குப்பை வீட்டைவிட்டு தெருவுக்குப்போனால் முடிந்தது என்று நினக்கிறோம். குப்பைகளின் ரீசைக்கிள் எவ்வளவுக்குச் செலவுபிடிக்கிற சிக்கலான விஷயம்னு யோசிக்கிறதில்லை.
அரேபியக்காரனை விட இந்தியன் பரவாயில்லை. சிக்கனம் காரணமாக கேரிபேக்கையே டிராஷ் பேக்காவும் இருமுறை பயன்படுத்திக் கழிவாக்குவதால்!
என்ன விட்டுச்செல்கிறோம் எதிர்காலத்துக்கு? யாரும் யோசிப்பதில்லை.
"May be this generation will go in history as very selfish" தனிநபர் பங்களிப்புச் சதவீதம் மாறுபட்டபோதும்!
Saturday, November 11, 2006
மலைநாடான் said...
தெ.கா!
உங்களிற்கு மட்டுமே நான் புதுமுகம், உங்கள் தளத்திற்கல்ல :))
பதிவும் படங்களும் கச்சிதம். பாராட்டுக்கள்.
Saturday, November 11, 2006
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ரொம்ப அருமையா சொல்லியிருகீங்க தெகா; நட்சத்திரப் பதிவு சமுகப் பதிவா களை கட்டுது! வாழ்த்துக்கள்!
நம் குழந்தைகள் நாளைக்கு வீடு வாங்கும் போது விலையெல்லாம் கூடிவிடுமே என்று அஞ்சி இன்றே சிந்திக்கும் பெற்றோர், நாளை நம் குழ்ந்தைகளுக்குத் தண்ணி வேணுமே, நல்ல காத்து வேணுமே, இல்லின்னா பாவம் அதுங்க கதி என்னவாகுமோ என்றும் யோசிக்க ஆரம்பித்து விட்டால்?....
Saturday, November 11, 2006
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ரொம்ப அருமையா சொல்லியிருகீங்க தெகா; நட்சத்திரப் பதிவு சமுகப் பதிவா களை கட்டுது! வாழ்த்துக்கள்!
நம் குழந்தைகள் நாளைக்கு வீடு வாங்கும் போது விலையெல்லாம் கூடிவிடுமே என்று அஞ்சி இன்றே சிந்திக்கும் பெற்றோர், நாளை நம் குழ்ந்தைகளுக்குத் தண்ணி வேணுமே, நல்ல காத்து வேணுமே, இல்லின்னா பாவம் அதுங்க கதி என்னவாகுமோ என்றும் யோசிக்க ஆரம்பித்து விட்டால்?....
Saturday, November 11, 2006
Thekkikattan said...
Dear Reader-Friends,
I am on a trip, hence put up with a system where I can not download ekalappai... if i find someother mode I will join with you all in the feedback forum.
Let me know, if anyone has tamil typing window from english to tamil in the blog page. I know Mr. Vaduvoor Kumar used to have it, but i dont see that there anymore... anybody else...???
Saturday, November 11, 2006
Thekkikattan said...
சிவா,
என்னை காப்பாத்திட்டீங்களேய்யா, இந்த "புதுவை யூனிக்கோடு" சரியாக வேலை பார்க்கிறதா என்பதனை பரிசோதிக்கிறேன்.
நான்றாகத்ததான் இருக்கிறது, நன்றி சிவா!!
Saturday, November 11, 2006
Thekkikattan said...
வடுவூர் குமார் said...
குடி தண்ணீருக்காக கிட்டத்தட்ட வந்துவிட்டது.//
குடி தண்ணீருக்கு மட்டுமா, கடின நீர் இல்லாமல் சதாரணமாக பயன்படுத்துவற்கு இருக்கக் கூடிய தண்ணீர் மொத்த கையிருப்புக் குறைந்து வருகிறது உலகம் தழுவிய முறையில்.
//மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.வேறு என்ன என்ன செய்யமுடியும்? //
இதுதான் மிகப் பெரிய சவால் நம் முன்னே இருக்கக் கூடியது உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கென.
வடுவூராரே,அருமையாக கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள், நன்றி! என்னுடைய நட்சத்திர வாரத்தை ஒரு பொருள் உள்ளதாக மாற்றிக் கொண்டிருப்பதற்கு :-)
Saturday, November 11, 2006
Thekkikattan said...
பொன்ஸூ,
"இது தான் நட்சத்திர பதிவு"
-- வழிமொழிகிறேன் நேசி, அடுத்த பகுதிக்காக ஆவலுடன்.. //
என்ன ஆளையே காணல, சரி இருக்கட்டும். ஓ, அப்படியா! நன்றீங்க அப்படி வழி மொழிஞ்சதுக்கு ;-)
அது என்ன அதுக்குள்ள இது தான் *ந* பதிவுன்னு நிச்சயமாக சொல்லுறீங்க நீங்களும் மங்கையும் ...? :-)
Saturday, November 11, 2006
Thekkikattan said...
வசந்த் said...
//ஹிஹி... நம்ம வேலையை நிறைய பேர் சுலபமாக்குகிறார்கள் //
நீங்களுமா, எல்லோரும் ஒரு முடிவுக்கே வந்துட்டீங்களா? :-))
Saturday, November 11, 2006
Thekkikattan said...
மங்கை said...
//வேலைய சுலபமாக்கல.. நீங்க பாட்டுக்கு relax பண்ண போயிடாதீங்க
அடுத்த பதிவு இதை விட கலக்கல் பதிவா இருக்கனும்..
mind it..//
என்னங்க இப்படி பாவம் பிள்ளையை மிரட்றீங்க. கலக்குனச்சா இல்லை சுமாருக்கு இருந்துச்சான்னு நீங்கள் தான் படிச்சுட்டு சொல்லணும்...
ரிலாக்ஸ் பண்ண போயச்சு எப்பவோ. அது எப்படிங்க சரியா கண்டுபிடிச்சீங்க,,,ஆச்சர்யமா இருக்கு... ;-)
Saturday, November 11, 2006
Thekkikattan said...
//மணியன் said...
இயற்கையாக இயற்கையோடு நாம் இருந்தால் பிரச்சினை வரும் என்று தோன்றவில்லை.//
மிகச் சரியாக சொன்னீர்கள். அதுவே, இந்தப் பதிவின் நோக்கமும் கூட.
ரொம்ப நன்றி மணியன், திரும்ப அதனை அடிக்கோடிட்டு காமித்தற்கு :-)
Saturday, November 11, 2006
ravi srinivas said...
I appreciate your attempt to create an awareness about ecological issues.But the way you
have presented in not good.You are
trying to oversimplify issues and creating a scary feeling.Malthusian
theory has been disproved long ago.
See my earlier articles in Thinnai.
Finally to say that Nature hits back or revenges on us is not a
correct description. Does science say so.
Saturday, November 11, 2006
Dharumi said...
எல்லாம் ஒரு மாயச் சுழல், சூழல்..
catch 22 இங்கேயும்தான்..
ஆனாலும் //எறும்பினை கட்டுபாட்டுக்குள் கொணர எத்தனிக்கும் அதுவும் முடியாத பட்சத்தில் அதற்கு நிறந்தர அழிவே, தீர்ப்பு.// இப்படி எல்லாம் சொல்லி எங்களை ரொம்பவே பயமுறுத்திருங்க
Sunday, November 12, 2006
மங்கை said...
தெகா, மால்தஸ் தியரி பற்றி எனக்கு நியாபகம் இருக்கும் விஷயங்கள்...
ராபர்ட் தாமஸ் மால்தஸ், மக்கள்தொகைபெருக்கமும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பல நூல்கள் வெளியிட்டுள்ளார். அவை நிறைய சர்ச்சைக்கு உள்ளானது. அவரின் கருத்துக்கள் ஒரு Pessimistic ன் கருத்தக்கள் என்று விமர்சனம் செய்யப்பட்டது. அவரின் கருத்துப்படி மக்கட் தொகை அதிகமாகும்போது உணவு பற்றாக்குறை,நாட்டில் பல விதமான குழப்பங்கள், நோய், வறுமை, போர், இயற்கை சீற்றங்கள் அழிவுகள், அபாயங்கள் தோன்றும் என்று கூறியுள்ளார். மக்கட் தொகை பெருகும் அளவுக்கு உணவு உற்பத்தியை பெருக்க முடியாது என்பது இவரின் வாதம். இது தான் சர்சைக்கு உள்ளானது.
இவரின் கருத்துப்படி, மக்கட் தொகை geometric progression இல் அதிகமாகும்.(1, 2, 4, 8, 16, 32) உணவு உற்பத்தி arithmatic progression இல்(1, 2, 3, 4, ….) அதிகமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியையும், மக்களின் கூடுதல் உழைப்பையும் இவர் கணக்கில் எடுக்கவில்லை என்று இவரை விமர்சித்தவர்கள் நினைத்தனர்.
(முக்கியமான விஷயம்-Once Upon time, 19 வருஷத்திற்கு முன்னால படிச்சது. Cross check பண்ணவும். தப்பா இருந்தா மன்னிக்கவும்.சிலதுக்கு தமிழ் வார்த்தைகள் தெரியல)
தெகா நிஜமாவே உங்களுக்கு இது தெரியாதா..இல்ல :-)))))
Sunday, November 12, 2006
ravi srinivas said...
Theories of Malthus
have been discarded long ago.
Neo-Malthusianism is still
there and it is a conservative
force that talks of population
stabilization by drastic measures
like compulsory family planning,
immigration control.I have written
about these and many other ecological issues in Thinnai
www.thinnai.com
Sunday, November 12, 2006
Thekkikattan said...
Hariharan # 26491540 said...
***இருபதாண்டுகளுக்கு முன்பு குடிக்கிற தண்ணிய காசுகுடுத்து வாங்கும் காலம் வரும் என்று இவ்வளவுக்கு பரந்த்துபட்ட உண்மையாகும்னு சென்னைக்காரன் நினச்சிருக்கமாட்டான்.****
கொஞ்ச நாட்களுக்கு முன்பு என்னுடைய ஒரு பதிவின் மூலமாக நானும் துள்சிங்க'வும் இப்படி பேசிக் கொண்டோம்...
//இங்கே தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தறேன்னு ஸ்ப்ரிங்க்ளர்களை திறந்து
அப்படியே விட்டுட்டுப்போறவங்களைப் பார்த்தா எரிச்சலா இருக்கு.//
துள்சிங்க,
இந்தாங்க சில புள்ளி விபரம் உலகம் தழுவிய முறையில் நம்மின் நன்னீர் கையிருப்புப் பற்றி;
உலகத்தில மொத்தமாகவே 2.5 சதவீதம்தான் உப்புத்தன்மை இல்லாம தண்ணீர் இருக்கிறதாம். அதிலும் மூன்றில் இரு மடங்கு பனிப்பாறைகளிலும், பனிச் சரிவுகளிலும் சிக்கியுள்ளதாம்.
இது இப்படியாக இருக்க, மழை வேறு பொய்த்து வருகிறது. எனவே 21வது நூற்றாண்டு ஒரு நீருக்கென அடித்துக் கொள்ளும் ஒரு நூற்றாண்டாகவும் அமையாலாமென கருதப்படுதுங்க...
லான் ஸ்பிரிங்களர் தானே சொல்லிறீங்க அதெ என்னத்துக்கு கேக்றீங்க. ஆனா, நான் இருக்கிற மாநிலம் கொஞ்சம் வறட்சி அதிகம் அதினால, சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே புல் வளர்க்க அனுமதி உண்டு ;-)
//ப்ளாஸ்டிக் எவ்வளவு பெரிய எதிரின்னு கேரிபேக் எடுத்துச்செல்லும் நாம் கேர் பண்றதில்லை.//
இந்த நிலத்தடி நீர் பிரச்சினைக்கு இந்த கேரி பேக்குகளும் ஒரு வகையில் பங்கு வகிக்கிறது அப்படின்னே சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன். இன்னும் கிராமங்களில், சிறு நகரங்களிலும் இந்த மறு சுழற்சி முறை இல்லாததினால், அப்படியே தூக்கியெறியப்பட்ட பைகள் காற்றில் அங்கும் இங்கும் அடித்துச் செல்லப்பட்டு, கருவேல மரங்களுக்கு மாலை போட்டது போக எஞ்சியிருப்பது நிலத்தில் படிந்து நாளாக நாளாக தூசி பட்டகைள் அந்த பேக்கை மூடிவிடுகிறது.
பிரிதொரு சமயத்தில் மழை பெய்தாலும் நீர் உள்ளே இறங்க விடாமல் தடுத்து விடுகிறது. இது போலவே அதிகரித்து வரும் அதன்(பைகளின்) பயன்பாடு பின்னாலில் நாடு தழுவிய முறையில் சுற்றுச் சூழல் இன்னல்களை வழங்கலாமில்லையா?
//"May be this generation will go in history as very selfish" தனிநபர் பங்களிப்புச் சதவீதம் மாறுபட்டபோதும்! //
Exactly! And, this is what I am trying to say in this article. We are walking further away from being "Nature Conscious."
நன்றி, Hari தங்களின் பகிர்தலுக்கும் பஙளிப்பிற்கும்.
Sunday, November 12, 2006
Thekkikattan said...
Ravi.R
//You are trying to oversimplify issues and creating a scary feeling.//
Dear Ravi, I do NOT just buy stuff from another person and regurgidate over here or any where. Whatever, I place here most of them came from within my awareness plane (you can even call it individual realization - it can happen in the sense of environmentally too, you know ;-).
So, place all your scientific rational angles against to whatever the facts are presented in here.
//Finally to say that Nature hits back or revenges on us is not a
correct description.//
:-)), how sure are you, it is not happening? Does an earthworm gets mad or not, when it is provoked too often??
Sunday, November 12, 2006
Thekkikattan said...
தருமி,
//எல்லாம் ஒரு மாயச் சுழல், சூழல்..
catch 22 இங்கேயும்தான்..//
உங்ககிட்ட இருந்து ஒரு ரெண்டு வார்த்தை கிடைத்தாலும் சொல்ல வருவதை நச் சென்று அடித்து சொல்லி விடுவீர்கள் :-) catch 22 இங்கயும்தான் :-)))
பயமுறுத்திரது என்னங்க நீங்களும் ஒரு Ecologist தானே உங்களுக்கு தெரியாததை என்னத்த நான் சொல்லிடறேன் அப்படி Ant keenduன்னு சொல்லி சொல்லுங்க... ;-))
Sunday, November 12, 2006
Thekkikattan said...
மலைநாடான்,
/உங்களிற்கு மட்டுமே நான் புதுமுகம், உங்கள் தளத்திற்கல்ல :))
பதிவும் படங்களும் கச்சிதம். பாராட்டுக்கள்.//
அப்படீங்களா, மலைநாடான், அப்படித்தான் நிறையப் பேர் இங்கே இருப்பாங்க போல. சத்தமில்லாமல் உள்ளே வந்திட்டு, அப்படியே போயிடுவாங்கப் போல.
நான் உங்களை அடிக்கடி "செல்வநாயகி" அவர்களின் பதிவில பார்த்தது ஞாபகம் இருக்கிறது :-)
செமய வந்து என்னை வாழ்த்திட்டுப் போயிருக்கீங்க. ரொம்ப நன்றி, மலைநாடான்.
Sunday, November 12, 2006
Thekkikattan said...
kannabiran, RAVI SHANKAR (KRS) Said...
//ரொம்ப அருமையா சொல்லியிருகீங்க தெகா; நட்சத்திரப் பதிவு சமுகப் பதிவா களை கட்டுது! வாழ்த்துக்கள்!//
நன்றி, kannabiran!!
//நம் குழந்தைகள் நாளைக்கு வீடு வாங்கும் போது விலையெல்லாம் கூடிவிடுமே என்று அஞ்சி இன்றே சிந்திக்கும் பெற்றோர், நாளை நம் குழ்ந்தைகளுக்குத் தண்ணி வேணுமே, நல்ல காத்து வேணுமே, இல்லின்னா பாவம் அதுங்க கதி என்னவாகுமோ என்றும் யோசிக்க ஆரம்பித்து விட்டால்?.... //
சிந்திக்க ஆரம்பித்தால் நன்றாகத்தான் இருக்கும். சிந்திக்கிறார்களா???
Sunday, November 12, 2006
Thekkikattan said...
Mangai,
//தெகா நிஜமாவே உங்களுக்கு இது தெரியாதா..இல்ல :-)))))//
கேட்டீங்களே ஒரு கேள்விய :-). எல்லாமே ஒருத்தருக்கு தெரிஞ்சிருக்கணுமா, நீங்க பார்த்து கவனித்து முன் வைக்கும் கேள்விகளுக்கு :-).
அவரோட ஒரு தடித்த புத்தகத்தை வேண்டிய ஒருவருக்கு வாங்கி அன்பளிப்பு கொடுத்தது ஞாபகம் இருக்கிறது.
எனக்கு இந்தியாவில இருக்கும் பொழுது இந்த பேருந்துகளிலும், திரையரங்குகளிலும், சரவண ஸ்டோர்களிலும் மிதி படும் பொழுதே இந்த population explosion theory's realization எனக்கு வந்திருச்சு :-P. இப்ப இந்தியாவில ஒரு சதுர கிலோமீட்டரில் 350 பேருக்கு மேலேதானே இருக்கோம். அதுவே ஒரு 600ஆ இருந்தா எப்படி இருக்கும் யோசிங்க :-))
A P.S: Thanks for sharing MALTHUSIAN THEORY in a nut shell fashion. So that, everyone will get a glimpse of it. :-)
Sunday, November 12, 2006
மங்கை said...
Malthusian Theory இப்ப relevent ஆ இருக்கா இல்லையானு நான் சொல்ல வரலை...ஆனா மக்கள் தொகை பெருகும் போது, அதனால ஏற்படும் விளைவுகள் பற்றி அவர் சொல்லியது ஓரளவுக்கு உண்மை. இது தான் நான் சொல்ல வந்த விஷயம்..
மக்கள் தொகை அதிகமாகும் போது இயற்கை நிகழ்வுகளுக்கு மக்கள் பலியாவார்கள் என்பது அவர் கருத்து மக்கள் சுய கட்டுப்பாட்டை இழந்து அவதிக்கு ஆளாவர்கள்,வருமையினால் பெற்றோர்கள் பெற்ற குழந்தைகளை கொல்ல கூட தயங்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். நம் நாட்டில் நடக்கும் பெண் சிசு கொலைக்கு பல காரணங்கள் இருந்தாலும், வருமையும் ஒரு முக்கிய காரணம் தானே.
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் என அவர் கூறியவை-
Natural causes, war, pestilence
( இதற்கு இப்பொழுது உலகை உலுக்கி கொண்டிருக்கும் எயிட்ஸ் உதாரணம்)
famine, infanticide, murder, homosexuality. இது எல்லாவற்றிக்கும் மக்கள் தொகை பெருக்கம் ஒரு காரணம் தானே.
Sunday, November 12, 2006
Thekkikattan said...
மங்கை, உங்களின் அந்த பின்னூட்டம் யாருக்கு போயிச் சேர வேண்டுமோ அவருக்கு போய் சேர்ந்து விடும். அதான், நானும் அப்படி உங்களிடமே விட்டு விட்டேன் பதிலுரைபதற்கு.
திரும்பத் திரும்ப எவ்வளவு விசயங்களை எங்களிடம் கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றிங்க! :-)
Sunday, November 12, 2006
நவன் said...
மனிதன் இயற்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்கின்றான்!
அதற்காகத்தான் வாழ்க்கையே அமைந்திருக்கின்றது போல் தோன்றுகின்றது.
இதற்கு இரண்டே வழிகள் தாம் உள்ளன!
ஒன்று இயற்கையுடன் போராடுவது.
மற்றையது இயற்கையுடன் இணைந்து செல்வது.
என் கருத்து என்னவென்றால் இதில் ஒன்று தான் சாத்தியம். அது இயற்கையுடன் இசைந்து செல்வது.
மனித உடலே இயற்கை வடிவமைத்துக் கொடுத்ததுதான்.
அதனால் இயற்கையுடன் இசைந்து செல்வதே சிறந்தது.
அப்போதுதான் எம் வாழ்வு தெளிந்த நீரோடை போன்று தெளிவாக இருக்கும்.
Monday, November 13, 2006
வடுவூர் குமார் said...
நீங்கள் கேட்டிருந்த அந்த தமிழ்-ஆங்கில பெட்டியை பிளாக்கர் கணக்கு இல்லாதவரும் வந்து பின்னூட்டம் போடலாமே என்ற நல்ல எண்ணத்துடன் இணைத்தேன்.ஆனால் சில வேண்டாத நபர்கள் தங்களை மறைத்து பின்னூட்டம் போடுவதால்,எடுத்துவிட்டேன்.
இதில் திரு வசந்தன் உதவினார்.
அதை திருத்தி மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.காலமும்,அறிவும் இணையும் போது தமிழ் மக்களுக்கு அது கிடைக்கும்.
உங்களுக்கு வேண்டும் என்றால் தனி அஞ்சலில் அனுப்புகிறேன்.
Monday, November 13, 2006
Thekkikattan said...
//அது இயற்கையுடன் இசைந்து செல்வது.
மனித உடலே இயற்கை வடிவமைத்துக் கொடுத்ததுதான்.
அதனால் இயற்கையுடன் இசைந்து செல்வதே சிறந்தது.//
நவின், அருமையாக சொல்லியிருக்கீங்க. ரொம்ப எளிமையாகவும், புரியும் படியும் சொல்லி வைச்சுட்டீங்க சொல்ல வந்ததை.
முதல் முறையாக நம் வீட்டு பக்கம் வந்திருக்கிறீர்கள். தங்களின் வரவு நல் வரவாகுக! :-)
Monday, November 13, 2006
Thekkikattan said...
//நம்ம கோவைல இருந்து மைசூர் போர வழியில இருக்கு..மைசூர்க்கு பக்கதில தான்னு நினைக்குறேன் எப்போதோ போனது..
அருமையான இடம்..//
மங்கை, மிகச் சரியாக சொல்லிட்டீங்க. இந்த அருவிக்கு பெயர் "Abby falls at Madikeri,இருக்கிற இடம் by Mysore, Karnataka'.
நான் போனதில்லைங்கோ. என் நண்பர் எடுத்த புகைப்படம் அது. நீங்க, வால்பாறையிலிருந்து, சாலக்குடி (கேரளா) வழியா போன அங்க இருக்கிற அதிரப்பல்லி அருவி (புன்னமை மன்னன் படத்தில கூட வருமே) போயி பார்த்திருக்கீங்களா... மிகப் பிரமாண்டமா இருக்கும், போனப் பாருங்க.
Tuesday, November 14, 2006
ravi srinivas said...
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் என அவர் கூறியவை-
Natural causes, war, pestilence
( இதற்கு இப்பொழுது உலகை உலுக்கி கொண்டிருக்கும் எயிட்ஸ் உதாரணம்)
famine, infanticide, murder, homosexuality. இது எல்லாவற்றிக்கும் மக்கள் தொகை பெருக்கம் ஒரு காரணம் தானே.
What a brilliant logic :(.
I give up.I see no point in
posting any further comments
in this blog.
Tuesday, November 14, 2006
மங்கை said...
//(புன்னமை மன்னன் படத்தில கூட வருமே) போயி பார்த்திருக்கீங்களா//
தெகா..இது உங்களுக்கே நல்லா இருக்கா..கோவை மாணவிகள் புன்னகை மன்னன் ஃபால்ஸ் போனதில்லைன்னா அது disqualification... college லே இருந்து எடுத்துறுவாங்க :-)))
அந்த மைசூர் பக்கம் இருக்கிற அருவிக்கு இப்படி ஒரு பேர் இருக்கிறது எனக்கு தெரியாது. எப்படியோ நான் சொன்னது சரி.. not bad.
Tuesday, November 14, 2006
Thekkikattan said...
//இது உங்களுக்கே நல்லா இருக்கா..//
நல்லா இல்லைதான் :-)
//கோவை மாணவிகள் புன்னகை மன்னன் ஃபால்ஸ் போனதில்லைன்னா அது disqualification... college லே இருந்து எடுத்துறுவாங்க :-)))//
ஓ! அப்படி ஒண்ணு இருக்கில்லை, அது புரியாமப் போச்சே, உனக்கு தெகா...கா... நல்லா கேளுங்க இன்னொரு முறை... :-))
//எப்படியோ நான் சொன்னது சரி.. not bad. //
இருந்தாலும் உங்களுக்கு ஞாபச் சக்தி அநியாத்திற்கு ஜாஸ்திங்க... :-)
Tuesday, November 14, 2006
Thekkikattan said...
வடுவூராரே,
ரொம்ப நன்றி. ஓ! அப்படி ஆகிவிட்டாதால் தான் எடுத்து விட்டீர்களா. இந்த பயணத்திற்கு முன்பு, உங்களின் அந்த பெட்டியை மனத்தில் நிறுத்தித்தான் கிளம்பினேன். கதை இப்படியாகி விட்டது.
இருப்பினும், சமாளித்தாகி விட்டது. தங்களின் உடனடி உதவி புரிய வந்தமைக்கும் மிக்க நன்றி!
அன்புடன்,
தெகா.
Wednesday, November 15, 2006
Sivabalan said...
//கோவை மாணவிகள் புன்னகை மன்னன் ஃபால்ஸ் போனதில்லைன்னா அது disqualification... //
இதை நான் வழிமொழிகிறேன்..Ha Ha Ha
Wednesday, November 15, 2006
Thekkikattan said...
இப்படி கோவை மக்கள்ஸ் வந்து ரவுன்டு கட்டி அடிக்கிறீங்களே... இது நியாயமா, சொல்லுங்க ;-)
Wednesday, November 15, 2006
Post a Comment