அடடா, இப்படி ஒரு தலைப்ப நான் தேர்வு செய்றதுக்குள்ள மண்டையிலிருந்த அந்த நாலு முடியும் கையோட வந்திருச்சுங்க... சரி வாங்க இப்படியே நடந்துகிட்டே பேசுவோம். நம்ம இருவாட்சிப் பறவை பற்றி (சரியான தமிழ் பேருதானன்னு ஞாபகமில்ல, இருந்தாலும் இந்தாங்க சரியான ஆங்கிலப் பேரு Great Indian Pied Hornbill - Buceros bicornis) . இந்த தேவதைங்களை காட்டுக்குள்ள நான் பார்த்து அதிசியத்து போனதுக்கு அப்புறமாத்தான், பறவைகளை பார்க்கிறது மேலேயே எனக்கு ஒரு அலாதி பிரியம் வந்துச்சு அப்படின்னா பார்த்துக்கோங்க இந்த ஆட்களின் ஆழகும் அதன் வாழ்வு முறையும்.
நான் ஒரு முறை காட்டுக்குள்ள காட்டெருமையை (Indian Bison) எப்பொழுதும் வாடிக்கையா பார்க்கிற எடத்தில வைச்சு பார்க்கிறத்துக்காக வேகமா ஒரு முதுகுப் பையும், ஒரு பைனாகுலரு சகிதமா அந்த எருமை பசங்க அந்த எடத்து விட்டு கிளம்பி போரத்துக்கு முன்னாலேயே பிடிக்கிறதுக்காக ஓட்டமும் நடையுமா போயிகிட்டு இருந்தேங்க (என்னது எதுக்கா... எல்லாம் காட்டெருமை மேய்க்கத்தான்) அப்ப சும்மா தலைக்கு மேல ஒரு சின்ன சைஸ் 'ஹெலிகாப்டர்' ஒண்ணு சொய்ங்.. சொய்ங்.. சத்தத்தோட பறக்கிர மாதிரி ஒரு மிரள வைக்கிற சத்தம்.
என்னடான்னு கொஞ்சம் நேரம் அங்கன நின்னு மேலே பாராக்கு பார்த்துகிட்டே இருந்தா ஒரு பெரிய்ய்ய நம்ம பருந்து சைஸ்விட இன்ன்ன்ன்னும் பெரிசா ஒரு பறவை சத்தம்மின்னா அப்படி ஒரு சத்தம் அது இறக்கையை மேலே கீழே இறக்கி அடிக்கும் போதே. அப்ப, டாப் சிலிப்ல (Top Slip) வைச்சு பிடிச்சது தாங்க இயற்கையில வச்சு பறவை பாக்கிற பைத்தியம் அது இன்னமும் தொடருது. நம்ம வீட்டு குட்டி பசங்கள எல்லாம் எப்பயாவது ஒரு ஞாயித்து கிழமை தெரு காட்டுப் பக்கமா டி.வி பெட்டிகிட்ட விடாம கூட்டிடு போயி முயற்சி பண்ணுங்களேன், கண்டிப்பா அவங்களுக்கு பிடிச்சுருக்கும், இந்தக் ஹாபி!
சரி விசயத்துக்கு போவோம். அந்த படத்த பார்த்தா தெரிஞ்சுருக்குமே அதோட அலகு ரெண்டு அடுக்கா ரொம்ம்ப நீளளளளமா இருக்கும். ரொம்ப ஈசியா கண்டுபிடிச்சுடுலாம் இதனை. சுமாருக்கு ஒரு மூன்று அடி நீளமும் மூன்று கிலோ கறியோட முழுக்க முழுக்க கருமையும் பழுப்பு நிற உடம்போட இருப்பானுங்க. ஆனா, கழுத்து மட்டும் வெள்ளை. என்ன பையன் தலைப்ப விட்டுட்டு கதை ஏதோ வுட்டுட்டு இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ரொம்ப முக்கியமான பாடம் நமக்கெல்லாம் இவரு காட்டுகுள்ள இருந்துகிட்டு கத்துகொடுத்துட்டு இருக்கார். வாழ்கையையில ஒரு நல்ல புருஷன் பொஞ்சாதியா நல்ல அப்பாவா எப்படி வாழ்றதுன்னு.
சரிங்க இப்ப நேரடியா விசயத்துக்குள்ள போயிடுவோம். நீங்க அடப் போங்கப்பான்னு பறந்து போரத்துக்குள்ள. இவங்க குடும்ப வாழ்க்கைதாங்க ரொம்ப அழகும் ஆச்சர்யமும் கொண்டது. பொண்டாட்டிகிட்ட கொஞ்சி முடிச்சுபுட்டு, இருக்கிறதிலேயே, பெரிய செத்துப் போன மரமா, ஆனா, இன்னமும் நிக்கிற மரமா, இல்லேன்னா அதே சைஸ் உயிரோட இருக்கிற மரமா இருந்தாலும், ஒகே, ஆனா, அதில ஒரு பொந்தும் இருக்கணும். ரொம்ப பிக்கிதானே! அதுவும் இப்ப இருக்கிற மழைக் காடுங்கள்ள இப்படி துலாவித் துலாவி தேடினா, கிடைக்குமா?
சரி அப்படி ஒரு வீடு கெடைச்ச வுடனேயே கணவரு அவரு பார்ட்னர வீட்டுகுள்ள வைச்சு அட முட்டைங்கலோடதான் வைச்சுப்புட்டு, பறந்து தரைக்குப் போயிப் போயி கிடைக்கிற மண்ணு தெருப்புழுதியெல்லாம் முழுங்கனமாதிரி முழுங்கி, வீட்டு வாசல்ட்ட வந்து எல்லாத்தையும் எச்சியோட கக்கி வாசல கொத்தனார்கணக்கா ஒத்த ஆள தன் மூக்கு மட்டும் உள்ள போர அளவுக்கு விட்டுட்டு நல்ல சீல் பண்ணீடுவாரு.
சரி, கணவனோட வேளை இதொட முடிஞ்சு போச்சான்னா இல்ல, அதுக்கப்பரம்தான், கண்ணும் கருத்துமா, டாஸ்மார்க் பக்கமெல்லாம் போகாம, "தங்கமணி" ஊருக்கு போயிட்டா அப்படின்னு நடிகர் ஜனகராஜ் ஒரு படத்தில தன் பொண்டாட்டி ஊருக்கு பஸ் ஏறுனவுடன் கத்துற மாதிரியெல்லாம் கத்தி உற்சாகம்கொள்ளாம, ஒரு 6-8 வாரம், ரொம்ப பொறுப்பா மழைக் காட்டுக்குள்ள ஆலமரம் மாதிரி (ஆல மர வகைதான்) பழங்கள் இருக்கிற மரமா தேடி அப்படி கண்டுபிடிச்ச மரத்திலருந்து ஒரே நேரத்தில எவ்ளோ பழங்கள் முழுங்கி வைக்க முடியுமோ அவ்ளொத முழுங்கிட்டு, நேரா சைஸடுல கியிடுல டாவடிக்கமா அடுத்து வீடுதான். வீட்டுக்கு வந்து பொண்டாடிக்கும் தனது பிள்ளைங்களுக்கும் முழுங்கி வைச்ச ஆலத்தை வெளியில எடுத்திட்டு வந்து ஒவ்வொண்ணாக தன் அலக உள்ளே நுழைச்சு சாப்பிட கொடுத்து அழகு பார்ப்பாரு.
உங்களுக்கு தெரியுமா, ஒரு தடவை இவனுகளோட வீட்டை கண்டுபிடிச்சுட்டோம். ஆனா, அங்கிருந்து பக்கத்தில இருக்கிற ஆல மரத்தினுடைய தூரம் 12 கிலோ மீட்டர், எங்களுக்கு அரை நாள் எடுத்துகிச்சு அந்த மரத்துகிட்டப் போயி சேர. இப்படி தினமும் நம்ம காவிய அப்பா நீண்ட தூரம் அலைஞ்சு அலைஞ்சு, அம்மா, பிள்ளைகளோட வெளியே எட்டிபார்க்க ஆரம்பிக்கையில, அப்பா உயிரோட இருந்தா பிள்ளைங்க வெளியே வந்து 'தாங்யூ டாடி" அப்படின்னு சொல்ல வாய்ப்பிருக்கும். இல்லைன்னா 'ச்சே' அப்படின்னு ஏமாத்தமா போயிடும். சில நேரத்தில அப்படித்தானாம், கடுமையான உழைப்பு இல்லையா, மண்டைய போட்டுடுமாம்!
இந்த காவியக் காதலுக்கும் பரிணாம சேட்டைகளுக்கும் நாமதான் வைக்கிறோம் ஆப்பு (கேள்விபட்ட வார்தையா இருக்கேன்னு பார்க்கிறீங்களா)? எப்படின்னா, அந்த மாதிரி எந்த ஒரு மரமும் அவ்ளோ பெரிய சைஸா வார வரைக்கும் நாம காட்டுக்குள்ள விட்டுவைப்தில்லையே. பச்ச மரமா இருந்தாலும் சரி, செத்துப் போன மரமா இருந்தாலும் சரி, கட்டிலு, பீரோன்னு செய்ய அறுத்து கொண்டு போயிடுறது.
அது அப்படி இருக்கையில, நம்ம பசங்களோ ரொம்ப பிக்கின்னு சொல்லிருந்தேன் வீடு பார்க்கிறதில, இல்லையா? அப்ப என்னாகும், வீடு கிடைக்காம கண்ட எடத்திலயும் வீடு புடிச்சி மத்த பறவைகளுக்கும் சிறு பாலூட்டிகளுக்கும் முட்டையை பலி கொடுத்துப் புட்டு இவனுங்க இனம் ரொம்ம்ம்ம்ம்ப்பா வேகமா காணாம போயிகிட்டு இருக்குது, நம்ம மேற்குத் தொடர்ச்சி மலைகளில். மழைக் காடுகள் ரொம்ப முக்கியம்ங்க நமக்கும் அவனுகளுக்கும், ஏன் இந்த பூமிக்கே!
சரி தள்ளிக்கங்க நான் இலவச டி.வி வாங்கப் போகணும்.
நேசி, கொல்லாமல் கொன்னுப்புட்டைய்யா...அப்படின்னு யாருங்க அங்கன சொன்னது...
Monday, May 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
Excellent Blog!! Really good one!!
Thank Mr.நேசி!!.
//இலவச டி.வி வாங்க போகனும்.//
How do you know the election result?
சிவா, உணமையிலேயே இந்த கட்டுரையை எல்லோரும் படிக்கணுமின்னு நான் பிரியப் படுறேன். அது பேன்றே பின்னூட்டமும் நம் மக்கள் இடலாம், அப்படி இருகாட்சியாரை எங்கேனும் பார்த்திருந்தால். இது பின்னால் நமக்கு உதவக் கூடும் என்பதால், எல்லோரும் படிக்கெணூம்.
ஓ டி. வி மேட்ரா...கிடைச்சா எம்.டிவி...பார்பமில்ல...அதான். :-)
நேசி.
P.S: You are welcome Sivabalan!
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
நன்றி!
நல்ல பதிவுங்க.
இப்படி ஒரு பாவப்பட்ட அப்பாதான் நம்ம பெங்குவின்களும்.
உங்க இமெயில் ஐடியை அனுப்புங்களேன். ஒரு விஷயம் சொல்லோணும்.
அன்பு மதி, தாங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி!
அன்புடன்,
நேசி.
நல்ல பதிவு !
அன்புடன்
சாம்
துளசிங்க எனக்கென்னமோ எல்லோரும் இதப் பத்தி படிக்கிறாங்களான்னு தெரியல.
ஓ, பெங்குவின்களை பத்தி அவ்ளேவா எனக்கு தெரியல.
இந்தங்க பிடிங்க என் இமெயில் ஐடி உங்களுக்கு மட்டும் தெரியிற மாதிரி இன்விசிபில் மந்திர இங்க்ல எழுதுனது...தெரிஞ்சுச்சான்னு சொல்லுங்க...உங்க இமெயில் மூலமா...
karthikprab@gmail.com
அன்புடன்,
நேசி.
Good Blog. Enjoyed reading this.
Thanks 'iyarkai Naesi'
Saம், எங்கேங்க போனீங்க, ஆள் நடமாட்டத்தே காணல. சீக்கிரமா வாங்க!
அன்புடன்,
நேசி.
தேசாந்திரி, தாங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி.
அன்புடன்,
நேசி.
இதை இருகாட்சி என்றா சொல்கிறீர்கள்?
எங்கள் இடத்திலும் இப்பறவையுண்டு.
நாங்கள் 'இருவாட்சி' (சிலர் 'இருவாட்டி') என்று சொல்வோம்.
அதன் இரு அலகுகள் போன்ற அமைப்பைக் கொண்டு 'இருவாய்' என்ற சொல்லோடு ஒட்டி ஏதாவது காரணப்பெயராக இருந்திருக்குமென்று நினைக்கிறேன்.
ஆனா தற்போது மிகமிக அரிதாகிவிட்டது இப்பறவையினம்.
ஆனாலும் மன்னார், புத்தளப்பக்கம் காணக்கிடைக்கும்.
மிக இரசனையான முறையில் அவற்றின் வாழ்க்கையைப் படிப்பித்ததுக்கு நன்றியும் பாராட்டும்.
இப்பறவைகள் அமேசன் காட்டிலும் அவுஸ்ரேலியக் காடுகளிலும் உள்ளன!!!வாழ்க்கை முறை மிக வித்யாசமான பறவை. நான் தொலைக்காட்சியில் பல தடவை பார்த்துள்ளேன். நல்ல கணவனுக்கும் ;தந்தைக்கும் உதாரணம்; மிகச் சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.
யோகன் பாரிஸ்
வசந்தன்,
இதை இருகாட்சி என்றா சொல்கிறீர்கள்?
எங்கள் இடத்திலும் இப்பறவையுண்டு.
நாங்கள் 'இருவாட்சி' (சிலர் 'இருவாட்டி') என்று சொல்வோம்.
அதன் இரு அலகுகள் போன்ற அமைப்பைக் கொண்டு 'இருவாய்' என்ற சொல்லோடு ஒட்டி ஏதாவது காரணப்பெயராக இருந்திருக்குமென்று நினைக்கிறேன்//
:-)) என் பக்கம்தான் தவறு. பெயரை மாற்றி அழைத்திருக்கிறேன். அதனால் தான் அடைப்புக் குறிக்குள் ஒரு கேள்விக்குறியும் போட்டுள்ளேன். சரியாக தமிழ் பெயர் தெரியாததால்.
நீங்கள் கூறியது போல அது *இருவாட்சி*தான். இரு'காட்சியில்லை. தகவலுக்கு நன்றி, வசந்தன்.
ஆனா தற்போது மிகமிக அரிதாகிவிட்டது இப்பறவையினம்.
ஆனாலும் மன்னார், புத்தளப்பக்கம் காணக்கிடைக்கும்.//
ஆமாம், நான் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள படி, அவைகளின் சிறப்பு வாழ்வு முறையே இன்று அப் பறவைகளின் அழிவுப் பாதையில் இட்டுச் செல்கிறது (since, they are so picky in terms of their nesting and feeding behaviors :(
மதி கந்தசாமி அவர்களே,
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
நன்றி!//
நீங்க மே மாதம் எழுதின பின்னூட்டத்திற்கு இன்னிக்கு மறுமொழியுரைக்கிறேன் :-)
நிறைய பேரு படிக்கலையோன்னு மனசு விட்டுப் போச்சு போல அதுதான் இந்தப் பதிவு பக்கமே போகலையோ என்னவோ...
ரொம்ப நன்றிங்க.
யோகன்,
//இப்பறவைகள் அமேசன் காட்டிலும் அவுஸ்ரேலியக் காடுகளிலும் உள்ளன!!!வாழ்க்கை முறை மிக வித்யாசமான பறவை. நான் தொலைக்காட்சியில் பல தடவை பார்த்துள்ளேன். நல்ல கணவனுக்கும் ;தந்தைக்கும் உதாரணம்; மிகச் சுவையாகச்
சொல்லியுள்ளீர்கள். //
இருந்தாலும் இந்த hornbillsகள் நமது மேற்கு மலைத்தொடர்களில் மட்டுமே காண்ப்படுபவை. இருகாட்சி இல்லாது மேலும் ஒரு மூன்று வகை hornbillsகள் உண்டு. இவைகள் Endemic to மேற்கு மலைத் தொடர்.
தாங்களின் தகவலுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி, யோகன்.
ரொம்ப அருமையான் நடையில் ஒரு அற்புதமான endangered species வகைப் பறவையான ‘இருவாட்சி’ அல்லது ‘இருவாயன்’ என்றழைக்க்ப்ப்டும் பறவையைப் பற்றி பதிவு பண்ணியிருக்கீங்க. நானும் நண்பர் கோகுலும் பாண்டிச்சேரியில் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு வண்டலூர் அண்ணா விலங்கியல் பூங்கால போயிப் பாத்தோம்.மனசே சரியில்லே.சொந்தக்காரங்கள புழல் சிறையில பாக்குறாப்ளே இருந்துச்சு.1 மணிநேரம் அவத்திக்கே ஒக்காந்து போட்டோலாம் புடிச்சு MNSக்கு குடுத்தோம்..இதன் சிறப்பே இதன் குரலும்,flight பறக்கும் ஸ்டைலும்தேன்.ரொம்ப நன்றி தெகா..
Post a Comment