Tuesday, May 09, 2006

அபூர்வக் காதல் : சிம்பயோசிஸ்(Symbiosis)

நம் உலகில் நமக்குத் தெரிந்தோ அல்லது சினிமாவிலோ பார்த்திருக்கலாம்; ஒடிப் பஸ்ஸில் ஏறிய லாவகத்தைக் கண்டதும் காதல், தலைக் கேசத்தைக் கோதிவிடும் அழகில் மயங்கிக் காதல், அப்புறம் பார்க்காம காதல், தொலை பேசியிலேயே காதல், ஒரு பார்வைப் பார்த்துட்டா காதல், அட ஏங்க காய்கறி கடையிலே நீங்க வெண்டைக்கா உடைச்சு வாங்கிறதப் பார்த்துட்டு உங்க மேல காதல் வந்ததாகக் கூட காதல் பண்ண வைச்சு மக்கள வியர்வை சிந்த படமும் பார்க்க வைச்சாச்சு.

ஆனா, இன்னிக்கு நாம பார்க்கப் போற காதல், "எதையும் தாண்டிப் புனிதமாக," காலங்களையும் பரிணாமச் சுழற்சியையும் தாங்கி, எந்த வேதிப் பொருளுமோ அல்லது இனக் கவர்ச்சியின்பால் உந்தப்பட்டோ இயற்கை இவர்களுக்கிடையில் அந்த காதலைப் பற்ற வைக்காமல், பற்ற வைத்திருக்கிறது. அது எப்படி இனக் கவர்ச்சி இல்லாத காதல், வாங்க எந்த மாதிரி அபூர்வக் காதலா அது இருக்க முடியும் அப்படிங்கிறதா பார்த்துடுவோம்.

இயற்கையில் எதுவும் சாத்தியமே என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். நம்மால் பார்த்த, தெளிந்த, இன்னும் நமது சிந்தனை ஓட்டத்தில் இருக்கக் கூடிய விசயங்களை மட்டுமே நாம் கிரகித்து அதனை வார்த்தைகளின் மூலம் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், நமக்கு நமது சிறு மூளைக்கு எட்டாத கோணங்களில் இயற்கை இன்னும் எத்தனையோ விசயங்களை கொட்டி வைத்திருக்கிறது.

எல்லமே இங்குதான், நம்மைச் சுற்றிதான் இருக்கிறது. எப்பொழுது ஒரு தனி மனித சிந்தனை அவ்வாறு சிதறிச் தெரித்துள்ள விசயங்களை உராய்விச் சொல்கிறதோ, அங்குதான் பிறக்கிறது ஒரு புதிய கண்டுபிடிப்போ, கோட்பாடோ, அல்லது ஒரு சிக்கலான விசயத்திற்கு தீர்வோ.

எது எப்படியோ, நாமும் எதனையும் புதிதாக கண்டுபிடித்து விடுவது கிடையாது. வெளிக் கொணர்கிறோம் விசயங்கள் முன்பே இங்கு இருப்பதை நமது விழிப்புணர்வின் மூலமாக. அவ்வளவே!

அடடா, சொல்ல வந்த விசயத்தை விட்டுட்டு சுரையில ஆராய ஆரம்பிச்சுட்டனே! அப்படின்னு இன்னேரம் யோசிக்க ஆரம்பிச்சியிருப்பீங்க. சரிங்க, நாம பேசப் போற விசயம் "இயற்கையா எப்படி இரு வேறு வகை உயிரினங்கள் ஒருத்தருக்கு ஒருத்தரு நகமும் சதையுமா, பிண்ணிப் பிணைந்து இருக்கிறாங்க" அப்படிங்கிற விசயம்தான்.

இத பரிணாம உயிரியியல்ல சிம்பயோசிஸ் (Symbiosis) அப்படின்னு சொல்றோம். இப்ப இது இயற்கையில எப்படி நடந்தேறுது அப்படிங்கிறதெ நமக்கு வெளியில (நமக்குள்ளேயும் தான்) பார்க்கிற மாதிரி நடக்கிற விசயங்களை கொண்டு புரிஞ்சுக்குவோம்.

ஆஃப்பிரிக்காவில நமக்கெல்லாம் தெரிஞ்ச வரிக்குதிரை, காண்டாமிருகம், அப்புறம் ஒரு வகை எருமை மாடுங்க இவங்களுக்கெல்லாம் ரொம்ப வேண்டியவரா ஆக்ஸ்பெக்கர்-ங்கிற (எருமைக் கொத்தி - நம்மூர் மைனா மாதிரி) பறவை அவங்க மேல உட்காத்துக்கிட்டு ஓசிச் சவாரி பண்ணிக்கிட்டே, அந்த விலங்குகள் மேல இருக்கிற உண்ணி, அட்டை மற்றும் ஏனைய ஒண்டுண்ணிகளெ கொத்தி சுத்தம் செய்து விடுகிறது.

அப்படி பண்ணும் போது நல்லா கவனிச்சுப் பார்த்தா ரெண்டு பேருமே ரொம்ப நெருங்கிய சொந்தக் காரங்க மாதிரி தோணல? ஆக்ஸ்பெக்கருக்கு வயிறும் நிரம்புது, விலங்குகளுக்கு க்ளீன் உடம்பும் கிடைச்சுது.

அது போலவே நைல் முதலையும் எஷிப்தியன் ப்ளொவெர் பறவையும் இவ்வுறவில பிணைந்து வாழ்றாங்க; அப் பறவை முதலையின் பல் ஈரலை சுத்தம் செய்கிறது மாமிச துண்டுகளை அகற்றி உண்ணுவதன் மூலம்... அங்கும் இருவருமே வின்னர்ஸ்.

நம்ம ஊருலும் பார்த்திருக்கலாம் கால்நடைங்க மேஞ்சுகிட்டு இருக்கும் போது கரைச்சான் குருவி (Drango), அப்புறம் மைனா எல்லாம் அதே மாதிரி செய்வதனை.

இப்ப பெரிச விட்டுட்டு இன்னும் கொஞ்சம் சிறிய உலகத்துக்குள்ள போவோம். இது வண்டுகளும், வவ்வால்களும் பண்ற பூக் காதல் பூக்களிடத்தே. எப்படின்னா, வண்டுகள் உடம்புல நிறைய சின்னச் சின்னதா முடிகள் இருக்கு அதே மாதிரிதான் வவ்வால் மூக்குலயும் (அட மூஞ்சிதாங்க) இருக்கு. இவங்கெல்லாம், பூக்கள்ல அமர்ந்து ச்சூஸ் (தேனு) குடிக்கும் போது நாம பீச்சில ஈரத்தோட படுத்து உருண்டா மண்ணு உடம்பு முழுக்க ஒட்டிக்கிட்டு வரமாதிரி, அதுங்களோட உடம்புல இருக்கிற முடில அந்த பூக்கள்ல இருக்கிற மகரந்தத் தூள் ஒட்டிக்கிது.

அந்த தூளோட நம்மவர்கள் அடுத்த பூவுக்கு விஜயம் பண்ணும் போது அங்க இருக்கிறவங்க எடுத்துக்குவாங்க. அதனை நாம "மகரந்தச் சேர்க்கை" அப்படிங்கிறோம். பாத்தீங்களா ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தரு அண்ணன் தம்பியா (எங்க இப்ப இருக்கிறாங்க அப்படிங்கிறீங்கா...எல்லாம் ஒரு பேச்சுக்குத் தாங்க) இருந்து உதவி பண்ணிகிறாங்க.

இப்போ இன்னும் சிறிய உலகம் ஏன் வெளியயெல்லாம் போய் தேடிக்கிட்டு நமக்குள்ளேயே ஒரு சிம்பயோசிஸ் உலகம் இயங்கிட்டு இருக்குது... எப்படிடான்னு பயந்துட்டீங்களா?

நம்மோட சிறு குடல்ல ஒரு வகை பாக்டீரிய இருக்குங்க, அதுங்க நாம் ஏன் எதுக்குன்னு கேள்வி கேப்பாடு இல்லாம நிறைய சாப்பிட்டோமின்னு வைச்சுக்கோங்க அந்த மிச்சம் செரிக்காத உணவை இவங்கதான் டைசினா-ஆ இருந்து உதவி பண்ணி அடுத்த வேளை ரவுண்ட்க்கு நம்மை ரெடி பண்ணுதுங்க. இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு அன்னியமா இருந்தாலும் இது நம் கூடவே இருந்து கடைசி வரைக்கும் நம்கூடவே வருது (ஓண்ணும் உடம்பு ரிஜெக்ட் பண்ணிடறடதில்லை இவைகளை).

இந்த பாக்டீரியா மட்டுமில்லை நான் மெக்டெனால்ஸ்-அ சாப்பிடற வேகத்துக்கு நிரந்தரமா ஹாஸ்பிடல்லதான் இருக்கணும்.

சரி வந்துட்டீங்க இவ்வளவு தூரம் பொறுமையாவும் படிச்சு வைச்சுட்டீங்க, அப்படியே சொல்லிட்டு போங்க பயனுள்ளதா இருந்துச்சான்னு...

19 comments:

அனுசுயா said...

//நிறைய சாப்பிட்டுடோமின்னு வைச்சுங்க அந்த மிச்சம் செரிக்காத உணவை இவங்கதான் டைசினா-ஆ இருந்து உதவி பண்ணி அடுத்த வேளை ரவுண்ட்க்கு நாம்மெ ரெடி பண்ணுதுங்க.//
புது புது விசயமா, நல்லா சொல்லறீங்க.

கிவியன் said...

நல்ல பதிவு.

இந்த மாதிரி சிம்பயொசிஸ்க்கு இன்னொரு உதாரணம் கூட்டணி கட்சிகள். கிட்டத்தட்ட அந்த ஆஸ்பெக்கர் மாதிரிதான் எங்க உண்ணி, சே, சீட் நெறையா இருக்கோ, இல்ல, குடுக்கறாங்களோ அங்க போயிடும். ஒரு தரம் எரும மேலன்ன இன்னொரு தரம் காண்டாமிருகம் இப்டி. கொள்கையாவது, மக்களாவது.

பிகு: இன்னி தேதிக்கு இப்டி எத பாத்தாலும் அரரியல்தேன். எல்லாம் இந்த தேர்தல் முடிஞ்ச மப்புதேன். அப்டியே மறு-சுற்று பெட்டில போட்டுர மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.

Orani said...

GOVIKANNAN said...

சிம்பு - நயந்தாரா மேட்டருன்னு ஓடிவந்தால், பெருத்த ஏமாற்றம்.
:):):):):):):):):):):):):):):):):):):):):):):):)

Tuesday, 16 May, 2006

Orani said...

அனுசுயா,

படிச்சீங்கள நல்ல இருந்துச்சா. ரொம்ப நன்றீங்க. அடிக்கடி வந்து போங்க...நன்றி!

நேசி.

இலவசக்கொத்தனார் said...

நீங்க சில உதாரணங்கள் கொடுத்து இருக்கீங்க. இது மாதிரி இன்னும் நிறையா இருக்கு. வேற வேற மிருக இனங்கள், பறவையினங்கள், செடி கொடி எல்லாமே இப்படி இணைந்து வாழும் போது ஒரே இனமான மனிதன் மட்டும் அநாவசியமாக ஜாதி, மதம், மொழி என சண்டை போட்டுக்கொண்டு வாழ்வின் பல சுவைகளை இழக்கின்றானே. இவைகளை எல்லாம் பார்த்து திருந்தும் காலம்தான் வராதா?

(நேசி, படித்தவுடன் தோன்றிய முதல் கருத்து இதுதான். பதிவுக்கு சம்பந்தமா இல்லையா தெரியவில்லை. சம்பந்தம் இல்லை என்றால் உங்களுக்கு பிடிக்காதென தெரியும். கோபப்படாமல் இவன் இப்படித்தான் என விட்டுவிடுங்கள்.)

Anonymous said...

வித்தியாசமான,'விசயங்கள்' கொண்ட
பதிவு.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.

KK said...

பள்ளிக்காலத்தில் பயின்றது.. நினைவூட்டலோடு சுவாரஸ்யமாகவும் தந்திருக்கிறீர்கள். இது போன்ற விஷயங்களை எங்கள் உயிரியல் ஆசிரியர் அனுபவித்து சொல்வார். இயற்கை பொதித்து வைத்திருக்கும் விஷயங்கள் வேறு என்னென்ன என்று தேடத் தோன்றும். மேல்நிலையில் உயிரியல் படிக்கத் தவறியவர்கள் இயற்கையின் அதிசயங்கள் பலவற்றை miss செய்திருப்பார்கள்.
தொடர்ந்து இது போன்ற விஷயங்களை தாருங்கள்.. நன்றி.

நன்மனம் said...

சமூகத்துக்கு தேவையான, ஒத்து வாழ் அப்படீங்கற, கருத்தை இயற்கையோடு எனச்சு அருமையா கொடுத்திருக்கீங்க.

அழகா ஆரம்பிச்சு அழகா புடிச்சு அழகா முடிச்சிருக்கீங்க.

Orani said...

வாங்க கிவியாரே,

முதல் முறையா இந்த பக்கம் வந்திருக்கீங்க, உங்கள பார்த்தா நீங்க நியூ Zலாண்ட்-ல இருந்து நடந்தே வந்திருப்பீங்க போல (ஹி...ஹி...கிவி பறவை பறக்கிறது இல்லையா அதான்..)

ரொம்ப அருமையா நீங்க கோத்து நான் சொல்ல வந்ததோட இன்றைய சிம்பயொசிஸ் முறைய விளக்கினத்துக்கு நன்றி. ரொம்ப நகைச்சுவையாகவும் சிந்திக்கும் படியும் இருக்கு நீங்க சொன்ன விசயம்.

//ஒரு தரம் எரும மேலன்ன இன்னொரு தரம் காண்டாமிருகம் இப்டி. கொள்கையாவது, மக்களாவது.//

:-))))

//அப்டியே மறு-சுற்று பெட்டில போட்டுர மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.//

அது எதப்பத்தி பேசுகிட்டு இருக்கீங்க...? சொல்லுங்க போட்டுடுவோம்.

Nesi.

Orani said...

கோவி,

இப்படி சின்னப்புள்ளக் கணக்க ஏமாந்து போயிட்டீங்களே? சரி வுடுங்க தெரிஞ்சுகிட்ட செய்தி எப்பனாத்துக்கும் உங்களுக்கு உதவலாம்... அடிக்கடி வந்து போங்க

எப்படியோ நிரைய சிரிச்சு வைச்சிருங்கீங்களே அதுக்கெல்லாம் இப்ப பைசா கொடுக்கணுமாமே, அப்படியா?

நேசி.

தேசாந்திரி said...

தமிழ் National Geographic Channel தரும் இயற்கை நேசிக்கு நன்றி.

Sivabalan said...

நேசி,

மீன்டும் நல்லதொரு பதிவு!!

// பரிணாம உயிரியியல்ல சிம்பயொசிஸ் (Symbiosis)//
இந்த விசயத்தை மிக எளிமையாக புரியும்படி சொல்லியிருக்கீங்க!!


இதை படிக்கும் போது, இந்த விசய்த்த வெச்சு, மனித உடலில் இருக்கும் தீர்க்க முடியாத நோய்களுக்கு ஏதாவது ஆராய்ச்சி நடக்கிறதா?

Orani said...

வாங்க இ.கொ,

நிறைய இது போன்ற சிம்பயொடிக் உறவுகள் பல நிலைகளில் பல உயினங்களிடத்தே காணப்படுகிறது. கடலில் வாழும் ஒரு வகை மீனுக்கும் சீ அனிமோன் (கடல் தாமரை?) என்ற இருவருக்குமிடையே இது போன்ற காதலிக்ருகிறது. இன்னும் எங்கெங்கோ...

//ஒரே இனமான மனிதன் மட்டும் அநாவசியமாக ஜாதி, மதம், மொழி என சண்டை போட்டுக்கொண்டு வாழ்வின் பல சுவைகளை இழக்கின்றானே.//

இது போன்ற என்னச் சிதறல்கள்தான் உங்களின் தாக்கமாக என்னிடத்தே இப் பக்கத்தில் விட்டுச்செல்கிறீர்கள் எனக்காகவும் மற்றவர்களுக்காவும்.

கோபமெல்லாம் வரலாமா? சும்மா ஒரு இதுதான்... வாங்க இங்கன அப்பபெப்போ ஏதானுச்சும் பேசிக்கிட்டு இருக்கலாம்.

நேசி.

Orani said...

துபாய் ராஜா,

நன்றிகள் உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்களுக்கும். வந்து வந்துப் போங்க.

நேசி.

Orani said...

உண்மை,

அன்பரே எனது பள்ளி நாட்களிலும் ஒரு தாவரவியல் ஆசிரியர் ஒருவர் இருந்தார், அவர் தனது தொழிலுடன் வாழ்ந்தார் என்றுதான் கூற வேண்டும்.

பலாப் பழம் ஒரு கூட்டுக் கனி என்பதனை விளக்க ஒரு பலாப் பழத்தை அந்த க்ளாஸ் முழுதுமே பணம் போட வைத்து பிறகு வாங்கி, வெட்டி எல்லொரிடத்தும் பாஸ் பண்ணவைத்துப் பார்க்கச் சொல்லி பிறகு திண்ணு தீர்த்தது, இன்னும் பசுமையாக 15 வருடங்களுக்கு பிறகும். அதுவல்லவா டீச்சிங்... :-)))

கொடுக்க முயற்சிப்போம்... நன்றி தாங்களின் ஊக்கத்திற்கு!

நேசி.

Orani said...

நன்மனம்,

அஹா என்ன அருமையா பராட்டி இருக்கிறீங்க... நீங்களே பாருங்களேன்...

//அழகா ஆரம்பிச்சு அழகா புடிச்சு அழகா முடிச்சிருக்கீங்க.//

நீங்க சொன்னதிற்கு பிறகுதான் நான் எழுதினதே திரும்ப ஒருமுறை படிச்சி பார்த்தேன், அட அப்படியா அப்படின்னு இருந்துச்சு ;-)))

சரி, பிடிச்சுருக்கு அப்படின்னு வேற சொல்லிட்டீங்க அடிக்கடி வரணும்...

நேசி.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

நீங்கள் சொல்லும் தகவல்கள் என்னைப் போன்றவர்களுக்கு புதியது. அருமை!

Orani said...

கல்வெட்டு,

//நீங்கள் சொல்லும் தகவல்கள் என்னைப் போன்றவர்களுக்கு புதியது. அருமை! //

தாங்களின் பாரட்டுதலுக்கும் ஊக்கத்திற்குக் நன்றி. இப்பெல்லாம் உங்களை தமிழ் மணத்தில் அடிக்கடி பார்க்க முடிவதில்லை, ஏன்? எனக்கும் சில நேரங்களில் அப்படித்தான் வெறுத்து வருகிறது. இருப்பினும் ஒரு மனத் திருப்திக்காகவது செய்து வைப்போம் என்று கருதிதான்.

பொன்ஸ்~~Poorna said...

என்ன நேசி, வெறுத்துடுச்சு அது இதுன்னு சொல்றீங்க?!! நம்ம பதிவு - பின்னூட்டம் - பின்னூட்டம் போட்டவங்க பதிவு சைக்கிள் கூட ஒரு சிம்பயாஸிஸ் தானே?..

பிடிச்ச விஷயத்தை எடுத்துகிட்டு உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தை விட்டுடுங்க..

Related Posts with Thumbnails