இது ஒரு சுவாரசியமான உண்மைக் கதைங்க! உண்மையிலேயே காட்டுக்குள்ள ஒரு ஒத்தக் கொம்பு ஆண் யானையை நேருக்கு நேரா பார்த்த அனுபவத்தை உங்ககூட இன்னிக்கு பிச்சிக்கப் போறேன்.
அன்னிக்குன்னு என்னைக்குமில்லாமல் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்துருச்சு எப்பொழுதும் போல குளிக்காம ஒரு காக்கி கலரு அழுதுவடியர மேல் சட்டையும், லைட் பச்சை கலரு பேண்ட்ஸ்ம் போட்டுகிட்டு என் ட்ராக்கர்-வோட எப்பொழுதும் மாடு (அதான் காட்டெருமை) மேய்க்கிற எடத்துக்கு போறதா கிளம்பிக்கிட்டு இருந்தோம்.
அன்னைக்குன்னு எனது சக ஆராய்ச்சி நண்பனும், நானும் உன் கூட வரேன்டா அப்படின்னு என்னோட சேர்ந்துகிட்டான். மூணு பேருமா சேர்ந்து நடக்க ஆரம்பிச்சோம். போற வழி நெடுக முடிஞ்ச அளவுக்கு புதுசா ஏதாவது பறவைங்க கண்ணுல காதுல தட்டுப் படுதான்னும் பார்த்துக்கிட்டெதான்.
அது ஒரு மாதிரியான சுகங்க! சொன்னா புரியாது. அனுபவிச்சு பார்த்ததான் முழு பரிமாணமும் பிடிபடும். நாங்க நோக்கி போயிகிட்டு இருக்கிற இடம் ஒரு புல் மேடுங்க அதுக்குப் பேரே 110 ஏக்கர் புல் மேடுதான்.
அங்கதான் இந்த காட்டெருமைங்க கூட்டமா வந்து மேஞ்சுகிட்டும், படுத்து ரெஸ்ட் எடுத்துகிட்டும் இருப்பானுங்க. விடியகாத்தால சீக்கிரமா அந்த எடத்துகிட்டே போயாச்சுன்னா கொஞ்சம் பேரயாவது நாம கண்டிப்பா பிடிச்சுருலாம் அங்க வச்சு.
ஏன்னா, அவனுங்க ராத்திரி நேரத்தில ஒய்வுவெடுக்க அப்படி திறந்த வெளி மைதானம இருக்கிறதத் தான் விரும்புறாங்க. ஒரு சேஃப்டிக்காக! அதான், நாங்களும் அத புரிஞ்சுகிட்டு அங்க போயி அவங்க எல்லாம் கிளம்பி இடத்த மாத்துறத்துக்குள்ள பிடிச்சுட்டா அவங்கள பின்னாலேயே வால் பிடிச்சுகிட்டு அலையலாம் பாருங்க.
இப்ப நம்ம கதைக்கு வருவோம். அன்னிக்கு ஒரு குறுக்கு வழியை (என்ன குறுக்கு வழி நேர் வழி காட்டுக்குள்ள வேண்டி கிடக்கு அப்படிங்கிறீங்க) பிடிச்சிகிட்டு லேட் ஆவுறத்துகுள்ள போயிடுவோம்மின்னு ஒரு அடர்ந்து இருக்கிற மூங்கில் தோப்புக்குள்ள புகுந்து நடக்க ஆரம்பிச்சோம்.
ஒரு 15 நிமிஷம் நடந்திருப்போம், எங்களோட ட்ராக்கர் யானை அந்த வழியா நடந்துப் போனதிற்கான சில அறிகுறிகளெ கவனிச்சுட்டாரு நல்லா துலாவிப்பார்த்துட்டு; சார், இந்த வழியா ஒரு யானை போயிருக்கிற மாதிரி தெரியுது, ஆனா, எப்பொழுதுன்னு தெரியாலயே சார் அப்படின்னு சொன்னார். இன்னும்மொரு 10 நிமிஷ நடை சடச் சடன்னு ஒரு மரக்கிளை ஒடைஞ்சுப் போன சத்தம்.
எல்லாம் அப்படியே ஒரு நிமிஷம் சொல்லி வைச்ச மாதிரி உறைஞ்சுப் போயி காத மட்டியும் தீட்ட ஆரம்பிச்சாச்சு எந்த பக்கமிருந்து சத்தம் வந்ததுச்சு அப்படின்னு பார்க்க. கொஞ்ச நேரம் அப்படியே ஒருத்தரும் பேசாம, ட்ராக்கர் சமிக்கை கொடுக்கிற வரைக்கும் பொறுத்துருந்துப்புட்டு, திரும்ப கொஞ்ச தூரம் நடந்திருப்போம்...அவ்ளோதான்.
அங்கே நிக்கிறார் நம்ம பிள்ளையாரு அப்படியே சிலையாட்டம் அலர்ட் ஆகி காதெல்லாம் விடைச்சுகிட்டு வால தூக்கிட்டு எங்கள நோக்கி உர்ர்ர்ன்னு கோபத்தோட பார்த்துகிட்டு இருக்கிறார்.
எங்களுக்கு வேற சிவ்வுன்னு அட்ரீனலின் எகிற ஆரம்பிச்சுடுச்சு. ஏன்னா, அந்த பிள்ளையாரு வேறத் தனியாளு (கூட்டத்தோட இருந்தா அவ்ளோ பயமில்ல), ஒரு 15-20 வயசுக்குள்ளதான் இருப்பாரு, இப்பவே வலது தந்தத்தோட முனைவேற ஒடைஞ் போயிருக்கு, முதல் முறையா காதல் கிறுக்கு பிடிச்சியிருக்கவும் வாய்ப்பு அதிகம். இந்த மாதிரியான நேரத்தில நம்ம பிள்ளையாருக்கு டக் டக்குன்னு கோபம் வேற வரும், சின்ன புள்ளைக்கு வர மாதிரி (அவன் சின்னப் புள்ளைதானே...).
இப்ப என்ன பண்றது, அப்படின்னு பேசாம பேசணும், உடம்ப ஆட்டி கீட்டி வைச்சு அவன உசுப்பு ஏத்த வேறக் கூடாது. நாமும் அப்படியே நிக்கிறோம் அவனும் நிக்கிறான்.
கடைசியா நம்ம ட்ராக்கர் சன்னமான குரலில், சார், கடைசியா நிக்கிற சார்... (என் நண்பந்தான் கடைசியா நின்றான்) நான் ஒரு ஆக்டு வுடப் போரேன் அவன் பயந்து ஓடினா ஓடட்டும் இல்லென்னா அப்படியே பின்னால திரும்பி ஓட ஆரம்பிச்சுடுங்க அப்படின்னு சொல்லிட்டார்.
நாங்களும் ரெடியாகிட்டோம் சூட்டுக்கு காதெல்லாம் தக தகன்னு கொதிக்குது. இப்ப நம்மாளு பயங்கரமான ஒரு சத்தத்தோட கையில வைச்சிருந்த அருவாள தூக்கிபோட்டு கத்தினாரா அவ்ளோதான் நம்ம பிள்ளையாரு அதுக்காகவே வெயிட் பண்ணிகிட்டுருந்த கணக்கா பிளிருனாரு பாருங்க ஒரு அடி முன்னே வைச்சு, நாங்க வந்த திசை திரும்பி ஓட்டமின்னா அப்படி ஒரு ஓட்டம் நம்மூரு பி.ட்டி உஷா அன்னிக்கு அப்ப எங்ககிட்ட தோத்துருப்பாரு அப்படி ஒரு ஓட்டம்.
கண்ண மூடிக்கிட்டு போனா, பின்னால வந்து யாரோ தொட்ட மாதிரி ஒரு உணர்வு எனக்கு கொஞ்சம் பயம் கழுத்த திருப்பி ஓடிக்கிட்டேதான் பார்த்தா, பிள்ளையாரு! ஒரு மூங்கில இழுத்து போட்டுருக்காரு அது வந்து சாய்ந்து அதோட நுனி நம்ம மேல பட்டிருக்கு அப்படின்னு தெரிஞ்சவுடன், அடப் போங்கப்பா அப்படின்னு இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி ஓடினா, அப்பத்தான் நாம நிஜ பிள்ளையாரு ஒரு பெரிய பள்ளத்த காமிச்சு உள்ளே பசங்களா தாவி ஓடி பிழைசுக்கங்டான்னு வழிய காமிச்சாரு.
யானை கொஞ்சம் சைஸ்ல பெரிசு இல்லையா, நல்ல சறிவான அல்லது மேட்டுப் பாங்கான இடமா இருந்தா நல்லா யோசிச்சுத்தான் கால எடுத்து வைப்பாரு சறிக்கி விட்டுடும் அப்படிங்கிற பயத்தில. ஆனா, நாம சின்ன உடம்பு பாலன்ஸ் பண்ணிகிடுவோம் அந்த மாதிரி சமயத்தில அதுவும் உயிர் பயம் வேற இல்லையா, குதிச்சுட்டோம்.
நல்ல சறுக்கான பள்ளம் நிறைய குத்துச் செடி கொடிகளோட அதில வேற ஒரு வகை முள்ளுச் செடி wait-a-bit_ன்னே பேரு கோத்து பிடிச்சு நிக்க வைக்கும், இந்த நேரத்தில நின்னு எடுத்து விடவா முடியும் நல்லா கிழிச்சு வைக்க ஓரே ஓட்டந்தான்.
பிள்ளையாரு மேல நின்னு ஒரே ஆர்ப்பாட்டம். மண்ணெ உதைச்சு தள்ளிக்கிட்டு பிளிரிகிட்டு நிக்கிறான். நாங்க ஒரு 300 அடி தூரத்தில போயி நின்னுதான் திரும்பியே பார்த்தோம். அப்பாட நல்ல வேளை கீழே இறங்க ஆயத்தப்படலே அப்படின்னு நாம நிஜ பிள்ளையாருக்கும் ஒரு நன்றிய சொல்லிப்புட்டு, வேற பக்கமா நடையைக் கட்டி, மிச்ச மிருந்த நேரத்தை பறவைங்கள பார்க்கிறதில சிலவு செஞ்சோம்.
என்ன இருந்தாலும் அன்னிக்கு நடந்ததெ எங்கள்ல யாருமே கண்டிப்பா எப்பவுமே மறக்க முடியாது இல்லீங்களா? அது ஒரு சுவையான இன்ப அதிர்ச்சி, உங்ககிட்ட பகிர்ந்துக்கிற அளவுக்கு.
Saturday, May 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
>>நாங்க வந்த திசை திரும்பி ஓட்டமின்னா அப்படி ஒரு ஓட்டம் நம்மூரு பி.ட்டி உஷா அன்னிக்கு அப்ப எங்ககிட்ட தோத்துருப்பாரு அப்படி ஒரு ஓட்டம்.<<
அடப் பயந்த பசங்களா...இப்படியா ஓடுவீங்க உயிருக்கு பயந்து :-) நான இருந்த அங்கேயே மாரடைப்பில செத்துப் போயிருப்பேன்...ஹி..ஹி..ஹி
சாருமதி.
ஹய்யோ, பயங்கர த்ரில்தான்!
இதெல்லாம் வாழ்நாளிலே மறக்கற சம்பவமா என்ன?
கடவுள் நிஜமாவே காப்பாத்திட்டார்தான்.
ஆனா படத்துலே இருக்கறது 'அவரே'தானா?
நல்லா இருக்கு!
எப்பா "நான் செத்து பொழச்சவண்டா...." அப்படினு பாடிநீங்களா இல்லயா?
//அடப் பயந்த பசங்களா...இப்படியா ஓடுவீங்க உயிருக்கு பயந்து :-) நான இருந்த அங்கேயே மாரடைப்பில செத்துப் போயிருப்பேன்...//
அதே அதே.
நல்ல படைப்பு, எழுத்து நடை.
நேசி!!
ஒறே திகிலயிருக்குது!!
நல்ல பதிவு!!
நேசி!!
ஒறே திகிலயிருக்குது!!
நல்ல பதிவு!!
நல்ல அனுபவம் இது பொன்னியின் செல்வன் கதையில் வரும் சம்பவம் போலவே உள்ளது.
தங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை.
சாருமதி,
இத மட்டும் படிச்சவுடனே, அட :-0 அப்படின்னு இருந்துச்சு,
//அடப் பயந்த பசங்களா...இப்படியா ஓடுவீங்க உயிருக்கு பயந்து :-)//
இதெ எழுதி என் மானத காப்பத்திட்டீங்க...
//நான இருந்த அங்கேயே மாரடைப்பில செத்துப் போயிருப்பேன்...ஹி..ஹி..ஹி//
நன்றியோ நன்றி...பின்னூட்டமிட்டு சென்றதற்கு.
நேசி.
110 ஏக்கர் புல்வெளியா? நம் ஊரிலா? எங்க இருக்குதுங்க?
இந்த பதிவைப் பற்றி நோ கமெண்ட்ஸ்! வயிற்றெரிச்சலில் விரல்கள் தட்டச்சு செய்ய மறுக்கின்றன :-)
அது சரி, என்னமோ பெண்கள் காடு, மலை ஏறுதலில் புகுந்து விளையாடுகிறார்கள் என்று முதல் பதிவில் சொன்னீர்களே, அதைக் குறித்து விவரம் ப்ளீஸ்
உங்க பதிவு தந்த டென்ஷனில் படிச்சு முடிச்சுட்டு வெளியே வந்தா, சாருமதி செம ஜோக்கு ஒண்ணு அடிச்சிட்டாங்க.. :-)
துள்சிங்க...
இதே மாதிரி ஒரு தபா காட்டெருமைங்ககிட்டயும்ம் வாங்கி கட்டியிருக்கோம்...அது பின்னாலெ வந்துகிட்டேடேடே இருக்கு!
ஆங்கிலதில சொல்லுவாங்க இல்லையா near death experience-ன்னு அது இதுதானோ...உயிர கையில புடிச்சிக்கிட்டு ஓடுறது.
அந்த படம் சுட்டதுங்க...நிஜ ஆசாமி இல்லெ...அவன் அவன் உயிர் பிழைக்க தப்பி ஓடும் போது ஃபோட்டோ ஒண்ணுதான் கேடு :-))
வாங்க அடிக்கடி இங்கன காத்து வாங்க...கையில ஒரு கப் காப்பித் தண்ணியோட...
நேசி.
"சரிதான் நாம இன்னிக்கு காலி"ன்னு தோணியிருக்குமே!
நல்ல வேளை தப்பிச்சீங்க! இல்லாட்டி நாங்க இன்னிக்கு இதையெல்லாம் படிக்க முடியுமா?
:-)
//அவன் அவன் உயிர் பிழைக்க தப்பி ஓடும் போது ஃபோட்டோ ஒண்ணுதான் கேடு//
அப்படியே நின்னு நல்லா போஸ் குடுக்க
சொல்லி "ஸ்மைல் பிளீஸ்"னு சொல்லியிருந்தா சந்தோஷப்பட்டு விதவிதமா போஸ் குடுத்திருப்பாரே!
மிஸ் பண்ணீட்டிங்க நண்பரே!
//அடப் பயந்த பசங்களா...இப்படியா ஓடுவீங்க உயிருக்கு பயந்து :-) நான இருந்த அங்கேயே மாரடைப்பில செத்துப் போயிருப்பேன்...ஹி..ஹி..ஹி
//
திகிலோட படிச்சவங்களுக்கு ரிலாக்ஸா ஒரு நல்ல காமெடி!
:-)
நம்ம சர்தார்ஜி கணக்கா லெஃப்ட்ல சிக்னல் போட்டுட்டு ரைட்ல ஓடலாம்ல!
யானையாரும் அதை நம்பி லெஃப்ட்ல விரட்டிகிட்டு போயிருப்பாரே!
ஜீவா...
வாங்க வாங்க இங்கன முதல் முறைய வீடு மிதிச்சிருக்கிய என்ன சாப்புடுறீங்க... உடும்பு கறி, கீரிப் புள்ளை, மான் கறின்னு கேட்டு வைக்காதீங்க...
ஆளு காட்டுக்குள்ள இருந்து எஸ்கேப் ஆயி வந்திருக்கான்னு பார்த்து. அதெல்லாம் ஒரு காலமுங்க...
இப்ப எஞ்சாய்!
நன்றி, ஜீவா...
நேசி.
நன்மனம்,
//எப்பா "நான் செத்து பொழச்சவண்டா...." அப்படினு பாடிநீங்களா இல்லயா?//
அப்போ வாய் வழியா என்னோட இதயம் எட்டிப் பார்த்துட்டு திரும்ப அதோட இடத்துக்கே போயி செட்டில் ஆயிடிச்சு... அப்ப பாட தோணல...
இந்தோ இப்ப நீங்க எனக்காக டி.எம்.ஸ் குரல்லெ அந்தப் பாட்ட பாருங்க...ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. :-))
நன்றி நன்மனம்... உங்கள் மேலான நல்வரவையும் நல்கும் நேசி குடும்பம் (யாரு எல்லாம் யானை, குரங்கு, அணிலு...)
நேசி.
சிவா,
எங்கேங்க போயிட்டீங்க...நானும் நீங்க வர வழி தோடி காத்துக் கிடக்கேன்...
இப்படி தனியா விட்டுப்புட்டு பொயித்தியலே...
இது எங்க நடந்திருக்குமுன்னு உங்களாள யூகிக்க முடியுதா...
தெகா.
நேசி,
உள்ளேன் ஐயா!
நீங்க சொன்ன இடம் தெரிந்தது!! பதிவு படிக்கும்போதே இடம் தெரிந்ததால் திகில் அதிகமாயிடுச்சு!
ஒத்த ஆனைகட்ட தப்பிச்சது பெரிய விசயம்!! ஒரு வேளை இயற்க்கை நேசி விட்டுச்சோ என்னவோ!!
சிவா,
எங்க உங்க யூகத்தை என்கிட்ட கொஞ்சம் பகிர்ந்துக்கெங்க பார்ப்போம்...
நான் ஒரு clue கொடுக்கேன்...பொள்ளாச்சிக்கு பக்கமா இல்லெ ஊட்டிக்கு பக்கமா... இல்லெ கலக்காடு பக்கமா???
மாட்டுனீகளா...?
நேசி,
அந்த யானை உங்கள மறுபடியும் பார்த்துன்னா அவ்வளவுதான்!!
( நேசி, உன்மையாகவே யானைக்கு நியாபக சக்தி அதிகமா!)
I will answer for the question, please wait!
நேசி,
1. டாப் சிலிப்
2. ஆனைகட்டி
3. வால்பாறை
அனுசுயா,
நீங்கள் என் வீட்டு பக்கம் முதல் முறைய வந்ததிற்கு பிறகுதான் (நீங்க "மணத்தில" இருக்கிறதே தெரியும்) உங்க பக்கம் போயி பார்த்தேன் நீங்கள் என் நண்பனே ஒரு பாறையில உட்கார்ந்து இருக்கிற மாதிரி ஒரு ஃபோட்டோவும் பிடிச்சு நல்ல ஆழமான விசயங்களையும் எழுதியிருந்தீர்கள்.
கோவையா உங்களுக்கு சொந்த ஊரு? எனக்கு ரொம்ப வேண்டிய ஊருக்காரங்களா ஆயிப்பூட்டிங்க அடிக்கடி இனிமே இங்கே வந்து போங்க.
//நல்ல அனுபவம் இது பொன்னியின் செல்வன் கதையில் வரும் சம்பவம் போலவே உள்ளது.//
நான் நிஜமா படிச்சதே இல்லைங்க. ரொம்ப சந்தோசம இருந்தது, நீங்க சொன்னது கேக்கிறதுக்கு.
//தங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை.//
ரொம்ப நன்றி!
நேசி.
வாங்க உஷா,
ஏங்க எப்பப் பார்த்தாலும் ஏங்கிப் போறீங்க காட்டுக்கு போறதப் பத்தி...அவ்ளொ ஆர்வமா உங்களுக்கு?!
நீங்களும் ட்ரெக்கிங் போகலமே, மனமிருந்தால்...
//110 ஏக்கர் புல்வெளியா? நம் ஊரிலா? எங்க இருக்குதுங்க?//
நம்மூருலதான் தெரியுமே பூனைய பார்த்திட்டு நான் புலியே பார்த்திட்டேன்னு சொலிடுவோம்ல...அதெ மாதிரி தான் 110 ஏக்கர் புல்வெளியின் அளவீடும், அனேகமா நான் சொல்றதினுடைய சைஸ் வந்து தோராயம ஒரு 25 ஏக்கர் இருக்கும், ஆனா ஒரு குத்து மதிப்பா எப்படியோ அதுக்கு 110 ஏக்கர்னு ஆயிடுத்து.
இருப்பினும் க்ராஸ் ஹில்ஸ்ன்னு ஒரு இடம் இருக்குங்க அது கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் புல்மேடு புல்மேடுதான். திருடா திருடா படம் அங்கேதான் சில பாடல் காட்சிகள் எடுத்துருப்பாங்க. ஒரு இடத்தையும் தான் விட்டு வைக்கிறது இல்லையே, நிம்மதியா.
//அது சரி, என்னமோ பெண்கள் காடு, மலை ஏறுதலில் புகுந்து விளையாடுகிறார்கள் என்று முதல் பதிவில் சொன்னீர்களே,//
இதற்கென கல்லூரிகள் டோர டூனிலும், மாயூரம் மற்றும் அண்மைக் காலத்தில் பெங்களுரிலும் தொடங்கப் பட்டுள்ளது. நிறைய பொண்ணுங்க அதப் படிச்சிட்டு களப்பணியும் செய்கிறார்கள், வால்பாறை, டாப் சிலிப் போன்ற காடுகளில்...
மீண்டும் வருக நல் ஆதரைவைத் தருக!
அன்புடன்,
தெகா.
தருமி ஐயா,
அவன் அவன் உயிருக்குப் போரடி ஒடிச் செயிச்ச உங்களுக்கு ஜோக்கு கேக்குது ஜோக்கு, தமிழ் சினிமால வர மாதிரி ரொம்ப படம் பார்ப்பீகளோ? ;-) ஒரு சண்டை, செண்டி, அப்புறம் சிரிப்பு...நல்லாத்தான் இருக்கு காம்பினெ... அதே மாதிரி எழுதலமோ!
நன்றி தருமி...
நேசி.
எல்லாருக்கும் பதில் பின்னூட்டம் இடுவாராம்! நமக்கு மட்டும் சைலண்ட் ஆய்டுவாராம்! நல்லா இருக்கே கதை!
வேற என்ன, பாலைவனத்துல உட்கார்ந்திருப்பவங்களுக்குத்தான் காடு, இயற்கை அழகு எல்லாம் நல்லா புரியும்.
இப்படிக்கு,
UAE வாசி
சிபி சாரே,
இருமைய்யா, எல்லோரும் படிக்கப் படிக்க உமக்கு நான் சொல்லுவேன் நன்றி... கொஞ்சம் லேட்-ஆ சொன்னாலும் சும்மா நறுக்கின்னு சொல்லுவான் இந்த நேசி... இருந்தாலும் உமக்கு கிண்டல் அதிகமப்பு ;-) அவன் அவன் உயிர் பொழைச்சது தம்புரன் செயல்ன்னு ஒடிப் பொழச்சா உமக்கு...
//அப்படியே நின்னு நல்லா போஸ் குடுக்க
சொல்லி "ஸ்மைல் பிளீஸ்"னு சொல்லியிருந்தா சந்தோஷப்பட்டு விதவிதமா போஸ் குடுத்திருப்பாரே!
மிஸ் பண்ணீட்டிங்க நண்பரே//
ஒரு போஸ்லதான் திருப்தி இல்லையாக்கும்.... இன்னும் நாலு பின்னூட்டம் இருக்குதய்யா... அம்புட்டு சிரிப்பு உமது எழுத்தில... வந்து வந்து போங்க... மக்கள் படிக்ப் படிக்க போடுவோம் சிபி... ;-)))
நேசி.
உஷா,
அடெடா, உங்க கதையும் அப்படி ஆயிருச்சா... அதுவும் பாலைவனத்துல...
இங்க மட்டும் இப்ப என்ன வாழுதாம்... நீங்க வெறும் மண்ணெ பார்த்துக்கிட்டு இருப்பீங்க...நான் ஒரு ஹைவேல போற வாற காரெல்லாம் எண்ணிக்கிட்டு தேமென்னு உட்கார்ந்துருக்கென்.
எல்லாம் நேரந்தே போங்க... வாந்து போங்க இங்கன அடிக்கடி...கண்ணுல பாலைவன மண்ணு கிண்ணு வந்து பட்டுறம பார்த்துக்குங்க :-)))
நேசி.
சிபி,
எங்கய்யா கத்துகிட்டீரு இந்த கிண்டல் அடிக்கிற கமெடிய, நீவீர் இங்க வந்து கொஞ்சம் கொஞ்சம் மக்கள ரிலாக்ஸ்-ஆ வச்சிகிறது நல்லதுய்யா...
//நம்ம சர்தார்ஜி கணக்கா லெஃப்ட்ல சிக்னல் போட்டுட்டு ரைட்ல ஓடலாம்ல!
யானையாரும் அதை நம்பி லெஃப்ட்ல விரட்டிகிட்டு போயிருப்பாரே!//
அது தூளப்பா...நல்லதொரு டைம்லி நகைச்சுவை...!! நான் நல்ல சிரிச்சு வைச்சேன்.... ;-)
நேசி.
சிவா,
எங்ககெங்க என்னமோ சொன்னீங்க இப்படி.....
//( நேசி, உன்மையாகவே யானைக்கு நியாபக சக்தி அதிகமா!)
I will answer for the question, please wait!//
அப்புறம் வந்து ஒண்ணுமே சொல்லலே... நான் இங்கன திரும்ப வருவீங்கன்னு பார்த்துகிட்டுதான் இருக்கேன்...
நேசி.
நேசி,
உன்மையாகவே யானைக்கு நியாபக சக்தி அதிகமா?
அந்த கேள்வி உங்களுக்கு!
நான் பதில் சொல்ல வந்தது
1. டாப் சிலிப்
2. ஆனைகட்டி
3. வால்பாறை
நம்ம பசங்க நிறையா பேரு பொண்ணு பாத்துட்டு வந்து சொன்ன கதை மாதிரியே இருந்திச்சேப்பா.
என்ன அவங்கள்ல நிறையா பேரு யானைகிட்ட மாட்டிக்கிட்டாங்க.
உண்மையாச் சொன்னா மாட்டிகிட்டாங்க. அப்புறம்தான் அவங்க மாட்டிக்கிட்டது யானைகிட்டன்னே தெரிஞ்சுது.
நீங்க பள்ளத்தில குதிச்சு தப்பிச்சுட்டீங்க. நம்ம பசங்க மாட்டிகிட்டதால பள்ளத்துல விழுந்துட்டதா சொல்லறாங்க.
=))
நேசி,
என்ன பதிலையே கானம்!!
எந்த இட்த்தில் நடந்ததுன்னு சொல்லுங்க!!
சிவா,
நடந்த இடம் வந்து டாப் சிலிப்.
//உன்மையாகவே யானைக்கு நியாபக சக்தி அதிகமா?//
அப்படியெல்லாம் ஒண்ணும் பெரிய வித்தியாசம இல்லையென்று கருதுகிறேன். ஆனா விலங்குகளுக்கே உரித்தானது innate behavior-ன்னு ஒண்ணு உண்டு. அதனை வச்சுதான் இந்த வலசை போதல் (migration seasonally) இடம் விட்டு இடம் போறது. உ. தா: முதுமலை காடுங்கள்ள இருக்கிற யானைங்க கோடை காலத்தில பந்திபூர் மாதிரியான கர்நாடக காடுகளுக்கு போறதெல்லாம்.
நேசி.
நேசி,
நன்றிங்க!!
டாப் சிலிப், பேயரைக்கேட்கும் போது சும்மா ஜில்லுன்னுயிருக்குது!!
எபப்டிங்க, நான் இடத்தை சரியாக சொல்லிட்டன் பார்த்தீங்களா!!
யாருங்க அந்த ட்ராக்கர் ? ஆறுமுகமா ?
தெகா, கடைசியா நான் இதைப் படிச்சிட்டேங்க.. பயங்கரத் திகில் கதையா போய்டுச்சு.. இப்போ தான் புரியுது என்னோட யானை ஓடுறதைப் பார்த்து நீங்க ஏன் பயப்படறீங்கன்னு.. பயப்படாதீங்க.. நம்மாள் குட்டியானை.. ரொம்ப பாசமான யானை :)
உஷா, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து காட்டுக்குப் போய் சுத்திப் பார்க்கலாங்க.. எனக்கும் ட்ரெக்கிங் போகணும்னு ரொம்ப நாளா ஆசை... நடக்கத் தான் மாட்டேங்குது!!! :(
என்னா சிவா,
டாப்சிலிப் பெயர கேட்ட பிடறி சிலிர்கிதா ;-) அடிக்கடி அங்கே போவீங்களோ? ஹனிமூன் மக்கள் நிறைய அங்கே வருவதுண்டு. அருமையான weather இல்லெ.
நாங்க சிலநேரங்களில் மேலே இருந்து சேத்துமடை வரைக்கும் நடந்தே வந்தரது. ஒரு அருமையான அனுபவம்.
romba thrilling Sir! Really loved reading this part...நாங்க வந்த திசை திரும்பி ஓட்டமின்னா அப்படி ஒரு ஓட்டம் நம்மூரு பி.ட்டி உஷா அன்னிக்கு அப்ப எங்ககிட்ட தோத்துருப்பாரு அப்படி ஒரு ஓட்டம்.////
Post a Comment