Sunday, April 19, 2009

பறவை பார்த்தல்: Birding as a Hobby!

எனக்கு நல்லா நினைவிருக்கு 1990கள் வரைக்கும் என்னய சுத்தி ஒரு பத்தில இருந்து பதினைஞ்சு வகையான பறவைகள் இருக்கலாங்கிற வரையான ஒரு பொது அறிவு இருந்ததாக. ஆனா, மயிலாடுதுறையில ஏ.வி.சி கல்லூரியில வனவியல் முதுகலைப் பட்டப் படிப்புக்கு சேர்ந்ததற்கு பிறகுதான், பறவைகளைப் பத்தி படிக்கிறதுகின்னே ஒரு துறை இருப்பதாகவும் அதுக்கு பறவையியல்னும் (Ornithology) தெரிய வந்துச்சு.

அந்த சமயத்திலதான் எனக்கு பைனாகுலர் (Binoculars=தமிழ் படுத்துங்கப்பா; இருகுழல்நோக்கி?), பறவைகளை அடையாளம் காண்பதற்கென உள்ள தள கையேட்டுப் புத்தகங்கள்(field guide) எல்லாம் கண்ணில தட்டுப்பட ஆரம்பிச்சுச்சு. அந்த வகுப்புகளின் ஒரு பகுதியாக சில சமயங்களில் அருகாமையே உள்ள வயல், கன்மாய்கள், தடாகங்கள், ஊருணிகள், வயல்வெளிகள்னு அந்தக் கல்லூரியை சுத்தி அமைந்த இடங்களுக்கு கால்நடையாக சென்று பறவைகள் பார்க்கும் சந்தர்ப்பமும்கிட்டியது. அதுவே கொஞ்ச கொஞ்சமா பழக்கமாகி, பின்னாடி பார்த்தீங்கன்னா நூலகத்திலருந்து பைனாகுலரும், கையேட்டுப் புத்தகமும் கடன்வாங்கி சொந்த ஊருக்குப் போகும் பொழுது கூட அங்குள்ள வயல் வெளிகளில் பறவைகள் தேடி நடக்கிற அளவிற்கு ஆர்வம் வந்துருச்சு.

அது மாதிரியான ஒரு ஆர்வமூட்டக் கூடிய வேலை இந்த பறவைங்க கவனிக்கிறதுன்னா மிகையாகாது. ஏன்னா, இந்தியாவில மட்டுமே 1250 வகையான பறவைகள் காணப்படுவதாகவும் அவைகளில் ஏறத்தாழ 920 வகையான பறவைகள் இங்கயே முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அறியப்படுகிறது. நம்மூர்ல அதாவது தென் இந்தியாவில் (இலங்கை) 450 வகையான பறவைகளும், அவைகளில் மேற்கு மலைத் தொடர்களில் மட்டுமே காணப்படும் (endemic species) 35 வகையான அரிய பறவைகளும் இது வரையிலும் கண்டு பட்டியலிடப்பட்டிருக்கிறது.

பல முறை எனக்கு நேர்ந்தது எப்படின்னா குளக்கரைக்குப் போவேன், ஏதாவது ஒன்றிரண்டு சிறு பறவவைகள் வேலிகளில் தாவித் திரிவதை கண்டு அவைகளை தள கையேட்டில் உள்ள பறவைகளுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டுவிட்டால் பெரு மகிழ்ச்சியோடு அன்றைய தினத்தில் மிதப்பேன். அப்படியாகத்தான் ஒரு நாள் அந்த நடையில் ஒரு பெரிய புது பறவை ஒன்றைக் காண நேர்ந்தது. என்னுடைய 21வது வயது வரைக்கும் இத்தனை பெரிய பறவை, இவ்வளவு எடுப்பான நிறத்துடன் என் கண்களில் சிக்காமல் நான் வாழ்ந்து வந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தது எப்படி எனக்குத் தெரியாமல் போனது என்று அதிசயமாக இன்று நினைக்கிறேன். ஆமாம். என்னாகிவிட்டது அந்த நடையின் பொழுது ஒரு காகத்தின் அளவிலிருந்த ஒரு பறவை வேலிகளுக்குள் ஒளிந்து மறைந்து தாவித் தாவி சென்றதை கவனித்து விட்டேன்.

நன்றாகப் பார்க்கும் பொழுது அது காகத்தினை விடப் பெரிதாக இருந்தது. மேலும், காகம் அப்படி கள்ளி வேலிகளில் புகுந்து சென்று கொண்டிருப்பதனை அந்த பறவைகள் கவனிப்பு நிலையில் நான் கண்டறிந்ததில்லை. இந் நிலையில், அப் பறவையின் பழக்கம் என்னை மேலும் ஆர்வமூட்டியது. கையில் பைனாகுலரைத் தவிர வேறு எதுவுமே இல்லை. கடைசியாக அந்தப் பறவை ஒரு முடிவிற்கு வந்ததாய் வெளிக் கிளம்பி சிறகெடுத்துப் பறந்து ஒரு 300 மீட்டரை கடந்து மீண்டும் அதே போன்றதொரு வேலிக்குள் புகுந்து கொண்டது.

ஆஹா! நான் ஏதோ ஒரு புது விதமான பறவையை கண்டுபிடித்து விட்டதாகவும், அது பெரிய அளவில் பேசப்பட்டு கையேட்டுப் புத்தங்களில் எனது பேருடன் வரப் போகிறதென்றும் மிக்க ஆவல் கொண்டவனாய் அடுத்த மணி நேரங்கள் அந்தப் பறவையின் பின்னாலே மிதந்துகிட்டே ஓடிக்கிட்டுருந்தது.

ஆனால் அந்தப் பறவையின் பறப்பு எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. அது, அதன் மேல் இறக்கைப் பகுதியில் செங்கல் நிறந்திலமைந்த திட்டான இறகுகளின் இருப்பை உறுதிப் படுத்தியது. இப்படியாக அந்தப் பறவையை பின் தொடர்ந்து, தொடர்ந்து ஒரு இரண்டரை கிலோமீட்டர்கள் போயிருப்பேன். நேரம் ஓடியதே தெரியவில்லை. வீட்டிற்கு வந்து காலை உணவுக்கு அமரும் பொழுது நேரம் முன் மதியத்தைத் தொட்டிருந்தது. இப்படியாக நிறைய நாட்கள் ஆரம்ப கால கட்டத்தில் நடந்ததுண்டு. பின்பு அந்தப் பறவை பற்றிய குறிப்புகளுடன் கையேட்டை வைத்து அறியும் பொழுது அது Crow Phesant (செண்பகப் பறவை ~ செம்போத்து) என்பதாக தெரிய வந்தது. மேலும், கொஞ்சம் கவனத்துடன் ஆராய்ந்தால் அடிக்கடி காணக்கிடைப்பதென்றும் அறிந்தேன். என் ஆசையில் மண்!

பறவைகள் கவனிப்பினை ஆரம்பித்து ஆர்வம் கிளம்பிவிட்ட தருணத்தில், தினமும் புதிது புதிதாக பறவைகளைக் கண்டு நம்முடைய பட்டியலில் சேர்ப்பதில் ஒரு விதமான கிறக்கம் இருக்கும். அதுவே எனக்கும் நடந்தது. அது வீங்கி நீல்கிரீஸ்ல் வைத்து மேற்கு மலைத்தொடரில் காணக்கிடைக்காதென எண்ணியிருந்த ஒரு "ஸ்ரைக்" வகைப் பறவையை மீள் கண்டெடுக்கும் வரைக்கும் சென்றது.

ஒவ்வொரு வகையான பறவையும் எந்த விதமான சூழ்நிலையில் நான் கண்ணுற்றேன் என்று கூற வேண்டுமானால், அது மாதிரியான ஒவ்வொரு சிறப்பு பறவைக்கும் தனிப் பதிவாகவே பதிவிடலாம். அது போன்ற சுவாரசியமான நிகழ்வாக சில பறவைகள் எனக்கு வாய்ப்பை கொடுத்திருந்தது. அதுவும், மழைக்காடுகளில் பெரிய சேலஞ்ச்சாகவே அமையும் அவைகளின் சத்தத்தினை வைத்து திசையறிந்து, அமர்ந்திருக்கும் மரக் கிளையறிந்து அப்படியே நல்ல பார்வைக்கும் எட்டி... ம்ம்.

ஆரம்பக் காலங்களில் பைனாகுலர் பயன்படுத்துவதே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். பயன்படுத்தியவர்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று விளங்கும். வெறும் கண்களால் ஒரு சிறு பறவையை கண்டுவிட்டு அந்த திசையை நோக்கி பைனாகுலர் கொண்டு பார்க்கிறேன் என்று வைத்துப் பார்த்தால் வேறு எங்காவது குளித்துக் கொண்டிருப்பவர்கள் தெரிவார்கள் [:-P]. சரியான இலக்கை நோக்கிப் பிடிக்க சில நாட்கள் அல்லது மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் அந்தப் பழக்கத்தை நம்மதாக கொள்ள.

பறவைகள் கவனிப்புக்கு தேவையானது என்னன்னு பார்ப்போம். குறைந்த பட்சம் 8 X 32 or 8 X 42 அளவீடு கொண்ட பைனாகுலர். ஒரு நோட்டுப் புத்தகம், பென்சில், ஒரு நல்ல தள பறவைகள் கையேடு எல்லாத்துக்கும் மேலா ஆர்வம் இன்னும் பெரிய அளவில ஆர்வம். அவ்வளவே!

அடுத்து எப்படி ஒரு பறவையை கவனிக்க நேரும் பொழுது என்னன்னா விசயத்தை கவனிக்கணுங்கிறதை சொல்லிடுறேன். முதலில் நல்ல கண்பார்வை. அதாவது அட்டெண்டிவ்வாக பார்க்கும் மன நிலை. பொதுவாக பறவைகள் இலைகளுக்குள் அமர்ந்திருக்கும் பட்சத்தில் எப்பொழுது அவை அசைகிறதோ அதனைக் கொண்டு பறவையின் இருப்பை அறிய முடியுமல்லவா? எனவே, பொறுமையாக கூர்ந்து பார்க்கும் ஒரு ஆர்வம் வேண்டும். அப்படி இருக்குமிடம் அறிந்து கொண்டால் ஆர்வத்தில் அடுத்தவரை அழைக்கிறேன் என்று கூச்சல் இடுவது ஒரு கல்லை எடுத்து எறிவதற்கு ஒப்பானது என்பதால், அதனை கண்டிப்பாக தவிர்த்து, ஹஸ் குரலில் விசயத்தை பெரிய அளவு உடம்பு அசைவுகளற்ற முறையில் வெளிப்படுத்துவது அவசியம். எல்லாம் அனுபவம் கற்றுக் கொடுப்பதுதான்.

ஒவ்வொரு குடும்ப பறவைக்கும் ஒரு குறிப்பிட்ட விதமான பழக்க வழக்கமிருக்கும் அல்லது அதனோட உடல் புற உறுப்புகளே கூட அதன் வாழ்வு முறைக்கு தகுந்த மாதிரி அமைஞ்சிருக்கும். உதாரணமா பார்த்தோம்னா: கிளைகள் மாதிரியான ஏதோ பிடிமானத்திற்கு ஏற்ற விசயங்களை பற்றிக்கிட்டு அமர்கிற பறவைகள் (perching bird =மைனா, ஸ்ரைக், புல்புல், சாம்பல் நிறக் குருவி, கருங்குருவி...). இந்த வகைள்தான் பறவைகள் இனத்திலயே அதிகமான எண்ணிக்கையில் காணப்படுகிறது. நீர் நிலைகளுக்கு அருகாமையில் காணக்கூடிய பறவைகளுக்கு பொதுவாக கால்கள் நீளமாவோ, அல்லது அலகுகள் வளைந்தோ, நல்ல தட்டையாகவோ, அலகுக்கு கீழ் பையுடனோ காணப்படலாம். இப்படியாக அவைகளை பிரிச்சறியலாம்.

இது போன்ற பொதுவான பண்புகளைக் கொண்டு ஓரளவிற்கு அது எந்த விதமான பறவையாக இருக்கக் கூடும் என்று அனுமானிக்கும் அனுபவத்தை பெற்றுவிடுவோம். இரண்டாவது, நமக்கு மிகவும் பார்த்து பழக்கப் பட்ட ஒரு பொதுவான பறவை உடலைப்பு, அதன் நீளம், எடை இவைகளை கருத்தில் கொண்டு அந்தப் பறவையுடன் பார்த்த பறவையை குறிப்பிட்டு குறித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நம்ம சிட்டுக் குருவி எல்லாருக்கும் பார்க்கக் கிடைத்திருக்கும் ஒரு பறவை, அதே போன்றே உடல் பருமனுடன் வயல் வெளியில் பிப்பிட், ஸ்கைலார்க் வகை பறவையை காண நேரிட்டிருந்தால், குறிப்பு புத்தகத்தில் சிட்டுக் குருவி அளவு, பிறகு எது போன்ற அடையாளங்கள் மிகவும் கவனிக்கத் தக்க வகையில் தென் பட்டதோ, அவைகளை எல்லாம் நன்றாக கவனித்து குறித்துக் கொள்ள வேண்டும்.

இறக்கையின் நிறம், கண்களைச் சுற்றி ஏதாவது வட்டம், நிறம் இருந்ததா, அதன் அலகின் அமைப்பு, நெஞ்சுப் பகுதியின் நிறம், வால் அமைப்பு, அங்கு ஏதாவது வரியாகவோ அல்லது பட்டைகள் ஏதும் காணப்பெற்றதா, பறக்கும் பொழுது கீழ் இறகுகளின் நிறம் குறிப்பிடும் படியாக எதாவது என்று நன்றாக கவனித்து கிறுக்கி வைச்சுக்கோங்க. முடிஞ்சா படமாவே வரைஞ்சு கூட வைச்சுக்கலாம். எங்கே எந்த நேரத்திற்கு பார்த்தீங்க, பறக்கும் பொழுது எப்படி பறந்துச்சு. நேர் கோட்டில் போன்றமைவிலா அல்லது மேலும் கீழுமாக இறங்கியா போன்ற குறிப்புகளும் உதவலாம் கையேட்டில் அந்த பறவையை பின்பு அடையாளப்படுத்த எத்தனை விதமான குறிப்புகள் இருந்தாலும் அது மேற்கொண்டு அடையாளப் படுத்துவதில் மிகவும் உதவும்.

இப்படியே நீங்களும் இதுல ஈடுபட்டுப் பாருங்களேன். எந்த ஊருக்குப் போனாலும் இதனை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டால் அந்த ஊரு மனிதர்கள் அன்னியப் பட்டுப் போனாலும் இவைகளுடன் ஒரு வித நெருக்கத்தை உணர முடியும். மேலும், தினமும் ஒரு பறவையென உங்க சொந்தப் பட்டியலும் நீண்டு கொண்டே செல்லும். தேவை ஆர்வம் அதனையே பழக்கமாக்கிக் கொள்வது வரைக்கும். குழந்தைகளை ஆரம்ப கால கட்டத்திலேயே ஆர்வத்தை வளர்த்து விட்டால், கோடை காலத்தில் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் செலவு பண்ணும் நேரத்தை மிச்சப் படுத்தி இது போன்ற ஆரோக்கியமான விசயங்களை கற்றுக் கொண்டவர்களாவார்கள். முயற்சி பண்ணிப்பாருங்களேன்!

57 comments:

மங்கை said...

இப்படி பெருசு பெருசா பதிவு போட்டா வயசான காலத்துல கான்சன்ட்ரேஷன் வேண்டாமா...:-)

கோவைல இருக்கும் வரை காக்கை, குருவி, குயில் தவிர வேற எதுவும் அவ்வளவா பார்க்க வாய்பிருக்காது.. தோட்டத்துப் பக்கம் போனா மயில் பார்க்கலாம்...

இங்க வந்த பிறகு ஒரு நல்ல பொழுது போக்கு புறாக்களை கவனிப்பது.. ஒரு முறை பால்கனியில உட்கார்ந்துட்டு இருக்கும் போது பக்கத்து ஃபிளாட்டுல உட்கார்ந்துட்டு இருந்த புறா வேகமா முன்னேயும் பின்னேயும் நடந்துட்டு இருந்ததைப் பார்த்தேன்.. ரொம்ப நேரம் ஒரே மாதிரி சீரா நடந்துட்டு இருந்துச்சு..இது என்ன வாக்கிங்க் போகுதுன்னு நினச்சேன்... ஒரு வேலை எல்லா புறாவும் இப்படித்தான் பண்ணுமோன்னு ஒரு டவுட்.. பார்த்தா வேறொரு பக்கத்துல உட்கார்ந்த புறா சும்மா தான் இருந்துச்சு...

கொஞ்சம் இருந்து இன்னொரு புறா வந்து ரெஸ்ட்லெஸ்சா இருந்த புறா பக்கத்துல உட்கார்ந்ததும் ரெண்டும் கொஞ்ச ஆரம்பிச்சிருச்சு... ஓ தன்னோட ஆள் வரலைன்னு அம்மனி டென்ஷன் ஆயுடுச்சுன்னு அப்புறம் தான் தெரிஞ்சது.. அதற்கு அப்புறம் அப்படி வேகமா முன்னேயும் பின்னேயும் நடக்குற புறாவை சந்திக்க மற்றொரு புறா வருவதை நான் பல முறை பார்திருக்கிறேன்..

அலுவலக பக்கதுல இன்னொரு கண்கொள்ளாக் காட்சி என்னன்னா பச்சைக் கிளிகள்... அவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ கிளிகள் கிளை விட்டு கிளை தாவி பறந்து விளையாடுவதைப் பார்க்கும் போது மனசு லேசா ஆகுது...மத்திய தில்லியில பறவைகள் அதிகமாக பார்க்கலாம்..

கவிதா | Kavitha said...

ஏம்மா......... நீங்களும் காவ்யாவுமா? :( அவளை இப்படி திரும்பவைத்து எடுத்து இருக்கலாம் இல்லையா.. ?!!

கவிதா | Kavitha said...

ஹூஊஊ...!! தலைவா... இப்படி எல்லாம் பதிவெழுத உங்களால மட்டுமே முடியுமோ.. ?? :)

//
Binoculars=தமிழ் படுத்துங்கப்பா; இருகுழல்நோக்கி ??
//

:)

நல்ல பதிவு தெகாஜி, நாங்க கேரளாவில் இருக்கும் போது நிறைய விதவிதமான பறவைகள் பார்ப்பேன். அங்கு பறவைகள் வீட்டு போர்டிகோவில் வந்து பயமே இல்லாமல் உட்காரும்..

இங்கு கூண்டுக்குள் பார்க்கும் பறவைகளை வீட்டு வாசலில் அங்கு பார்த்த போது நானும் பறவையானேன்.

அதில் குயில் தான் எனக்கு ஆச்சரியம்.. காக்கையை போன்ற உடலமைப்பு கொண்ட இந்த பறவையின் குரல்.. ?! வாவ்!! அதை மட்டும் ஒளிந்து இருந்து பார்ப்பேன்...

அப்புறம் நீங்கள் சொல்லியிருக்கிற குருவி வகைகள்.. :) என்னென்ன கலர்களிலோ வரும்.. இயற்கையோடு செமத்தியா என்ஜாய் பண்ணேன் அங்கே ம்ம்.. பாம்பு, ஓநாய் உள்பட.. :))

கவிதா | Kavitha said...

என்னுடைய ஹாபி யில் சேர்த்துக்கொள்கிற விஷயம்.. Bird Watching.. :))

Anonymous said...

http://www.youtube.com/watch?v=gqsMTZQ-pmE
பறவைகளில் ஆண்கள்தான் அழகாமே:-)

ramachandranusha(உஷா) said...

தெ கா! இப்ப இருக்கிற வீடு பார்த்தவுடன் பிடித்துப் போனதற்கு காரணம் எந்த ஜன்னலில் இருந்துப்
பார்த்தாலும் , கூப்பிடும் தூரத்தில் தெரியும் தபதி நதி. தாபி என்று சொல்லுகிறார்கள். தினமும் விசித்திர விசித்திரமாய் பறவைகள். இருப்பது எட்டாவது மாடி. அதிகாலை, சுட்டரிக்கும் வெய்யில், மாலை நேரம்
என்று விதவிதமாய் வருகின்றன.
பைனாகுலரை ஜன்னல் கட்டையிலேயே வைத்திருக்கிறேன். அழ அழகான பறவைகள்.
நூற்றுகணக்கில் வரிசையாய் நதிக்கரையில் இருக்கும். எல்லாம் பேட்ச் பேட்சாய் வரும்.
இனம் இனத்தோட சேரும் என்ற செலவாடை இவைகளுக்குதான் பொருந்தும். குட்டி குட்டி
வாத்துக்களும் பறந்து வருகின்றன, கோடு போட்டாற்போல நீரை கிழித்துக் கொண்டு நீந்திக் கொண்டு இருக்கும். கொக்கு வகையறா ஒன்று கிட்ட தட்ட மூன்று, நாலடி உயரம் இருக்கும்.
பெயரெல்லாம் தெரியாது, பார்த்து ரசிக்க மட்டும் தெரியும்.

இயற்கை நேசி|Oruni said...

நான் பதிவ ஒரு அடிக்கு அடிச்சிருந்தா நீங்கதான் அரை அடி நீளத்திற்கு பின்னூட்டம் எழுதி நீங்களும் தன்னிலை மறந்து எழுத ஆரம்பிச்சிருக்கீங்கன்னு நிரூபிச்சிட்டீங்களே :).


//கோவைல இருக்கும் வரை காக்கை, குருவி, குயில் தவிர வேற எதுவும் அவ்வளவா பார்க்க வாய்பிருக்காது.. தோட்டத்துப் பக்கம் போனா மயில் பார்க்கலாம்...//

அதெல்லாம் இருந்திருக்கும்,நமக்கு அந்தளவிற்கு ஆர்வமில்லாததாலே கவனிக்கத் தவறிருப்போம்... கோவையில நிறைய பறவைங்க நம்ம தோட்டத்திலயே பார்க்கலாம், நம்புங்கோவ்வ்வ் :-)

புறாவைப் பற்றிய கவனிப்பு ஒரு நேச்சுரலிஸ்ட் உள்ளே இருக்கிறதை காமிக்குதுங்கோவ்...

//கிளிகள் கிளை விட்டு கிளை தாவி பறந்து விளையாடுவதைப் பார்க்கும் போது மனசு லேசா ஆகுது...//

அதேதான் நான் சொல்ல வந்த விசயமும், லயித்திட்டா போர் அடிக்க காரணமே இல்லாம போயிடும்... எஞ்சாய்!

இயற்கை நேசி|Oruni said...

//ஏம்மா......... நீங்களும் காவ்யாவுமா? :( அவளை இப்படி திரும்பவைத்து எடுத்து இருக்கலாம் இல்லையா.. ?!!//

அப்படி வேணுமின்னுக்கே எடுத்தது. என்ன செய்றோமோ அதில இருக்கோமாம். போஸ் கொடுத்தா அதுக்குப் இங்க செய்ற வேலைக்கு பொருத்தமா இருக்குமா சொல்லுங்க :-)

//இங்கு கூண்டுக்குள் பார்க்கும் பறவைகளை வீட்டு வாசலில் அங்கு பார்த்த போது நானும் பறவையானேன்//

எப்படி கூண்டுப் பறவையாவே வா?

அந்த குயில், (Koel) அது தானே எழுப்பும், அந்த சத்தமே எனக்கு ஊரின் நினைவைத்தான் கொண்டு வரும்,,, ம்ம்..ம்

//என்னுடைய ஹாபி யில் சேர்த்துக்கொள்கிற விஷயம்.. Bird Watching.. :))//

Enjoy! it is very mind soothing hobby.

Anonymous said...

Correct the title. It should read "Bird watching" not birding

Santhosh said...

தல,
birding எல்லாம் இங்க செய்வது கொஞ்சம் கஷ்டம்.. பறவைங்களை பாக்க காட்டுக்குள்ள தான் போவணும்..

அப்பறம் மங்கை சொன்ன மாதிரி பதிவை கொஞ்சம் கம்மியாக்குங்க.. படிக்கிறதுக்குள்ள கண்ணை கட்டுது..

இயற்கை நேசி|Oruni said...

//Anonymous said...

Correct the title. It should read "Bird watching" not birding//

take a look at this dictionary meaning...

intr.v. bird.ed, bird.ing, birds

1. To observe and identify birds in their natural surroundings.

birding n.
*******
sounds new to you, huh!

here a few more...

crane - craning (கொக்கு பார்க்கவும் சொல்ல முடியும் போல, மேலே கழுத்தை அன்னாந்து பார்க்கவும் பயன்படுத்தலாம்...)

snake - snaking (சாலை வளைஞ்சு, நெளிஞ்சு போறதையோ, இல்ல மக்கள் வரிசையில அப்படி நிக்கிறதையோ சொல்லலாம் போல...)

இப்படி நிறைய ஆங்கிலத்தில புகுந்து புரப்படலாம் போல... ;-) நன்றி anyway!

you didnt say anything about the post, though :-)?

Anonymous said...

http://www.birding.in/dr_salim_ali.htm
Birding in india:-)
சலிம் அலி குறித்து படித்த போது ஆச்சரியமாக இருந்தது!

Joe said...

நல்ல பதிவு.

birding-ன்னு ஒரு வார்த்தை இருக்குன்னு இன்னைக்கி தான் தெரிஞ்சு கிட்டேன். நன்றி.

Anonymous said...

Wow..Its really nice to see your post. Very different.

Btw, I too had seen that bird with brown feathers in the BHEL Campus, Trichy. We were taking a walk in the staff quarters when I saw that bird. I started shouting, 'hey brown kaaka, brown kaaka' and took a closer look. I usually feel very happy to see something in nature that i havent seen earlier.

I am glad you brought that out. Brought back my memories. :)

Fathima

வடுவூர் குமார் said...

திரு அலி என்பவரே எனக்கு தெரிந்த வரையில் இந்தியாவில் இருக்கும் பல பறவைகளை பற்றிய தொகுப்பு எழுதியதாக ஞாபகம்.
உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது. இரவில் என்னுடையா 10x32 பைனாக்குலர் மூலம் வானத்தில் ஏதாவது கேலக்ஸி தெரிந்தால் எப்படி மகிழ்வேனோ அப்படி நீங்கள் மகிழ்ந்திருக்கிறீர்கள்.

தருமி said...

//birding-ன்னு ஒரு வார்த்தை இருக்குன்னு இன்னைக்கி தான் தெரிஞ்சு கிட்டேன். நன்றி.//

எப்பவுமே எனக்கும் ஜோவுக்கும் ஒரு ராசி. என்னை எப்பவுமே 'ரிப்பீட்டேய்' போட வைக்கிறமாதிரியே பின்னூட்டம் போடுவாரு. அதனால .. அவரு சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய் ...

//Binoculars=தமிழ் படுத்துங்கப்பா; //

என்ன இது தெரியாதா? பைனாகுலர் தான் ...!

அனுபவிச்சி எழுதின பதிவு .. நல்லா இருக்கு...

இயற்கை நேசி|Oruni said...

வாங்க ரா. உஷா,

இது போன்ற பதிவுகளில்தான் ஆளேயே பார்க்க முடியுது. ஆமா, எங்கே வண்ணத்துப் பூச்சி பதிவுக்கு ஆளேயே காணும்... :-)

ம்ம்... நீர்நிலையை சுற்றி உள்ள பறவைகளா, நிறைய கிடைக்குமேங்க பார்த்து அனுபவிக்க. அம்மாவும், குட்டிகளுமா எல்லா வித்தையும் கத்துக் கொடுத்துட்டு தண்ணீரில் மிதந்துகிட்டுத் திரியறதை பார்த்துட்டே இருக்கலாமே...

ஒரு நாள் காத்தாலை பைனாகுலரை எடுத்துட்டு இறங்கி போயிடுங்க பக்கத்திலயே :-) . இப்பத்தான் தெரியுது எப்படி நீங்க எழுதித் தள்ளி புத்தக்கமெல்லாம் போடுறீங்கன்னு... பின்னே அழகான இடம் பக்கத்தில வைச்சிட்டு இருந்தா...

இயற்கை நேசி|Oruni said...

Anoy

//http://www.youtube.com/watch?v=gqsMTZQ-pmE
பறவைகளில் ஆண்கள்தான் அழகாமே:-)//

இருக்கலாமோ, ஏன் அப்படியாமா ;-) ?

Anonymous said...

உங்கள் பதிவு பல நினைவுகளை கொண்டு வந்தது. எனக்குத் தெரிந்த பறவையெல்லாம் காக்கா,
மைனா, குருவி - அடிக்கடி பார்த்தது. ஆந்தை எப்போதாவது. குயில் குரல் மட்டும் இந்த நிகழ்ச்சி நடந்த வரை. ஒரு நாள் வீட்டின் வெளியே காக்கைளின் சத்தம். சத்தம் நிற்கவேயில்லை. என்னவாயிருக்கும் என்று வெளியே போய்ப் பார்த்தால் இதுவரை பார்த்திராத பறவை தரையில் தடுமாறிக்கொண்டு. காக்கைகள் அதை ஒரு வழியாக்கிவிட வேண்டுமென்று கூட்டமாக அதைச் சுற்றி.
வீட்டுக்குள் கொண்டு வந்தேன். அப்பா அது குயில் என்றார். குயில் கருப்பாக இருக்க வேண்டுமே!இந்த பறவை கருப்பும் வெளுப்பும் கலந்திருந்தது. உங்கள் பதிவிற்குப் பிறகு விக்கியில் தேடினால்
நான் பார்த்தது பெண் குயில். அப்பா சொன்ன விளக்கம். குயில் கூடு கட்டாமல் காக்கை கூட்டில் முட்டை இட்டு விடும். எமாந்த காகம் அடை காத்து குயில் வெளியில் வந்ததும் அதை வெளியில்
துரத்தும். அந்த அமர்களத்தைத்தான் நான் பார்த்தேன்.
வீட்டில் மதியம் காக்காய்க்குச் சோறு வைக்கும் பழக்கம் உண்டு. வீட்டுப்பக்கம் காக்கா இருந்தால் எலித்தொல்லை இருக்காது என்பது காரணமாய் இருக்கலாம். நான் காக்காவை பெயர் சொல்லி அழைக்க, அவையும் ஒன்றுக்கொன்று கா கா என்று பெயர் சொல்லிக் கொண்டு அழைத்துக் கூடிவிடும்:-)
பறவைகளை கவனிப்பவர்களுக்கு நிறையப் பொறுமை வேண்டும். இயற்கையுடன் செலவிடும்
நேரம் தியானத்திற்கு ஈடானது:-)
Good post!

இயற்கை நேசி|Oruni said...

எல்லாரையும் தாண்டி இந்த அனானிக்கு என் ஆர்வத்தின் பொருட்டு ஒரு பதில் சொல்லிக்கிறேன், மக்கா ;-)...

//குயில் கூடு கட்டாமல் காக்கை கூட்டில் முட்டை இட்டு விடும். எமாந்த காகம் அடை காத்து குயில் வெளியில் வந்ததும் அதை வெளியில்
துரத்தும். அந்த அமர்களத்தைத்தான் நான் பார்த்தேன்.
வீட்டில் மதியம் காக்காய்க்குச் சோறு வைக்கும் பழக்கம் உண்டு.//

ஆஹா, அருமையான கவனிப்பு! அது போன்று அந்தக் குயில் செய்யும் செயலுக்கு Brood Parasitism என்றே ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். இந்தப் பறவைகளின் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டே பெரிய அளவில் நம் இந்திய சமூகத்தில் எப்படி மனிதர்களும் இந்த ஒட்டுண்ணி வாழ்வு செய்கிறார்கள் என்பதனை எழுதியிருப்பேன்.

இந்தப் பதிவினை பாருங்க... வித்தியாசமாக இருக்கும் *Brood Parasitism in Our Own Family*

Radha Sriram said...

நல்ல போஸ்ட்ங்க....வீட்ல பேர்ட் ஃபீடெர் வச்சப்புறம் இந்த ஹாபி கொஞ்சம் தொத்திக்கிச்சு.ரொம்ப சீரியஸா பண்ணாட்டியும்...இப்ப ஆடோபான் ஸொசையடியோட புக்க லைப்ரரில்லேந்து வாங்கி இப்ப கொஞ்சம் அய்டெண்டிபை பண்ண ஆராம்பிச்சிட்டேன்....!!!எல்லாத்தையும் குருவின்னு சொல்லாமா.வேற என்ன புத்தகம் சிபாரிசு பண்ணரீங்க?? நான் இருப்பது SOCAL!:)

அப்புறம் பைன்னாகுலர் பத்தி நீங்க சொல்லியிருப்பது ரொம்ப உண்மை:):)

இயற்கை நேசி|Oruni said...

//birding எல்லாம் இங்க செய்வது கொஞ்சம் கஷ்டம்.. பறவைங்களை பாக்க காட்டுக்குள்ள தான் போவணும்.. //

சந்தோஷம், பெண்களூருல ;-) இருக்கிற வேற என்ன மாதிரி chicks தான் பார்க்கக் கிடைக்கும் :-)))...

//அப்பறம் மங்கை சொன்ன மாதிரி பதிவை கொஞ்சம் கம்மியாக்குங்க.. படிக்கிறதுக்குள்ள கண்ணை கட்டுது..//

இந்த மாதிரி பதிவெல்லாம் இப்படி எழுதினாத்தாம்மா முழுமையா இருக்கும். இதெல்லாம் அவசர அவசரமா படிக்கக் கூடாது, ரசிச்சு அனுபவிச்சு பருகணும் என்னா புரியுதா? ;-)

அடியை(பதிவின் நீளத்தை) குறைக்கிறேன் எங்கெல்லாம் முடியுதோ, அங்கெல்லாம்...

Anonymous said...

:-) படித்தேன். ஒட்டுண்ணிகள் குடும்ப வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அவள் ஒரு தொடர்கதை நினைவுக்கு வந்தது!

இயற்கை நேசி|Oruni said...

Radha Sriram said...

நன்றி!

//எல்லாத்தையும் குருவின்னு சொல்லாமா.வேற என்ன புத்தகம் சிபாரிசு பண்ணரீங்க?? நான் இருப்பது SOCAL!:)//

ஆடூபான் சொசைட்டியிலயே எல்லா அமெரிக்கா பகுதிகளையும் பிரிச்சு பறவைகளுக்கான கையேடு போட்டுருக்காங்க. அதில உங்களுத் தேவை மேற்கு கடற்கரையோரத்திற்கானது (so, a bird field guide to western region). விலையும் ரொம்பக் கம்மிதான், ஃபோட்டோஸாவே போட்டுருப்பாய்ங்க. நல்லாருக்கும் அடையாளப் படுத்த எளிமையா.

இந்த தளத்தையும் பாருங்க உங்களுக்கு மேலும் உதவலாம்.

http://ca.audubon.org/bird_faq.php

//அப்புறம் பைன்னாகுலர் பத்தி நீங்க சொல்லியிருப்பது ரொம்ப உண்மை:):)//

அப்பாடா உங்கள் ஒருவருக்காவது புரிஞ்சதே அந்த பைனாகுலரு மேட்டரு :-))

இயற்கை நேசி|Oruni said...

//Joe said...

நல்ல பதிவு.

birding-ன்னு ஒரு வார்த்தை இருக்குன்னு இன்னைக்கி தான் தெரிஞ்சு கிட்டேன். நன்றி.//

ஜோ! அட இந்தப் பக்கமெல்லாம் வருவதுண்டா? இதுதான் முதல் முறை இயற்கை நேசியில. அடிக்கடி வாங்க சார் :-)

நன்றி!

இயற்கை நேசி|Oruni said...

hi Fathima,

//Wow..Its really nice to see your post. Very different.//

Thanks, glad that you have found this site.

Hope that you do find more such an article over here. Trichy, close enough where i hailed from...

//I am glad you brought that out. Brought back my memories. :) //

that is the whole point of running this ordeal(site) :-) . Enjoy!

இயற்கை நேசி|Oruni said...

//Anonymous said...
http://www.birding.in/dr_salim_ali.htm
Birding in india:-)
சலிம் அலி குறித்து படித்த போது ஆச்சரியமாக இருந்தது!//

ஆமா அனானி. டாக்டர். சலீம் அலியின் வாழ்க்கையோ எங்கோ ஆரம்பித்து எப்படியோ இருந்து இந்தத் துறையில் ஒரு ஆக்சிடெண்டாக நுழைந்து போராட்டத்தின் பேரில் வெற்றியடைந்து இந்தியாவின் பறவைகளின் தந்தை என்ற பெயரை தட்டிச் சென்றவர்.

கிடைச்சா The Fall Of A Sparrow by Dr. Salim Ali படிச்சிப் பாருங்க முழு நீள வாழ்க்கையைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்.

நீங்க கொடுத்த தளத்திலருந்துதான் சில படங்கள் இங்கயும் பயன்படுத்தியிருப்பேன்.

கல்வெட்டு said...

செல்போன் டவர் மற்றும் அது ஏற்படுத்தும் நுண்ணலைகள் பறவைகள் மற்றும் சிறு பூச்சிகளின் இருப்பை அதிகம் பாதிப்பது உண்மையா? சிட்டுக் குருவிகள் நிறைய தென்படுவது இல்லை இப்போது.

இயற்கை நேசி|Oruni said...

வடுவூராரே,

//திரு அலி என்பவரே எனக்கு தெரிந்த வரையில் இந்தியாவில் இருக்கும் பல பறவைகளை பற்றிய தொகுப்பு எழுதியதாக ஞாபகம்.//

:-) உண்மைதான். ஆனால், இன்னமும் நிறைய உழைப்பு அந்த துறையில் தேவைப்படுகிறதுதான். ஆனால், நிதி பற்றாக் குறைதான் பல பேரின் ஆர்வத்தை குறைப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

பைனாகுலர் கொண்டு வானத்தை சல்லடை போடுறீங்களா... :-) தொலைநோக்கி பயன்படுத்தியிருக்கீங்களா? ஒரு முறை முயற்சித்தேன் வானத்து புகை மூட்டத்தை காணத்தான் ஆனால் வெற்றி கிட்டவில்லை. நல்ல ஒப்பீடு வடுவூர் குமார், நன்றி!

துளசி கோபால் said...

அருமையான பதிவு.

நானும் நியூஸிப் பறவைகள் பதிவு போடணுமுன்னு ஆரம்பிச்சு விவரங்கள் சேர்த்துவச்சு இருக்கேன்.

எழுதத்தான் சரியான நேரம் அமையலை.

சலீம் அலி அவர்களைப்பற்றிக் கொஞ்சம் தெரிஞ்சுவச்சுருக்கேன்.

துளசி கோபால் said...

Bird Watch
Bird watching

Anonymous said...

http://cyberjournalist.org.in/census/cenpop.html

1901 ஆம் ஆண்டு கணக்குப்படி இருபத்தி மூணு கோடி, மக்கள் தொகை. தற்சமயம் அதைப் போல் நான்கு மடங்கைத் தாண்டி விட்டோம். வாழும் நிலப்பரப்பு அப்படியே இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு என்னத்தை விட்டு விட்டுப் போகிறோம்.
முதலில் இயற்கை குறித்த கல்வி அவசியம். இது பாடத்திட்டத்தோடு நில்லாமல் பொது சன ஊடகங்களிலும் தொடங்க வேண்டும். உங்களைப் போன்றவர்கள் இதற்காக பதிவெழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாரம் ஒரு ஜாதி என்று எழுதும் வார இதழ் கவனிக்குமா ? வாரம் ஒரு பறவை என்று அறிமுகப்படுத்தலாம்:-)பறவைகளைப் பற்றி நிறைய சுவையான தகவல்கள் உண்டு!

இயற்கை நேசி|Oruni said...

கல்வெட்டு,

//செல்போன் டவர் மற்றும் அது ஏற்படுத்தும் நுண்ணலைகள் பறவைகள் மற்றும் சிறு பூச்சிகளின் இருப்பை அதிகம் பாதிப்பது உண்மையா? சிட்டுக் குருவிகள் நிறைய தென்படுவது இல்லை இப்போது.//

நல்லதொரு கேள்வியுடன் வந்திருக்கீங்க. இது ஆழமாக அலசப் பட வேண்டிய ஒரு விசயமிங்க. அதுவும் மனிதச் சமூகத்தின் மாறிப்போன வாழ்வு முறையில, கிலோவுக்கு இவ்வளவுன்னு எடை வைத்துக் கொடுக்குமளவிற்கு அலைபேசிகளின் பெருக்கம், அதனையொட்டிய நுண்ணலைகளின் தாக்கம் இன்னமும் நம் புலன்களுக்கு எட்டாத அளவில் சுற்றுப்புறச் சூழலை சிதைச்சிட்டு வருதுன்னே அடிச்சுக் கூறலாம் ...

சிட்டுக்குருவி மட்டுமா? எது போன்ற பறவைகளை நாம் அடிக்கடி இது போன்று நவீன வளர்சிகளுக்கு முன்பு கண்ணூற முடிந்திருக்குமோ (உதாரணத்திற்கு அந்த ப்ராமினி பருந்து, புல்புல் மற்றும் புறா மாதிரியான) அவைகளையெல்லாம் இப்பொழுது எங்கே பார்க்க முடிகிறது அவ்வளவு எளிதாக?

எனக்கு என்னவோ நம்முடைய மாறிப்போன கட்டடங்களின் புற அமைப்பும், சிந்தி சிதறும் தானியங்களின் தட்டுப்பாடு மற்றும் பயன்படுத்தப்படும் உரங்களின் தாக்கம் என நவீனப் படுத்தப்பட்ட எல்லாமே அவைகளை துடைத்தெறிந்து கொண்டு வருகிறதோ என எண்ணச் செய்கிறது. முன்னாலே இப்படி ஒரு பதிவு போட்டுருந்தேன் அவைகள் மற்ற என்ன என்ன காரணங்களால் காணமல் போகலாமின்னு... "வெர்மின்" விலங்குகளே இன்று அரிதாகும் காரணம்...

யானைகளில் (அல்ட்ரா சோனிக்) நம் காதுகளுக்கு எட்டாத ஒலியெழுப்பி அவைகளுக்குள் கம்யூனிகேஷன் செய்து கொள்வதாக அறிகிறோம்... அப்படியெனில் அவைகளின் உலகமே வேறாகத்தானே இருக்க முடியும் அவைகளின் புலன்களின் மென்மையும், அறியும் திறனையும் கொண்டு பார்க்கும் பொழுது.

அப்படியாக இருக்கையில் இது போன்ற மின்னலைகளும், நுண்ணலைகளும் அவைகளின் வாழ்வு முறையில் இடையூறு விளைவிக்காமல் இருக்க முடியாது. பறவைகளில் வலசை போதலே இது போன்ற துருவ மின்காந்த அலைகளை கொண்டே என்பதும் அறியப்பட்ட நிலையில் இருக்கிறது. விசயம் இப்படி இருக்கையில் இது போன்ற அதிகரித்து வரும் electro magnetic radiation பல வகைகளில் நம்மையும், நம்மை சுற்றியுள்ள சூழலையும் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாகப் படுகிறது.

பூச்சி வகைகள் இதனைக் காட்டிலும் அவைகளின் உலகம் இன்னமும் நுட்பமானது... எனவே சிக்கலும் இறுக இணைத்துதான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

இங்கே ஒரு ஆர்டிகில் படித்தேன் இதன் விகாரம் கொஞ்சம் பெரிதாகவே விளக்கப்பட்டுள்ளது... Killing Fields - Electromagnetic Radiation

இயற்கை நேசி|Oruni said...

தருமி, ஜோ! உங்களோட வேலையை சுலபமாக்கிடுறாரா :))

//என்ன இது தெரியாதா? பைனாகுலர் தான் ...!//

இதேதான் ஒரு வாரத்திற்கு முன்னயும் சொன்னீங்க இப்பவும் இதேதானா? :-))

//அனுபவிச்சி எழுதின பதிவு .. நல்லா இருக்கு...//

எதுவுமே அப்படித்தானே... அப்படியே இயல்பா எது வந்து விழுந்தாலும் அது அழகுதானே... ;)

தருமி said...

தெக்ஸ்,
இந்தப் பதிவுக்குத் தொடர்பு இருக்கிற மாதிரி ஆனா .. தொடர்பில்லாத ஒரு விஷயம்:
இங்க விட்டில் பூச்சின்னு நீங்க எழுதினதினதால் வந்த நினைவு: நம்ம டாக்கின்ஸ் நூல் வாசிச்சிக்கிட்டு இருந்தேனா, அதுல இந்த விட்டில் பூச்சிகள் ஏன் விளக்குல வந்து விழுந்து 'தற்கொலை' பண்ணிக்குதுன்னு ஒரு விளக்கம் கொடுத்திருக்க்காரு .. நல்லா இருக்கு ..

விண்மீன்களை navigationக்காக பயன் படுத்திக்கிற உள்திறமை ஏற்கெனவே கிடச்சிருகு. அது இப்போ உள்ள செயற்கை ஒளியால கொஞ்சம் தடுமாறிடுதுன்னு சொல்றாரு.

இயற்கை நேசி|Oruni said...

//Anonymous said...

:-) படித்தேன். ஒட்டுண்ணிகள் குடும்ப வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அவள் ஒரு தொடர்கதை நினைவுக்கு வந்தது!//

அதுக்குள்ளும் படிச்சிட்டீங்களா? பயங்கர வேகம்தான் அதுக்குத்தான் எல்லாரையும் தாண்டி குதிச்சு உங்களுக்கு வந்து பதில் சொன்னேன் ;-). அனானி, இன்னும் தமிழகத்திலதான் இருக்கீங்களா... ஜஸ்ட் க்யுரியஸ்.

அவள் ஒரு தொடர்கதை படம் இது வரைக்கும் பார்த்ததில்லை...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பறவை பத்திய பாடம். .. ஆங்கிலப்பாடம் , எல்லாமே நடக்குதே இங்க.. ரொம்ப சுவாரசியமா இருந்தது...
என் வீட்டுக்குப் பின்னால் மயில்களும் கழுகுகளும் எக்கச்சக்கமா இருக்கு.. மழை முடிந்து தண்ணி தேங்கும் சீசனில் என் வீட்டுப்பின்னால் இருக்கும் க்ரவுண்ட் ஒரு பறவைகள் சரணாலயம் போலவே இருக்கும் புதுப்புதுப்பறவைகள் வரும் கிச்சன் சன்னலிருந்தோ பால்கனியிலிருந்தோ படம் எடுத்து வச்சிக்குவேன்.. அதுங்க போடும் அட்டகாசமெல்லாம் பார்த்துட்டிருப்பேன்..

என் கலெக்ஷனை எல்லாம் பதிவாப் போட்டா வந்து அது பேரு என்னன்னு சொல்லிடுங்க.. :))

Anonymous said...

//இன்னும் தமிழகத்திலதான் இருக்கீங்களா... ஜஸ்ட் க்யுரியஸ்.//

இல்லை!

இயற்கை நேசி|Oruni said...

வாங்க துள்சிம்மா,

சீக்கிரம் போடுங்க கலர் கலரா இருக்கும், கண்டுகளிப்போம்.

//Bird Watch
Bird watching// இதப் பத்தி மேலே உள்ள பின்னூட்டங்களில் பேசியிருக்கோம், தவறவிட்டுடீங்க போல படிக்க.

இயற்கை நேசி|Oruni said...

இது பாடத்திட்டத்தோடு நில்லாமல் பொது சன ஊடகங்களிலும் தொடங்க வேண்டும். உங்களைப் போன்றவர்கள் இதற்காக பதிவெழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாரம் ஒரு ஜாதி என்று எழுதும் வார இதழ் கவனிக்குமா ? வாரம் ஒரு பறவை என்று அறிமுகப்படுத்தலாம்:-)பறவைகளைப் பற்றி நிறைய சுவையான தகவல்கள் உண்டு!//

இந்தப் பதிவில நிறைய அனானிங்க, பெரும் பெரும் உண்மைகளை முன் வைச்சிருக்காங்க. :-)) அட பேரப் போடலாம் எந்த கமெண்ட் யாரோடதுன்னு குறிப்பிட்டு பேசவாவது.

வெகு ஜன ஊடகங்கள் தானே, :-)))பூவா.. பூவாவுக்கு வழியுண்டா சொல்லுங்க போடுவோம் அப்படிங்கிற ரீதியில போயிட்டு இருக்கிற ஒரு உலமிங்க அது...

மக்கள் தொகையா அதெல்லாம் யார் யோசிக்கிறா, அடுச்சுப் பிடுச்சு பொழச்சுக் கெடக்கிறதே பெரிய விசயமா இருக்கும் பொழுது அதுக்கான மூல காரணத்தை யோசிக்க சொல்லுறீங்களே... ரொம்ப கஷ்டம் அனானி!

காட்டாறு said...

போட்டோ பார்த்ததும் லொல்லு தான் தோன்றியது. பாப்பா கைல பைனாகுலர் இல்லாம அப்பா கைல இருக்குறதை பார்த்தா... இங்கே என்னவோ தில்லு முல்லு நடக்குற மாதிரி தெரியுது. அப்பா நெசமாவே பறவை தான் பார்த்தாரா? இல்ல.... ;-)

மீதி கதைய வாசிச்சிட்டு வாரேன்.

காட்டாறு said...

யப்போவ்வ்... பெரிய பதிவப்பா... நெறையா பேரு சொல்லியிருப்பாங்களே.

//எந்த ஊருக்குப் போனாலும் இதனை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டால் அந்த ஊரு மனிதர்கள் அன்னியப் பட்டுப் போனாலும் இவைகளுடன் ஒரு வித நெருக்கத்தை உணர முடியும். //
இந்த பிரச்சனை எனக்கு இல்லை... எந்த ஊருக்கு போனாலும், அங்குள்ள மக்களிடம் (native ppl) ஒரு சின்ன இன்டர்வியூ பண்ணிருவேன். ;-)

கல்வெட்டு said...

தெகா,
நன்றி ஒரு பெரிய விளக்கமே கொடுத்துட்டீங்க.

Anonymous said...

http://www.youtube.com/watch?v=dyeyLMte3Jc&feature=related

வாத்துமுட்டையிலிருந்து வரும் குஞ்சுகள் யாரை முதலில் பார்க்கிறதோ அவரை
அம்மாவாக எற்றுக் கொண்டுவிடுமாம். மேலே உள்ள யு டுபில் உள்ளவரின் வாழ்வில் நடந்த
சம்பவங்களை ஒட்டி, பாத்திரங்கள் மாற்றப்பட்டு Fly away home என்ற திரைப்படம் வெளி வந்தது. கதாநாயகி ஒரு சின்னப் பெண். வலசை போதலைப் பற்றிய படம்.
குழந்தைகளுக்கு எற்ற அற்புதமான படம்.

Anonymous said...

http://en.wikipedia.org/wiki/
Fly_Away_Home

Anonymous said...

http://en.wikipedia.org/wiki/
Bill_Lishman

இயற்கை நேசி|Oruni said...

முத்து... ஆமா வகுப்பு அறை மாதிரி இல்லாம நல்ல நண்பர்களுக்கிடையேயான சம்பாஷனை மாதிரி நிறைய விசயங்கள் பேசிக்கிட்டோம். நீங்க தான் லேட்...

சரி மயில் எல்லாம் இருக்கா? ஹ்ம்... அன்னிக்கு பார்த்த படம் வந்து கழுகு இல்ல, கழுகு இல்ல அது buzzardவகையான பருந்து வகை மாதிரி தெரியுது ...

கண்டிப்பா போடுங்க க்ளியரா இருந்தா அடையாளப் படுத்திடுவோம்.

இயற்கை நேசி|Oruni said...

போட்டோ பார்த்ததும் லொல்லு தான் தோன்றியது. //

ஏன், லொல்லு தோனாது. இதெல்லாம் ஆராயப்புடாது அனுபவிக்கணும், ஆமா :-). பறவைதான் பார்த்தேன், பறவைதான் பார்த்தேன் :)).

//யப்போவ்வ்... பெரிய பதிவப்பா... நெறையா பேரு சொல்லியிருப்பாங்களே.//

அப்படியா அப்போ யாராவது திரும்ப எழுதித்தாங்கோ. உடைச்சு உடைச்சு எழுத இது என்ன திருப்பங்களோட வார த்ரில்லரா... 'மதன் வளைவில் புவி ஈர்ப்பு விசைக்கு பதில் சொல்லி திரும்பும் அதே வேளையில், அங்கே .33காலிபர் துப்பாக்கியை உயிரூட்டினான், அனூஷ்... ன்னு நீட்டி முழக்க :D.

//இந்த பிரச்சனை எனக்கு இல்லை... எந்த ஊருக்கு போனாலும், அங்குள்ள மக்களிடம் (native ppl) ஒரு சின்ன இன்டர்வியூ பண்ணிருவேன். ;-)//

நீங்க எல்லாம் இதில எக்ஸ்க்ளூஷன்ங்க...

இயற்கை நேசி|Oruni said...

அனானிகளா, இந்தப் பதிவின் முழுமைக்கு உங்களின் பங்களிப்பு ரொம்ப உதவி இருக்கு, அருமையப்பா... நன்றி, நன்றி!

Anonymous said...

உங்க பதிவைப் படிச்சப்புறம் பைனாகுலர் இல்லாம வெறும் கண்ணால பறவைகளைப் பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
அப்பிடிப் பார்க்கும் போது அவற்றின் அழகை நன்கு ரசிக்க முடியல்லன்னாலும் ஆராய்ச்சிப் பண்ணப் போய் இந்தியாவில் உள்ள 1250 பறவைகளும் காணாமற் போகாமல் தடுக்கலாமில்லயா?

ஹிஹி..ஹி ஏன்னா நம்ம ஆராய்ச்சி
அப்பிடி :)

பயனுள்ள ஆர்வத்தைத் தூண்டும் தகவல்களுக்கு நன்றி தெகா.

இயற்கை நேசி|Oruni said...

நவன்,

ரொம்ப நாட்களுக்குப் பிறகு இங்கு சந்திக்கிறேன் என்று நினைக்கிறேன். வீட்டில் அனைவரும் சுகமா?

ஓ! ஆராய்ச்சி என்ற பெயரில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிறாயா அப்போ :-)). ஏதாவது, எங்காவது படித்தாயா ;-)?

அடிக்கடி வா, நீயும் எழுது உன்னுடைய தளத்தில். நன்றி!

Anonymous said...

எல்லோரும் நலம். உங்கள் அன்புக்கு நன்றி. பறவைகள் பற்றி அனிமல் ப்ளானட்டில் அறிந்ததே அதிகம்.
நேரில் அவ்வப்போது ஆராய்வது உண்டுதான்.

அதேதான் நடக்கிறது. (பறவைகளைப் பிடித்து விளையாட ரொம்பப் பிடிக்கும்)

நிச்சயம் உங்கள் தளதிற்கு இனிமேல் ரெகுலரா வருவேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாத்து முட்டையிலிருந்து வெளியேறியதும் பார்த்தவங்களை அம்மான்னு நினைச்சுக்குமா.. அட இது டாம் அண்ட் ஜெர்ரியில் வருமே.. அது பூனையை மாம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு ஜெர்ரி எத்தனை சொன்னாலும் நம்பாது.. பின்ன ஒரு புக்ல எது எது எதோட அம்மான்னு காமிச்சுத்தான் ஜெர்ரி புரியவைக்கும்.. டாம் அண்ட் ஜெர்ரி செய்யறவங்க எத்தனை விசயங்களை அழகா கோர்க்கிறாங்க.. பதிவு புதுசு புதுசா கதை சொல்லுது தெகா.. :)

Radhakrishnan said...

பிரமிக்க வைத்த பதிவு நண்பரே. பறவையைப் பற்றி கதையும், கவிதையும் எழுதிய எனக்கு ஒரு அற்புதமான விசயத்தை அறியத்தந்தமைக்கு எனது வணக்கங்கள். அருமையான விசயங்களுடன், பல விளக்கங்களுடன் பொறுமையாக எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எழுதப்பட்ட அரிய படைப்பு. மிகவும் ரசித்தேன், நேசித்தேன். குறிப்பெடுத்து வைக்குமளவுக்கு நிறைய செய்திகள். மிக்க நன்றி.

மரா said...

அருமை. நிறைய எழுதுங்க பறவைகள் பற்றி.வாழ்த்துக்கள்.

Vijay said...

உங்கள் பதிவை மிகவும் இரசித்தேன்.
எனக்கு சிறு வயதில் பறவைகளைப்பற்றி அறிவதில் ஏற்பட்ட ஆர்வம், அவற்றை புகைப்படமெடுப்பதில் தொடர்கிறது.
இன்னமும் எழுதுங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பிதழ்:

உங்களது வலைப்பூவை இன்றைய வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறேன்.

தாழம்பூ - இயற்கைச் சரம்

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_05.html

வருகை தந்து தாழம்பூவின் மணத்தை நுகர அழைக்கிறேன்....

நட்புடன்

வெங்கட்.

Related Posts with Thumbnails