Tuesday, May 02, 2006

சாப்பிடலாம் வாங்க..! : காலிஃப்ளோரி (Cauliflory)

ஹும்ம்...நான் ஒரு பலாப் பழ ரசிகன் (jack fruit-யாருப்பா இப்படி ஒரு பேர வச்சது) ! ஒரு முறை நாங்க ஒரு கோடை விடுமுறையப்ப என்ன செய்தோமுன்னு முதல்ல சீரியாச விசயத்துக்குள்ள நுழையறத்துக்குள்ள நாம டைம் ட்ராவல் பின்னோக்கி பயணிச்சு ஒரு 15 வருடங்கள், போயிட்டு வந்துருவோம், சரியா. எல்லோரும் சீட் பெல்ட் போட்டாச்சா...ரெடியா இருந்தாலும் சரி, இல்லென்னாலும் சரி...வண்டி ஆன் த மூவ்...

நாங்க ஒரு நாலு பேருங்க இரண்டு மிதி வண்டிய வாடகைக்கு எடுத்துகிட்டு எங்களோட இன்னொரு பள்ளிகூட நண்பரின் வீட்டுக்குப் போயி அவனோட சேர்ந்து அவங்க தோட்டத்துக்கு போரதா திட்டம். அங்க போனவுடன், எங்ககிட்ட இருந்த பைசாவெல்லாம் ஒண்ணா சேர்த்தோம் ஒரு 15-20 ரூபாய்க்குள் தேறிச்சு. எங்களோட நண்பரின் அப்பா அந்த பலாப் பழம் விக்கிற தொழில்தான் பண்றாருன்னு தெரியும். அதாம் நாங்க ஈ மாட்டம் அந்த நண்பருக்கிட்ட ஒட்டிகிட்டோம். நண்பரின் அப்பாவும் ஒரு அருவா, கோணிப்பை சகிதமா கூடவே வந்தாரு.

அந்த மரம் நல்ல அடர்த்தியா பச்சை பசேல்னு நிறைய கிளைகளோட அடி மரத்தில ஆரம்பிச்சு ஒவ்வொரு கிளை உடம்புலேயும் பலா... பலாதான்... நம்ம தலைவரு ஒரு ஆறு அடி ஏறி இருப்பாரு, என்னமோ ஏற்கெனவே பார்த்து வைச்சமாதிரி, ஒரு பழத்தை தட்டி பார்த்தாரு, படக்குன்னு இடுப்புல சொருகி இருந்த அருவாள எடுத்து காம்புல நங்குன்னு ஒரு போடு போட்டு, பழத்தையும் பிடிச்சுகிட்டுதான், எங்கள கூப்பிட்டாரு "பசங்களா அந்த கோணிப்பை இங்கன கொண்டு வந்து பிடிச்சுக்கங்கட" அப்படின்னார். நாங்களும் அவருக்கு நேர் கீழே நின்னுகிட்டு நம்மூருல 'கிரிக்கேட்டு' விளையாடுவாங்களே கையில பந்தை லாபகமா அடிச்சு கொடுத்தா, குட்டு கேச்சுன்னு கத்திக்கிட்டு ஓடுவாங்கள்ள அது மாதிரியே, சும்மா நாலு அடி உயரத்தில இருந்து நேரா சாக்குக்கு இறக்கின பழத்தை பிடிச்சுட்டோம்.

அப்புறம்மென்ன, அப்பா வெட்டி கொடுக்க நாங்க எல்லா நாட்டியமும் ஆடிக்கிட்டே ஒரு முழுப் பழத்தையும் திண்ணுப்புட்டு அங்கே படுத்து உருண்டு வயித்தோட சைஸ்சயும் குறைச்கிட்டு சாயந்திரமா கெளம்பி வீடு வந்தோம். ஆனா, அன்னிக்கு எனக்கு ஒரு கேள்வி வந்துச்சு ஏன் பலா மரம் மத்த மரங்கள் மாதிரி இலைக் காம்புகளிடத்தேயும், மற்ற சிறு கிளைகள்ளேயும் காய்க்கிறது இல்ல அப்படின்னு, பின்னாளில் நான் மலைக் காடுகளில் அலைஞ்சப்பவும், பார்த்தும், படிச்சும் தெரிஞ்சு கிட்டத உங்க கிட்டயும் பதிலா பகிர்ந்துக்க போறேன்.

கொஞ்சம் இந்த கட்டுரையோட நீளம் அதிகமாக போச்சு. நம்ம கதையைப் பத்தி சொல்லப் போக... அதுவும் ஒரு காரணமாத்தான் சொன்னென். இந்த காலத்துப் பசங்க எங்க டி.வி_யையும், கேம் மிசினையும் விட்டு கண்ணெ எடுக்கிறாய்ங்க... அவனுகளுக்காகத்தான் அது! சரி, நாம நம்ம வேலையை பார்ப்போம்.

இந்த மாதிரி மழைக் காடுகளில் நிறைய இன மர வகைகள் அடிமரத்தில பூ பூத்து, பழமிடும் பழக்கமுள்ளதாக இருக்கிறது. பை த வே, ஒரு, சிறு செய்தி, பலா மரமும் ஒரு மழைக்காட்டு மர வகைதான். ஊட்டி, கொடைக்கானல் பஸ்ல பயணிச்சுருந்தா பார்த்தீருப்பீர்களே. இந்த மாதிரி பழக்கமுள்ள முறைக்கு தாவரவியல்ல காலிஃப்ளோரி (Cauliflory) அப்படின்னு சொல்றோம். சரி, இதுனால என்ன பயன் அப்படிங்கிறது நம்மோட இரண்டாவது கேள்வி. இந்த வகை மரங்கள் சில ஆண்டுகள் பூவே பூக்காமலும் இருக்கலாம், இல்ல சுத்தமா காயே காய்க்காமலும் இருக்கலாம். அதாவது நம்ம ஊரு ஸ்டைல்ல சொல்லனுமின்னா "வச்சா குடுமி, செரைச்சா மொட்டை."

அப்படி காய்க்கிற சமயத்தில (திடீர்னு எப்பயாவது ஒரு சீசன்ல மட்டும்), இதோட இனப் பரவல் (seed dispersal) பழமுண்ணும் விலங்குகள் மூலமாத்தான் நடக்குது அப்படின்னும் ஒண்ணு இருக்கில்ல அதையும் பார்க்கணுமில்ல, அது அப்படி இருக்கும் போது, இந்த பழங்களோட காம்பு வேற ரொம்ப ஸ்ராங்கா இருக்குதா ரொம்ப உயரத்திலிருந்து நல்லா பழுத்திருந்தாலும் பொத்னு கீழேயும் விழுகாது. அப்படியே அங்கேயே இருந்து அழுகி போக வேண்டியதுதான்.

இதெல்லாம் பார்த்துபுட்டு, நம்மாளுங்க பரிணாமத்தை கைப்புடியா பிடிச்சு, யாப்பா, என் பிரட்சினை இதான், எனக்கு என் அடி மரத்திலேயே பழங்கள் எல்லாம் காய்ச்சுடற மாதிரி என்ன மாத்திக்க போறேன், ஏன்னா அப்ப தான் சும்மா கால்நடையா நடந்து போற மானு, யானை மாதிரி மத்த ஜீவாராசிகளுக்கும் நான் பிரயோசனமா இருந்து என் வம்சத்தையும் பெருக்கிக்க முடியும் கொஞ்சம் பார்த்து உதவி செய்யப்பான்னு அதுக்கின்னு ஒரு சிறப்பான தகவமைப்பை வாங்கித் தக்க வச்சுகிட்டு, பொழப்ப மத்த தாவரங்கள்லேருந்து வித்தியாசமா அமைச்சுகிட்டு நீடுழி காலமா நம்மளோடவே கூடவே வாழ்ந்துகிட்டு வருதுக.

நல்ல இருந்துச்சா இல்லையான்னு சொல்லிபுட்டு போங்க...இல்லைன்னா வேறு ஏதாவது ஒரு ஊரு "காதலி தப்பி" ஓடிய கதையை பத்தி கதைப்போம்...

11 comments:

துளசி கோபால் said...

நானும் ஒரு பலாப்பழப் பேய்தான்.

இங்கே கிடைக்காத பரிதாபத்துக்கு, டின்னுலே இருக்கறதை வாங்கிவந்து 'வாசனை' புடிக்கிற ஆளுன்னா பாருங்க.

நல்ல பதிவு.

Sam said...

எங்க வீட்டு பலா மரம் ஞாபகம் வந்துடுச்சு. ஆனா ஒரு கேள்வி? தோல் தடிமானா இருக்கே?
எந்த உயிரினத்த நம்பி இப்படி இயற்கை உருவாக்கியிருக்கு. ஒரு வேளை மனிதனை நம்பியோ?
இன்னொரு கேள்வி கேட்கலாமா? அது எப்படி எந்த மண்ணில வளர்ந்தாலும் பழம் இவ்வளவு சுவையா
இருக்கு! இதுக்கு எதாவது காரணம் இருக்கா? நல்ல பதிவு. பின்னூட்டம் இடாவிட்டாலும் வந்து
உங்க பதிவுகள படிச்சிட்டுப் போகிறேன்!
அன்புடன்
சாம்

இயற்கை நேசி|Oruni said...

இந்தியாவில இருக்கிறப்போ கோடைகாலம் வந்ததும் முதல்ல ஞாபகத்தில வர விசயம், இந்த பலாப்பழம் தான். வேறு எதுவுமில்லை. பழத்தை வாங்கி, வீட்டில இருக்கிற எல்லோருமா சேர்ந்து ரவுண்ட் கட்டி அடிப்போம். பாவம், பழத்தை க்ளின் பண்ணி கொடுக்கிறவரு, எங்க வீட்டில எங்கப்பாதான், எக்ஸ்போர்ட் இதில.

இப்பெல்லாம், நான் டின்ல படத்த பாத்துகிறதோட சரி :(

நேசி.

இயற்கை நேசி|Oruni said...

//தோல் தடிமானா இருக்கே?
எந்த உயிரினத்த நம்பி இப்படி இயற்கை உருவாக்கியிருக்கு. ஒரு வேளை மனிதனை நம்பியோ?//

காட்டுக்குள்ள நிறைய மரங்கள் சாம், நான் பார்த்த வரைக்கும் மலை அணில்கள் (Giant Squirrel) எப்படியோ அப்படி இப்படின்னு தலைகீழா தொங்கி ஒரு ஓட்டையை போட்டு விட்டுடும், அப்புறம் குரங்கு, பறவைகள் இவர்கள் எல்லாம் வந்து பகிர்ந்துப்பாங்க, ஏன் யானை தூக்கி போட்டு மிதிச்சுப்புடுமே. இது பலா இனத்துக்குதான்.

ஆனா, நிறைய மற்ற இன காலிஃப்ளோரி மர வகைகள் நல்ல வாசத்தோட அடி மரத்திலேயே கொத்துக் கொத்த காச்சி தொங்கிறதா, சாம்பார் (ஒரு வகை மான்), புள்ளிமான், குரைக்கும் மான் எல்லாம் சாப்பிட்டுட்டு கொட்டைங்களை மற்ற இடத்தில கொண்டு போய் போட்டுடுது. நிறைய களத்தில பாத்திருக்கோம்.

//இன்னொரு கேள்வி கேட்கலாமா? அது எப்படி எந்த மண்ணில வளர்ந்தாலும் பழம் இவ்வளவு சுவையா
இருக்கு! இதுக்கு எதாவது காரணம் இருக்கா?//

சாம், நாங்க கரியன் சோலைங்கிற ஒரு shola-ல நல்ல பழுத்திருக்கேன்ணு ரொம்ப கஷ்டப்பட்டு அந்த பழத்த கீழே கொண்டுவந்தோம், கத்தி எதுவுமில்லாமல் வெறும் கல்லைகொண்டு பொளந்து சாப்பிட்டோமா "சப்புன்னு" சுவையே இல்லை. கேரளா சக்கை(பலா) மாதிரி, நான் நினைக்கிறேன், அதிகப்படியான மழை ஒரு காரணமா இருக்கலாம் ஏன் மலைப் பலாக்கள் சுவையற்று இருக்கிறது என்பதற்கு.

என்னயிருந்தாலும் plains-ல இருக்கிற மரங்களோட சுவைதான். சூப்பர்ப்.

நேசி.

Sivabalan said...

Mr. நேசி, You are really making me graze about you.

Wow!! What a nice & clean blog!!

Go ahead!! Expecting lot more!!

Thanks for the photos!!

You know, I am from a village near Maruthamalai, Coimbatore. I also ventured like you in my childhood. But, those are now a daydream for so many children. Hmmmmmmmm...

இயற்கை நேசி|Oruni said...

சிவா, நீங்க மருதமலை பக்கமா! அட்டகட்டியிலதான் நான் வேலைப் பார்த்த ஆராய்ச்சி அலுவலகம் இருக்கிறது. கோவை எனக்குப் மிகவும் பிடித்த ஊர். என்னுடைய கடைசி காலத்தை அங்குதான் தள்ளுவதாக உத்தேசித்துள்ளேன்.

மீண்டும் வருக, பகிர்ந்துகொள்க!

நேசி.

Sivabalan said...

அட்டகட்டி a nice place. My mother worked there when I was child.

// கடைசி காலத்தை அங்குதான் தள்ளுவதாக உத்தேசித்துள்ளேன். // Me too!! Actually I am thinking a buying a agricultural land near Narasipuram.

தருமி said...

நீங்க சொல்றமாதிரி இது ஒரு adaptive valueக்காக அடிமரத்தில மட்டும் காய்க்கிறதா இருந்தா சரி; ஆனா, பலா எல்லா உயரத்த்திலேயும் இருக்காதா?

Sivabalan said...

Yes Sure Mr.Nesi.

I will.

And, Anaikatti, the one which is near by Chinna Thadakam? TN Border, Right?

இயற்கை நேசி|Oruni said...

பலா ஒரு exceptional தருமி அந்த வகை குடும்பத்தில், நம்மில் சில பேருக்கு ஒரு சிறப்பு அன்பளிப்பு six finger மாதிரி (-: இருப்பினும் பழங்கள் பூராவும் மரத்தின் trunk-ல தானே இருக்கிறது.

நேசி.

Anonymous said...

Thanks for one more greet post. Keep up the good work.

Related Posts with Thumbnails