Friday, August 11, 2006

புவியீர்ப்பு விசையை ஸ்தம்பிக்க செய்த சுனாமி...!

Image Hosted by ImageShack.us

2004ஆம் வருடம் டிசம்பர் மாதம் நடந்தேறிய இயற்கை சீற்றம் பூமியின் புவியீர்ப்பு விசையையே திருப்பிப் போட்டதாக அன்மைய ஆராய்ச்சிகள் கண்டறிந்து உறுதி செய்துள்ளன.

அவ்வாறு புவியீர்ப்பு விசையில் மாற்றம் காணும் பொழுது பூமிக்கு அப்பால் நிலை நிறுதப்பட்டுள்ள சாட்டிலைட்களின் பாதை கூட விலகியதாக அறியப்பட்டதாம்.

இந்த 9.1 ரிக்டர் அளவுகோலில் கடலுக்கு அடியில் நடந்த பூகம்பம் கடந்த நாற்பது வருடங்களில் இல்லாத அளவில் நடந்தேறியதாம். இதனால் சுமாத்ரா தீவுக்கருகில் உடனாடியாக புவியீர்ப்பு சக்தி குறைவு காணப்பட்டதாகவும் அறியப்பட்டுள்ளது.

இந்த பூகம்பம் எவ்வாறு பூவியீர்ப்பு விசையுடன் விளையாண்டிருக்க முடியும் என்பதனை இப்படியாக விளக்கியிருக்கிறார்கள். கடலுக்கு அடியில் பூகம்பத்தால் ஏற்பட்ட பிளவு ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதனால், பூமியின் மேல் ஓட்டில் உள்ள பாறைகளின் அடர்வு தன்மை குழைந்து புவியீர்ப்பு விசையுடன் சண்டை போட்டதாக தெரிகிறது.

இந்த புவியீர்ப்பு குறைவினாலோ அல்லது கூடுதாலலோ நமக்கென்ன ஆகாப்போகுது என்ற ஒரு கேள்வியை கேட்டு வைத்தால் அதற்கு விடை நமது உடம்பு எடையும் கூடலாம், குறையலாம் புவியீர்ப்பு விசையின் மாற்றத்தை பொருத்து (உதாரணமாக, இப்பொழுது நடந்த புவியீர்ப்பு சண்டையில் 150 பவுன்ட் உடைய ஒருவரின் உடல் எடை நமது எடையின் 25000த்தில் ஒரு அவுன்ஸ் குறைந்தாக அறியப்பட்டுள்ளது).

இது போன்ற புவியீர்ப்பு விசையின் மாற்றதினை முதன் முதலாக பூமிக்கு மேலிருந்து இந்த சுனாமியின் பொழுது மட்டுமே சாட்டிலைட்டுகளின் உதவி கொண்டு கவனித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

22 comments:

சிறில் அலெக்ஸ் said...

நெசமாவேயா?

பொருட்களின் பருண்மை(Mass) மாறும்போதுதான் ஈர்ப்புவிசையும் மாறுமில்லையா?

ஏதாவது லிங் கெடச்சா கொடுங்க நேசி.

இலவசக்கொத்தனார் said...

இந்த குறைதல் சுனாமி தாக்கும் சமயத்தில் தாற்காலிகமான ஒரு நிகழ்வா? அல்லது அன்று முதல் நிரந்தரமாகவே குறைந்து விட்டதா?

இயற்கை நேசி|Oruni said...

சிறில்,

//நெசமாவேயா?//

நெசமாலுக்குமேதாங்க ;-))

//பொருட்களின் பருண்மை(Mass) மாறும்போதுதான் ஈர்ப்புவிசையும் மாறுமில்லையா?//

மாறிடுச்சாமுல்ல, நிறந்தரமா. ஆனா பெரிய அளவில் மற்ற Cosmic mattersகள் இதில் பாதிக்காத அளவில் நடந்தது நம்ம உண்மையிலேயே லக்கி தான் (உ.தா: நிலா நம்மல வச்சுத்தான் அவரே சுத்திக்கிட்டு இருக்கிறாரு...)

//ஏதாவது லிங் கெடச்சா கொடுங்க நேசி....//

இதோ கீழே ஒண்ணு இருக்கு இதிலிருந்து தோண்டுங்க வேற ஏதாவது கிடைக்கும், கிடைச்ச இங்க வந்து கொடுங்க சிறில்.

//http://www.sciencemag.org/cgi/content/abstract/313/5787/658//

இயற்கை நேசி|Oruni said...

இ.கொ,

//இந்த குறைதல் சுனாமி தாக்கும் சமயத்தில் தாற்காலிகமான ஒரு நிகழ்வா? அல்லது அன்று முதல் நிரந்தரமாகவே குறைந்து விட்டதா? //

இது ஒரு நிறந்தரமான மாற்றமாகவே இருக்க முடியும். இது தொடர்பான சுட்டிகள் கிடைத்தால் இங்கு கொணர்ந்து அதனை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசை. இ.கொ உங்களிடத்தில் ஏதாவது இருக்கா?

Sivabalan said...

நேசி

முடிவின் ஆரம்பமா? இல்லை இன்னொரு புதிய உலகம் "மனிதன் இல்லமால்"

பயமுறுத்திறீங்க...

இயற்கை நேசி|Oruni said...

Siva

//முடிவின் ஆரம்பமா? இல்லை இன்னொரு புதிய உலகம் "மனிதன் இல்லமால்"

பயமுறுத்திறீங்க... //

மனிதன் இல்லாத இந்த பூமிக் கிரகத்தை நினைத்துப் பார்க்கவே எவ்வளவு அமைதியா இருக்கும் அப்படின்னு தோணுது...

இது பயப்படுற அளவிற்கெல்லாம் இல்லை சிவா, இன்னும் கொஞ்ச அப்படி இப்படின்னு ஆயிருந்த சீதோஷ்ன நிலையில மாற்றம் அது இதுன்னு ஏதாவது நடந்திருக்கும். இது அப்படியில்லை, எனவே பயம் வேண்டாம்... :-)

நன்மனம் said...

இயற்க்கையின் சமன் (balancing) செய்யும் வேலையில் இதுவும் ஒன்றோ?

இதன் விளைவுகளை வருகின்ற தலைமுறைகள் அனுபவிக்க போகிறது.... இதுவே நாம் விட்டு செல்லும் சொத்து. :-(

Sivabalan said...

நேசி

//எனவே பயம் வேண்டாம் //

தூங்க போவதற்கு முன்னால். நல்ல படியா சொன்னீங்க..

நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

//அதற்கு விடை நமது உடம்பு எடையும் கூடலாம், குறையலாம் //

எடை கூடின காரணம் இப்போ தான் புரியுது.. நான் கூட ஏதோ அமெரிக்க சாக்லேட், ஐஸ்கிரீம் தான் காரணம்னு தப்பா நினைச்சிகிட்டிருந்தேன் ;)

இலவசக்கொத்தனார் said...

இதைப் பற்றிய சுட்டிகள் எதுவும் இல்லை. ஆனால் புவியீர்ப்பு பற்றிப் பேசுவதால் இங்கு சென்றால் ஆச்சரியமான விஷயங்கள் சில கிடைக்கும்.

இயற்கை நேசி|Oruni said...

நன்மனம்,

//இயற்க்கையின் சமன் (balancing) செய்யும் வேலையில் இதுவும் ஒன்றோ?//

இந்த பூமிக்கும் பரிணாமம் உண்டுதானே? அப்படியெனில் மாற்றங்கள் நிகழும் பொழுது எந்த ஒரு வல்லரசும் கட்டி அணைபோட்டுவிட முடியாது.

//இதன் விளைவுகளை வருகின்ற தலைமுறைகள் அனுபவிக்க போகிறது.... இதுவே நாம் விட்டு செல்லும் சொத்து. :-( //

நம்ம மையிலே என்ன இருக்கு, ஏதோ வீடு கிடைச்சிருக்கு இருக்கிற வரைக்கும் சுத்தம கூட்டி பெருக்கி ரொம்ப ஓட்டைங்க போட்டு நாசமடிச்சிராமா வைச்திருந்த, இன்னி கொஞ்சம் நாளைக்கு உடம்பு எரிவு பட்டே சாவமா இருந்துபுட்டு போகலாம்...

இயற்கை நேசி|Oruni said...

//தூங்க போவதற்கு முன்னால். நல்ல படியா சொன்னீங்க...//

நல்ல தூங்கினீங்களா இல்லை நைட்மேர்ஸ் எதுவும் வந்துச்சா ;-)))

இயற்கை நேசி|Oruni said...

பொன்ஸூ,

//எடை கூடின காரணம் இப்போ தான் புரியுது.. நான் கூட ஏதோ அமெரிக்க சாக்லேட், ஐஸ்கிரீம் தான் காரணம்னு தப்பா நினைச்சிகிட்டிருந்தேன் ;)//

நான் அப்பவே நினைச்சேன் அந்த பத்தி எழுதும் போது துள்சிங்க இல்லென்ன பொன்ஸ் வந்து இது மாதிரி ஏதாவது சொல்லுவாங்கன்னு, சொல்லிட்டீங்க.

எது எப்படிப் போனாலும் இந்த எடை குறைக்கிறதிலதான் பெண்களுக்கு குறிங்கிறதா சொல்லமா வந்து சொல்லிட்டீங்க... :-)))

இப்ப நடந்த புவியீர்ப்பு சண்டையில நடந்தது எடை குறைஞ்சுப்போச்சாம் இத்தினிக்கூண்டு...

நல்லா ஐஸ்க்ரீம் மிஸ் பண்ணிவீங்க ஊருக்கு போயின்னு மட்டும் நல்ல தெரியுது இப்பவே... too bad we cant send it on the mail ;-)

தருமி said...

150 பவுன்ட் உடைய ஒருவரின் உடல் எடை நமது எடையின் 150 பவுன்ட் உடைய ஒருவரின் உடல் எடை நமது எடையின் 25000த்தில் ஒரு அவுன்ஸ் குறைந்தாக குறைந்தாக....//

அவனவன் கிலோ கணக்கில உடம்பு கனம் கூடுதேன்னு நித்தம் நித்தம் கவலையில் இன்னும் கொஞ்சம் குண்டாயிட்டு இருக்கான் ; நீங்க என்னடான்னா '150 பவுன்ட் உடைய ஒருவரின் உடல் எடை நமது எடையின் 25000த்தில் ஒரு அவுன்ஸ் குறைந்தாக..../ எழுதிக்கிட்டு இருக்கீங்க...

நாமக்கல் சிபி said...

நம்ம தம்பி மழலை இப்போ இந்த வார லிட்டில்ஸ்டாராமே! பார்த்தீங்களா?

இயற்கை நேசி|Oruni said...

சிபி,

//நம்ம தம்பி மழலை இப்போ இந்த வார லிட்டில்ஸ்டாராமே! பார்த்தீங்களா?//

இல்லையே, அப்படியே எப்படின்னு சொல்லியிருக்கலாமில்லே... இல்லைன்ன அந்த லிங்க்யையாவது கொடுத்திருக்கலாமே... ப்ளாக் தேஷத்தில, துள்சி அவர்கள் நம்ம 'மழலை"யைப் பத்தி குறிப்பிட்டு ஒரு அறிமுகம் கொடுத்திருந்தார்கள்... அதனைய சொல்லுறீங்க, சிபி?

நாமக்கல் சிபி said...

நேசி அண்ணா,
இங்கே போயி பாருங்க!

http://www.thamizmanam.com/star_post.php

புதுமை விரும்பி said...

I think mass does not change. What changes is the weight as it is given by w(weight) =m(mass)g(gravity). Since the gravity constant value has been changed by Tsunami, the weight changes.

அசுரன் said...

தேக்கிகாட்டன்,

எப்படி இருக்கீங்க. ரொம்ப நாள் கழிச்சி சந்திக்கிறோம்.

எனக்கு ஒரு டவுட்ட கிளியர் பண்ண உதவ முடியுமா?

#1) குடும்பம் என்கிற அமைப்பு(அதாவது கட்டுப்பாடான உடலுறவு சட்டங்கள் கொண்ட) மனிதனை தவிர்த்து வேறு ஏதேனும் உயிரிகளிடத்தில் வழக்கத்தில் உள்ளதா?


#2) மனிதனை தவிர்த்து வேறு எந்த உயிரினமாவது தனது இனப்பெருக்க முறைகளை காலப் போக்கில் மாற்றியுள்ளதா? (அதாவது மனிதன் கூட்டமாக புணர்ந்தது போய் பிறகு அதில் பல கட்டுப்பாடுகளை தடைகளை கொண்டு வந்தான். அது போல வேறு ஏதேனும் உயிரிகள் தமது வழமையை மாற்றியுள்ளனவா?)


சில அவதூறுகளுக்கு பதில் சொல்லும் முகமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதை வெளியிடும் முன்பு சமீபத்திய கண்டுபிடிப்புகள் ஏதேனும் நான் எடுத்துக் கொண்ட உதாரணத்திற்க்கு மாறுபட்டு இருந்தால் அவற்றையும் பரிசீலிப்பதற்க்காக உங்கள் உதவியை நாடலாம் என்று எண்ணினேன்.

நன்றி,
அசுரன்.

அசுரன் said...

தேக்கிகாட்டன்,

I have published that article :-))

asuran

அசுரன் said...

This is the article:

Please read and let me know your opinion on my expatiation of the origins Family.

http://poar-parai.blogspot.com/2006/09/blog-post.html

As I was involved in argument in various platform, I don't find much time to visit my friends pages. One among them is yours...

Don't mistake me.....

Thanks and Regards,
Asuran

Shrek said...

mass wont change. only weight would be affected by the gravity.

weight = mass*gravity

cyril alex, not only the mass but earths rotation speed(centripetal force) also a factor of gravity. here neither earths mass nor rotation speed change. probably it was a local & transient effect.

Related Posts with Thumbnails