Thursday, September 21, 2006

3ல் மரணித்த 3 மில்லியன் வருட பரிணாமக் கயல்விழி...

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈத்தியோப்பியாவில் ஒரு ஏரி போன்ற அமைப்பிற்கு அருகே சில சிதைந்து போன மனித மண்டையோடு மற்றும் இதர உடல் பாக எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. பிறகு கார்பன் தேதி குறிப்பிட்டின்படி (Carbon Dating) அது ஒரு பெண்ணின் எலும்புகள் எனவும் சுமார் ஒரு 3 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆஃப்ரிகா கண்டத்தில் வாழ்ந்த ஆஸ்ரோலோபித்தீகஸ் அஃரென்சிஸ் (Australopithecus afarensis) எனும் வகை மனித மூதாதைகள் இனத்தை சேர்ந்தது எனவும் கண்டறியப்பட்டது.

அதற்கு லூசி எனவும் பெயரிடப்பட்டது.லூசி ஒருநாள் நோய் வாய் பட்டிருக்கும் பொழுது ஏரிக்கு நடந்து வரும் பட்சத்தில் ஏரிக்கு அருகிலேயே தடுமாறி மாண்டிருக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டது.

Image Hosted by ImageShack.us

இப்பொழுது அந்த ஏரியாவிற்கு மிக அருகிலேயே ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க கைக்குழந்தையின் மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்ப நாமே இந்த குழந்தைக்கு ஒரு பெயர் கொடுத்திடுவோம். கயல்விழி. சுலபமாக இருக்கும் பேசுவதற்கு என்பதற்காக. கயல்விழியும், லூசியின் இனத்தை சார்ந்தவராம். இவர்கள் சுமாருக்கு 3 லிரிந்து 3.7 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நமது மூதாதையர்கள்.

சொல்லப்போனால், இந்த பாலியோஆன்ந்ரோபாலாஜி (தமிழ் மொழிபெயர்ப்பு - தேவை ) துறை ஒரு கடினமான ஏரியா. ஒரு சின்ன சில்லு எலும்பு துண்டு கிடைக்கிறதுக்கே மாத கணக்கில் பொறுமையாக மண்தோண்டு கனரக வாகனங்களைக் கொண்டு தோண்டாமல், மிக மென்மையாக முட்டிக்கால் தேய அங்குலம் அங்குலமாக கண்ணில் விளக்கெண்ணை விட்டுத் துழாவ வேண்டும்.

அப்படியே ஒரு பல்லு கிடைத்தாலும், மண்ணு மாதிரியே நிறத்தோட சின்ன ஒரு கல்லு மாதிரி கூட இருக்கலாம், அப்பன்ன எவ்ளோ கவனத்தோட பார்க்கணும் பாருங்க.

அது அப்படி இருக்கும் பொழுது இப்படி சுளையாக, ஒரு கபாலம் கண்டெடுக்கிறது, அதுவும் நமக்கு மிக நெருங்கிய சொந்தம் ஒண்ணு ரொம்ப ரொம்ப அபூர்வங்க.

இந்த கண்டெடுப்பில் என்ன ஒரு சிறப்புன்னா, இது போன்ற கயல்விழி ஒத்த கைக்குழந்தைங்களோட எலும்புங்க கிடைக்கிறது ரொம்ப அரிதாம். அதுவும் மண்டையோடு சிந்தமா, சிதையாமல் கிடைத்தது இதுவே முதல் முறையாம். அதினால கண்டெடுத்தவங்களுக்கு பம்பர் லாட்டரி சீட்டு விழுந்த கணக்க ஏகப்பட்ட சந்தோஷமாம்.

இதற்கு முன்னால் நம்மோடு சமகாலம் வரையிலும் வாழ்ந்த நியான்டர்தால் வகை குழந்தை மண்டையோடு சிரியாவில் கண்டெடுக்கப்பட்டது, இருப்பினும் கயல்விழி வாழ்ந்த வருடங்களோட ஒப்பிடும் பொழுது நியாண்டர்தால் கிடைத்ததில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கிறதாம்.

கயல்விழி மண்டையோடு மற்றும் இதர உடல் எலும்புகளை கொண்டு பார்க்கும் பொழுது, கயல் நம்மைப் போலவே இருகால்களை (Bipedal walk) கொண்டு நிமிர்ந்து நடந்து திரிந்திருப்பதாகவும், கைவிரல்களை கொண்டு பார்க்கும் பொழுது மரம் நிறைய ஏறியிருக்கலாம் என்றும் அறியப்பட்டுள்ளது.

கயல்விழி எப்படி தொல்பொருளாக ஆகிப்போனால் என்பதற்கு கண்டெடுத்த இடத்தின் நிலவரத்தை கொண்டு, அவள் ஒரு வெள்ள நேரத்தில் மரணித்து, மணல்படுகையில் கற்களை கொண்டு புதைக்கப்பட்டிருக்கலாமென்று கருதப்படுகிறது.

கிடைத்த எலுப்புகளை கொண்டு அம்மாவைப் போன்ற லூசிக்கும், குழந்தை கயலுக்கும் வளர்ச்சி அடிப்படையில் சில வேறுபாடுகளை கண்டறிவதோடு, நமக்கும் அவர்களுக்கும் மிடையே தொடர்புகள் இப்படி பல விசயங்களை கண்டறிய உதவுமாம்.

கயல்விழியின் அத்மா சாந்தியடைய எல்லோரும் ஒரு நிமிடம் மானிட்டர்களுக்கு முன்னால் கண் மூடி மொளன அஞ்சலி சொலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.பி.கு: இப்படி 3 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த கயல்விழி எல்லாம் கண்டெக்கிறாய்ங்க, உசிரோட இருக்கிற தீவிர வாதிகள கண்டுபிடிக்க முடியலேயே...ஷேம், ஷேம் பப்பி ஷேம்...

16 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்ல பதிவு. கடைசி வரி நச்! :)

Sivabalan said...

//கயல்விழியின் அத்மா சாந்தியடைய எல்லோரும் ஒரு நிமிடம் மானிட்டர்களுக்கு முன்னால் கண் மூடி மொளன அஞ்சலி சொலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.//


பண்ணியாச்சு பண்ணியாச்சு!!!

Anonymous said...

// இப்படி 3 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த கயல்விழி எல்லாம் கண்டெக்கிறாய்ங்க, உசிரோட இருக்கிற தீவிர வாதிகள கண்டுபிடிக்க முடியலேயே //

நேசி அரசியல் பேசுவதை மென்மையாக கண்டிக்கிறோம்..

இப்படிக்கு

இயற்கை நேசி ரசிகர் மன்றம்
வேற்று உலகம்.

Sivabalan said...

நேசி

மேலே உள்ள அனானி கமண்ட் நான் போட்டதுதான்.. சும்மா ஜாலிக்காக...

மீன்டும் ஒரு நல்ல பதிவை கொடுத்திருக்கிறீர்கள்..

மிக்க நன்றி.

Sivabalan said...

நேசி,

தலைப்பு நல்லாயிருக்குங்க..

இரத்தின சுருக்கமாக இருக்கிறது..

இயற்கை நேசி|Oruni said...

வாங்கய்யா இலவசம், நல்லாருந்துச்சா.

ஆமா, சும்மா கொண்டுபோயி, கொண்டுபோயி ஒண்ணுமில்லாத புழுதி காட்டுக்குள்ள வரிபணத்த குண்டாக மாத்தி போட்டுவராய்ங்க, அதான் அப்படிச் சொன்னேன்.

Anonymous said...

லூசியோட வயசு எம்புட்டுங்க... அந்த அம்மா செத்துப்போகும் பொழுது?

இயற்கை நேசி|Oruni said...

சிவா,

மெளன அஞ்சலி ரெண்டு தபா பண்ண மாதிரி தெரியுது...

இயற்கை நேசி|Oruni said...

எனக்கு ரசிகர் மன்றம்மெல்லாம் வச்சு கவுரவிக்க ஆசைப்பட்டு இப்படி ஒரு பின்னூட்டமும் போட்டு வைச்சிருக்கீங்க...

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவு நேசி. நேசி பதிவுகளைக் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே இது வந்துவிட்டது.. பூங்காவிலும் வந்திருக்கிறதே!! அதற்காக, கயல்விழிக்கும் நேசிக்கும் என் வாழ்த்துக்கள்..

சிறில் அலெக்ஸ் said...

//பி.கு: இப்படி 3 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த கயல்விழி எல்லாம் கண்டெக்கிறாய்ங்க, உசிரோட இருக்கிற தீவிர வாதிகள கண்டுபிடிக்க முடியலேயே...ஷேம், ஷேம் பப்பி ஷேம்...//

என்ன திடீர்னு அரசியல் எல்லாம் பேசுறீங்க?

:)

கப்பி | Kappi said...

அருமையான பதிவு நேசி...

//இப்படி 3 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த கயல்விழி எல்லாம் கண்டெக்கிறாய்ங்க, உசிரோட இருக்கிற தீவிர வாதிகள கண்டுபிடிக்க முடியலேயே...ஷேம், ஷேம் பப்பி ஷேம்...
//
வழக்கம் போல கடைசில நேசி பஞ்ச் ;)


அப்புறம் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்...இந்த கயல்விழி-ன்ற பேரு நிறைய பேருக்கு பிடிக்க அறிவியல் ரீதியில் காரணம் ஏதாவது இருக்கிறதா?? ;)

செல்வநாயகி said...

சுவாரசியமாக இருக்கின்றன உங்களின் இந்தப் பக்கத்துப் பதிவுகள். தொடர்ந்து படித்து வருகிறேன்.

இயற்கை நேசி|Oruni said...

பொன்ஸூ,

நன்றிம்மா. நானும் எங்கட ஆட்களை காணோமே அப்படின்னு பார்த்தேன்.

பூங்காவைப் பற்றி எனக்கு தெரிவித்தமைக்கு நன்றி!

இயற்கை நேசி|Oruni said...

ஆர்வத்தோடு,

லூசியோட சரியான வயச கணித்து சொன்னமாதிரித்தான் எனக்கு ஞாபகம் இருக்கு... ஆனா எனக்கு சரியான வயசு ஞாபகத்தில இல்ல இப்போ... இருந்தாலும் இதுதான் சொல்றாங்க,

A number of factors point to Lucy being fully grown. For one thing, her wisdom teeth, which were very humanlike, were exposed and appear to have been in use for a while before her death. In addition, the sections of her skull—separated in children—had grown together.

அகல்விளக்கு said...

//கயல்விழியின் அத்மா சாந்தியடைய எல்லோரும் ஒரு நிமிடம் மானிட்டர்களுக்கு முன்னால் கண் மூடி மொளன அஞ்சலி சொலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.//

ரைட்டு

Related Posts with Thumbnails