Saturday, April 29, 2006

மரத் தவளைகளின் பெரிய நிறக் கண்களின் ரகசியம்...

மரத் தவளைகளில் (tree frogs) பெரும்பான்மையானவை மழைக் காடுகளில் (rain forest) உள்ள மரப் பொந்துகளில் வாழ்கின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் மட்டுமே வெளியே தலை காட்ட ஆரம்பிப்பார்கள், ரொம்ப சத்தம் போடுற வகை. பகல் முழுக்க நம்ம ஊரு சில பசங்க மாதிரி தூக்கம் தூக்கம்தான். இரவில்தான் ஆட்டம் முழுக்க!

சரி விசயத்துக்கு வருவோம், இந்த மக்களோட கண் (உடம்பும் தான்) நல்ல மிட்டாய் நிறத்தில அசல்ல பார்த்த பொம்மை தவளைப் பசங்க மாதிரியே இருப்பானுங்க. இவனுகள்ல சில பேரு பயங்கர விஷம் கொண்ட பயக, எங்கே அழகு இருக்கோ அங்க ஆபத்தும் இருக்கும் அப்படிங்கிற மாதிரி. நான் நினைக்கிறேன் அதுவும் ஒரு பரிணாம சமிக்கைதானோ என்று. சொல்லாமல் சொல்றது நான் ரொம்ப அடிக்கிற நிறத்தில இருந்து, என்னை பிடிச்சு சாப்பிடற எண்ணமிருந்தால் விட்டுடு அப்படின்னு ராத்திரியில வெளியில வந்து பசிச்சு அழையுற ஆந்தை, தேவாங்கு, பறக்குற அணிலு, அப்புறம் இன்னும் பிற மரம் ஏறுர சிறு பாலூட்டிகளிடத்த.

சரி அப்படி பகல் நேரத்தில தூங்கிட்டு இருக்கிறப்ப யாராவது தட்டு தடுமாறி எரடி விழுந்து நம்மாளை முழிக்க வச்சுப்புட்டா அப்பதான் நம்மாளோட பெரிய கண் உதவிக்கு வருது. எப்படி? படக்குன்னு ஒரு ஒரு பெரிய முட்டைக் கண்ணெ சிவப்போ, பச்சை நிறத்திலோ வைச்சுக்கிட்டு உர்ர்னு கோபத்தில பார்க்கிறமாதிரி முறைச்சு உருட்டி பார்த்தா, எரடி விழுந்தவன் குழம்பிப் போய் கொஞ்சம் நேரம் சுதாரித்சு அடுத்த மூவ் முடிவு பண்றதுக்கு முன்னாடி நம்மாளு வுடு சூட்தான்...

இப்ப தெரியுதா எதுக்கு பெரிய முட்டை கண்ணுன்னு. நாங்க பல முறை வால்பாறை காடுகளில் இரவு நேரங்களில் டார்ச்சும் கையுமா எப்படியாவது ஒன்ன பார்த்துப் புடனுமின்னு அலைஞ்சிருக்கோம். இந்த தவளை விடும் சத்தம் வரும் திசையை நோக்கி நகர்ந்து ஒரு ஐந்து அடி வித்தியாசத்தில் இருக்கும் பொழுது சத்தம் வருவது டக்குன்னு நின்னு போகும். அப்புறம் கிளை கிளையா பார்த்தாக் கூட கண்டுபிடிக்கிறது...ரொம்ம்ம்பக் கடினம்.

ஆனா, அவைகளை தேடிகிட்டு அலைஞ்சது அப்படியே பசக்குன்னு பச்சையா மனசில ஒட்டிகுச்சு. ஏன்னா, மழைக்காடு, எங்கு திரும்பினும் ரீங்ன்னு சந்தம், தூத்தல், கீழே தொங்கும் மிஸ்ட் இப்படீ இருந்தா எப்படியிருக்கும் கொஞ்சம் பயம், நிறைய எதிர்பார்ப்பு...

நான் ஒன்னு கூட காட்டுல பார்த்ததே இல்லைங்க...உண்மைய சொல்லிப்புட்டேனே...

11 comments:

Sivabalan said...

Well Done!! Good Blog!! Keep Up!!

Mr.Nesi, you did not tell about its enemies.

All good things and Bad things, do have an end!

// ஆந்தை, தேவாங்கு, பறக்குற அணிலு // Are they?

இயற்கை நேசி|Oruni said...

சிவா, இப்ப இயற்கையில இருக்கிற எதிரிங்களவிட அதுக்கு நாமதான் முதல் சங்கு ஊதுரோம், எப்படின்னு கேளுங்க, பூகோள சூடேற்றத்திற்கும், உலகளாவிய அளவில் பரவலாக இந்த தவளை இனங்களின் அழிவிற்கும் தொடர்பு நிறுப்பிக்க பட்டிருக்கிறது. மிக விரைவில் நாம் அதனைப் பொருத்து இங்கு பதிந்து வைப்போம்.

இருப்பினும் இயற்கையில் நீங்கள் அடிக்கோடிட்ட வகையாறவை தவிர, புனுகுப் பூனை, காட்டுப் பூனை (சிறிய மாமிச விரும்பி பாலூட்டிகள்) எல்லாம் இதுக்கு எதிரிகள்தான்.

நேசி.

துளசி கோபால் said...

உங்க பதிவுங்க நல்லா இருக்குங்க. முக்கியமாப் பிடிச்சுப்போனது உங்க நடைதான்.
நம்ம வீட்டுலேயும் எல்லாமெ அவனுங்கதான். ஒரு ஈ வந்து உக்காந்துருக்கான்னுதான்
பேசறது.

நம்மது ஆஸ்த்ராலியா இல்லீங்க. ஆனாலும் Zoo பக்கம் போறப்ப உங்க விசாரிப்பைச்
சொல்லிடறேன் கங்காருங்ககிட்டே.

நாங்க பறவை இனம்தாங்க. அதுவும் பறக்க முடியாத பறவை . மூக்குதான் ரொம்ப நீஈஈஈஈளம்.
கிவி.

Sivabalan said...

// பூகோள சூடேற்றத்திற்கும் - தவளை இனங்களின் அழிவிற்கும் தொடர்பு நிறுப்பிக்க பட்டிருக்கிறது //

I am very much eager to know about this. Please write about it also.

இயற்கை நேசி|Oruni said...

துள்சி உங்களின் மேலான ஆதரவுக்கு என் நன்றிகள்! அவனுகளும் நம்ம மாதிரிதனே துள்சிங்க, அவைகளுக்கும் இதயமிருக்கிறது, அடிச்சா வலிக்குது, பசிச்சா தேடுதுங்க, தன் சந்ததிய தக்க வச்சுக்க இயற்கையோட போரடி நம்மை மாதிரியே, எல்ல அடிபடை விசயத்தில்லும் ஒத்துப் போகுது.

அப்படி பார்த்த நாம மரம் செடி கொடிகளேலிடத்தே கூட வாங்க போங்க அப்படின்னுதான் பேசனும், ஒரு நல்ல நண்பனுகிட்ட பேசற மாதிரி, ஏன்னா, நாம வெளித்தள்ர அசுத்த காத்த அவனுங்க பயன் படுத்திகிட்டு சுத்த காத்த திரும்ப நமக்குத் தருதுங்க.

அப்பரம் இத விட வேற என்னவேனும், சொல்லுங்க. டேட்டாவாம், டேட்டா.

நேசி.

இயற்கை நேசி|Oruni said...

பாரதி, ஒரே அடியா அந்த மரத் தவளையை பார்த்து தூக்கிடியலே இப்படி. நான் இன்னும் அநத புதுகை வலைத் தொடர்பை சுடுக்கி பார்க்கவில்லை. நீங்கள் இப்பொழுது எங்கே வசிக்கிறீர்கள்?

அன்புடன்,

நேசி.

இயற்கை நேசி|Oruni said...

சிவா, கண்டிப்பா எழுதுறென், உங்ககிட்ட பகிர்ந்து கொள்ளாமல் போன எப்படி. கொஞ்சம் காலம் கொடுங்க. சும்மா பறந்து பறந்து எழுதிப்புடுவோம். சீக்கிரம் எதிர் பாருங்கள் ஒரு அருமையான பதிப்பு ஒன்னு வந்துகிட்டே இருக்கு.

நேசி.

நந்தன் | Nandhan said...

நானும் இவற்றை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆப்பரிக்க பழங்குடியினர், இவ்வகை தவளைகளின் தொலில் இருந்து சுரக்கும் திரவத்திலிருந்து தான் மயக்க மருந்து தயார் செய்து வேட்டையாட உபயோகப்படும் அம்பில் தடவி பயன்படுத்துவதாய் கேள்வி.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நாஷனல் ஜீயோகிராபிக் மாகசினில் இந்தத் தவளைகளைப்பற்றிப் படித்த நினைவு..

//ஆனா அவைகளை தேடிகிட்டு அலைஞ்சது அப்படியே பசக்குன்னு பச்சைய மனசில ஒட்டிகுச்சு, ஏன்னா, மழைக்காடு, எங்கு திரும்பினும் ரீங்ன்னு சந்தம், தூத்தல், கீழே தொங்கும் மிஸ்ட் இப்படீ இருந்த எப்படியிருக்கும் கொஞ்சம் பயம், நிறைய எதிர்பார்ப்பு...//

ம்ம்.. கொடுத்து வைத்த மனிதர். :)

கொஞ்சம் விரிவாக எழுதுங்கள். பொறாமையோடு படித்துச் செல்கிறோம்.

இயற்கை நேசி|Oruni said...

வணக்கம் நந்தன், "Indigenous hunting strategy??" கண்டிப்பா வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. உங்கள் செய்தி பகிர்தலுக்கு ரொம்ப நன்றி.

பின்னாலில் இங்கு நான் பெரும் பின்னூட்டங்கள் அனைத்தும் பெரிய அளவில் பயன் படுத்தப் படவுள்ளது.

அன்பு,

நேசி.

இயற்கை நேசி|Oruni said...

மதி, எனக்கும் ஞாபகம் இருக்கிறது, ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு படித்தமாதிரி.

இருப்பினும் அந்த பதிப்பு நாஷனல்.ஜீ, ஒரு புஞ்சை காளான் எப்படி இந்த வகை தவளைகளை அழித்துக் கொண்டிருக்கிறது என்பதனை பொருத்து.

நாம் இப்பொழுது, பரிணாம வினோதங்களை மட்டுமே குறிப்பாக பேசிக் கொண்டுள்ளோம். பின்னொரு காலத்திலும் இன்றும் இது போன்ற பதிப்புகளை குழந்தைகளிடத்தே சென்று சேர்க்கும் எண்ணத்துடனே.

உங்கள் எதிர்பார்பை என் அனுபவங்களை கொண்டு சந்திக்க பார்க்கலம்.

விரிவாக எழுதலாம்...கையை வலிக்கிதே!

நேசி.

Related Posts with Thumbnails