பூமிப் பந்தின் சூடேற்றம் குறித்து ஏற்கனவே நான் இரண்டு பதிவுகள் *குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா? வெளிகண்ட நாதரின் உஷ்ணமாகும் உலகம் - எப்படி குளிர்விக்கலாம்? என்பதிலும் விளக்கியுள்ளோம். அதனைப் பற்றி படித்தறிந்தால் இப்பொழுது அதனை உறுதிப் படுத்தும் வண்ணம் எவ்வாறு தவளைகளும், தேரைகளும் தன் உயிரை மாய்த்து நடப்பதை நமக்கு உண்மையே என்று உறுதி செய்து வருகிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.
அண்மையில் நடந்த ஆராய்ச்சியின் பொருத்து 'இயற்கை' எனும் ஜார்னலில் இது பற்றிய உண்மை வெளியாகி உள்ளது.
கடந்த 25 வருடங்களில் 168-க்கும் மேற்பட்ட தவளை இனங்கள் உலகம் தழுவிய முறையில் அடியோடு கபளீகரமானதாக (சுத்தமாக பூமியை விட்டே) அறியப் பட்டுள்ளது.
இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்மென்று உற்று பார்க்கும் பொழுது சீதோஷண நிலையில் ஏற்படும் மாற்றம் அதனை தொடர்ந்து ஏற்படும் தொடர் வறட்சி அல்லது வெள்ளம் இவைகள்தான் முக்கிய பங்கு வகிப்பதாக அறியப்பட்டுள்ளது. இது இப்படியாக இருக்கையில் ஆராய்சியாளர்கள் வெப்ப ஏற்றதிற்கும் அத் தவளைகளின் மறைவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை புள்ளியீட்டு கணக்கின் படி உறுதி செய்துள்ளனர்.
அத் தொடர்பு பற்றிய ஆய்வு மத்திய மற்றும் தென் அமெரிக்கா காடுகளில் நடத்தி கண்டறியப்பட்டுள்ளது. அவ் ஆய்வின் படி கிட்டதட்ட 65 இனத் தவளைகள் நிரந்தரமாக காணவில்லை அவ் வனங்களிலிருந்து என சுட்டுகிறது.
சரி இப்பொழுது ஏன் தவளைகளை மட்டும் இந்த வெப்பச் சூடேற்றம் உடனடியாக பாதிக்கிறது அப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம். நம்ம எல்லோருக்குமே தெரியும் நில நீர் வாழ்வனவான (amphibians) அத் தவளைகளின் தோல் மிகவும் மென்மையானது. அதனால் எதும் மிக எளிதாக (Permeable) ஊடுருவும் வாய்ப்புகள் அதிகம். உ.த: நாம் வயலில் அடிக்கும் சில வகை பூச்சி கொல்லிகள் அல்லது உரங்கள் கூட அவைகளின் தோல்களின் வழியே சென்று அவைகளை கொன்று விட முடியுமுன்னா பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த வெப்ப சூடேற்றம் அவைகளை நேரடியா பாதிக்கிறதுமில்லாம, காஸ்டா ரிகா எனும் மத்திய அமெரிக்கா நாட்டு காடுகளில் ஒரு வித பூஞ்சைகாளான்கள் (Chytrid) அதீதமாக பல்கி பெருக வழி வாகை செய்து விடுகிறதாம். இந்த பூஞ்சைகள் என்ன பண்ணுதுன்னா, தவளைகளின் மீது தொத்தி அவைகளின் தோல் துவாரங்களை அடைத்துவிடுவதால, தண்ணீர் சமநிலை சீர்கெட்டு தவளைகள் மாண்டு விடுகின்றனவாம்.
இது வரைக்கும் இத்த தொத்து வியாதிக்கு நான்கு மாதத்திலேயே சுமார் நான்கு இனத் தவளைகள் மாண்டு இவ்வுலகை விட்டே சுத்தமாக (extinct) அழிந்து போனதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது இப்படியாக இருக்க நம்மூரு காடுகளில் இன்னும் எத்தனை இனத் தவளைகள் இருக்கிறது என்பதனை கண்டுபிடிக்காத பட்சத்தில், எங்கங்கோ நாம் உலக வெப்ப சூடேற்றதிற்கு அவைகளை நொடிக்கு ஒன்றாக இழந்து வருகிறோம் என்று தெரிந்து கொள்ளும் கணம்தோரும் - நிறைய பசங்கள நாம நம்மூர்ல கண்ணாலே பார்க்காமலேயே காவு கொடுக்கிறோமோ என்று நினைக்கும் பொழுதும்... இதற்கெல்லாம் என்னதான் தீர்வு அப்படின்னு கேட்கத் தோணுது.
Showing posts with label Frog. Show all posts
Showing posts with label Frog. Show all posts
Tuesday, June 13, 2006
*குளோபல் சூடேற்றம்* - காட்டிக்கொடுக்கும் தவளைகள்...
Labels:
Frog,
Global Warming,
தவளை,
வெப்பச் சூடேற்றம்
Saturday, April 29, 2006
மரத் தவளைகளின் பெரிய நிறக் கண்களின் ரகசியம்...
மரத் தவளைகளில் (tree frogs) பெரும்பான்மையானவை மழைக் காடுகளில் (rain forest) உள்ள மரப் பொந்துகளில் வாழ்கின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் மட்டுமே வெளியே தலை காட்ட ஆரம்பிப்பார்கள், ரொம்ப சத்தம் போடுற வகை. பகல் முழுக்க நம்ம ஊரு சில பசங்க மாதிரி தூக்கம் தூக்கம்தான். இரவில்தான் ஆட்டம் முழுக்க!
சரி விசயத்துக்கு வருவோம், இந்த மக்களோட கண் (உடம்பும் தான்) நல்ல மிட்டாய் நிறத்தில அசல்ல பார்த்த பொம்மை தவளைப் பசங்க மாதிரியே இருப்பானுங்க. இவனுகள்ல சில பேரு பயங்கர விஷம் கொண்ட பயக,
எங்கே அழகு இருக்கோ அங்க ஆபத்தும் இருக்கும் அப்படிங்கிற மாதிரி. நான் நினைக்கிறேன் அதுவும் ஒரு பரிணாம சமிக்கைதானோ என்று. சொல்லாமல் சொல்றது நான் ரொம்ப அடிக்கிற நிறத்தில இருந்து, என்னை பிடிச்சு சாப்பிடற எண்ணமிருந்தால் விட்டுடு அப்படின்னு ராத்திரியில வெளியில வந்து பசிச்சு அழையுற ஆந்தை, தேவாங்கு, பறக்குற அணிலு, அப்புறம் இன்னும் பிற மரம் ஏறுர சிறு பாலூட்டிகளிடத்த.
சரி அப்படி பகல் நேரத்தில தூங்கிட்டு இருக்கிறப்ப யாராவது தட்டு தடுமாறி எரடி விழுந்து நம்மாளை முழிக்க வச்சுப்புட்டா அப்பதான் நம்மாளோட பெரிய கண் உதவிக்கு வருது. எப்படி? படக்குன்னு ஒரு ஒரு பெரிய முட்டைக் கண்ணெ சிவப்போ, பச்சை நிறத்திலோ வைச்சுக்கிட்டு உர்ர்னு கோபத்தில பார்க்கிறமாதிரி முறைச்சு உருட்டி பார்த்தா, எரடி விழுந்தவன் குழம்பிப் போய் கொஞ்சம் நேரம் சுதாரித்சு அடுத்த மூவ் முடிவு பண்றதுக்கு முன்னாடி நம்மாளு வுடு சூட்தான்...
இப்ப தெரியுதா எதுக்கு பெரிய முட்டை கண்ணுன்னு. நாங்க பல முறை வால்பாறை காடுகளில் இரவு நேரங்களில் டார்ச்சும் கையுமா எப்படியாவது ஒன்ன பார்த்துப் புடனுமின்னு அலைஞ்சிருக்கோம். இந்த தவளை விடும் சத்தம் வரும் திசையை நோக்கி நகர்ந்து ஒரு ஐந்து அடி வித்தியாசத்தில் இருக்கும் பொழுது சத்தம் வருவது டக்குன்னு நின்னு போகும். அப்புறம் கிளை கிளையா பார்த்தாக் கூட கண்டுபிடிக்கிறது...ரொம்ம்ம்பக் கடினம்.
ஆனா, அவைகளை தேடிகிட்டு அலைஞ்சது அப்படியே பசக்குன்னு பச்சையா மனசில ஒட்டிகுச்சு. ஏன்னா, மழைக்காடு, எங்கு திரும்பினும் ரீங்ன்னு சந்தம், தூத்தல், கீழே தொங்கும் மிஸ்ட் இப்படீ இருந்தா எப்படியிருக்கும் கொஞ்சம் பயம், நிறைய எதிர்பார்ப்பு...
நான் ஒன்னு கூட காட்டுல பார்த்ததே இல்லைங்க...உண்மைய சொல்லிப்புட்டேனே...
சரி விசயத்துக்கு வருவோம், இந்த மக்களோட கண் (உடம்பும் தான்) நல்ல மிட்டாய் நிறத்தில அசல்ல பார்த்த பொம்மை தவளைப் பசங்க மாதிரியே இருப்பானுங்க. இவனுகள்ல சில பேரு பயங்கர விஷம் கொண்ட பயக,
எங்கே அழகு இருக்கோ அங்க ஆபத்தும் இருக்கும் அப்படிங்கிற மாதிரி. நான் நினைக்கிறேன் அதுவும் ஒரு பரிணாம சமிக்கைதானோ என்று. சொல்லாமல் சொல்றது நான் ரொம்ப அடிக்கிற நிறத்தில இருந்து, என்னை பிடிச்சு சாப்பிடற எண்ணமிருந்தால் விட்டுடு அப்படின்னு ராத்திரியில வெளியில வந்து பசிச்சு அழையுற ஆந்தை, தேவாங்கு, பறக்குற அணிலு, அப்புறம் இன்னும் பிற மரம் ஏறுர சிறு பாலூட்டிகளிடத்த.சரி அப்படி பகல் நேரத்தில தூங்கிட்டு இருக்கிறப்ப யாராவது தட்டு தடுமாறி எரடி விழுந்து நம்மாளை முழிக்க வச்சுப்புட்டா அப்பதான் நம்மாளோட பெரிய கண் உதவிக்கு வருது. எப்படி? படக்குன்னு ஒரு ஒரு பெரிய முட்டைக் கண்ணெ சிவப்போ, பச்சை நிறத்திலோ வைச்சுக்கிட்டு உர்ர்னு கோபத்தில பார்க்கிறமாதிரி முறைச்சு உருட்டி பார்த்தா, எரடி விழுந்தவன் குழம்பிப் போய் கொஞ்சம் நேரம் சுதாரித்சு அடுத்த மூவ் முடிவு பண்றதுக்கு முன்னாடி நம்மாளு வுடு சூட்தான்...
இப்ப தெரியுதா எதுக்கு பெரிய முட்டை கண்ணுன்னு. நாங்க பல முறை வால்பாறை காடுகளில் இரவு நேரங்களில் டார்ச்சும் கையுமா எப்படியாவது ஒன்ன பார்த்துப் புடனுமின்னு அலைஞ்சிருக்கோம். இந்த தவளை விடும் சத்தம் வரும் திசையை நோக்கி நகர்ந்து ஒரு ஐந்து அடி வித்தியாசத்தில் இருக்கும் பொழுது சத்தம் வருவது டக்குன்னு நின்னு போகும். அப்புறம் கிளை கிளையா பார்த்தாக் கூட கண்டுபிடிக்கிறது...ரொம்ம்ம்பக் கடினம்.
ஆனா, அவைகளை தேடிகிட்டு அலைஞ்சது அப்படியே பசக்குன்னு பச்சையா மனசில ஒட்டிகுச்சு. ஏன்னா, மழைக்காடு, எங்கு திரும்பினும் ரீங்ன்னு சந்தம், தூத்தல், கீழே தொங்கும் மிஸ்ட் இப்படீ இருந்தா எப்படியிருக்கும் கொஞ்சம் பயம், நிறைய எதிர்பார்ப்பு...
நான் ஒன்னு கூட காட்டுல பார்த்ததே இல்லைங்க...உண்மைய சொல்லிப்புட்டேனே...
Subscribe to:
Posts (Atom)

