Thursday, July 30, 2009

மனித பரிணாம இணைப்பு "ஈடா" : Fossil - Ida?!

கடந்த மே மாதம் ஜெர்மனியில இருந்து டாக்டர் John Hurum_ங்கிற குரங்குகளராய்ச்சி விஞ்ஞானி கையில சுமார் 47 மில்லியன் வருஷத்திற்கு முன்ன வாழ்ந்த ஃபாசில் ஒண்ணு பம்பர் பரிசாட்டமா கிடைச்சிருக்கு. அது ஃப்ராங்ஃபோர்ட்ல இருந்து ஒரு 30கிமீ தள்ளித்தானாம்.

அது வால்/வாலற்ற குரங்கு மற்றும் மனித பரிணாம வளர்ச்சிப் பாதையை "இணைக்கும் பாலமா (missing link)" கருதப்படக் கூடியளவிற்கு அதி முக்கியமான ஒன்னுன்னு ஒட்டு மொத்த பரிணாம ஆராய்ச்சியாளர்கள் மத்தியில கருதப்படுகிறதாம். கண்டுபிடிச்ச அந்த விஞ்ஞானி அந்த ஃபாசிலோட நீளம், பருமன் எல்லாம் பார்த்தவுடன் தன்னோட பெண் ஈடா(Ida)வை நினைவுக்கு கொண்டு வந்ததால் அந்தப் பேரையே அந்த ஃபாசிலுக்கு வைச்சிட்டாராம்.

இதை செய்தித் தாளில் படிச்சவுடன் எனக்குத் தோன்றிய முதல் கேள்வி, எப்படி ஜெர்மனியில போயி இந்த அரிய ப்ரைமேட் (Primate) வகை ஃபாசில் கிடைச்சிருக்க முடியும் அப்படிங்கிறதுதான். ஏன்னா, மனித பரிணாம வளர்ச்சி அனைத்துமே ஆஃப்ரிகா கண்டத்திலல்லவா நடந்துச்சு; கிடைச்ச சாதகமான தட்ப வெப்ப சீதோஷ்ண நிலைகளும், ஏனைய இயற்கை சார்ந்த அமைவுகளும் அதற்கான காரணிகளை வழங்கினதுனாலே! அப்படி இருக்கும் பொழுது எப்படி இந்த குரங்கு வகை ஈடா அங்கு கிடைத்திருக்கக் கூடுமென கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால், 47 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி ஜெர்மனி போன்ற மத்திய ஐரோப்பா நாடுகளில் இன்றைய ஆசிய, ஆஃப்ரிகா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் காணப்படும் மழைக் காடுகளும், சீதோஷ்ண நிலைகளைப் போன்றே பூமிப் பந்தின் கால கட்டங்களாக அறியப்படும் பேலியோசீன் (Paleocene - 65~58 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்தில் அப்படியாக இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்து முன் வைத்திருப்பது அறிய வந்ததும், அட! அப்போ நாமதான் பின் தங்கி இருந்திருக்கிறோம் இந்த விபரங்களை அறியாமல்னு ஈடா பற்றிய சந்தேகம் தீர்ந்து இப்போ பரிணாம ஏணியில் ஏன் இந்த ஈடா ஃபாசில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு பேசிக்கிறாங்கன்னு அறிஞ்சுக்க ஆர்வம் பீரிட்டு கிளம்பினுச்சா அத கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டவுடன் உங்ககிட்டயும் பகிர்ந்துகளாமேன்னு இங்கே வந்திருக்கேன்.

பார்த்திங்கன்னா டைனோசார் அழிவுக்கு முந்திய கால கட்டம் வரைக்கும் பரிணாமத்தில எந்த ஒரு பாலூட்டியும் பெரிய அளவில சொல்லிக்கிற மாதிரி கிடுகிடுன்னு தன்னோட வித விதமான பல்முக இனங்களாக கொழிக்க முடியாம இருந்துச்சு. ஆனா, டைனோசார்களின் அழிவை ஒட்டியும் சுமார் 65 மில்லியன் வருஷங்களுக்கு முன்னயுமே நம்மூர் மர மூஞ்சுரு (tree shrew)களையொட்டிய வகை பாலூட்டிதான் முதல் கொளுந்து இந்த வரிசையில. அது பூமி கோளத்தின் பேலியோசீன் காலம். அதாவது அப்பொழுதுதான் வாலில்லா மற்றும் வால் உள்ள குரங்குகள் பல்கிப் பெருகுவதற்கான காலத்தையொட்டிய யியொசீன் (Eocene - 58~40 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்திற்கு முந்திய கால கட்டம்.

அந்த பேலியோசீன் காலத்தில் தோன்றியவைகள் தான் இந்த லெமூர், தேவாங்கு மற்றும் டார்சியர்ஸ், இவைகள் ப்ரோசிமியன்ஸ் (Prosimians) என்றழைக்கப்படும். அதற்கு பிந்திய கால கட்டமான யியொசீன் காலக் கட்டத்தில் தேன்றியவைகளை ஆந்ரோபாய்ட்ஸ் (Anthropoids) என்றழைப்பார்கள் இதில் தான் குரங்கு வகைகள், வாலில்லா மனித குரங்குகள் மற்றும் மனிதன் பரிணமித்த காலம்.

இது வரைக்கும் குழம்பாம வந்திருப்பீங்கன்னு நம்புறேன். சரி, இப்ப கண்டெடுக்கப்பட்ட இந்த ஈடா ஃபாசில் இந்த இரு கால கட்டங்களிலும் தோன்றிய இரு குழுக்களையும் (ப்ரோசிமியன்ஸ் மற்றும் அந்த்ரோபாய்ட்ஸ்) இணைக்கும் குணாதிசியங்களுடன் அப்படியே அலேக்கா லட்டு மாதிரி எந்த பகுதியும் சிந்தி சிதைஞ்சிடாம முழுசா கிடைச்சி இந்தப் பரிணாம பண்புகளை ஊர்ஜிதப் படுத்துற மாதிரி அமைந்ததுனாலேதான் இப்படி அனல் கக்க வைக்கும் சூடான செய்தியா அந்த குட்டிப் பெண் ஈடா அமைந்துவிட்டது.

பெரும்பாலும் ஃபாசில்கள் கண்டெடுக்கப்படும் பொழுது முழுதுமாக கிடைப்பது அரிதிலும் அரிது. பல் ஒரு இடத்தில் கிடைத்தால் அந்த விலங்கின் வால் எலும்போ அல்லது தாடை எலும்போ எங்காவது இன்னொரு இடத்தில் கிடைக்கக் கூடும். ஆனால் ஈடா விசயத்தில் முழுதும் கிடைத்ததோட மட்டுமில்லாமல் அந்தப் பெண் கடைசியாக உண்ட பழ, தாவர கொட்டை மற்றும் இலைகளின் மிச்சங்களும், உடல் ரோமங்களும், திசுக்களும் கூட கிடைத்திருந்ததும் மற்றுமொரு சிறப்பு.

இப்பொழுது எப்படி இரண்டு குழுக்களின் குணாதிசியங்களைப் பெற்றிருக்கிறதுன்னும் சொல்லிடுறேன். தேவாங்கு, லெமூர் வகை விலங்குகளிலிருக்கிற மாதிரி எலும்புக் கூடமைவும், சொரிந்து கொள்வதற்கு இணையான ஒரே ஓர் கால்விரலைப் போன்று தனியாக அமைந்த புலி நகத்தையொட்டிய நகமும், கீழ்தாடையிலமைந்த ஒரு பல்லும் ப்ரோசிமியன்ஸ் வகை விலங்குகளோட போறேன்னு சொல்லுவதாகவும்; குரங்கு, வால்/வாலில்லா ஆட்களூடன் இணைவதற்கான மற்ற பண்புகளான - பொருட்களை விரல்களால் சுத்திப் பிடிக்கும் தன்மையோடும், எதிர் முனையில் அமைந்த கட்டைவிரலும், புலி நகங்களைப் போன்று கூரான நகங்களை கொள்ளலாமல் விரலுக்கு விரல் நம்மையொத்த நகங்களையும் கொண்டு நான் அந்ரோபாய்ட்ஸ் என்று சொல்லிக்கிறதாகவும் இந்த ஈடாப் பெண் இருக்கிறதுனாலேதான் இத ஒரு "இணைப்பு பாலம்"ங்கிற அளவில முக்கியமான ஃபாசிலா கருதப்படுகிறது.

இன்னும் என்னால ஜெர்மனி ஒரு காலத்தில ட்ராபிகல் நாடா இருந்திருக்_கப்போய்னு நினைக்கும் பொழுது, நம் நாடெல்லாம் வரும் காலத்தில ஒரு பாலைவனமே ஆனாலும் அடன்னு ஆச்சர்யப்படுறதுக்கில்லைன்னு தோணுது.

11 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திரும்ப படிக்கலாம்ன்னு பொன்னியின் செல்வன் வாங்கிட்டு வந்தேன்.. எடுத்தவுடனே இயற்கையழகையும் நீர்வளத்தையும் என்னா வர்ணனைங்கறீங்க.. வீராணம் ஏரியும் அதுக்கு 74 கால்வாயும்ன்ன்னு .. இப்ப ஏரியெல்லாம் வீடாகற காலத்துல நீங்க சொல்றாப்பல பாலைவனமாகிடுமோன்னு திகிலா இருக்கே.. :(

இயற்கை நேசி|Oruni said...

திரும்ப படிக்கலாம்ன்னு பொன்னியின் செல்வன் வாங்கிட்டு வந்தேன்.. எடுத்தவுடனே இயற்கையழகையும் நீர்வளத்தையும் என்னா வர்ணனைங்கறீங்க.. //

என்னயும் படியப்ப்பான்னு சொல்லாம சொல்ல இப்படியெல்லாம் கூட சொல்லலாமா :-))... ஆர்வத்தை கிளப்புறீங்க.

//இப்ப ஏரியெல்லாம் வீடாகற காலத்துல நீங்க சொல்றாப்பல பாலைவனமாகிடுமோன்னு திகிலா இருக்கே.. :(//

மிகச் சரியா சொல்ல வந்த விசயத்தை பிடிச்சு ஹைலைட் பண்ணி வைச்சிட்டீங்க, அப்படித்தானே யுனிசெஃப் குழுவே ஒரு ஆய்வறிக்கையில சொல்லியிருக்காமா???

தருமி said...

//அந்த ஃபாசிலோட நீளம், பருமன் எல்லாம் பார்த்தவுடன் தன்னோட பெண் ஈடா(Ida)வை நினைவுக்கு கொண்டு வந்ததால் அந்தப் பேரையே அந்த ஃபாசிலுக்கு வைச்சிட்டாராம்.//

அடப் பாவி மனுஷா ...!

தருமி said...

நல்ல ஒரு connecting link தான். அந்த டார்வினை சும்மா சொல்லப் படாதுங்க. எம்புட்டு விஷயங்களைச் சொல்லிட்டு போய்ட்டார் ..!

Arun said...

நம்முடைய இணைய பக்கத்திற்கு அல்லது பதிவிற்கு அதிக ஹிட்ஸ் கொண்டு வருவதில் திரட்டிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உங்கள் பதிவுகளை அல்லது இனைய பக்கத்தை அனைத்து தமிழ் திரட்டிகளிலும் வெளியிட ஒரு பட்டன் மட்டுமே போதும்.

தமிழ் பக்கங்களை Reedit.com, Digg.com என்று submit செயும்போது கிடைக்கும் ஹிட்ஸ்கலை விட தமிழ் திரட்டிகளில் submit செயும்போது அதிக ஹிட்ஸ் கிடைக்கும். அதுவே இந்தியா சார்ந்த ஆங்கில தளங்கள் என்றால் Hotkilix, Humsuffer போன்ற இந்திய ஆங்கில திரட்டிகளில் இருந்து அதிக ஹிட்ஸ் கிடைக்கும் .

தற்போது FindIndia.net என்ற இணையத்தளம் இந்த சேவையை வழங்குகிறது . இந்த பட்டனை முற்றிலும் இலவசமாக இந்திய மொழி தளங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் . இதை நாம் நம் பிளாக்கர் ப்ளாகிலோ அல்லது நமது இணையத்தளத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் ( எனது ப்ளாகின் Sidbarல் காண்க). இதன் மூலம் அதிக பார்வையாளர்களை நம் தளத்திற்கு வர செய்யலாம்.


தற்போது BETA பதிப்பில் உள்ள இத்தளம் தற்போது தமிழ் , இந்திய ஆங்கில Social Bookmarking தளங்களுக்கு பதிவுகளை submit செய்வதற்கான பட்டங்களை
வழங்குகிறது. இது தமிளிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் என்று பல பட்டன்கள் நம் தளத்தில் add செய்வதற்கு பதில் ஒரு Buttonலையே எல்லா திரட்டிகளிலும் பதிவுகளை submit செய்ய எளியதாக இருக்கும் .


Add-தமிழ் பட்டன் பெறுவதற்கான இணையதள முகவரி : இங்கு கிளிக் செய்யவும்
www.findindia.net

இயற்கை நேசி|Oruni said...

வாத்தியாரே வாங்க,

//அடப் பாவி மனுஷா ...!//

இதக் கூட அவரு செஞ்சங்க அனுமதியில்லன்னா எப்படி. நம்ம ஊர்ல யாராவது மாணவர் ஒருத்தரு புது விதமான தவளையோ இல்ல மீனோ மீள்-கண்டெடுப்பு பண்ணினாக் கூட வாத்தியாரு இல்ல அதற்கான க்ரீடிட்டை லபக் போட்டுவிடுகிறார் :)).

//நல்ல ஒரு connecting link தான். அந்த டார்வினை சும்மா சொல்லப் படாதுங்க. எம்புட்டு விஷயங்களைச் சொல்லிட்டு போய்ட்டார் ..!//

டார்வினா கொக்கா! ஒரே வார்த்தையில எல்லாத்தையும் உள்ளடக்கிற மாதிரி சொல்லிப்புட்டுப் பொயிட்டாரே... இந்த "ஈடா" உண்மையிலயே புருவம் உயர்த்த வைக்கும் ஒரு துண்டுங்க(பீஸ்) இந்த "இணைக்கும்" விசயத்தில, நேஷனல் ஜியோக்ராஃபி ஆவனப்படம் யூட்யுப்ல கிடைச்சா 'சுட்டி' தாரேன்...

கையேடு said...

சுவாரஸ்யமான விரிவான விளக்கங்க இயற்கை நேசி..

//டார்வினா கொக்கா!//

தருமி said...

பேரு வச்சது தப்பு சொல்லலை. ஆனா... நீங்க சொன்ன மாதிரி //....ஃபாசிலோட நீளம், பருமன் எல்லாம் பார்த்தவுடன் தன்னோட பெண் ஈடா(Ida)வை நினைவுக்கு கொண்டு வந்ததால் ..//

- இதுக்குத்தான் சொன்னேன். பாவம் அவரு பொண்ணை ஃபாசிலா ஆக்கிட்டீங்களேன்னுதான் ..!

காட்டாறு said...

சும்மா இருந்தவளை படி படின்னு இடித்து, படிக்க வைத்தமைக்கு நன்றி குரங்குமுடி(!) அவர்களே. பாதி பதிவு படிக்கும் போது ஒரு சிறு சந்தேகம் வந்தது. மெய்யாலுமே நீங்க தான் இந்த பதிவு எழுதுனீங்களான்னு. ஏன்னா அவ்ளோ தெளிவா புரியுதே. அதுவும் முதல் முறை வாசிக்கும் போதே. பின்ன சந்தேகம் வராமல் இருக்குமா? வந்த சந்தேகம் கடேசிக்கு முந்தின பாராவில் தீர்ந்தது. உங்களை தவிர யாரால் இப்படி ஒரே வரியில் ஆயிரம் கதைகளை மூச்சுவிடாது, எங்களுக்கும் மூச்சு முட்ட, அருமையாக (யாரோ வாந்தி எடுத்த மாதிரின்னும் சொல்லலாம்) சொல்ல முடியும்? ;-)

Anonymous said...

ஈடா பத்தி இவ்வளவு விசயங்கள் இருக்கா? இந்த fossil எந்த விதத்துல மிஸ்ஸிங் லிங் ஆஹுதுன்னு இப்பத்தான் தெளிவா விளங்குது. நன்றி. தெகா.. தகவல்களுக்கு..

இயற்கை நேசி|Oruni said...

வாங்க கையேடு,

//சுவாரஸ்யமான விரிவான விளக்கங்க இயற்கை நேசி..//

நன்றி! உங்களை விடவா :)

தருமி,

//- இதுக்குத்தான் சொன்னேன். பாவம் அவரு பொண்ணை ஃபாசிலா ஆக்கிட்டீங்களேன்னுதான் ..!//

தெரியும் என்ன சொல்ல வந்திருப்பீங்கன்னு, அட உங்கள வம்பிக்கிழுத்தேன் :))...

Related Posts with Thumbnails